Skip to main content

விடை 3405

விடை 3405
இன்று காலை வெளியான வெடி:
கட்டவிழ்த்த அவரிடம் குழந்தைகளுக்குப் பிடிக்கும் குணம் (3)

இதற்கான விடை: அடம்;   வரித்தல் = கட்டுதல்; கட்டவிழ்த்த "அவரிடம் " = அவரிடம் - வரி

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
..........👇🏽..........
ஓர் திரைப்படப் பாடல்

*_கட்டவிழ்ந்த_* கண்ணிரண்டும் உங்களைத் தேடும் - பாதி
கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும்
பட்டு நிலா வான்வெளியில் காவியம் பாடும் 😌
💐💐💐💐💐💐💐💐
ஓர் சமயப் பாடல்
*_கட்டவிழ்ந்த_* _கமலம்எனக்_ _கருத்தவிழ்ந்து நினையே_

_கருதுகின்றேன் வேறொன்றும்_ _கருதுகிலேன்_
(திருஅருட்பா)
அரும்பி மலர்ந்த தாமரைப் பூவை, _"கட்டவிழ்ந்த கமலம்"_ எனக் குறிக்கின்றார். தாமரை மலர்ந்து விரிவது போலத் தனது மனத் தாமரையும் மலர்ந்து இறைவனையே நினைக்கின்றமையைஉணர்த்துகிறார்!🙏🏽
*************************
_கட்டவிழ்த்த அவரிடம் குழந்தைகளுக்குப் பிடிக்கும் குணம்! (3)_

( _கட்டவிழ்த்த_
= கட்டு + அவிழ்த்த)
_கட்டு_ = *வரி*
_அவிழ்த்த_ = நீக்கிய
_கட்டவிழ்த்த அவரிடம்_
= *அவரிடம் - வரி*
= *அடம்*
_குழந்தைகளுக்குப் பிடிக்கும் குணம்!_
= *அடம்*
*************************
[Meaning of வரி as stated in
University of Madras Lexicon (agarathi.com)
வரி=Tie, bandage; கட்டு]
*************************
மற்றவர்களின் கவனத்தை வலுக்கட்டாயமாக தன்னை நோக்கி திருப்புவதற்காகத்தான் குழந்தைகள் *அடம்* பிடிக்கிறார்கள். கைக்குழந்தையாக இருக்கும்போதே இந்த சுபாவம் அவைகளிடம் உருவாகிவிடுகிறது.
தாய் தன்னை கவனிக்கிறாரா அல்லது அலட்சியம் செய்கிறாரா என்பதை உணரும் ஆற்றல் பிறந்த சில வாரங்களிலே குழந்தைகளிடம் ஏற்பட்டு விடுகிறது !
********************
_அடங்கா பிடாரி நான் என்றார் அவர்!_ 😲
_அவருள் அடங்கியவள் நான் என்பதறியாமல்!_ 😌
(எப்போதோ படித்தது!)
************************
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (52):

1) 6:01:40 இரா.செகு
2) 6:02:39 எஸ்.பார்த்தசாரதி
3) 6:02:51 KB
4) 6:03:09 ராமராவ்
5) 6:07:08 ஆர். பத்மா
6) 6:07:54 முத்துசுப்ரமண்யம்
7) 6:08:10 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
8) 6:11:07 கு.கனகசபாபதி, மும்பை
9) 6:13:12 பா நடராஜன்
10) 6:13:59 மீனாக்ஷி கணபதி
11) 6:14:10 சுபா ஸ்ரீநிவாசன்
12) 6:15:20 வி ன் கிருஷ்ணன்
13) 6:17:21 ராஜா ரங்கராஜன்
14) 6:17:35 மீனாக்ஷி
15) 6:20:17 கேசவன்
16) 6:27:07 நங்கநல்லூர் சித்தானந்தம்
17) 6:27:26 அம்பிகா
18) 6:28:34 இலவசம்
19) 6:29:05 மடிப்பாக்கம் தயானந்தன்
20) 6:29:56 மீ.பாலு
21) 6:31:11 லதா
22) 6:31:48 ஏ.டி.வேதாந்தம்
23) 6:31:56 ரவி சுந்தரம்
24) 6:32:12 பத்மாசனி
25) 6:32:42 அனுராதா ஜெயந்த்
26) 6:34:28 ஆர்.நாராயணன்.
27) 6:36:15 சங்கரசுப்பிரமணியன்
28) 6:39:24 மாலதி
29) 6:50:21 ஸௌதாமினி
30) 6:51:49 நாதன் நா தோ
31) 6:54:16 உஷா
32) 6:55:39 K.R.Santhanam
33) 7:00:06 ரமணி பாலகிருஷ்ணன்
34) 7:01:38 எஸ் பி சுரேஷ்
35) 7:03:11 கி மூ சுரேஷ்
36) 7:08:13 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
37) 7:09:56 எல்வீ
38) 7:29:31 V.R. Balakrishnan
39) 7:40:24 மு க பாரதி
40) 7:40:47 கோவிந்தராஜன்
41) 7:44:35 மீ கண்ணன்
42) 7:58:11 ரவி சுப்ரமணியன்
43) 8:02:15 லட்சுமி சங்கர்
44) 8:03:39 ஜெயந்தி நாராயணன்
45) 8:23:17 Sucharithra
46) 8:36:21 வானதி
47) 8:44:40 சாந்திநாராயணன்
48) 9:51:28 பினாத்தல் சுரேஷ்
49) 16:31:03 மு.க.இராகவன்
50) 17:44:30 சுந்தர் வேதாந்தம்
51) 17:56:36 ரமணி பாலகிருஷ்ணன்
52) 18:30:58 பாலா
**********************

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்