Skip to main content

விடை 3402

விடை 3402
இன்றுகாலை வெளியான வெடி:

குறைவான புத்தியுடன் தலை கலைப் படைப்பு (5)

இதற்கான விடை: சித்திரம்
விடை கண்டவர்கள் 48 பேர்:

1)  6:01:04    எஸ்.பார்த்தசாரதி
2)  6:03:13    ரவி சுப்ரமணியன்
3)  6:03:43    ஶ்ரீ வி நா
4)  6:04:48    முத்துசுப்ரமண்யம்
5)  6:05:13    திருமூர்த்தி
6)  6:12:16    சாந்திநாராயணன்
7)  6:13:02    லட்சுமி சங்கர்
8)  6:13:40    ரங்கராஜன் யமுனாச்சாரி
9)  6:13:42    ராஜா ரங்கராஜன்
10)  6:14:23    Thi. Po. Ramanathan
11)  6:14:38    நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
12)  6:15:35    சங்கரசுப்பிரமணியன்
13)  6:15:47    நாதன் நா தோ
14)  6:16:00    பா. நடராஜன்
15)  6:20:01    கோவிந்தராஜன்
16)  6:21:19    V.R.  Balakrishnan
17)  6:22:56    ரவி சுந்தரம்
18)  6:23:21    சுந்தர் வேதாந்தம்
19)  6:24:19    கு.கனகசபாபதி, மும்பை
20)  6:24:47    ஸௌதாமினி
21)  6:27:12    K R.Santhanam
22)  6:27:49    கேசவன்
23)  6:35:36    லதா
24)  6:37:02    கி மூ சுரேஷ்
25)  6:52:10    மடிப்பாக்கம் தயானந்தன்
26)  6:56:26    மீனாக்ஷி
27)  6:57:49    சித்தன்
28)  7:11:43    நங்கநல்லூர் சித்தானந்தம்
29)  7:29:11    பாலா
30)  7:30:39    மீ கண்ணன்
31)  7:34:04    மு க பாரதி
32)  7:35:13    ஹரி பாலகிருஷ்ணன்
33)  7:52:55    புவனா சிவராமன்
34)  8:13:20    ஆர்.நாராயணன்.
35)  8:32:35    எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
36)  8:37:53    ராஜி ஹரிஹரன்
37)  8:59:07    வி ன் கிருஷ்ணன்
38)  9:28:50    சுப்பிரமணியம் வேங்கடராமன்
39)  9:30:24    வானதி
40)  9:36:07    திருக்குமரன் தங்கராஜ்
41)  9:55:37    மீ.பாலு
42)  11:18:27    மு.க.இராகவன்.
43)  11:54:49    ஜெயந்தி நாராயணன்
44)  12:45:36    மீனாக்ஷி கணபதி
45)  13:44:47    சதீஷ்பாலமுருகன்
46)  16:26:05    KB
47)  18:24:41    Sucharithra
48)  18:41:02    செந்தில் சௌரிராஜன்

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
..............👇🏽................
சதாவதானி *செய்கு தம்பிப் பாவலர்,* (இஸ்லாமியப் புலவர் )எல்லாச் சமயங்களுக்கும்
பொதுவாகக் கடவுளைச் சுட்டும் ஒரு தொடர் சொல்லுங்கள்
என்று ஜி. சுப்ரமணிய ஐயர் கேட்டபோது, அவர் *சிரமாறுடையான்* என்று
பாடினார்.
_சிரமாறுடையான் செழுமா வடியைத்_
_திரமா நினைவார் சிரமே பணிவார்_
_பரமா தரவா பருகாருருகார்_
_வரமா தவமே மலிவார் பொலிவார்_
இதைச் *சிரம்* ஆறு உடையான் எனவும் சிரம் மாறு
உடையான் எனவும் பிரிக்கலாம்.
சிரம் = தலை, தலைமை என்னும் பொருள்கள்;
ஆறு = நதி, எண்(6) என்னும் பொருள்கள்;
ஆறு = நெறி;
சிரமாறு = சிரம் மாறு (மாறுதல்);
சிரம் ஆறு உடையான் - சிரத்தில் கங்கை ஆற்றை உடையவன்
(சிவன்)
தலை ஆறு உடையான் (முருகன்)
தலை மாறி இருப்பவன் (யானைமுகன்)
சிரம் “ஆறு” உடையான்_ திருவரங்கத்தில் தலைப்பாகம் காவிரியாற்றையுடைய, பள்ளிகொண்ட திருமால்,
சிரம் ஆறு உடையான் -
தலைமையான நெறிகளை உடையவன் (அல்லா, இயேசு, புத்தர்)
இவ்வாறு அனைத்து மதக் கடவுளரையும் இரண்டு சொற்களுள்
சிலேடையாக அமைத்துக்காட்டினார் புலவர்.🙏🏽
*************************
_குறைவான புத்தியுடன் தலை கலைப் படைப்பு (5)_
_தலை_
= *சிரம்*
_குறைவான புத்தியுடன்_
= ~(பு)~ *த்தி*
_கலைப் படைப்பு_
= *சிரம்+த்தி*
= *சித்திரம்*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
_*சித்திரமும்* கைப்பழக்கம்_ _செந்தமிழும் நாப்பழக்கம்_
_வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்_
_நடையும் நடைப்பழக்கம்_
_நட்பும் தயையும்_
_கொடையும் பிறவிக் குணம்!_
( ஔவையார் தனிப்பாடல்கள்)
💐💐💐💐💐💐💐💐
_*சித்திரம்* பேசுதடி, எந்தன் சிந்தை மயங்குதடி!_
_சித்திரம் பேசுதடி!_
_என் மனம் நீ அறிவாய் உந்தன் எண்ணமும் நானறிவேன்_
_இன்னமும் ஊமையைப் போல் மௌனம்_
_ஏனடி தேன் மொழியே!_
_சித்திரம் பேசுதடி !_
***********************

புதிரில் 'தலை' திறமையுடன் கையாளப்பட்டுள்ளது. முதற்கணிப்பில், 'தலை கலை = க' எனத் தோன்றியது.
Chittanandam said…
குறைவான புத்தியுடன் என்றதும் புத் எனக் கொண்ட மனம் அதனின்றும் அகல மறுத்தது. தலை சிரம் என்று அறிந்துகொண்டேன். புத்தையும் சிரத்தையும் இணைக்க முடியவில்லை. அப்புறம்தான் உறைத்தது த்தியாகக்கூட இருக்கலாம் என்பது. விடையும் உடன் கிடைத்தது. நல்ல அமைப்பு.
உஷா said…
என் குறைவான புத்திக்கு எட்டவேயில்லை. அழகான கட்டுமானம்
விளக்கத்தில் ஒரு திருத்தம்: சித்திரம் = படைப்பு. கலை படைப்பு அல்ல! கலை இந்த புதரில் எழுத்தக்களை வரிசைகளைக் கலைத்து போட வேண்டும் என்று சுட்டி காட்டுகிறது. இவ்வாறு "கலை" "புரட்டு" போன்ற கட்டமைப்பு சொற்களை ஒளித்து வைப்பதை ரசிக்க வேண்டும்
பா.தயானந்தன்
நுட்பமிக்க புதிராக்கம்..
வாழ்த்துக்கள்
Raghavan MK said…
I was just thinking about the word which indicates to mixup! கலை தான் அந்த சொல் என்பதை உங்கள் மூலம் அறிந்தேன்!
Thank you!

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்