Skip to main content

விடை 3403

இன்று காலை வெளியான வெடி
மரபுக் கவிஞர்க்கு ஒன்பதாம் வாய்பாடு உரக்கச் சொல்லி முன்னிருப்பவரை  விட நீளம் (4)

 
இதற்கான விடை: கூவிளம்; யாப்பிலக்கணப்படி "ஒன்பதாம்" என்பது நேர்நிரை, அதானால் "கூவிளம்" என்ற வாய்பாட்டில் அமைந்தது.  கூவி = உரக்கச் சொல்லி;  ளம் = "நீளம்" என்ற சொல்லில் முன்னிருக்கும் எழுத்து விடப்பட; (நீ என்பது முன்னிலை, அதை விட்டுவிட என்றும் கொள்ளலாம்!)

விடை கண்டவர்கள் 22 பேர்:
1)  6:04:27    எஸ்.பார்த்தசாரதி
2)  6:17:35    நங்கநல்லூர் சித்தானந்தம்
3)  6:34:04    மு.க.இராகவன்.
4)  6:51:05    ஆர்.நாராயணன்.
5)  6:54:53    மீனாக்ஷி கணபதி
6)  7:37:59    முத்துசுப்ரமண்யம்
7)  7:39:42    ரவி சுந்தரம்
8)  7:47:17    கேசவன்
9)  8:04:18    ராஜா ரங்கராஜன்
10)  8:31:01    எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
11)  8:47:22    லட்சுமி சங்கர்
12)  11:26:02    சித்தன்
13)  13:36:34    V.R.  Balakrishnan
14)  15:05:36    அம்பிகா
15)  17:28:16     KB
16)  18:14:44    லக்ஷ்மி ஷங்கர்
17)  18:16:11    மீ.பாலு
18)  18:17:31    எஸ் பி சுரேஷ்
19)  18:18:28    மீ கண்ணன்
20)  18:47:26    உஷா
21)  19:28:28    சதீஷ்பாலமுருகன்
22) 21:00:16  மாலதி

Comments

Raghavan MK said…
A peek into today's Tamil riddle!
**********👇🏽**********
*_மரபுக் கவிதை_*.
ஆசிரியப்பா, வெண்பா என்னும் பா வகைகளும், ஆசிரிய விருத்தம், கலி விருத்தம் என்னும் பாவினங்களும் மட்டுமே இன்றைய நிலையில் மரபுக் கவிதை வகையில் செல்வாக்குப் பெற்று வருகின்றன. பா வகைகள் சீர், தளை பிறழாதன; பாவின வகைகள் குறிப்பிட்ட *வாய்பாடுகளில்* அமையும் நான்கு அடிகளை உடையன.
*_புதுக்கவிதை_*
எதுகை, மோனை வரையறைகளைக் கடந்து, வேண்டாத சொற்களைத் தவிர்த்துச் சுவை மிளிர நடைமுறைச் சொற்களால் கருத்தை உணர்த்துவது புதுக்கவிதையாகும். மேனாட்டாரின் இலக்கியத் தாக்கத்தால் இருபதாம் நூற்றாண்டளவில் தமிழ்மொழியில் சிறந்தெழுந்த வகைப்பாடாகும் இது.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ஓர் புதுக்கவிதை!
_பாதை முள்_
_படுக்கை முள்_
_இருக்கை முள்_
_வாழ்க்கை முள்_
_ஆன மனிதர்களைப்_ _பார்த்துச்_
_சிலிர்த்துக் கொண்டது_
_முள்ளம்பன்றி..._
_ஓ.. இவர்களுக்குத்_ _தெரியாதா_
_முள்ளும் ஓர்_
_ஆயுதம் என்று_
(சிற்பி பாலசுப்பிரமணியம்)

*************************
_மரபுக் கவிஞர்க்கு ஒன்பதாம் வாய்பாடு உரக்கச் சொல்லி முன்னிருப்பவரை விட நீளம் (4)_
_உரக்கச் சொல்லி_
= *கூவி*
_முன்னிருப்பவரை_
= _நீளத்தில்_ முதல் எழுத்து *நீ*
_விட_
= விட்டு விட (கழிக்க)
_முன்னிருப்பவரை விட நீளம்_
= நீளம் -நீ = *ளம்*
_மரபுக் கவிஞர்க்கு ஒன்பதாம் வாய்பாடு_
= *கூவி+ளம்*
= *கூவிளம்*
*************************
*_சீர் வாய்பாடுகள்_*
ஓரசை, ஈரசை மட்டும் உள்ள சீர்களை வேண்டுமானால்
எளிதில் நினைவிற் கொள்ளலாம். பிற சீர்களில் உள்ள அசைகளை
அவ்வளவு எளிதில் நினைவில் வைத்துக் கொள்வது இயலாது.
எனவே, யாப்பு இலக்கண ஆசிரியர்கள் அவற்றையும் நினைவில்
கொள்ள எளிய ஒரு முறையைக் கண்டறிந்தனர். அதற்கு ‘ *_வாய்பாடு_* ’
என்று பெயர்.
சரியா, புதிதா --> _புளிமா_ (நிரை, நேர்)
எதுமுறை, திருமணம்--> _கருவிளம்_ (நிரை, நிரை)
யாரிவன், கார்முகில் --> *_கூவிளம்_* (நேர், நிரை)
நாலசைச்சீர்களில்
*_ஒன்பதாம் வாய்பாடு_*
9. நேர்-நிரை-நேர்-நேர் *கூவிளந்தண்பூ*
💐🙏🏽💐
Raghavan MK said…



ஒன்பதாம் என்பதற்குவிளக்கம் அறிந்தேன்.கூவிளம் உதாரணம்! நன்று!
Chittanandam said…
எனக்கு உண்மையிலேயே தமிழிலக்கணம் குறிப்பாக யாப்பிலக்கணம் சுட்டுப் போட்டாலும் வராது. தெரிந்த இலக்கணச் சொற்கள் ஒருமை, பன்மை. அவ்வப்போது இடவாகு பெயர். முன்னிருப்பவரை விட நீளம் என்பது ளம் என்பது தெரிந்தது. உரக்கச் சொல்லி என்பது கூவி யாகிவிட்டது. கூவிளம் கிட்டியது. மரபுக் கவிதை, 9ம் வாய்பாடு இவையெல்லாமே ஸ்பானிஷ் & போர்த்துகீஸியம்தான்.


வாவ். கெஸ் பண்ணவே முடியல. ஒன்பதாம் வாய்ப்பாடு தெரில. :)

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்