Skip to main content

விடை 3408

விடை 3408

இன்று காலை வெளியான வெடி:
சோற்றோடு உண்ணப்படும் கல்லை எறிந்து காலணி அணிந்து  புகும் (4)

இதற்கான விடை: குழம்பு =  கழல் - கல் + புகும்

 சரியான விடை கண்டவர்கள் 19  பேர்:

1)    6:22:07  எஸ்.பார்த்தசாரதி
2)    6:25:47      லட்சுமி சங்கர்
3)    6:38:05      உஷா
4)    7:06:38      கேசவன்
5)    7:39:15      வி ன் கிருஷ்ணன்
6)    7:43:24      நாதன் நா தோ
7)    8:54:37      நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
8)    8:55:02      மீனாக்ஷி கணபதி
9)    9:48:41      ஶ்ரீவிநா
10)  9:56:09      ஆர்.நாராயணன்.
11)  10:55:50    எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
12)  14:06:52    மு க பாரதி
13)  15:34:52    மு.க.இராகவன்.
14)  15:50:58    மடிப்பாக்கம் தயானந்தன்
15)  17:41:04    கோவிந்தராஜன்
16)  18:22:38    ரமணி பாலகிருஷ்ணன்
17)  19:03:50    வி ன் கிருஷ்ணன்
18)  19:34:34    ஆர். பத்மா
19) 20:25:45    KB

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
***********👇🏽**********
*திருப்பாவை-பாசுரம் 24*
_அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி_
_சென்றங்கு(த்) தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி_
_பொன்ற(ச்) சகடம் உதைத்தாய் புகழ் போற்றி_
_கன்று குணில் ஆவெறிந்தாய் *கழல்* போற்றி_
_குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி_
_வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி_
_என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்_
_இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்_
🌸🌸🌸🙏🏼🌸🌸🌸
_சோற்றோடு உண்ணப்படும் கல்லை எறிந்து காலணி அணிந்து புகும் (4)_

_காலணி_
= *கழல்*
(கழல் முன்காலத்தில் வீரர்கள் அணியும் காலணி)
_கல்லை எறிந்து_
= *கழல்-கல்=ழ*
_அணிந்து புகும்_
= *புகும்+ழ*
= *குழம்பு*
= _சோற்றோடு உண்ணப்படும்_
🌸🌸🌸🌸🌸🌸
_நித்தம் நித்தம் நெல்லு சோறு..._
_நெய் மணக்கும் கத்திரிக்கா_ ...
_நேத்து வச்ச மீன் குழம்பு இன்னும்_ _இழுக்குதய்யா..._
இந்த பாடல் வரிகளை கேட்கும்போதே பலருக்கும், நாக்கில் எச்சில் ஊறிவிடுகிறது. அந்தளவுக்கு மீன் குழம்பின் ருசிக்கு பெரும்பாலானோர் அடிமை. 😛
இது வத்தகுழம்பும் சுட்ட அப்பளமும்......👇🏽
யாரையாவது விருந்துக்கு கூப்பிட்டால் ‘எனக்காக ஒன்னும் மெனக்கிட வேணாம். சுட்ட அப்பளமும் வத்தக் குழம்பும் இருந்தால் போதும்’ என்பார்கள்.
அதுவே அமிர்தம்!!!கூடவே பொட்டுக்கடலை துவையலும் இருந்திட்டால் தேவாமிர்தம்.😛
வத்தக்குழம்பு சாதத்தோட ஒரு special advantageஎன்னன்னா….சில சமயம் லீவு நாள்ள, காலைல குளிக்க முடியாம ஏதோ ஒழிச்சல் வேலை,சோம்பேறித்தனம்ன்னு இருந்தா, முந்தினநாள்
பண்ணின வத்தக்குழம்பு இருந்தா [ரொம்ப நன்னா இருக்கும்] ஒரு பாத்திரத்ல சாதத்தைப் போட்டு, அது தலைல நல்லெண்ணெய் விட்டு,பழேத்துக் குழம்பை விட்டு மொத்தமா உருட்டிப் பிசைஞ்சு, நம்ம உள்ளங்கை ஸைசுக்கு ஒரு உருண்டையா [திருப்பதி
லட்டு சைஸ்] உருட்டி எடுத்துண்டுபோய், பின்னால தோய்க்கறகல் மேலேயோ[இப்போ washing machine],தோட்டத்துலேயோ, பால்கனிலேயோ உக்காந்து சாப்பிட்டா….புல்லரிக்கும்!! அனுபவியுங்கோ!
💐🙏🏼💐
பகல் --கல் = "ப"+காலணி = செருப்பு --செ= "பருப்பு ", சோற்றுடன் முதலில் உட்கொள்ளப்படுவது
Sundar said…
குழம்பு என்ற விடையை அடைய தேவையான anagram indicator புதிரில் எங்கே இருக்கிறது? அணிந்து என்ற சொல் anagram indicator மாதிரி தெரியவில்லையே?!
Vanchinathan said…
ஆமாம் இல்லாமல் செய்த புதிர். சில நாட்களுக்கு முன்பு "கலை" என்ற சொல் உபயோகமற்றது என்று வாதிடப்பட்டது. அது இல்லாமலே விடையை அடைய முடியும் என்று சொல்லப்பட்டதால் இவ்வாறு செய்தேன். செய்திருக்கக்க்கூடாது என்று உணர்கிறேன். குழப்பச் சொல்லாததால் குழம்பி குழம்பை அடைய முடியவில்லை என்று நினைக்கிறேன்
Raghavan MK said…



குழம்பி குழம்பை அடைய முடியவில்லை என்றாலும் ரசமான புதிர்!

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்