Skip to main content

விடை 3475

இன்று காலை வெளியான வெடி:

இவ்வருடம் ஓர் ஊரும் உயிரினம் டப்பாவுக்கு வெளியே வந்தது (6)

இதற்கான விடை: நடப்பாண்டு = நண்டு + டப்பா

நண்டூரும் நன்செய் வயலில் விளைந்திடுநெல்
கண்டோர்க்குக் கண்குளிரும் ஆங்கு




Comments

Raghavan MK said…
*_இன்றைய புதிரை அவிழ்ப்போமா!_*
*************************
_இவ்வருடம் ஓர் ஊரும் உயிரினம் டப்பாவுக்கு வெளியே வந்தது (6)_

_ஓர் ஊரும் உயிரினம்_ = *நண்டு* 🦀🦀🦀


_டப்பாவுக்கு வெளியே_ = *ந* ( _டப்பா_ ) *ண்டு*
= *நடப்பாண்டு*

_இவ்வருடம்_ = *நடப்பாண்டு*
×××××××××××××××××××××

*_Decoding the புதிர்_ !*

1. *_டப்பா_* எனும் சொல்லைப் பார்த்ததும் முதலில் நினைவில் தோன்றிய சொற்கள்...
_தகர டப்பா_
_பெருங்காய டப்பா_
_டப்பாவாலா(மும்பை)._

2. *_இவ்வருடம்_* என்றதும் சட்டென்று தோன்றியது இவ்வாண்டின் பெயரான _Sriவிளம்பி_ தான்.( தமிழில் Sri type பண்ண வரவில்லை 😟)
3. பின்பு வந்தது வருடமான *_ஆண்டு_*
அதை தொடர்ந்தது _*இவ்வாண்டு!*_

4.பிறகு _ஊரும் உயிரினங்களின்_ உதவிக்கரம் நாடினேன். பாம்பு,நத்தை,ஆமை,
தவளை, _நண்டு_ என வரிசையில் வந்தவர்களில் _பதுங்கிய நண்டில் ஆண்டின் *எதுகையைக்* கண்டேன்._ 5.விடுவேனா! *_நண்டைப் பிடித்து டப்பாவில்_*
போட்டேன்.

சிலநொடிகள் கழித்துப் பார்த்தால் _நண்டு டப்பாவுக்கு வெளியே!டப்பாவை இரு பக்கத்திலும் கவ்விக்கொண்டிருந்தது._
பின்னர் புரிந்தது , நடப்பாண்டின் இரகசியத்தை நாசுக்காய் எனக்கு வெளிப்படுத்துகிறதென்று ! உடனே விடையை பதிவிட்டு நன்றி கூறினேன் நண்டிற்கு!
🦀🦀🦀🦀🦀🦀🦀
Moral of this incident.

_நண்டு சிண்டென்று எள்ளி நகையாடல்_
_நன்றன்று ஒரு போதும்!_
💐🙏🏼💐
×××××××××××××××××××××
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (38):

1) 6:03:26 லதா
2) 6:05:07 எஸ்.பார்த்தசாரதி
3) 6:06:56 முத்துசுப்ரமண்யம்
4) 6:09:28 சங்கரசுப்பிரமணியன்
5) 6:09:54 நங்கநல்லூர் சித்தானந்தம்
6) 6:11:20 ரவி சுந்தரம்
7) 6:18:09 மு.க.இராகவன்.
8) 6:26:57 ஆர்.நாராயணன்.
9) 6:28:07 ஹரி பாலகிருஷ்ணன்
10) 6:34:32 சுந்தர் வேதாந்தம்
11) 6:41:02 ராமராவ்
12) 6:49:43 லட்சுமி சங்கர்
13) 6:53:46 மீனாக்ஷி
14) 6:59:59 உஷா
15) 7:04:49 மீ கண்ணன்
16) 7:06:42 சதீஷ்பாலமுருகன்
17) 7:12:26 மீனாக்ஷி
18) 7:22:02 ராதா தேசிகன்
19) 7:33:47 பாலு மீ
20) 7:49:36 மாலதி
21) 8:35:40 மடிப்பாக்கம் தயானந்தன்
22) 8:38:33 பூமா பார்த்த சாரதி
23) 9:31:45 பிரசாத் வேணுகோபால்
24) 9:38:33 வானதி
25) 9:38:56 வி.ஜயா
26) 9:39:42 கி மூ சுரேஷ்
27) 10:00:52 பினாத்தல் சுரேஷ்
28) 10:28:22 இரா.செகு
29) 10:29:47 மாலதி
30) 11:56:42 KB
31) 12:55:40 மு க பாரதி
32) 13:33:11 அம்பிகா
33) 14:15:05 ராஜி ஹரிஹரன்
34) 15:04:00 கோவிந்தராஜன்
35) 18:08:11 சாந்தி நாராயணன்
36) 19:42:35 தி. பொ. இராமநாதன்
37) 20:35:39 ஏ.டி.வேதாந்தம்
38) 20:36:04 பத்மாசனி
**********************

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்