Skip to main content

விடை 3391

இன்று (06 ஆகஸ்டு 2018) மாற்றாக வந்த வெடி
இந்தக் கட்டளையை ஏற்று நடக்க முடியாது (2)
இதற்கான விடை: ஓடு(?)

ஏன் "பாடு, தூவு, தேடு" என்பவை விடையாக இருக்கக் கூடாதா என்று வாதிக்கலாம். ஒரு முரணைக் காட்ட வேண்டும் என்ற கொள்கையால் அவற்றைப் பொருத்தமாகக் கொள்ள முடியாது. "நில்" என்ற விடையிலும் இதே முரண் இருப்பதால் விடையாகக் கொள்ளலாம். ஒரு விடையைத் தீர்மானமாகக் கொள்ள முடியாததால்
ஆக மொத்தம் இதுவும் பிசுபிசுத்து விட்டது. அதனால் விடையளித்தவர்கள் பட்டியலை இன்று  நான் வெளியிட வேண்டாமென்றிருக்கிறேன்.
 

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
.........👇🏽.........

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

_ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு_

_தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு_

_தெய்வத்தின் கட்டளை ஆறு_

🙏🏽🙏🏽🙏🏽

*************************
_இக்கட்டளையை ஏற்று நடக்க முடியாது (2)_

_இக்கட்டளையை_
= *நில்*

_ஏற்று நடக்க முடியாது_
= *நில்*

( _கட்டளை_ =
ஆணை, பின்பற்றி நடக்க வேண்டிய விதி, கட்டுப்பாடு

விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)

_அங்கேயே *நில்* என்று கட்டளை இட்டார்_ (ordered him to stand right there))

*************************
_கைக்கு அழகூட்டும் வளையல்களுடன்_

_தலை சீவிய அவளை_
_காணப் புறப்பட்டவனை_

_நில் என்றொரு குரல்_
_கட்டளை யிட்டபின்_

_மனம் நொறுங்கியது_ _வளையல்களைப் போல்_ !
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.