Skip to main content

விடை 3472

இன்று காலை வெளியான வெடி:
எண்ணத்திற்கு எட்டியது ஆராதித்த பிள்ளையார் நினைவில் எழுதுவது குழப்பம் (5)
இதற்கான விடை: உதித்தது  = உ + துதித்த

உதிரி  வெடியதின்  உள்ளாழம் சென்றால்
உதித்திடும் மின்வெட் டுமக்கு 

மின்வெட்டு என்றால் = மின்னல் வெட்டு,  பவர்கட் இல்லை!

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (40):

1) 6:06:00 எஸ்.பார்த்தசாரதி
2) 6:09:54 வி ன் கிருஷ்ணன்
3) 6:15:01 ராதா தேசிகன்
4) 6:22:56 நங்கநல்லூர் சித்தானந்தம்
5) 6:25:58 மடிப்பாக்கம் தயானந்தன்
6) 6:28:11 ஹரி பாலகிருஷ்ணன்
7) 6:32:26 மும்பை ஹரிஹரன்
8) 6:33:40 சாந்தி நாராயணன்
9) 6:35:03 அம்பிகா
10) 6:48:40 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
11) 6:49:44 சுந்தர் வேதாந்தம்
12) 6:50:00 திருமூர்த்தி
13) 6:50:00 ரவி சுந்தரம்
14) 6:50:54 ராமராவ்
15) 7:08:58 மீனாக்ஷி கணபதி
16) 7:11:55 மீ கண்ணன்
17) 7:16:06 ராதா தேசிகன்
18) 7:22:10 மாலதி
19) 7:27:36 முத்துசுப்ரமண்யம்
20) 7:34:46 ஆர்.நாராயணன்
21) 7:37:12 மீனாக்ஷி
22) 7:39:28 மைத்ரேயி
23) 7:43:15 மீ.பாலு
24) 7:51:59 சுபா ஸ்ரீநிவாசன்
25) 7:54:58 சங்கரசுப்பிரமணியன்
26) 8:19:16 பூமா பார்த்த சாரதி
27) 9:01:26 ராஜி ஹரிஹரன்
28) 9:05:34 கி மூ சுரேஷ்
29) 9:23:39 மாதவ்
30) 9:54:04 ருக்மணி கோபாலன்
31) 10:26:27 மு க பாரதி
32) 11:39:47 தேன்மொழி
33) 13:07:11 கேசவன்
34) 13:33:12 மு.க.இராகவன்.
35) 15:52:01 ஆர். பத்மா
36) 16:29:08 KB
37) 16:45:36 ரங்கராஜன் யமுனாச்சாரி
38) 17:11:21 வானதி
39) 17:37:37 லதா
40) 19:15:59 மாயா
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
★*********************★
_பிள்ளையார் பிள்ளையார்_
_பெருமை வாய்ந்த பிள்ளையார்_
_ஆற்றங்கரை மீதிலே அரசமரத்து நிழலிலே_
_வீற்றிருக்கும் பிள்ளையார்_
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
எந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்கும் போதும் *பிள்ளையார்* *சுழி* போட்டும், பிள்ளையார் வழிபாடு செய்தும் தொடங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். உலகம் சிவமயம் என்பதை உணர்த்தும் விதத்தில் பிள்ளையார் சுழி போட்டு அதன் கீழ் எழுதத்தொடங்குவார்கள். எல்லாவற்றையும் பிள்ளையார் கவனித்துக்கொள்வார் என்பது நம்பிக்கை.
ஓம் என்பதை பிரணவ மந்திரம் என்று இந்துகள் சொல்லுகிறார்கள். பிரணவ மந்திரமே உலகம் தோன்றுவதற்கு முன் எங்கும் நிரம்பியிருந்ததாக கருதுகிறார்கள்.
*_அ + உ+ ம் என்பதன் இணைப்பே ஓம் ஆகும்_* . அ என்பது முருகனையும், உ என்பது பிள்ளையாரையும், ம் என்பது சிவசக்தியை குறிப்பதாகும்.

கயிலையிலும் தேவலோகத்திலும் அழகே உருவாக காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவரும் விதமாக நடமாடியதால் தேவர்களும் முனிவர்களும், யார் இந்த பிள்ளை? இந்த பிள்ளை யார்? என்று கேட்டுக்கொண்டனர். அதுவே நாளடைவில் பெயராக மலர்ந்தது. பிள்ளையார் மிகவும் எளிமையானவர். இவருக்கு கோபுரமோ கொடிமரமோ மாட மண்டபமோ மதிற்சுவரோ தேவையில்லை.
_நம் உள்ளத்தில் ஓர் இடமளித்தால் போதும். மண்ணில் செய்து வைத்தாலும் வருவார். மஞ்சளில் செய்து வைத்தாலும் வருவார்._
🌺🌺🌺🌺🌺
_எண்ணத்திற்கு எட்டியது ஆராதித்த பிள்ளையார் நினைவில் எழுதுவது குழப்பம் (5)_

_ஆராதித்த_
= *துதித்த*

_பிள்ளையார் நினைவில் எழுதுவது_
= *உ*

_குழப்பம்(Anagram)_
= *துதித்த+உ*
= *உதித்தது*

_எண்ணத்திற்கு எட்டியது_
= *உதித்தது*
★*********************★
_மலர்களிலே *ஆராதனை*_
_மாலை நேரம் மயங்கும் நேரம்_
_மனங்களிலே காதலின் வேதனை_
🌺🌺🌺🌺
_நான் *எழுதுவது* கடிதமல்ல -_ _உள்ளம்_
_அதில் உள்ளதெல்லாம்_ _எழுத்தும் அல்ல_ - _*எண்ணம்*_
_உன் உள்ளமதை கொள்ளை கொள்ள_
_நான் *எழுதுவது* கடிதமல்ல_
🌺🌺🌺🌺🌺
_சின்னஞ்சிறிய வண்ணப் பறவை_ _*எண்ணத்தை*_ _சொல்லுதம்மா - அது_
_இன்னிசையொடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா_
🌸🌸🌸🌸🌸
_*எண்ணத்தில்* ஏதோ_ _சில்லென்றது_
_ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது_
🌹🌹🌹🌹🌹🌹
*குறள்* :
_எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து_
_துன்னியார் துன்னிச் செயின்._
*விளக்கம்* :
தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல *எண்ணியிருந்த* பகைவர் தம் *எண்ணத்தை* இழந்துவிடுவார்.
🌺🌺🌺🌺🌺🌺
_பின்னாடி நாம் எழுதுகிற விஷயம்_ _‘சுழித்து'ப்_ _போகாமலிருப்பதற்காக முன்னாடி_ _*பிள்ளையார் சுழி*_ போட்டு விடுகிறோம்._
💐🙏🏼💐
Raghavan MK said…
மின்வெட்டு என்றால் = மின்னல் வெட்டு, பவர்கட் இல்லை!

😃😃😃
Muthu said…
<> அது ஏன் சார் எங்களையெல்லாம் “மக்கு” என்கிறீர்கள்?உதித்திடும் மின்வெட் டுமக்கு😉😉
Vanchinathan said…
மின்வெட்டு வந்தால் உமக்கு விடைதோன்றும்/ கண்சிமிட்டும் நேரத்திற் காண்

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்