Skip to main content

விடை 3466

இன்று காலை வெளியான வெடி:
குழம்பு, குருமா முதலில் தவிர்த்தால் இப்படியாகும் தின்பண்டம் (6)
இதற்கான விடை: இடியாப்பம்= இப்படியாகும் - கு (ருமா)

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (20):

1) 6:13:28 மீ கண்ணன்
2) 6:22:10 ருக்மணி கோபாலன்
3) 6:30:10 எஸ்.பார்த்தசாரதி
4) 6:30:32 ரவி சுந்தரம்
5) 6:31:16 மீ.பாலு
6) 6:31:40 முத்துசுப்ரமண்யம்
7) 6:32:02 மீனாக்ஷி
8) 6:53:01 Siddhan Subramanian
9) 7:09:26 மாலதி
10) 7:57:26 மு க பாரதி
11) 8:18:43 ராஜா ரங்கராஜன்
12) 8:22:45 கோவிந்தராஜன்
13) 10:48:00 பானுமதி
14) 12:34:00 சங்கரசுப்பிரமணியன்
15) 13:50:17 கு. கனகசபாபதி, மும்பை
16) 14:47:16 செந்தில் சௌரிராஜன்
17) 17:01:25 அம்பிகா
18) 18:28:47 ராமராவ்
19) 19:14:12 KB
20) 19:47:23 எஸ் பி சுரேஷ்
*****************
Raghavan MK said…
A peek into today's riddle!
***************
*மாலை நேர டிபன்* காமாட்சி மகாலிங்கம் சேவை என்பது *இடியாப்பம்* . எனக்கு இந்த பெயர் முன்பெல்லாம் தெரியாது. சேவை என்றே சொல்லி வழக்கம். இந்தப் பெயரும் நன்றாகவே இருக்கிறது. இதனுடன் கலக்கும் பொருளைக் கொண்டு பெயர் சொல்லுவோம். தேங்காய், எள், எலுமிச்சை,வெல்லம், தயிர்,காய்கறி, மோர்க்குழம்பு, தேங்காய்ப் பால் என பட்டியல் நீளும். _இப்போது *இடியாப்பம் குருமா* தான் முதலிடத்தில் இருக்கிறது._

இடியாப்பம் குருமா
செய்
_தேவையானப் பொருட்கள்_

2 கப் இடியாப்ப மாவு
3 கப் தண்ணீர்
2 கப் நறுக்கப்பட்ட காய்கறிகள் கேரட்டு, உருளைக்கிழங்கு, பட்டாணி
கிராம்பு, சோம்பு, ஏலக்காய்
1 பச்சை மிளகாய்
1/2 கப் தேங்காய் பால்
1 கப் தேங்காய் துருவல்
1 கப் உலர் கடலைப் பருப்பு அல்லது பொட்டுக்கடலை

_செய்முறை_
தண்ணீரைக் கொதிக்க வைத்து கொஞ்சம் உப்பு, எண்ணெயைச் சேர்க்கவும்.

கொதி வந்ததும் ரெடிமேட் இடியாப்ப மாவைச்சேர்த்து மிருதுவாகும்வரை கலக்கவும்.

இவற்றை உருண்டைகளாக எடுத்துக்கொள்ளவும், இடியாப்ப அச்சியைக் கொண்டு மாவை பிழியவும்.

இடியாப்பத்தை 10-15 நிமிடங்களுக்கு ஒரு இட்லி குண்டானில் வேகவைக்கவும்.
இடியாப்பம் தயாராகிவிடும்.
குருமாவுக்கு காய்கறிகளை வேகவைத்து சுவைக்கு உப்பு சேர்க்கவும்.
மசாலா, மிளகாய், உலர் கடலைப்பருப்பு, தேங்காய் ஆகியவற்றை மென்மையானச் சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
தேங்காய்ப் பாலில் வேகவைத்த காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளவும்.
*இடியாப்பம் குருமா தயார்.* 😛😛
***************
_குழம்பு குருமா முதலில் தவிர்த்தால் இப்படியாகும் தின்பண்டம்  (6)_

_குருமா முதலில்_
= *கு*

_தவிர்த்தால் இப்படியாகும்_
= *கு* வை நீக்கினால்
= *இப்படியாகும் - கு*
= *இப்படியாம்*
_குழம்பு_
= _இப்படியாம் மாற்றி எழுத வருவது_
( _anagram_ ) *இடியாப்பம்*

= _தின்பண்டம்_
*******************
_வா வாத்யாரே_ _ஊட்டாண்டே - நீ வராங்காட்டி நான் உடமாட்டேன் ஜாம்பஜார் ஜக்கு நான்_ _சைதாப்பேட்ட கொக்கு_

_நைனா உன் நினப்பாலே நான்_ 
_நாஸ்தா பண்ணி நாளாச்சு_
_மச்சான் ஒன் மூஞ்சேப் பாத்தேன்_ 
_சால்னா நெனப்பு வந்தாச்சு_

_ஆயா கடை *இடியாப்பம்* நான்_ _பாயாக்கறியும் நீயாச்சு_
_வாவா மச்சான்_ _ஒண்ணா சேந்து_ _வாராவதிக்கே_ _போகல்லாம்!_ ......
😀😀
*********************
💐🙏🏼💐
Muthu said…
ஆறெழுத்துத் தின்பண்டம் என்றதும் இடியாப்பம், வெங்காயவடை நினைவுக்கு வந்தது. வெங்காய வடை (4,2) என்பதால், இடியாப்பம் பொருந்தும். ஆனால் புதிர்க் குறிப்புக்குப் பொருத்தம் (இப்படியாகும் - கு, குழம்பு) புரிபட நேரம் பிடித்தது!

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்