விடை 3396
இன்று (11 ஆகஸ்டு 2018) காலை வெளியான வெடி:
உரம் மக்கும் நடு பாழிடத்தில் விளையும் (4)
இதற்கான விடை: எருக்கு = எரு + க்கு
எல்லோரையும் குழப்பிப் பின்னர் தெளியவைக்கும்படி புதிர்கள், தினசரி ஒன்று. எப்போதாவது விசேஷ நாட்களில் முழுக் கட்டவலையுடன் குறுக்கெழுத்துப் புதிர். அப்பறம் கொஞ்சம் வெண்பா. கணிதத்தில் எனக்குப் பிடித்ததும் நான் புரிந்து கொண்டதும் ஏதாவது.
Comments
...................👇🏽................
_எருக்கு_
_'தெய்வீக மூலிகை’_ எனப் போற்றப்படும் எருக்கு, வளமற்ற நிலங்கள், பராமரிக்கப்படாத வயல்கள், சாலையோரங்கள், சுடுகாடு... என எங்கும் விளையும். பன்னிரண்டு ஆண்டுகள் வரை மழையே இல்லாவிட்டாலும்கூட உயிர்வாழும் ஆற்றல் கொண்டது.
அநேக மருத்துவப் பயன்கள் கொண்ட ஒரு செடி......இதன் ஒவ்வொரு பாகமும் பட்டை, பால், பூ, இலை என தனிப்பட்ட மருத்துவக் குணங்கள் கொண்டவை...
எருக்கு இலை வாந்தி உண்டாக்குதல்; பித்தம் பெருக்குதல்; வீக்கம், கட்டிகளைக் கரைத்தல் ஆகிய பண்புகளைக் கொண்டுள்ளது.
எருக்கு பட்டை, பூ ஆகியவை கோழையகற்றும்; பசி உண்டாக்கும்; செரிப்பு உண்டாக்கும்; உடல் உரமாக்கும்.
குளவி, தேனீ, தேள் கொட்டு விஷம் முறிய அவை கொட்டிய இடத்தில் எருக்கு பாலைத் தடவ விஷம் இறங்கும்.
***********************
_உரம் மக்கும் நடு பாழிடத்தில் விளையும்_
(4)
_உரம்_
= *எரு*
_மக்கும் நடு_
= (ம) *க்கு* (ம்)
= *க்கு*
_பாழிடத்தில் விளையும்_
= *எரு+க்கு*
= *எருக்கு*
*************************
விநாயகரை அர்ச்சிக்க உகந்த மலர் எருக்கம்பூ மலர் ஆகும். இந்த பூவை அர்க்கபுஷ்பம் என்பர். அர்க்க என்ற சமஸ்கிருத சொல்லுக்கு எருக்கு என்று பொருள். விநாயகரைப் போன்றே சூரியனுக்கும் எருக்கம்பூ உகந்தது. சூரியனுக்கு அர்க்கன் என்ற பெயரும் உண்டு. சூரியனார் கோயிலில் தலவிருட்சம் கூட எருக்கஞ்செடிதான். எருக்கம்பூ மாலையை விநாயகருக்கு அணிவிப்பதன் மூலம் விக்னங்கள் (தடைகள்) நீங்குவதோடு, சூரியனின் அருளும், ஆத்ம பலனும், ஆரோக்கியமும் நமக்குக் கிடைக்கும்.
🌹🌹🌹🙏🏽🌹🌹🌹
இத்தனை சிறப்பு வாய்ந்த எருக்கை நாம் கொண்டாட தவறிவிட்டோம். விநாயகர் சதுர்த்தி தினத்தைத் தவிர, மற்ற நாட்களில் எருக்கின் அருகேகூட செல்லத் தயங்குகிறோம்😔
1) 6:02:59 பானுபாலு
2) 6:03:49 லதா
3) 6:05:13 ரவி சுந்தரம்
4) 6:05:35 மீனாக்ஷி
5) 6:07:09 லட்சுமி சங்கர்
6) 6:07:14 அம்பிகா
7) 6:09:01 முத்துசுப்ரமண்யம்
8) 6:09:28 கேசவன்
9) 6:16:21 மீ.பாலு
10) 6:22:29 சங்கரசுப்பிரமணியன்
11) 6:24:08 எஸ்.பார்த்தசாரதி
12) 6:26:21 மீனாக்ஷி கணபதி
13) 6:33:33 கு.கனகசபாபதி, மும்பை
14) 6:35:07 உஷா
15) 6:35:33 K.R.Santhanam
16) 6:38:40 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
17) 6:42:08 Sucharithra
18) 6:47:23 மீ கண்ணன்
19) 6:55:38 மாலதி
20) 7:03:44 விஜயலக்ஷ்மி
21) 7:05:36 வானதி
22) 7:18:58 சுந்தர் வேதாந்தம்
23) 7:19:26 எஸ் பி சுரேஷ்
24) 7:50:49 ஆர்.நாராயணன்.
25) 7:53:10 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
26) 7:59:19 ஏ.டி.வேதாந்தம்
27) 7:59:49 பத்மாசனி
28) 8:00:29 அனுராதா ஜெயந்த்
29) 8:09:28 விஜயா ரவிஷங்கர்
30) 8:10:07 ரா. ரவிஷங்கர்..
31) 8:14:26 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
32) 8:35:39 திருக்குமரன் தங்கராஜ்
33) 9:06:56 மு.க.இராகவன்.
34) 10:46:14 KB
35) 11:39:11 சாந்திநாராயணன்
36) 11:40:56 ரமணி பாலகிருஷ்ணன்
37) 11:56:18 சித்தன்
38) 12:00:03 ரா. ரவிஷங்கர்...
39) 12:19:54 ஸௌதாமினி
40) 13:28:45 ஆர். பத்மா
41) 15:15:20 மடிப்பாக்கம் தயானந்தன்
**********************