இன்று காலை வெளியான வெடி:
கட்டளை செய்து புரட்சிக்காரன் நீங்கிய சேனை (4)
இதற்கான விடை: ஆக்கினை =ஆக்கி + (சே) னை (சே, தென்னமெரிக்க புரட்சியாளன், சே குவாரா)
சே குவாரா
தேக்கினை யொத்த திடங்கொண்ட நெஞ்சினன்
ஆக்கினையாய்க் கொண்டான் அதிகார வர்க்கத்தின்
போக்கினை வென்று புரட்சியைக் கொணர
நீக்கினார் நீசர் திரண்டு.
கட்டளை செய்து புரட்சிக்காரன் நீங்கிய சேனை (4)
இதற்கான விடை: ஆக்கினை =ஆக்கி + (சே) னை (சே, தென்னமெரிக்க புரட்சியாளன், சே குவாரா)
சே குவாரா
தேக்கினை யொத்த திடங்கொண்ட நெஞ்சினன்
ஆக்கினையாய்க் கொண்டான் அதிகார வர்க்கத்தின்
போக்கினை வென்று புரட்சியைக் கொணர
நீக்கினார் நீசர் திரண்டு.
Comments
சரியான விடை அளித்தவர்கள் (8):
1) 6:19:09 உஷா
2) 6:38:00 ருக்மணி கோபாலன்
3) 6:44:11 மீனாக்ஷி கணபதி
4) 7:04:44 எஸ் பி சுரேஷ்
5) 9:48:58 பினாத்தல் சுரேஷ்
6) 12:53:57 ரமணி பாலகிருஷ்ணன்
7) 14:47:43 மடிப்பாக்கம் தயானந்தன்
8) 18:08:32 மாயா & சுந்தர் வேதாந்தம்
**********************
*************************
*புரட்சிக்காரன்* சேகுவராவின் வரலாறு...
உலக சரித்திரத்தில் பெயர்பெற்றவர்களில் *சே குவேரா* முக்கிய இடத்தில் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு மாவீரன் ஜாதி, மத, இன,மொழி, நிற, பேதங்களுக்கு அப்பாற்பட்டவர். எல்லோரையும் மனிதர்களாக தான் பார்த்தார். அப்படியே வாழ்ந்தார்.
சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ட்டோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) ஜுன் 14 1928 அக்டோபர்-9,1967(அர்ஜெண்டினாபிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்கு கொண்ட போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.
*************************
_கட்டளை செய்து புரட்சிக்காரன் நீங்கிய சேனை (4)_
_செய்து_ = *ஆக்கி*
_புரட்சிக்காரன்_ = *சே* (குவேரா)
_நீங்கிய சேனை_ = *னை*
_கட்டளை= *ஆக்கினை*
*************************
மனோகரா வசனங்கள்
1954 ம் ஆண்டு வெளிவந்த மனோகரா திரைப்படம் கலைஞரின் எழுத்துத் திறமைக்கு மற்றுமொரு சான்றாக அமைந்தது, படத்தில் இடம்பெறும் தர்பார் வசனங்கள் மிகச் சிறப்பாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கும்.
மனோகரா பொறுத்தது போதும் பொங்கி எழு என்று சிவாஜியிடம் அவரது தாய் கண்ணாம்பா கூறுவார் இன்றளவும் புகழ்பெற்ற வசனமாக விளங்குகின்றது. படத்தில் எல்லோராலும் பாராட்டுப் பெற்ற தர்பார் மண்டப வசனங்கள்.
மனோகரா தர்பார் மண்டப வசனங்கள்
அரசர்: மனோகரா! உன்னை எதற்காக அழைத்திருக்கிறேன் தெரியுமா?
மனோகரன்: திருத்திக் கொள்ளுங்கள் அரசே! அழைத்து வரவில்லை என்னை. இழுத்துவரச் செய்திருக்கிறீர்கள்.
அரசர்: என் *கட்டளை* யைத் தெரிந்து கொண்டிருப்பாய் நீ.
மனோகரன்: *கட்டளையா* இது? கரை காண முடியாத ஆசை! பொன்னும், மணியும், மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து கண்ணே முத்தே என்றெல்லாம் குலவிக் கொஞ்சி, தந்தத்தால் ஆன கட்டிலிலே, சந்தனத் தொட்டிலிலே, `வீரனே! என் விழி நிறைந்தவனே!' என்று யாரைச் சீராட்டி பாராட்டினீர்களோ அவனை அந்த மனோகரனை சங்கிலியால் பிணைத்து, சபை நடுவே நிறுத்தி சந்தோஷம் கொண்டாட வேண்டும் என்ற தங்கள் தணியாத ஆசைக்குப் பெயர் *கட்டளையா* தந்தையே?
அரசர்: நீ நீதியின் முன்னே நிற்கும் குற்றவாளி! தந்தையின் முன் தனயனல்ல இப்போது!
மனோகரன்: குற்றவாளி! நான் யாருக்கு என்ன தீங்கிழைத்தேன்? என்னால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? அரசே! தந்தையின் முன் தனயனாக அல்ல, பிரஜைகளில் ஒருவனாக கேட்கிறேன். கொலை செய்தேனா? கொள்ளையடித்தேனா? நாட்டைக் கவிழ்க்கும் குள்ளநரி வேலை நான் செய்தேனா? குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே, குற்றம் என்ன செய்தேன்? கூறமாட்டீர்களா? நீங்கள் கூறவேண்டாம்.
இதோ அறங்கூறும் அமைச்சர்கள் இருக்கிறார்கள். மறவர் குடிப்பிறந்த மாவீரர்கள் இருக்கிறார்கள்! மக்களின் பிரதிநிதிகள் _இந்த நாட்டின் குரல்கள் இருக்கிறார்கள். அவர்கள் கூறட்டும்... என்ன குற்றம் செய்தேன்?
🌺🌺🌺🌺🌺🌺🌺
_இயலிசைத் தமிழாகிய, தேவாரத்_ _திருமுறைகளில்_
_ஒவ்வொரு பண்ணிலும் அமைந்த_ _திருப்பதிகங்களின் யாப்பு வகையினைக்_ *_கட்டளை_* _என_ _வழங்குதல் மரபு. '_
_*கட்டளை* '_ _என்பது_ _மாத்திரையளவும் எழுத்தியல் நிலையும்_ _பற்றிச் செய்யுட்களில் அமைந்த ஒசைக் கூறுபாடாகும்_.
_சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை_ _உரையில் ஆடல் பாடல் இசையே தமிழே என வரும்_ _தொடருக்கு_ _தமிழ்_ ' _என்பதற்கு வடவெழுத்தொரீஇ_ _வந்த எழுத்தாலே கட்டப்பட்ட ஒசைக்_ _கட்டளைக் கூறுபாடுகளும் என அரும்பதவுரையாசிரியர் விளக்கவுரை கூறுவர்_. _இதனைக் கூர்ந்து நோக்குங்கால் இசைத் தமிழில் வழங்கும் கட்டளை என்ற சொல் செய்யுட்களில் அமைந்த_ _ஒசைக்_ _கூறுபாட்டினையே குறிப்பதென்பது நன்கு துணியப்படும்_. _ஓசைவகையாகிய_ _இக்கட்டளை யமைப்பின்_ _அடியொற்றியே இசைப் பாடல்களின் தாளம் முதலிய_ _பண்ணீர்மை_ _அமைதல் இயல்பு .இந்நுட்பம் கட்டளைய_ _கீதக் குறிப்பும் என வரும்_ _பழம் பாடல் தொடரால்_ _நன்கு புலனாதல் கண்டு_
_மகிழலாம்"_
B
💐🙏🏼💐
*************************
இன்று என் பெயரை முதலில் பார்த்ததில் வியப்பு. சாதாரணமாக புதிர் வெளியான சில நிமிடங்களிலேயே குறைந்தது பத்து பேர் விடையளித்திருப்பார்கள். அருமையான குறிப்புகள்