Skip to main content

விடை 3398

விடை 3398
இன்று (13/08/2018) காலை வெளியான வெடி:

அழகி  இடை பற்றி ஓடாதே அது தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும் (3) 

இதற்கான விடை:  நிழல்

இப்புதிர் பற்றி கருத்துகளை இப்பதிவில் விடை வந்தவுடன், இரவில், கூறுங்கள் என்று கேட்டியிருந்தேன். நிழல் பகலில் வெயில் அடிக்கும்போதுதானே வரும் என்று அப்போதே சிலர் கருத்தை அளித்துவிட்டார்கள்!  
நல்ல வேளை, அக்கருத்துகள் எவையும் விடையளிக்க  எளிதாக்கும் வகையில் இல்லை. தொடர்ந்து கருத்துகளைக் கூறி இப்பதிவைக் களை கட்ட வையுங்கள்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
...............👇🏽...................
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்
நல்ல *அழகி* யென்பேன்!
நான் கேட்டதிலே அவள் வார்த்தையைத்தான்
ஒரு கவிதையென்பேன்!
*இடை* யோ இல்லை இருந்தால் - முல்லைக்
கொடிபோல் மெல்ல வளையும்!
*************************
_அழகி இடை பற்றி ஓடாதே அது தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும் (3)_

அழகி இடை பற்றி
= (அ) *ழ* (கி)

_ஓடாதே_
= *நில்*

*_அது_* ( _தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும்_ )
= *நில்+ ழ*
= *நிழல்*
*************************
*ஒளவையார் அருளிச்செய்த நல்வழி*
வெண்பா : 21

_நீரும் *நிழலும்* நிலம்பொதியும் நெற்கட்டும்_

_பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும்_

_வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்_

_தரும்சிவந்த தாமரையாள் தான்_

விளக்கம்
பிறருக்கு துன்பம் செய்யாதவருக்கு, அடுத்தவர் அழிய வேண்டும் என்ற வஞ்சனை இல்லாதவருக்கு நல்ல நீர்வளம், *நிழல்* தரும் மரங்கள், நெல் வளம், பேரும், புகழும், சிறப்பான வாழ்க்கையும், நல்ல வீடும், தேவையான செல்வமும், நீண்ட ஆயுளும் செந்தாமரையில் அமரும் மஹாலக்ஷ்மி அருளுவாள்.🙏🏽
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
_நிழல் வேண்டி நின்றேன் மேகமென என் மேலே வந்தாய்_
_குழல்_
_கேட்க நின்றேன்_ _ராகமென நீயே வந்தாய்_
☁☁🌤⛅☁☁
*மரம் தன்னை வெட்டுகிறவனுக்கும் நிழல் கொடுக்கும்!*
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (70):

1) 6:03:38 ரங்கராஜன் யமுனாச்சாரி
2) 6:03:50 எஸ்.பார்த்தசாரதி
3) 6:04:04 ரவி சுப்ரமணியன்
4) 6:04:41 ரா. ரவிஷங்கர்...
5) 6:05:03 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
6) 6:05:06 லட்சுமி சங்கர்
7) 6:05:13 KB
8) 6:05:17 நங்கநல்லூர் சித்தானந்தம்.
9) 6:06:22 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
10) 6:07:47 முத்துசுப்ரமண்யம்
11) 6:09:06 மு.க.இராகவன்.
12) 6:09:42 கு. கனகசபாபதி, மும்பை
13) 6:10:21 லதா
14) 6:11:00 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
15) 6:11:33 மீ கண்ணன்
16) 6:11:33 உஷா
17) 6:12:35 மும்பை ஹரிஹரன்
18) 6:16:06 சுந்தர் வேதாந்தம்
19) 6:17:13 ராஜா ரங்கராஜன்
20) 6:17:34 ஶ்ரீவிநா
21) 6:20:04 மீனாக்ஷி கணபதி
22) 6:23:15 இரா.செகு
23) 6:26:57 லஷ்மி வைத்தி
24) 6:27:58 தி பொ இராமநாதன்
25) 6:34:44 கேசவன்
26) 6:34:45 வானதி
27) 6:42:20 ஆர்.நாராயணன்.
28) 6:43:45 ஏ.டி.வேதாந்தம்
29) 6:44:23 பத்மாசனி
30) 6:44:58 அனுராதா ஜெயந்த்
31) 6:45:24 இலவசம்
32) 6:51:55 ஆர். பத்மா
33) 6:58:43 நாதன் நா தோ
34) 7:01:42 சித்தன்
35) 7:02:00 மாதவ்
36) 7:02:53 பாலா
37) 7:03:53 ருக்மணி கோபாலன்
38) 7:03:56 ரமணி பாலகிருஷ்ணன்
39) 7:03:59 மீ.பாலு
40) 7:06:39 பினாத்தல் சுரேஷ்
41) 7:11:44 எல்வீ
42) 7:15:42 ராமராவ்
43) 7:25:34 மடிப்பாக்கம் தயானந்தன்
44) 7:33:21 திருக்குமரன் தங்கராஜ்
45) 7:35:17 மீனாக்ஷி
46) 7:43:56 திருமூர்த்தி
47) 7:44:53 எஸ் பி சுரேஷ்
48) 7:51:29 Sucharithra
49) 7:52:14 கலாராணி
50) 7:52:22 Hari Balakrishnan
51) 7:56:36 சுபா ஸ்ரீநிவாசன்
52) 8:00:29 மு க பாரதி
53) 8:00:49 ராதா தேசிகன்!
54) 8:24:06 மாலதி
55) 8:30:51 அம்பிகா
56) 8:35:29 ரவி சுந்தரம்
57) 8:58:46 விஜயா ரவிஷங்கர்
58) 9:20:17 வித்யா ஹரி
59) 9:34:36 Sandhya
60) 9:55:03 சங்கரசுப்பிரமணியன்
61) 10:09:11 சாந்திநாராயணன்
62) 10:14:30 புவனா சிவராமன்
63) 11:10:04 லட்சுமி மீனாட்சி, மும்பை
64) 13:43:23 ராஜி பக்தா
65) 13:46:45 கோவிந்தராஜன்
66) 14:38:42 கே.ஆர் சந்தானம்
67) 17:20:42 கல்யாணி தேசிகன்
68) 20:12:24 வி ன் கிருஷ்ணன்
69) 20:15:41 கி மூ சுரேஷ்
70) 20:45:01 R. Kousik
**********************


சமீபத்தில் வந்த நில்/ஓடு இப்புதிரில் மீண்டும் சுவையாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது.
ஒருவர் தன் மனைவி இல்லாத மற்றொரு பெண்ணின் நிழலும் தன் மீது படுவதைத் தவிர்த்த கதையை எங்கோ படித்தேன்.
பலர் நிஜத்தை விட்டு விட்டு நிழலைத்தொடர்வதும் உண்மைதான்.
Chittanandam said…
நிழல் பகலில் மட்டுமல்ல, இரவிலும் தோன்றுமல்லவா விளக்கொளியில்.
உங்களை எப்போதும் தொடருவோம், நிழல் போல!
ஆல் போல் செழித்து உங்கள் புதிர் உலகம் வளர வாழ்த்துக்கள்!
Ambika said…
மன்னிக்கவும், விடையளித்தவர்களின் பட்டியலில் "சதீஷ்பாலமுருகன்" பெயர் விட்டுப்போய்விட்டது!

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்