Skip to main content

விடை 3388

இன்று (03 ஆகஸ்டு 2018) காலை வெளியான வெடி:
தொடர்பில்லாதவன்  வண்டி தேய்ந்து  கடனில் மூழ்கியது (5)
இதற்கான விடை: கண்டவன்  =  கடன் +  வண் (டி)

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (50):

1) 6:08:57 இரா.செகு
2) 6:09:28 ராமராவ்
3) 6:09:52 எஸ்.பார்த்தசாரதி
4) 6:09:57 மீனாக்ஷி கணபதி
5) 6:10:41 மீ.பாலு
6) 6:11:12 சதீஷ்பாலமுருகன்
7) 6:11:29 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
8) 6:12:02 முத்துசுப்ரமண்யம்
9) 6:12:23 சுந்தர் வேதாந்தம்
10) 6:13:13 மு.க.இராகவன்.
11) 6:14:19 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
12) 6:15:22 கி மூ சுரேஷ்
13) 6:16:53 ரா. ரவிஷங்கர்...
14) 6:17:21 ராஜா ரங்கராஜன்
15) 6:17:33 கேசவன்
16) 6:18:01 லதா
17) 6:18:49 உஷா
18) 6:18:55 கு.கனகசபாபதி, மும்பை
19) 6:25:14 லட்சுமி சங்கர்
20) 6:27:55 சங்கரசுப்பிரமணியன்
21) 6:29:31 மாதவ்
22) 6:31:13 ராஜி ஹரிஹரன்
23) 6:31:49 ரவி சுப்ரமணியன்
24) 6:38:38 ஶ்ரீதரன்
25) 6:40:35 பினாத்தல் சுரேஷ்
26) 6:42:02 மீ கண்ணன்
27) 6:45:19 இலவசம்
28) 6:46:59 பாலா
29) 6:47:01 ராதா தேசிகன்
30) 6:49:55 வானதி
31) 7:07:32 மடிப்பாக்கம் தயானந்தன்
32) 7:10:51 கலாராணி
33) 7:12:39 நங்கநல்லூர் சித்தானந்தம்
34) 7:13:55 அம்பிகா
35) 7:19:11 மீனாக்ஷி
36) 7:21:01 வி ன் கிருஷ்ணன்
37) 7:23:25 ஆர்.நாராயணன்.
38) 7:24:13 புவனா சிவராமன்
39) 7:28:19 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
40) 8:01:02 R.kousik
41) 8:22:37 எஸ் பி சுரேஷ்
42) 8:27:53 ருக்மணி கோபாலன்
43) 9:43:30 Siddhan
44) 9:51:02 ஆர். பத்மா
45) 11:53:13 Sucharithra
46) 13:23:16 நாதன் நா தோ
47) 14:24:55 கே.ஆர்.சந்தானம்
48) 18:13:37 பானுபாலு
49) 18:30:26 KB
50) 19:00:50 விஜயா ரவிஷங்கர்
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
..........👇🏽..........
‘ _கடன் பட்டார் நெஞ்சம் போல்_ _கலங்கினான்_ _இலங்கை வேந்தன்’_

ராமனுடன் போரிட்ட ராவணனுடைய மனநிலையை விளக்குவதற்குக் கம்பர் சொல்லும் உவமானம் இது! 🌹
*************************
_தொடர்பில்லாதவன் வண்டி தேய்ந்து கடனில் மூழ்கியது (5)_

_வண்டி தேய்ந்து_
= *வண்(டி)*

_கடனில் மூழ்கியது_
= *வண்* inside *கடன்*
= *வண்+கடன்*
= *கண்டவன்*

_தொடர்பில்லாதவன்_
= *கண்டவன்*
************************
_கண்டவர் விண்டிலர் , விண்டவர் கண்டிலர்_

இதன் பொருள் என்ன?
சிலர் இறைவனை கண்டவர்கள் பேச மாட்டார்கள் , பேசுபவர்கள் காண மாட்டார்கள் என்பர்.

இது மிக தவறானது. இறைவனை கண்ணுற்றவர்கள் பேசமாட்டார்கள் எணின் எப்படி திருமூலர், வள்ளலார் போன்றவர்கள் இறைவனை பற்றி பாடல்கள் இயற்றி , இறைவனை அடையும் வழிகளை பற்றி மக்களிடம் கூறினர்!

இதனால் மேற் கூறிய பொருள் சரியானது அல்ல? இதன் உண்மை பொருள் இதுவே!

அதாவது – “ _கண்டவர் விண்டிலர்”_ – காண்பது நம் கண்கள் அது பேசாது.
_“விண்டவர் கண்டிலர்”_ – பேசுவது நம் வாய் அது காணாது.
மிக எளிய நேரடியான உண்மை பொருள் இதுவே.
அதாவது இறைவனை கண்ட கண்களால் “இறைவனை கண்டேன்” என்று கூற இயலாது.
“இறைவனை கண்டேன்” என்று கூறும் வாயால் இறைவனை காண இயலாது.

நம்மை சிந்திக்க செய்யவே சித்தர்கள் பரிபாசையாக பலவற்றை கூறி வைத்ததில் இதுவும் ஒன்று! 🙏🏽🙏🏽
************************
சரி! வாரும் நாம் ஒரு *தேயாத வண்டியில்* சவாரி செல்வோம்!!

_கட்ட வண்டி கட்ட வண்டி!_
_காப்பாத்த வந்த வண்டி!__

_நாலும் தெரிஞ்ச வண்டி!_
_நாகரீகம் அறிஞ்ச வண்டி!_
×××××××××××××××××××
Sridharan said…
அருமை. கண்டவர் விண்டிலர் விளக்கம் அருமை.

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

உதிரிவெடியின் வலையுலக அவதாரம்

வலையில் ஆரம்பித்து விட்டது உதிரி வெடி. தினம் நான் ஒரு வெடியை வீசப்போகிறேன். நீங்கள் அதை வெடித்துக் கொண்டாடுங்கள். இந்த வெடி வகைகள் உங்களுக்குப் புதிது என்றால் எப்படி விடை காண்பது என்றறிந்து கொள்ள இத்தளத்தில் இன்னொரு கட்டுரை இருக்கிறது. குடிப்போர்க்கு  போதை விடிந்தால் குறையும் வெடிதரும் இன்பமோ வேரிட்டு  நின்றிடும் பாங்கான ஆட்டம்  படித்தறிந்த மாந்தர்க்கு நீங்கா நினைவாம் புதிர் கொஞ்சம் பழங்கதை என்னுடைய முதல் குறுக்கெழுத்துப் புதிரை 1988 ஆம் ஆண்டில் கையாலே எழுதி  7x7 அளவிலான  கட்டங்களில் அமைத்து நான்கைந்து  நண்பர்களுக்கு அதை ஜெராக்ஸ் பிரதி எடுத்துக் கொடுத்தேன். இரண்டு வருடங்களில் அது போல் பத்து, பன்னிரண்டு புதிர்கள் உருவாக்கியிருப்பேன்.  சென்னை ஆன்லைன் நிறுவனத்தினர் முன்னோடியாகத் தமிழில்  ஒரு மின்னிதழை (ஆறாம்திணை என்ற பெயரில்)  1998 டிசம்பரில் தொடங்கினர்.  அப்போது வாராவாரம் புதன்கிழமைதோறும் அந்த மின்னதிழில் புதிர்களை உருவாக்கி வெளியிட்டு வந்தேன். அது நூறு வாரங்களுக்கு மேல் ஓடியது. பிறகு கலிபோர்னியாவிலிருந்து வெளிவரும் அச்சு...