இன்று (14 ஆகஸ்டு 20018) காலை வெளியான வெடி:
வேறுபட்டு வெளிறியவன் உடன் செல்ல உரமுடன் உடன்படாத் தன்மை (5)
இதற்கான விடை: முரண்பாடு = பாண்டு + முர
இன்றைய புதிரில் முரண்பாடான(!) தப்புக் கணக்கு இருக்கிறது . உடன்செல்லுதல் என்றால் கூட வருதல் என்று கருதாமல், கழித்து வருதல் என்று கொள்ள வேண்டும்! அதாவது உடன் என்பதைக் கழித்த பின்(செல்ல) "உரமுடன்" என்ற சொல் "ரமு" என்றாகி வெளிறியவனான பாண்டு வந்து சேர வேறுபட்டு "முரண்பாடு" என்ற விடை வருகிறது.
இந்த சிக்கலான கணக்கில் சிக்காமல் தப்பித்து சரியான விடையை 40 பேர் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள்.
முரண்டு பிடித்தாலும் மூல விடையைத்
திரண்டளித்தார் கற்றோர் தெளிந்து
வேறுபட்டு வெளிறியவன் உடன் செல்ல உரமுடன் உடன்படாத் தன்மை (5)
இதற்கான விடை: முரண்பாடு = பாண்டு + முர
இன்றைய புதிரில் முரண்பாடான(!) தப்புக் கணக்கு இருக்கிறது . உடன்செல்லுதல் என்றால் கூட வருதல் என்று கருதாமல், கழித்து வருதல் என்று கொள்ள வேண்டும்! அதாவது உடன் என்பதைக் கழித்த பின்(செல்ல) "உரமுடன்" என்ற சொல் "ரமு" என்றாகி வெளிறியவனான பாண்டு வந்து சேர வேறுபட்டு "முரண்பாடு" என்ற விடை வருகிறது.
இந்த சிக்கலான கணக்கில் சிக்காமல் தப்பித்து சரியான விடையை 40 பேர் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள்.
முரண்டு பிடித்தாலும் மூல விடையைத்
திரண்டளித்தார் கற்றோர் தெளிந்து
Comments
............👇🏽...........
*பாண்டு* மகாபாரதத்தில் வரும் பஞ்ச பாண்டவர்களின் தந்தையார் ஆவார். இவர் விசித்திர வீரியனின் மனைவியான அம்பாலிகா வேதவியாசருடன் கூடிப் பிறந்தவர். வேதவியாசருடன் அம்பாலிகா கூடிய போது முனிவரது தோற்றங்கண்டு வெளிறிப் போனமையால் *_பாண்டுவும் வெளிறிய தோற்றத்திற் பிறந்தார்._*
★★★★★★★★★★★
_வேறுபட்டு வெளிறியவன் உடன் செல்ல உரமுடன் உடன்படாத் தன்மை (5)_
_வெளிறியவன்_
= *பாண்டு*
_வேறுபட்டு வெளிறியவன்_
= *ண்பாடு*
_உடன் செல்ல உரமுடன்_
= _உரமுடன்_ (ல்) _உடன் செல்ல_
= _உரமுடன்- உடன்_
= ~உ~ ரமு ~டன்~
= *ரமு*
_உடன்படாத் தன்மை_
= *ரமு+ண்பாடு*
= *முரண்பாடு*
_உள்ளார்ந்த உடன்படாத் தன்மை முரண்பாடு ஆகும்._
************************
*_முரண்பாடு_*
எனக்கும் அவனுக்கும்
வாழ்கையென்னும்
விடுதலையில்லா
சிறைச்சாலைக்குள்
புரிந்துகொள்ளா
முரண்பாடு!
விரக்தியான நாட்கள்
கண்ணீர் சிந்தும்
கோலங்கள்
முகமூடியால் மறைத்துக்
கொள்ளும் முரண்பாடு!
போலியான உறவிற்குள்
மலர்ந்து நிற்கும்
சின்ன மலர்கள்
சிக்கித் தவிக்கின்றது
பாசமென்னும்
முரண்பாட்டுக்குள்!
யாரோடும் சொல்ல
முடியாச் சோகங்கள்
எம் முரண்பாட்டால்
நாளைய முதியோர்
இல்லத்திற்காய்
தயாராகின்றது!
by கஜந்தி
★★★★★★★★★★
1) 6:06:56 முத்துசுப்ரமண்யம்
2) 6:08:02 திருமூர்த்தி
3) 6:08:41 எஸ்.பார்த்தசாரதி
4) 6:09:01 பினாத்தல் சுரேஷ்
5) 6:09:28 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
6) 6:09:45 ராமராவ்
7) 6:13:20 ஹரி பாலகிருஷ்ணன்
8) 6:17:30 சுபா ஸ்ரீநிவாசன்
9) 6:19:31 ரமணி பாலகிருஷ்ணன்
10) 6:21:08 மாலதி
11) 6:23:05 ரவி சுந்தரம்
12) 6:24:42 லட்சுமி சங்கர்
13) 6:26:21 நங்கநல்லூர் சித்தானந்தம்
14) 6:29:31 ஆர்.நாராயணன்.
15) 6:37:00 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
16) 6:41:48 மீனாக்ஷி
17) 6:42:56 கி மூ சுரேஷ்
18) 6:49:06 சுந்தர் வேதாந்தம்
19) 6:55:43 மீ.பாலு
20) 7:02:58 திருக்குமரன் தங்கராஜ்
21) 7:11:36 எஸ் பி சுரேஷ்
22) 7:42:00 ஶ்ரீதரன்
23) 8:24:21 மீ கண்ணன்
24) 8:32:00 நாதன் நா தோ
25) 8:37:49 கேசவன்
26) 8:40:21 சங்கரசுப்பிரமணியன்
27) 9:12:10 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
28) 10:52:51 அம்பிகா
29) 11:15:28 கு.கனகசபாபதி, மும்பை
30) 11:49:31 ஸௌதாமினி
31) 13:10:19 மடிப்பாக்கம் தயானந்தன்
32) 14:03:15 மு க பாரதி
33) 15:38:59 மு.க.இராகவன்.
34) 15:48:49 KB
35) 17:29:44 கல்யாணி தேசிகன்
36) 17:47:26 சித்தன்
37) 18:24:13 சதீஷ்பாலமுருகன்
38) 20:32:31 ஏ.டி.வேதாந்தம்
39) 20:33:05 பத்மாசனி
40) 20:33:41 அனுராதா ஜெயந்த்
**********************
மகிழ்ச்சி.
விளக்கம் அருமை.
அதென்ன பெயர் கஜந்தி என்று. கேள்விப்பட்டதே இல்லையே.
'வெளிறியவன்' என்பதை 'வெளியேறியவன்' என்று மீண்டும் மீண்டும் படித்ததால் விடை காண இயலவில்லை. 😥