விடை 3397
இன்று காலை வெளியான வெடி:
அளவிலா எல்லைகளுடைய கர்நாடக நதி புரண்டோடினால் புரியாது (5)
இதற்கான விடை: விளங்காது = விள + துங்கா
கர்நாடக நதியின் வெள்ளம் எல்லைகளை உடைத்துக்கொண்டு வந்ததால்
"அளவிலா" உடைந்து "ளவி" ஆனது.
இன்று காலை வெளியான வெடி:
அளவிலா எல்லைகளுடைய கர்நாடக நதி புரண்டோடினால் புரியாது (5)
இதற்கான விடை: விளங்காது = விள + துங்கா
கர்நாடக நதியின் வெள்ளம் எல்லைகளை உடைத்துக்கொண்டு வந்ததால்
"அளவிலா" உடைந்து "ளவி" ஆனது.
Comments
1) 6:23:12 எஸ்.பார்த்தசாரதி
2) 6:23:55 ராமராவ்
3) 6:38:19 சங்கரசுப்பிரமணியன்
4) 6:49:55 நங்கநல்லூர் சித்தானந்தம்
5) 6:59:37 முத்துசுப்ரமண்யம்
6) 7:05:01 ராதா தேசிகன்
7) 7:09:48 ஆர்.நாராயணன்.
8) 7:09:54 மீனாக்ஷி
9) 7:12:03 லட்சுமி சங்கர்
10) 7:14:26 நாதன் நா தோ
11) 7:20:42 கேசவன்
12) 7:44:29 மீ கண்ணன்
13) 7:45:33 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
14) 8:09:55 மடிப்பாக்கம் தயானந்தன்
15) 8:23:45 இலவசம்
16) 8:29:17 சுந்தர் வேதாந்தம்
17) 8:32:15 ரவி சுந்தரம்
18) 8:33:26 மீ.பாலு
19) 8:45:38 மாலதி
20) 9:05:42 ஜெயந்தி நாராயணன்
21) 9:55:41 ருக்மணி கோபாலன்
22) 10:12:35 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
23) 10:14:51 எஸ் .ஆர்.பாலசுப்ரமணியன்
24) 10:41:59 லதா
25) 10:46:05 Sucharithra
26) 10:49:22 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
27) 10:55:20 மு..இராகவன்.
28) 10:58:26 ராஜி ஹரிஹரன்
29) 11:35:08 வானதி
30) 13:11:48 கு.கனகசபாபதி, மும்பை
31) 13:13:02 லட்சுமி மீனாட்சி, மும்பை
32) 14:31:39 எஸ் பி சுரேஷ்
33) 14:42:44 கே.ஆர்.சந்தானம்
34) 15:41:13 KB
35) 15:49:05 அம்பிகா
36) 15:52:34 பா நிரஞ்சன்
37) 18:25:02 ரங்கராஜன் யமுனாச்சாரி
38) 20:07:13 ஶ்ரீவிநா
**********************
*துங்கா* ஆறு தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஓர் ஆறு ஆகும். இவ்வாறு மேற்குத் தொடர்ச்சி மலையில் கங்கா மூலா என்னுமிடத்தில் உள்ள வராக பர்வதம் என்னும் மலையில் துவங்குகிறது. இதன் நீளம் 147 கிலோமீட்டர்கள் ஆகும். கர்நாடகத்தின் சிமோகா, சிக்மகளூர் மாவட்டங்களின் வழியாகப் பாய்ந்து செல்லும் இவ்வாறு சிமோகா நகரத்தில் உள்ள கூட்லி என்னுமிடத்தில் *பத்ரா* ஆற்றுடன் கலக்கிறது. இவ்விடத்தில் இருந்து இது *துங்கபத்ரா* ஆறு என்று அழைக்கப் படுகிறது. பின் துங்கபத்ரா ஆறானது கிழக்கு நோக்கி ஓடி ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா ஆற்றுடன் இணைகிறது.
*************************
_அளவிலா எல்லைகளுடைய கர்நாடக நதி புரண்டோடினால் புரியாது (5)_
_அளவிலா எல்லைகளுடைய_
= (அ) *ளவி* (லா)
(★ _எல்லைகளுடைய_
= *_எல்லைகள் உடைய_* என்று கொள்ள வேண்டும்! 😃)
_கர்நாடக நதி_
= *துங்கா*
_புரண்டோடினால்_
_ளவி_ = *விள*
_துங்கா_ = *ங்காது*
_புரியாது_
= *விள + ங்காது*
= *விளங்காது*
*************************
ஆந்திர மாநிலம் கர்ணூல் மாவட்டத்தில் அமைந்துள்ள மந்த்ராலயம் நகரம், கர்நாடக எல்லையில், *_துங்கபத்ரா நதிக்கரையோரம்_* ஆன்மிக மனம் பரப்பி வருகிறது.
இது 'மன்ச்சாலே' என்ற பெயராலும் பிரபலமாக அழைக்கப்படுகிறது.
மந்த்ராலயம் நகரத்தின் குன்றா புகழுக்கு _பிருந்தாவனம்_ என்று அழைக்கப்படும் _குரு ராகவேந்திரா சுவாமியின்_ சமாதி கோயிலே முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறது.
🌹🌹🙏🏽🙏🏽🙏🏽🌹🌹
*************************
'சரியான விளங்காதவனா இருக்கியே! '
என என்னையே நான் கடிந்து கொண்டேன்.
*_எல்லைகளுடைய_*
உடைய என்பதற்கு _பெற்றுள்ள_ எனவும் பொருள்.ஆனால் இங்கு உடைய To break, broken என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது.
எல்லைகளை உடைத்து விடை காண்பதற்குள் மன்டையை உடைக்காதக் குறைதான்!
அரருமையான புதிர்!
புதிராசிரியருக்கு என் பாராட்டுக்கள்!💐
👏🏼👏🏼
ஆசிரியருக்குப் பாராட்டுகள்.