Skip to main content

விடை 3406

விடை 3406

இன்று காலை வெளியான வெடி
இரு முறை தலையில் அணி அரசாட்சியை ஏற்றுக் கொள் (4)
இதற்கான விடை: முடிசூடு
தலையில் பூ அணிவதை, பூச் சூடுதல் என்றும் பூ முடித்தல் என்றும் கூறுவதால்
முடிசூடு என்பது இருமுறை அணிவ‌து.

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (52):

1) 6:01:52 எஸ்.பார்த்தசாரதி
2) 6:02:12 ரவி சுந்தரம்
3) 6:02:22 இரா.செகு
4) 6:02:30 ராமராவ்
5) 6:04:17 நங்கநல்லூர் சித்தானந்தம்
6) 6:04:19 ரவி சுப்ரமணியன்
7) 6:08:45 நாதன் நா தோ
8) 6:10:10 மீனாக்ஷி கணபதி
9) 6:14:52 லதா
10) 6:15:19 ராஜா ரங்கராஜன்
11) 6:17:07 பா நடராஜன்
12) 6:17:56 சங்கரசுப்பிரமணியன்
13) 6:24:05 முத்துசுப்ரமண்யம்
14) 6:33:35 மாலதி
15) 6:34:27 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
16) 6:35:03 கேசவன்
17) 6:37:52 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
18) 6:43:21 ஆர்.நாராயணன்.
19) 6:47:31 அம்பிகா
20) 6:48:05 ராஜி ஹரிஹரன்
21) 6:48:26 சுபா ஸ்ரீநிவாசன்
22) 6:54:25 திருக்குமரன் தங்கராஜ்
23) 6:55:19 லட்சுமி சங்கர்
24) 6:56:48 மு க பாரதி
25) 6:59:08 ஶ்ரீவிநா
26) 7:03:00 எஸ் பி சுரேஷ்
27) 7:04:15 உஷா
28) 7:12:16 எல்வீ
29) 7:22:06 மீ கண்ணன்
30) 7:22:19 மடிப்பாக்கம் தயானந்தன்
31) 7:27:10 KB
32) 7:41:16 சித்தன்
33) 7:42:50 சதீஷ்பாலமுருகன்
34) 7:48:13 பாலா
35) 7:49:13 மீனாக்ஷி
36) 7:57:43 சுந்தர் வேதாந்தம்
37) 8:27:20 கோவிந்தராஜன்
38) 8:33:58 ஸௌதாமினி
39) 10:02:55 ஆர். பத்மா
40) 10:09:45 மீ.பாலு
41) 11:20:24 கு. கனகசபாபதி, மும்பை
42) 12:09:28 K.R.Santhanam
43) 16:21:38 லட்சுமி மீனாட்சி, மும்பை
44) 17:23:14 வானதி
45) 17:41:13 செந்தில் சௌரிராஜன்
46) 17:51:02 பத்மாசனி
47) 17:52:09 ஏ.டி.வேதாந்தம்
48) 17:52:51 அனுராதா ஜெயந்த்
49) 18:12:06 மு.க.இராகவன்.
50) 19:22:19 கி மூ சுரேஷ்
51) 19:40:21 மாதவ்
52) 19:41:42 விஜயா ரவிஷங்கர்
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
..................👇🏽..................

*_தாய்லாந்து மன்னரும் தமிழும்_*

மன்னராட்சி நடக்கும் தாய்லாந்து நாட்டில் அரசர்கள் இறைவனின் அவதாரமாகக் கருதப்படுகின்றனர். சிவன் மற்றும் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதி அரசனுக்கு *முடிசூட்டும்* வழக்கம் அங்கு உள்ளது. இந்த பாரம்பரியம் தமிழ்நாட்டின் பல்லவர்கள் மரபில் இருந்து உருவானதாகும். சோழ மன்னர்கள் இதனை பின்பற்றினர். இப்போதும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிச்சாவரம் மன்னர் பரம்பரையினருக்கு முடிசூடும் இந்த நடைமுறை உள்ளது.

தமிழ்நாட்டின் முடிசூடும் வழக்கத்தை பின்பற்றிதான் தாய்லாந்து நாட்டின் மன்னர்களும் முடிசூடிக்கொள்கின்றனர் என்பதற்கான ஆதாரங்கள் இப்போதும் உள்ளன.

தாய்லாந்து மன்னரின் *முடிசூடல்* நிகழ்ச்சி, தமிழ்நாட்டில் பல்லவர்கள் மற்றும் சோழ மன்னர்களின் முடிசூட்டல் நிகழ்வினை முன்மாதிரியாகக் கொண்டு நடப்பதாகக் கூறப்படுகிறது.

💐💐🙏🏽💐💐
***********************
_இரு முறை தலையில் அணி அரசாட்சியை ஏற்றுக் கொள் (4)_

_இரு முறை தலையில் அணி_
1. _தலையில் அணி_
= *முடி* ( மகுடம்,கிரீடம்)

2. _தலையில் அணி_
= *சூடு* ( சூடுதல்)

_அரசாட்சியை ஏற்றுக் கொள்_
= *முடி+சூடு*
= *முடிசூடு*
*************************
*முடிசூடலும் தமிழும்*

சாதாரண இளவரசனை இறைவனின் அவதாரமாக மாற்றும் வகையில், நடராஜர் சிலைக்கு முன்பாக ஹோமம் வளர்த்து, மந்திரங்கள் ஓதி, ஐந்து ஆறுகளில் இருந்து கொண்டுவரப்படும் புனித நீரால் இளவரசனுக்கு மகா அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னர் அவர் ஊர்வலமாக அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். முடிசூட்டு விழாவில் காதில் திருவெம்பாவை பாடல்களும் திருப்பாவை பாடல்களும் ஓதப்படுகிறது.தோடுடைய செவியன் விடையேறி யோர் தூவெண் மதிசூடிக்
காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனை நாட்பணிந்தேத்தவருள் செய்த
பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மான் இவனன்றே"

- எனும் சம்பந்தர் தேவாரப் பாடல்களும்,

"பித்தா பிறை சூடி பெருமானே அருளாளாய்
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணெய் நல்லூரருட்துறையுள்
அத்தாவுனக்காளாயினி அல்லேன் எனலாமே"

- எனும் சுந்தரர் தேவாரப் பாடல்களும் பாடப்படுகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளன.
🌹🌹🌹🙏🏽🌹🌹💐
முடிதரி! என்பதும் சரியானது தானே?
Raghavan MK said…
முடிசூடல் என்பது வழக்கில் உள்ள சொல்!
Vanchinathan said…
தரிப்பது என்பது (முடிப்பது, சூடுவது போன்று இல்லாமல்) பொதுவாக அணிதல். தலையில் அணிவது என்று பொருள் இல்லை.

முடி, சூடு இரண்டிற்கும் தலையில் வைப்பது தவிர வேறு பொருள்கள் இருக்க, அவற்றை புதிரில் கையாளாதது ஏனோ!
ராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே....என்று கீர்த்தனம் உள்ளது!

சரியே. ஆனால் முடி, சூடு இரண்டும் பெரும்பாலும் தலையில் வைப்பதைக் குறிப்பவை. தரி என்பது அவ்வாறன்றி உடலின் எல்லா அவயங்களுக்கும் பொருந்தும்.
மிக்க நன்றி ரவி சுப்பிரமணியன் அவர்களே!

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்