Skip to main content

Posts

Showing posts from March, 2019

விடை 3627

இன்று காலை வெளியான வெடி பணியாள் குழு விலக அப்பணி பற்றி  வெளியே  யோசி (5) இதற்கான விடை:   சிப்பந்தி = சிந்தி   + ப்ப  (அப்பணி ‍- அணி) இன்று அனுப்பப்பட்ட விடைகள்  எல்லாவற்றையும் அறிந்துகொள்ள  இங்கே செல்லவும்.  நேற்று  வெளியிட்ட  பூங்கோதையின்  குறள் வளைப்  புதிர்: வானிகர் கூந்தல் இருக்காத வனின்இளக உற்றப் பயனாய் இறுக. அது பின் வரும் திருக்குறளின் மாற்றுவடிவம்: இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.   

Solution to Krypton 119

Today's  clue: Place one warhead in the booth and refuse to co-operate (9) No, this is not a tip on how to disrupt the upcoming parliamentary elections. Simply place ONE and W(arhead) in STALL (booth). When a politician stonewalls an investigation it shows refusal  to co-operate. Here is the list of all the solutions submitted today.

உதிரிவெடி 3627

உதிரிவெடி 3627 (மார்ச் 31, 2019) வாஞ்சிநாதன் ******************* பணியாள் குழு விலக அப்பணி பற்றி  வெளியே  யோசி (5) Loading...

விடை 3626

இன்று காலை வெளியான வெடி: நச்சு ஏரியின் நீரை நகுலன் பருகிய பின் திரௌபதிக்கு எத்தனை உலகங்கள் ? (5) காட்டில் வேட்டையாடிக்  களைத்திருந்த பாண்டவர்கள் தாகத்திற்கு நீரெடுத்துவர முதலில் நகுலன் சென்றான்.  தண்ணீரைக் குடிக்கும் முன் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்று கட்டளையிட்ட யக்ஷனை மீறியதால் விஷமான நீர் நகுலன் சாகக் காரணமானது. அதனால் ஐந்து பதிகளைப் பெற்ற திரௌபதிக்கு அச்சமயம் பதிநான்கு என்றாகி விட்டது. (அதன் பின் மற்ற சகோதரர்களும் ஒவ்வொருவராய் இதே போல் மாண்டுபோக தருமர், பொறுமையாய்க் கேள்விகளுக்கு பதிலளித்து சகோதரர்களை மீண்டும் உயிர்ப்பிக்க வைத்தார். மஹாபாரதத்தின் ஆழமான தத்துவங்களடங்கியது இந்த பகுதி.)  இன்றைய புதிர் முதலில் நகுலன் இறந்த தருணத்தை அடிப்படையாகக் கொண்டது.   ஆனால் பதினநான்கை நான்கு பதிகள் என்று மாற்றிச் சிந்திக்கும் அழகான  கற்பனை கொண்டவர்கள்  ஈரேழு உலகங்களிலும் வெகு சிலர்தான் இருக்கிறார்கள். அது நானில்லை. பூங்கோதைதான் இதற்குச் சொந்தக்காரர். அவருடைய புதிரை லேசாக மாற்றிவிட்டிருக்கிறேன். " ராமர் காட்டுக்கு எத்தனை வருஷம் போனா எ...

உதிரிவெடி 3626

உதிரிவெடி 3626 (மார்ச் 30, 2019) வாஞ்சிநாதன் ******************* [இன்றைய புதிர் தோன்றிய‌ சுவாரசியமான  கதையை இரவில் விடையோடு அளிக்கிறேன்]. நச்சு ஏரியின் நீரை நகுலன் பருகிய பின் திரௌபதிக்கு எத்தனை உலகங்கள் ? (5) Loading...

விடை 3625

இன்று காலை வெளியான வெடி இடை இங்கு தலை இல்லை என்று பயப்படு (4) இதற்கான விடை:  நடுங்கு = நடு (இடை)  + (இ)ங்கு.   நடுங்கு என்றால் உடலில் ஏற்படும் ஒரு வித அசைவுதான், பயப்படுதல் என்ற காரணத்தின் விளைவுதான். ஆனாலும், பொதுவாக "அவன் பேரைச் சொன்னாலே ஊரே நடுங்கும்" என்று கூறும்போது பயத்தைத்தான் குறிப்பிடுகிறோம். இன்று அனுப்பப்பட்ட விடைகள்  எல்லாவற்றையும் அறிந்துகொள்ள இப்பக்கத்தைப் பார்க்கவும் . 

விடை 3624

இன்று காலை வெளியான வெடி இரண்டாம் தாரம் வெளியே இல்லாம‌ல் புலம்பு (4) இதற்கான விடை:  அரற்று = ர +  அற்று "வெளியே இல்லாமல்" என்பதை இங்கு எனக் கொண்டு  இதற்கு "இரங்கு" என்ற விடையும் அளிக்கப்பட்டுள்ளது. புலம்புதல்  தன்னுடைய துன்பத்தை  வெளிப்படுத்தச் சொல்வது. இரங்குதல் என்பது  மற்றொருவருக்கு நேரிட்ட துன்பத்தைக் கண்டு தோன்றும் உணர்வு. இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.

விடை 3623

இன்று காலை வெளியான வெடி பருத்திப் புடவை பார்த்தால் ஓரங்கிழிந்து பாதி கசங்கி இருக்கும் (5) இதற்கான விடை: கண்டாங்கி    = கண்டா (ல்)  + (கச) ங்கி கண்டாங்கி என்றால் பட்டுப்புடவை இல்லையா என்று கேட்டு எனக்கு சிலர் எழுதியிருந்தார்கள். நான் பட்டு என்று கேள்விப்பட்டதில்லை. வலையில் தேடிய போது விக்கிபீடியாவில் பட்டு என்று எழுதியிருந்தது. பின்னர் நம்பத் தகுந்த வட்டாரங்களைத் தேடக் கிடைத்தது, அகமதாபத்தின்  நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன், காணொளி கிடைத்தது. https://www.youtube.com/watch?v=uxA_P9dcGu0 அதைப் பார்த்தால் ப‌ருத்திச் சேலைதான் என்று புரிந்துவிடும். ஆனாலும் விஷயம் தெரிந்த செட்டிநாட்டுக் காரர்கள் இருந்தால் கருத்துரையில் தெரிவிக்கலாம். இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.

உதிரிவெடி 3623

உதிரிவெடி 3623 (மார்ச் 27, 2019) வாஞ்சிநாதன் ******************* பருத்திப் புடவை பார்த்தால் ஓரங்கிழிந்து பாதி கசங்கி இருக்கும் (5) Loading...

விடை 3622

இன்று காலை வெளியான வெடி: கல்யாணத்துக்கு முன் சந்தோஷமாகத் தொடங்கி  அஹிம்சையைத் தீவிரமாக போதிக்கும் (4) இதற்கான விடை:   சமணம் இன்று அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 3622

உதிரிவெடி 3622 (மார்ச் 26, 2019) வாஞ்சிநாதன் ****************** கல்யாணத்துக்கு முன் சந்தோஷமாகத் தொடங்கி  அஹிம்சையைத் தீவிரமாக போதிக்கும் (4) Loading...

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.

உதிரிவெடி 3621

உதிரிவெடி 3621 (மார்ச் 25, 2019) வாஞ்சிநாதன் *****************  திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்  ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) Loading...

விடை 3620

பக்தி பல விதங்களில் வெளிப்படுவதை பக்தர்கள் எழுதிய இலக்கியங்களைப் படித்தால் சட்டென விளங்கும்.  "கருணையின் கடலே,  எல்லையில்லாதவனே, எங்கும் நிறைந்திருப்பவனே" என்று பலர்  கடவுளின் குணத்தைப் பாடுகிறார்கள்.   "இப்படியெல்லாம் மோசமாயிருந்த என்னை நல்லவழிப் படுத்தியவனே" என்று கடவுள் மனிதனுக்குச் செய்ததை வேறு சிலர் பாடுகிறார்கள். இன்னமும் சிலர் சிலையழகு,  அலங்கரிக்கும் பூமாலைகள், பட்டாடைகள், ஜொலிக்கும் வைர மூக்குத்தி, சந்தனக் காப்பு என்று   விவரித்து  மனிதர்கள் கடவுளுக்கு அணிவித்த ஆடை ஆபரணங்களில்  மனதைப் பறி கொடுத்துப் பாடுகிறார்கள். இன்றைய புதிரில் வந்த சிவனடியார்  நிர்க்குணனே என்று பாடுபவர் போலிருக்கிறது. இப்படி அலங்கார உடை தரித்த‌ இறைவனை தரிசிப்பதில் நாட்டமின்றி ஓடிப் போய்விட்டார். உடையணிந்த இறைவனைக் கண்ட சிவனடியார்களின்  முதல்வர்  ஓடினார் (4) இதன் விடை:  தரித்த = தரிசித்த ‍- சி அப்படி ஓடிப்போன ஒருவர் எழுதிய‌ ஒரு தத்துவப் பாடல் நாட்டுப்புற இலக்கியத்தில் வந்ததா, இல்லை சித்தர்கள் எழுதியதா தெரியாது, இங்கே கொடுக்கிறேன்:  உ...

உதிரிவெடி 3620

உதிரிவெடி 3620 (மார்ச்24,2019) வாஞ்சிநாதன் ******************* உடையணிந்த இறைவனைக் கண்ட சிவனடியா ர் களின்  முதல்வர்  ஓடினார் (4) Loading...

விடை 3619

இன்று காலை வெளியான வெடி கொழு உண்டாக்கிய பள்ளத்தில் விழுந்த முதல் யவனனை ஒத்திருக்கும் தன்மை (3) ஏரோட்டும்போது கலப்பையில் மாட்டியிருக்கும் கொழு மண்ணைக் கிழித்து உருவாக்கும் பள்ளத்தை  உழவர்கள் சால் என்று சொல்வார்கள். (ஏற்றத்தில் தண்ணீர் இறைக்கப் பயன்படும் பெரிய பாத்திரத்தையும் சால் என்பர்). இதெல்லாம் நான் முப்பது வருடம் முன்பு விடுமுறைக்காக கிராமத்திற்கு செல்லும்போது   எங்கள் சித்தப்பா வீட்டில் கேட்டது. அதே கிராமத்து வீட்டில் பிறந்து வளர்ந்த  அந்த சித்தப்பாவின் பேர‌க் குழந்தைகள் இப்போது கல்லூரி படிக்கிறார்கள். அவர்களுக்கு இந்த வார்த்தை காதில் விழாமலே அந்த கிராமத்தில் வளர்ந்திருப்பார்கள். உழுவதற்கு மாடும் கலப்பையும் கிடையாது, டிராக்டர்தான். ஏற்றம்  கிடையாது, மின்சாரத்தில் இயங்கும் பம்புகள்தான். எனக்கு தெரிந்த கிராமமெல்லாம் 1980க்கு முறப்பட்ட கிராமங்கள்தான். இன்றைய விடை: சாயல் ( அவருடைய பாடல்களில் அதிகம் நாட்டுப்புற இசையின் சாயல் இருக்கும்) இன்றைய விடைப் பட்டியலைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 3619

உதிரிவெடி 3619 (மார்ச் 23, 2019) வாஞ்சிநாதன் ****************** கொழு உண்டாக்கிய பள்ளத்தில் விழுந்த முதல் யவனனை ஒத்திருக்கும் தன்மை (3) Loading...

விடை 3618

இன்றைய வெடி: ஐந்தையடக்கிய நெற்றியில்  காணப்படுவது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது (4)  ஐம்புலன்களையும் அடக்காத சராசரி மனிதரும் விடையைக் கண்டுபிடிக்கலாம். நெற்றியில்  திருநீறையும்  நாமத்தையும் ஒற்றைக் கோடாகவே, மூன்று கோடுகளாகவோ இட்டால் விடை கிடைக்காது.  தமிழ் எண் ஐந்தை இட்ட நெற்றிப் பொட்டில்தான் சூட்சுமமம் அடங்கியிருக்கிறது. இன்றைய புதிரை ஒரு பொருட்டாகக் கருதி  விடை தேடி இட்டவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3618

 உதிரிவெடி 3618 (மார்ச் 22, 2019) வாஞ்சிநாதன் *********************    ஐந்தையடக்கிய நெற்றியில்  காணப்படுவது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது (4) Loading...

விடை 3617

இன்று காலை வெளியான வெடி தென்னை ஓலையாலான தேங்காயின் பகுதி ?! (3) இதற்கான விடை: கீற்று. உடைத்த தேங்காயைக் கீறிப் பெறப்படும் துண்டு, கூரை வேய்வதற்காக ஓலையில் பின்னப்பட்ட பொருள், இவ்விரண்டின் பெயரும் கீற்று! இன்று  அனுப்பப்பட்ட விடைகளைக் காணச் செல்ல வேண்டிய பக்கம். விதம் விதமான புதிர்களை விரும்புபவர்கள் பார்க்க வேண்டிய ஒரு தளம், ராமராவ் உருவாக்கிய பல புதிர்களடங்கிய திரைக்கதம்பம் வலைப் பதிவு. அவர் அபாரமாக ஒரு துறையிலுள்ள‌ சொற்களை மட்டுமே கொண்டு 69 வாரங்களாக உருவாக்கி வருகிறார்.

விடை 3616

இன்றைய வெடி: ஆனாலும் இக்கூடை உடலின் பாகத்தை வைத்துச் செய்ததல்ல (3) இதற்கான விடை: குடலை. கல்கியின் கதையில் குடலை: க்ரியா அகராதியில் குடலை      இன்று விடையனுப்பியவர்கள் விவரம் இப்பக்கத்தில்     

உதிரிவெடி 3616

உதிரிவெடி 3616 (மார்ச் 20, 2019) வாஞ்சிநாதன் ******************* ஆனாலும் இக்கூடை உடலின் பாகத்தை வைத்துச் செய்ததல்ல (3) Loading...

விடை 3615

இன்றைய வெடி: அம்மனிதரின் சேர கம்பீரம் தலை கவிழ உள்ளே வருக (5) சேரனைக் கூப்பிட்டு  செந்தமிழில் செய்தவெடி யாரவர் கண்டார் விடையென்(று) அறிந்திடவே சென்றிடுவீர்  இங் கே அவருடைய சிந்தைய‌து வென்றதினைப் பார்ப்பீர் விரைந்து. நேற்றைய விடை பற்றி எழுதும்போது பத்தேமுக்கால் மாற்றுப் பொன் என்று புத்திசாலித்தனமாக  சொன்னதாக நினைத்துக் கொண்டிருந்தேன். ரவி சுந்தரம் கருத்துரையில் அது தவறென்று சொன்னதோடு, பத்தரை மாற்று என்றால் என்ன என்று விளக்கியுள்ளார்.  அவருக்கு நன்றி. இவ்வாறு ஏதாவது சொதப்பினால்  சுட்டிக் காட்டுங்கள். நல்லாயிருந்தாலும் நல்லாயிருப்பதாகச் சொல்லலாம், எனக்கேதும் ஆட்சேபணையில்லை. அதற்காகத்தான் கருத்துரைப் பெட்டி வைத்திருக்கிறார்கள்!

உதிரிவெடி 3615

உதிரிவெடி 3615 (மார்ச் 19, 2019) வாஞ்சிநாதன் ********************** அம்மனிதரின் சேர கம்பீரம் தலை கவிழ உள்ளே வருக (5) Loading...

விடை 3614

பெருத்த பாம்பு தாக்க உள்ளே எண்ணிக்கையின்றி வழிபாடு   (4)  பழுதில் மதியோன் பகர்ந்தனன் பாங்காய்: தொழுகையிற்  காணுந்  தொகைநீக்க எஞ்சும் எழுத்தினை  யுள்வைத்துக் கொத்த  எழும்பும் கொழுத்த விடையின்று  கொள்.   சில நாட்கள் புதிர் எளிதாயும் சில நாட்கள் கடினமாயும் அமைகின்றன.  (என்னால் சில சமயம்தான் முன் கூட்டியே கடினம்/எளிது என்று அனுமானிக்க முடிகிறது).   அதனால் இதைப் பற்றியும், விடை வெளியிடும்போது  வெண்பாவாய் எழுதுவது பற்றியும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிவிக்கலாம்.  விடைப்பட்டியலைப் பார்த்ததும் மீண்டும் இப்பக்கத்திற்குத் திரும்பி வந்து,  கீழே காணப்படும்  " உங்கள் கருத்தை உள்ளிடுக " என்ற சொல்லில் சொடுக்கி,  உங்களுடைய பத்தே முக்கால் மாற்றுப் பொன்னான  நேரத்தை ஒதுக்கி,  உங்கள் கருத்துகளைச் செதுக்கி   அனுப்புங்கள். இரவு பத்து மணிக்கு முன்பே  அனுப்பப்படும் கருத்துகள் உடனடியாகப் பரிசீலித்து வெளியிடப்படும். வேறு யாரோ எழுதியதை வலையில்  தேடியெடுத்து எதையும் நான் இங்கே வெளிய...

உதிரிவெடி 3614

உதிரிவெடி 3614 (மார்ச் 18, 2019) வாஞ்சிநாதன் *********************** பெருத்த பாம்பு தாக்க  உள்ளே எண்ணிக்கையின்றி வழிபாடு   (4) Loading...

விடை 3613

இன்றைய வெடி: இணையற்ற மதியற்ற வெறுப்பை உமிழ் (2) இதற்கான விடை:  கரி = நிகரிலா ‍- நிலா இப்படிக் கஷ்டமான புதிரைக் கொடுத்ததற்காக என்னைக் கரித்துக் கொட்டாமல் நாளையும் வந்து புதிர்ப்பக்கம் எட்டிப்பார்க்கும் படிக் கேட்டுக் கொள்கிறேன். இன்றைய விடைப் பட்டியலைக் காண இங்கே செல்லவும்.

விடை 3612

இன்றைய வெடி நல்லாள் சேர்ந்து பிரியக் கூத்தடி நெல்லாடை போர்த்தடி (4) ***********   சேர்வதும், பிரிவதும் மனித வாழ்வில் மட்டுமல்ல.  சொற்களுக்கும் இது நேர்வதுண்டு. "கூத்தடி" என்பதில் "கூடி" ("சேர்ந்து")  பிரிந்த பின் எஞ்சும் "த்த" என்பதை நெல்லின் ஆடையான "உமி"யைப் போர்த்தடி என்று  சொன்னதைக் கேட்ட நல்லாள் "உத்தமி"தான். இன்றைய புதிருக்கு விடையனுப்பியவர்கள் விவரங்கள் இங்கே. எத்தகைய ஏழ்மையில் இன்னலுக் காட்படினும் கத்திரிக்காய் வாங்கிடக் காசற்ற நாளிலும் உத்தமர் உண்பார் உமியடுப்பு நெற்கஞ்சி புத்தியில் கொள்வோம் புரிந்து .

உதிரிவெடி 3612

உதிரிவெடி 3612 (மார்ச் 16, 2019) வாஞ்சிநாதன் ******************* நல்லாள் சேர்ந்து பிரியக் கூத்தடி நெல்லாடை போர்த்தடி (4)  Loading...

விடை 36 11

இன்று காலை வெளியான வெடி: குற்றம் புரிந்த கரம் இளந்தெங்கின் நீர் பருகியபின் சுரண்டுவது (4) இதற்கான விடை ; வழுக்கை. இன்று அனுப்பப்பட்ட  அனைத்து விடைகளையும் காண இங்கே செல்லவும் . வழுக்கையென்றால் இளந்தேங்காயில் காணப்படும் மெல்லிய உண்ணக்கூடிய பகுதியாகும். தலையில் முடியுதிர்ந்த நிலையையும் வழுக்கைத் தலையென்று கூறுவர்.  இதைப் பற்றி முழுக்கைச் சட்டைப் புலவர் எழுதிய இணையத்தில் கிடைத்தது இதோ: அழுக்கை யறியாத வெண்பட்டுச் சட்டை முழுக்கையுடன் நல்வைர‌ மோதிரங்கொண் டோனே இழுக்கை யடைந்தாற்போல்   ஏன்வாட்டம் கொஞ்சம் வழுக்கையால்  வந்த வினை.

உதிரிவெடி 3611

உதிரிவெடி 3611 (மார்ச் 15, 2019) வாஞ்சிநாதன் ****************** குற்றம் புரிந்த கரம் இளந்தெங்கின் நீர் பருகியபின் சுரண்டுவது (4) Loading...

விடை 3610

இன்று காலை வெளியான வெடி அஞ்சலின் தொடக்கத்தில் எழுதப்படும் முத்தான முதலெழுத்து விசிறி (4) இதற்கான விடை: முகவரி இன்று விடையனுப்பியவர்கள் விவரத்தைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 3610

உதிரிவெடி 3610 (மார்ச் 14, 2019) வாஞ்சிநாதன் ****************** அஞ்சலின் தொடக்கத்தில் எழுதப்படும் முத்தான முதலெழுத்து விசிறி (4)   Loading...

விடை 3609

அசோகவனத்திலிருந்த சீதையை  "வெயிலிடை வைத்த விளக்கு போல" என்று கம்பர் குறிப்பிட்டதைப் பற்றி  எங்கள் பள்ளியின்  தமிழாசிரியர் நிறைய பேசுவார்.  ராமனருகில் இருந்தால்தான் சீதைக்குப் பிரகாசம், இல்லையென்றால் அது தெரியாது என்பதை எங்கள் ஆசிரியர் இப்படி மாற்றிக் கூறினார். ராமர்தான் பார்க்க எப்படி இருப்பார் என்பது தெரிந்த விஷயமாச்சே!  அதுதான் ராமர் கலர்ல இருப்பாரே. அப்படிப்பட்ட ராமன் பக்கத்தில் சீதை பளிச்சென்று தெரிபவள்,  நல்ல கலரான ராவணன் பக்கத்தில் இருக்கும்போது எடுபடவில்லையாம். அது ஞாபகத்தில்  நேற்றைய வெடியான‌  "வெயிலிடை வைத்த பாதி மீன் ஒன்று (3)"  உருவானது. சீதையும் காணும், விளக்கையும் காணும்,  வெறும் அயிரைமீன்தான் மிஞ்சியது. சரி இன்றைய புதிருக்கு வருவோம். முதன் முதல் தோன்றாமல் உலகுக்கு வந்த பெண் (4) வெடியை விரும் புதல் வி ட்டொழிக்க மாட்டோர் அடிமுதலில் தேடீடுவீர் ஆழ்ந்து. ஏவாளும் பார்வதியும் இப்புதிருக்  கேற்றதிலை பாவால் உரைத்தேன் பணிந்து. பெண்ணென்றால்  யாரென்று கேட்பீரேல் நீர்பெற்ற‌ கண்ணான பேதையாம் காண். சிக்கலான இவ்வெடிக்குச் சீராய் ...

விடை 3608

இன்று காலை வெளியான வெடி: வெயிலிடை வைத்த பாதி மீன் ஒன்று (3) இதற்கான விடை:  அயிரை ‍ = யி + அரை இன்று அனுப்பப்பட்ட  அனைத்து விடைகளையும் காண இங்கே செல்லவும்.

விடை 3607

இன்று காலை வெளியான வெடி: உயர்தரமான தங்கத்துக்கு வேறு பொற்கொல்லரை நியமிக்க வேண்டும் (4,3) இதற்கான விடை:  பத்தரை மாற்று இன்று அனுப்பப்பட்ட அனைத்து விடைகளையும் காண இங்கே செல்லவும். முந்தாநாள் என்னைப் பார்க்க வந்த நண்பன் மீண்டும் என் வீடு வந்தான்.  என்னடா விஷயம் என்று கேட்டேன். "பாண்டியன் தொலைக் காட்சியினர்க்கு ஓர் ஐயம். பெண்களின் கூந்தல்  படபடப்பதால் காற்று வீசுகிறதா, இல்லை காற்று வீசுவதால் கூந்தல் அலைபாய்கிறதா? இந்த ஐயத்தைத் தீர்க்குமாறு ஒரு பாடல் சொன்னால் 916 தங்கக் காசு அடங்கிய கிழியைத் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள்". "அதை ஏன் என்னிடம் சொல்கிராய், ஏதாவது மண்டபத்தில் யாராவது எழுதிக் கொடுப்பார்களா என்று போய்ப் பார் என்றேன்.  "நானே எழுதிட்டேனாக்கும். இந்தப் பாடலைச் சரி பார்த்து சொல்லு, பரிசு கிடைக்குமா?" "ஏன் இதற்கு புதிதாய் ஒரு பாடல் அன்றே கண்ணதாசன் "கொடியசைந்ததும் காற்று வந்ததா?.." என்று எழுதிவிட்டாரே" "அது கொடிக்கு பாடியதடா, கூந்தல் வேறு, கொடி வேறு" "சரி என்ன எழுதியிருக்கிறாய் பாடிக் காட்டு" உடனே ஆரம்பித்தான், வ...

உதிரிவெடி 3607

உதிரிவெடி 3607 (மார்ச் 11, 2019) வாஞ்சிநாதன் ***************** உயர்தரமான தங்கத்துக்கு வேறு பொற்கொல்லரை நியமிக்க வேண்டும் (4, 3) Loading...

விடை 3606

நிறைய‌ விஷயங்களைத் தெரிந்துகொள்ள அதீத ஆவலுடன் சிலர் இருப்பார்கள். அப்படி ஒருவரை நேற்று மாலை நான் சந்தித்து, பொழுதுபோவது தெரியாமல் நீண்ட நேரம் அளவளாவிக்கொண்டிருந்தேன். அவருக்கு நிறைய விஷயம் தெரியுமாதலால் சுவாரசியமாக நேரம் போய்க் கொண்டிருந்தது. அவர் கற்கால, தற்கால இலக்கியமெல்லாம் கற்றவர். எனக்கோ இதெல்லாம் தெரியாது. ஏதோ எக்ஸ், ஒய் என்று மாணவர்களிடம் பினாத்திக் கொண்டு காலத்தை ஓட்டுபவன்.  இருந்தாலும் எனக்கும் இலக்கியம் கொஞ்சம் தெரியுமாக்கும் என்று சும்மா ஒரு கப்ஸாவிட்டேன் (நமக்குதான் உண்மையிலேயே விஷயம் தெரியாதே!) அனுமார்  நெருப்பு வைத்த‌ இலங்கைத் தீவு அணைத்த பின் மிச்சமிருந்த வு க்கு முன்னே ராவணனின் துருப்பு பாதி ஓடிவிட்டது என்று அவ‌ரிடம் சொன்னேன். உடனே அவர் என்னை விடவில்லை.  கம்ப‌ராமாயணத்தில் யுத்த காண்டத்தில் எந்த படலத்தில் அப்படிச் சொல்லியிருக்கிறது, அல்லது வால்மீகி எந்த சுலோகத்தில் சொல்லியிருக்கிறார் என்று விடாமல் கேட்டுக் கொண்டேயிருந்தார். அவருக்கு பதில் சொல் முடியாமல்  நான் "ஐயா, நான் உதிரிவெடி என்று ஒரு வலைப்பதிவில் தினம் புதிர் ஒன்று போட்டுக் கொண்டிருக்கிறேன். ...

உதிரிவெடி 3606

உதிரிவெடி 3606 (மார்ச் 10, 2019) வாஞ்சிநாதன் ******************* குடை நெருப்பை அணைத்துத் திட்டு முன் பட்டாளத்தில் பாதி ஓடிவிட்டது (3) Loading...

Solution to Krypton 112

Today's clue: Don swallows carbon noiselessly for a chip (9 ) Its solution:  PROCESSOR. Here is the list of submitted solutions . Ravi Sundaram's submission there has  complete explanation for the solution which I did not expect to be  difficult.

விடை 3605

இன்றைய வெடி: குறைவான போஷாக்கு முழுமையற்ற வயதின் கோளாறு இருந்தாலும் அரியணையேறிய மச்சக்காரி (5) இதற்கான விடை:  சத்யவதி   = சத் (து) + வயதி (ன்) இன்று அனுப்பப்பட்ட அனைத்து விடைகளையும் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 3605

உதிரிவெடி 3605 (மார்ச் 9, 2019) வாஞ்சிநாதன் ************************* குறைவான போஷாக்கு முழுமையற்ற வயதின் கோளாறு இருந்தாலும் அரியணையேறிய மச்சக்காரி (5) Loading...

விடை 3604

இன்று காலை வெளியான வெடி: ஒரு காய் பூ இல்லாமல் வளையத்துடன் வளைய வரும் (2) அதற்கான விடை:   சனி (பூசனி - பூ), இந்தக் காயைப் பூசணியா, பூசனியா எப்படி எழுதுவது சரி என்ற குழப்பம் கொஞ்சம் இருக்கிறது. எது சரியோ, பூசனி என்றுதான் பெரும்பாலும் எழுத/உச்சரிக்கப் படுகிறது என்பதால் அதைப் பயன்படுத்தினேன். க்ரியா தமிழகராதி இரண்டையும் குறிப்பிடுகிறது. (ஆனால் பெரும்பாலானோர் சொல்வதால் ஒன்று சரியாகி விடுமா? அப்படியானால் பவளம் பிழையானது, பவழம்தான் சரியென்று வாதிட இது இடங் கொடுக்கிறது). இரண்டு நாட்களாக என் வாக்கில் சனி வந்து கொண்டிருக்கிறது. அதனால் சனிக்கிழமையான நாளை சனி வராது என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இன்றைய புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியல்.

உதிரிவெடி 3604

உதிரிவெடி 3604 (மார்ச் 8, 2019) வாஞ்சிநாதன் ********************* ஒரு காய் பூ இல்லாமல் வளையத்துடன் வளைய வரும் (2)  Loading...

விடை 3603

இன்றைய வெடி: பணத்தில் வார இறுதி கழியும் வரை தூங்கு என்பது இயற்கையின் சட்டம் (3) இதற்கான விடை: நியதி = நிதி + சயனி (தூங்கு) - சனி இன்று அளிக்கப்பட்ட விடைகள் அனைத்தும் (8 மணிவரை) சரியே. இங்கே சென்று அப்பட்டியலைப் பார்க்கவும்.

உதிரிவெடி 3603

உதிரிவெடி 3603 (மார்ச் 7, 2019) வாஞ்சிநாதன் ********************** பணத்தில் வார இறுதி கழியும் வரை தூங்கு என்பது இயற்கையின் சட்டம் (3) Loading...

விடை 3602

இன்றைய வெடி: எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலையில் பெருத்த இழப்பு தரும் மேன்மை (4) இதற்கான விடை: ஏற்றம் = ஏமாற்றம் - மா (பெருத்த/பெரிய) இன்று அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3602

உதிரிவெடி 3602 (மார்ச் 6, 2019) வாஞ்சிநாதன் ********************** எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலையில் பெருத்த இழப்பு தரும் மேன்மை (4) Loading...

விடை 3601

உழவர் சந்தை என்று தமிழ் நாட்டில் பல ஊர்களில் அரசு வைத்திருக்கும் இடத்தில் உழவர்களே தங்கள் வயலில் விளைந்ததை விற்பார்கள். இதை நேரடி விற்பனை என்கிறார்கள். நடுவில் கமிஷனுக்கு வாங்கி விற்கும் வியாபாரிகள் இல்லாததால் விலை குறைவாக இருக்கும். அதே போல் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சில இடங்களில் முகவர்களுக்கு அளிக்காமல் தாங்களே நேரடி விற்பனையும் செய்கிறார்கள்.  அதைப் பார்த்ததுதான் இன்றைய புதிரை அமைப்பதற்கு  உதவியாயிருந்தது. இன்றைய  வெடி: இடைத் தரகரில்லாத வளையாத பாதம்? (3) அதற்கான விடை: நேரடி ஒரு தமிழார்வமுள்ளவருக்கு என்னுடைய புதிர்களைப் பற்றிக் கூறினேன். என்ன வேலையத்த வேலை இது. விஷயத்தை ஒழுங்காகச் சொல்லாமல் இப்படி சுற்றிவளைத்து என்று அலுத்துக் கொண்டு  என்னைச் சபித்து ஒரு பாட்டு எழுதிவிட்டுப் போய்விட்டார். நேரடியாய்ச் செல்லாது நீள்வழியிற் சுற்றவைத்து வேரடிக்குச் சென்று விடையை விவரிக்கும் போரடித்தற் போன்ற புதிர். நான் ஏன் இப்படித் திட்டிவிட்டீர்கள் என்று கேட்டதற்கு நான் ஒன்றும் திட்டவில்லை என்றார். காளைமாட்டை (விடையை) சுற்றி சுற்றி வரவைத்து ப் போரடிப்பார்கள் அப்...

விடை 3600

இன்று காலை வெளியான வெடி: அழியா முடிவை உள்ளத்தில் வைத்து முடிவில் செல்லுமிடம் (4) இதற்கான விடை:  மயானம் = மனம் + யா பிறப்பு, இறப்பு என்ற சக்கரத்திலிருந்து விடுதலை பெற்று மீண்டும் பிறப்பதெர்கென்று அழியாமல் முடிவு அழியாத் தன்மையுடன் வர வேண்ட்ம் என்பதை உள்ளத்தில் கொண்டு மயானத்திற்குச் சென்றால் முக்தியடையலாம் என்பதைப் பகுத்தறிந்து சிலர் கூறியதைப் புதிர் வடிவமாக்கி சிவராத்திரியில் உங்களுக்கு அளிப்பதில்  எனக்கு மகிழ்ச்சியே. இனி மயானம் இப்புதிரில் இடம் பெறாது. ஒரு காலத்தில் யார் தலையிட்டாலும் நெஞ்சம் அமைதியின் குடியிருப்பு என்று வந்தது மயானக் கொள்ளைக் காரர்கள் உண்டாக்கிய ஆரவாரத்தில் இன்று மீண்டும் வந்துவிட்டது.     மயானத்தை உள்ளத்தில் மாந்தர் நிறுத்தித் தயாராய் இருந்திட்டால்  தங்கிடுமோ  துன்பங்கள் வாழ்க்கை நிலையாது வாட்டும் பிறப்பிறப்பில் மூழ்காதோர் வாயுதிர்த்த முத்து விடைகளின் பட்டியலைக் காண இங்கே செல்லவும்.  

உதிரிவெடி 3600

உதிரிவெடி 3600 (மார்ச் 4, 2019) வாஞ்சிநாதன் ********************** அழியா முடிவை உள்ளத்தில் வைத்து முடிவில் செல்லுமிடம் (4)  Loading...

விடை 3599

இன்றைய வெடி: நாரிடை வைத்த ஓராயுதத்தைச் சுழற்றும் பகுத்தறிவாளர் (5) இதற்கான விடை:  நாத்திகர் =  நார் + கத்தி இன்று அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 3599

உதிரிவெடி 3599 (மார்ச் 3, 2019) வாஞ்சிநாதன் *********************** நாரிடை வைத்த ஓராயுதத்தைச் சுழற்றும் பகுத்தறிவாளர் (5) Loading...

விடை 3598

இன்றைய வெடி தேவலோகத்துக்காரி நகர் வெளியேறி  வாழ் (2) இதற்கான விடை:  வசி = ஊர்வசி - ஊர் இப்புதிருக்கு அளிக்கப்பட்ட விடைகள் யாவற்றையும் காண விரும்புவோர் இங்கே செல்லவும்.

விடை 3597

இன்று காலை வெளியான வெடி நதி நடுவில் ஓரிடத்தில் மரம் நடு ஒன்று சேர் (4) இதற்கான விடை:  திரட்டு =  (நதியின் நடுவில் அமைந்திருப்பது) திட்டு + (மரம் என்பதன் நடு எழுத்தான) ர இப்புதிருக்கு அளிக்கப்பட்ட அனைத்து விடைகளையும் இங்கே காணலாம்.

உதிரிவெடி 3597

உதிரிவெடி 3597 (மார்ச் 1, 2019) வாஞ்சிநாதன்  **********************  நதி நடுவில் ஓரிடத்தில் மரம் நடு ஒன்று சேர் (4) Loading...