Skip to main content

விடை 3467

இன்று காலை வெளியான வெடி:
திருடி சுதந்திரமின்றிச் சாப்பிடுவதில் கடைசியாக வந்தவள் (3) 
இதற்கான விடை: கள்ளி = களி + ள்

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (61):

1) 6:04:04 எஸ்.பார்த்தசாரதி
2) 6:04:24 இரா.செகு
3) 6:05:20 அம்பிகா
4) 6:06:01 சுந்தர் வேதாந்தம்
5) 6:07:23 கேசவன்
6) 6:07:47 திருமூர்த்தி
7) 6:08:12 முத்துசுப்ரமண்யம்
8) 6:08:20 லட்சுமி சங்கர்
9) 6:10:31 ரவி சுப்ரமணியன்
10) 6:10:53 லதா
11) 6:12:25 ருக்மணி கோபாலன்
12) 6:12:49 வி ன் கிருஷ்ணன்
13) 6:14:23 ராமராவ்
14) 6:16:42 மு.க.இராகவன்.
15) 6:16:51 மீனாக்ஷி
16) 6:16:53 நங்கநல்லூர் சித்தானந்தம்
17) 6:18:17 மு.க.இராகவன்.
18) 6:22:05 மீ கண்ணன்
19) 6:22:18 உஷா
20) 6:25:32 ராஜா ரங்கராஜன்
21) 6:25:56 மீ பாலு
22) 6:26:23 ரங்கராஜன் யமுனாச்சாரி
23) 6:26:46 சுபா ஸ்ரீநிவாசன்
24) 6:27:07 ஶ்ரீவிநா
25) 6:27:18 KB
26) 6:29:06 எஸ் பி சுரேஷ்
27) 6:31:20 கு. கனகசபாபதி, மும்பை
28) 6:32:28 லட்சுமி மீனாட்சி, மும்பை
29) 6:33:05 ரமணி பாலகிருஷ்ணன்
30) 6:37:41 சாந்தி நாராயணன்
31) 6:44:16 நாதன் நா தோ
32) 6:48:14 மாலதி
33) 6:48:49 K.R.Santhanam
34) 6:51:16 மீனாக்ஷி கணபதி
35) 6:54:46 மும்பை ஹரிஹரன்
36) 7:04:46 வானதி
37) 7:06:20 ராதா தேசிகன்
38) 7:07:20 ஆர். பத்மா
39) 7:11:51 மு க பாரதி
40) 7:17:08 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
41) 7:37:25 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
42) 7:42:28 பாலா
43) 7:51:02 பினாத்தல் சுரேஷ்
44) 7:59:03 தி. பொ. இராமநாதன்
45) 8:06:27 ஆர்.நாராயணன்.
46) 8:12:28 மாதவ்
47) 8:21:42 ரவி சுந்தரம்
48) 9:02:14 ராதா தேசிகன்
49) 9:37:18 சதீஷ்பாலமுருகன்
50) 10:26:55 சங்கரசுப்பிலமணியன்
51) 10:37:44 ஶ்ரீஜா
52) 10:41:41 பானுமதி
53) 11:07:22 மடிப்பாக்கம் தயானந்தன்
54) 14:05:40 கோவிந்தராஜன்
55) 18:07:58 மாயா
56) 18:37:25 திருக்குமரன் தங்கராஜ்
57) 19:13:20 பா நடராஜன்
58) 19:37:51 பத்மாசனி
59) 19:38:22 ஏ.டி.வேதாந்தம்
60) 20:26:38 கி மூ சுரேஷ்
61) 20:34:12 Sandhya
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
************************
சமீபத்தில் இந்திய *சுதந்திரம்* பற்றி படித்த சில நல்ல கவிதைகள் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்

புதுக்கவிதைக்கு வித்திட்ட காலங்களில் கவிக்கோ அப்துல் ரகுமானால் கண்டெடுக்கப்பட்ட
_“இரவில் வாங்கினோம்_
_இன்னும் விடியவே இல்லை”_
என்ற வாக்கியம் எல்லோருக்கும் நினைவிருக்கும். புதுக்கவிதையின் எழுச்சியின்போது இந்த இரண்டு வரிக்கவிதைதான் எடுத்துக்காட்டாக எல்லோராலும் கையாளப்பட்டது

கவிஞர் ஈரோடு தமிழன்பன் என்றோ எழுதிய கவிதை வரிகளை இன்று நினத்துப் பார்க்கிறேன்.

_“இன்னொரு *சுதந்திரம்* வேண்டும்_
_இரவில் எதைக் கொடுத்தான்?_
_எதை வாங்கினோம்_
_எவர் வாங்கினார்_
_ஏதும் தெரியவில்லை._
_ஒரு பகற் பொழுதில்_
_உச்சி வெயிலில் ஒரு சுதந்திரம் வேண்டும்”_
_இன்னொரு சுதந்திரம் நமக்கு கிடைக்குமா?_

பெயரவில் சுதந்திரம் பெற்று, செயலளவில் சுதந்திரம் பெற முடியாத அவல நிலையை கவிஞர் திலகம் அழகாக சித்தரித்துக் காட்டுகிறார்.

_“அன்று வியாபாரம்_
_செய்ய வந்தவர்கள்_
_அரசியல் நடத்தினார்கள்_
_இன்று_
_அரசியல் நடத்த வந்தவர்கள்_
_வியாபாரம் செய்கிறார்கள்”_

என்ற கவிஞர் வைரமுத்துவின் வைரவரிகள்.

_“அவன் *சுதந்திரம்* என்னும்_
_பட்டு வேட்டியின்_
_கனவு கண்டபோது – அவன்_
_கட்டியிருந்த கோவணம்_
_களவாடப்பட்டது”_
என்கிறார் கவிஞர் மு.மேத்தா
ஆனால் கண்ணதாசனின் கருத்தோட்டம் முற்றிலும் வேறு கோணத்தில் இருந்தது.

_“சுதந்திரத்தைக் குற்றம் கூறி என்ன பயன்? பிரச்சினையே நம்மிடத்தில்தான்”_ என்பது அவரது வாதம்.

_“வீடெங்கும் திண்ணை கட்டி_
_வெறும்பேச்சு வெள்ளை வேட்டி_
_சோம்பலில் மனிதன் வாழ்ந்தால்_
_சுதந்திரம் என்ன செய்யும்?”_
என்ற திரைப்படப் பாடல் மூலம் வீணர்களைச் சாடுகிறார் கவியரசர். *சுதந்திரம்* கிடைத்தும் அதனை ஒழுங்காக பயன்படுத்த தெரியாதது நம் குற்றம்தான் என்கிறார்.
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
_திருடி சுதந்திரமின்றிச் சாப்பிடுவதில் கடைசியாக வந்தவள் (3)_
_சுதந்திரமின்றி_ = *சிறையில்*
_சிறையில் சாப்பிடுவது_ = *களி*
_கடைசியாக வந்தவள்_
= *ள்*
_சாப்பிடுவதில் கடைசியாக வந்தவள்_
= *களி* யில் *ள்*
= *கள்ளி*
= _திருடி_
************************
தான் *திருடி* , பிறரை நம்பாள் (பழமொழி)
************************
_*கள்ளி* காட்டில் பொறந்த தாயே_
_என்ன கல் ஓடச்சு வளத்த நீயே_
_முள்ளு காட்டில் மொளச்ச தாயே_
_என்ன முள்ளு தைக்க விடல நீயே_
*********************
‘அரிசியும் பருப்பு சாதம்’ எத்தனை புகழ்பெற்றதோ, அதற்குச் சற்றும் குறையாமல் சோள பணியாரமும், ராகி *களி* யும், தினை அதிரசமும், கம்பங்கூழும்... !

ராகி ஒரு முழுச்சத்துள்ள உணவு. அந்தக் காலத்தில் குழந்தைக்கு ஊட்டும் முதல் உணவாக ராகியே இருந்திருக்கிறது. ராகியை அரைத்து, மாவெடுத்து, வெயிலில் உலர வைத்து, பொடியாகவோ, வில்லையாகவோ சேர்த்து வைத்து, பால் சேர்த்து வேக வைத்துத் தருவது வழக்கம். குழந்தைக்கு மிகச்சிறந்த ஊட்ட உணவாகவும் இது அமையும். ‘சிறுதானிய வகைகளில் அரசன்’ இந்தகேழ்வரகு என்றழைக்கப்படும் ராகியே.

நீரிழிவுக்கான சிறப்பு உணவு முறையில் ராகிக்கு முதலிடம் உண்டு. எனினும், கஞ்சியோ கூழோ - எளிதில் ஜீரணமாகும் எதுவும் நீரிழிவுக்கு எதிரி என்பதால், ராகியை அடையாகவோ, தோசையாகவோ, சாதமாகவே எடுத்துக் கொள்ளலாம். ராகி அல்வாவில் தொடங்கி ஏகப்பட்ட அயிட்டங்கள் இதில் இருந்தாலும், செய்ய எளிதானதும் செலவில்லாததும் என்ற பெருமையைப் பெறுவது *ராகி களியே.* எதனோடும் இதை ஜோடி சேர்க்கலாம், தொய்யல் கீரை, காட்டுக் கீரை கடைசல், கொள்ளுக் குழம்பு, பாசிப்பயறு குழம்பு, கத்தரிக்காய் - மொச்சைக் குழம்பு என எல்லாமே நன்று.  அசைவத்தில், கோழிக்குழம்பும் ராகி களியும்மாப்பிள்ளை விருந்து பட்டியலிலும்இடம் பெறும். இது எதுவுமே இல்லாமல், வெறுமனே மோரில் கலந்து கூழாகக் குடித்தால் வெயிலுக்கு இதத்தை  அனுபவிக்க முடியும். குழந்தைகளுக்கு சூடான களியில் நெய்யும் நாட்டுச் சர்க்கரையும் சேர்த்துத் தரலாம். அனைத்துச் சத்தும் அதில் அடங்கும்.பச்சை இலையில் நல்ல மெருன் நிற களியை வைக்கும் போதே, அதன் சேர்க்கை என்ன என்று ஆவலாக கேட்பவர்கள் அதிகம். உணவு கண்ணுக்கும் ருசிக்க வேண்டுமே!
💐🙏🏼💐

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்