Skip to main content

விடை 3465

இன்று காலை வெளியான வெடி:
வெளியூர் செல்பவர்களுக்குத் தடையாய் ஓராயுதம்  (3)
இதற்கான விடை: சூலம்

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (48):

1) 6:00:36 முத்துசுப்ரமண்யம்
2) 6:00:41 எஸ்.பார்த்தசாரதி
3) 6:02:22 ராமராவ்
4) 6:03:48 பா நடராஜன்
5) 6:04:28 வானதி
6) 6:06:57 மீனாக்ஷி கணபதி
7) 6:08:43 திருமூர்த்தி
8) 6:22:19 KB
9) 6:25:01 உஷா
10) 6:25:35 பானுமதி
11) 6:28:13 மீனாக்ஷி
12) 6:32:38 மீ.பாலு
13) 6:33:26 லதா
14) 6:33:51 மாயா
15) 6:37:52 மீ கண்ணன்
16) 6:39:09 எஸ் பி சுரேஷ்
17) 6:45:07 அம்பிகா
18) 6:45:29 நாதன் நா தோ
19) 6:50:34 ஆர்.நாராயணன்.
20) 7:04:20 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
21) 7:05:51 சங்கரசுப்பிரமணியன்
22) 7:08:58 நங்கநல்லூர் சித்தானந்தம்
23) 7:15:32 கோவிந்தராஜன்
24) 7:24:59 ரவி சுந்தரம்
25) 7:35:27 கேசவன்
26) 7:57:37 கு. கனகசபாபதி, மும்பை
27) 8:04:14 ஆர். பத்மா
28) 8:18:21 மாதவ்
29) 8:39:15 மாலதி
30) 9:03:31 பினாத்தல் சுரேஷ்
31) 9:05:05 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்ட
32) 9:39:37 ஶ்ரீஜா
33) 11:08:21 திருக்குமரன் தங்கராஜ்
34) 11:56:46 ராஜி ஹரிஹரன்
35) 12:23:04 K.R..Santhanam
36) 13:47:12 ரவி சுப்ரமணியன்
37) 14:54:31 வி.பார்த்தசாரதி
38) 14:55:14 ஏ.டி.வேதாந்தம்
39) 14:55:42 பத்மாசனி
40) 16:00:49 மடிப்பாக்கம் தயானந்தன்
41) 16:27:58 ராதா தேசிகன்
42) 17:59:53 இரா.செகு
43) 18:14:45 சுபா ஸ்ரீநிவாசன்
44) 18:24:46 விஜி ஶ்ரீனிவாசன்
45) 18:49:53 மு.க.இராகவன்.
46) 19:19:21 கி மூ சுரேஷ்
47) 19:33:46 சதீஷ்பாலமுருகன்
48) 19:44:30 மு க பாரதி
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
************************
நம் தமிழகத்தில்

‘ _சூல் கொண்ட_ _மாதருக்கு_
_*சூலம்* முக்கியம்_ ’

என்ற மொழி வழக்கில் உள்ளது. 🌺
*************************
_*திருமந்திரம் /திருமூலர்* ._

முன்னோர்கள் பிரயாணம் செய்வதற்கும் கிழமை,திசைகள் பார்த்து,போகும் காரியம் சித்தியாக வேண்டுமென்று அந்தந்த நாட்களிலே தான் அந்தந்த திசைப் பயணம் மேற்கொண்டனர் என்பது நாம் அறிந்த ஒன்று தான்.ஆனால் இந்த விபரங்களை திருமூலரின் திருமந்திரத்தில் பார்த்த போது,புதிதாய் சுவாரஸ்யம் ஏற்பட்டது.

_"வாரத்திற் *சூலம்* வரும்வழி கூறுங்கால்_
_நேரொத்த திங்கள் சனி கிழக்கே ஆகும்_
_பாரொத்த சேய் புதன் உத்தரம் பானு நாள்_
_நேரொத்த வெள்ளி குடக்காக நிற்குமே."_
பொருள்: திங்கட்கிழமையும் சனிக்கிழமையும் கிழக்கு சூலமாகும்.செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமையும் வடக்கு சூலமாகும்.ஞாயிற்றுக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் மேற்கு சூலமாகும்.

_"தெக்கணமாகும் வியாழத்துச் சேர்திசை_
_அக்கணி சூலமும் ஆமிடம் பின்னாகில்_
_துக்கமும் இல்லை வலமுன்னே தோன்றிடின்_
_மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே"._

பொருள்:
வியாழக்கிழமை தெற்கு திசை சூலம்.
ஆக,வெள்ளி,ஞாயிறு,செவ்வாய்,புதன் ஆகிய நான்கு நாட்களும் கிழக்கு திசையில்
பயணம் செல்லலாம்.
திங்களும் சனியும் வியாழனும் மேற்கு நோக்கி பயணம் செல்லலாம்.
வியாழனும் வெள்ளியும் ஞாயிறும் வடக்கு திசையில் பயணம் செல்லலாம்.
செவ்வாயும் புதனும் திங்களும் சனியும் தெற்கு திசையில் பயணம் செய்யலாம்.இதன் படி பின்பற்றி பயணம் செய்தால்.,எடுத்த காரியம் யாவிலும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

இன்றைய அவசர காலத்தில் இது போன்ற கணிப்புக்களைப் பின்பற்றி வாழ்க்கையை ஓட்டுவது பெரும்பாலோர்க்கு சிரமம்.அவர்கள் வாழ்க்கைமுறை,வேலைப்பளு,எதிர்பார்ப்புகள் எல்லாம் மிக மிக அவசரகதியில் இருப்பதால்...சூலம் பார்த்து பயணம் செய்வது என்பது எட்டாக்கனி,கவைக்கு உதவாதது,வெட்டிவேலையுங் கூட.விட்டு விடுவோம் அவர்களை.

*_மற்றவர்கள் ஏன் இம்முறையைப் பின்பற்றக் கூடாது?_* முதல் சித்தர்,மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து ஆண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்கள் எழுதி,"திருமந்திரம் "என்ற வேதத்தை நமக்களித்த திருமூலர் சொல்வதால்,நம்மில் சிலர் முடிந்த அளவு பின்பற்றி பயணம் செய்து, நன்மையாக வெற்றியாக முடிகிறதா? என்று பார்ப்போமே.
செய்து பார்ப்போமா?

நாகரீக மாற்றம் என்ற பெயரில் உணவு,உடை,இருப்பிடம்,விவசாயம்,வாழ்க்கை முறை(Life Style)களில் எவ்வளவோ மாற்றங்களை விருப்புடன் மாற்றி கொண்ட நாம் இதையும் ஏற்றுக் கொள்ளலாமே.!
💐🙏🏼💐
*************************

_வெளியூர்_ _செல்பவர்களுக்குத்_
_தடையாய் ஓராயுதம்_(3)

_வெளியூர்_ _செல்பவர்களுக்குத்_
_தடை_ = *சூலம்*

_ஓராயுதம்_ = *சூலம்*
*************************
_கழுத்தினிலே கபாலம் சூடிக்கொண்ட காளி_
_கர்மவினை_ _களைந்திடவே_
_கருணைகொண்டு வாடி_ !
_திரிசூலம்_ _ஏந்திக்கொண்டு சிவனுடனே ஆடி - உன்_
__திருவடிகள்_ _சிந்தையிலே_
_நிறுத்தும் வரம் தாடி_ !!🔱🔱🔱🔱🔱🔱🔱
திருவாசகம்
திருப்பொன் சுண்ணம்

_தேனக மாமலர்க் கொன்றைபாடிச்_ _சிவபுரம் பாடித் திருச்சடைமேல் வானக மாமதிப் பிள்ளைபாடி மால்விடை பாடி வலக்கையேந்தும் ஊனக மாமழுச் *சூலம்* பாடி உம்பரு இம்பரும் உய்யஅன்று போனக மாகநஞ் சுண்டல்பாடிப் பொற்றிருச் சுண்ணம் இடித்தும்நாமே_
💐🙏🏼💐

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்