Skip to main content

விடை 3455

இன்று காலை வெளியான வெடி:
வஞ்சியிடை வளைத்தேன் ஆ! தொட்டாலே மென்மை! (3)

இதற்கான விடை: பஞ்சு = பசு + ஞ் 

இரவில் புதிரைத் தயாரித்து காலை ஆறுமணிக்கு வெளிவர ஏற்பாடு செய்துவிட்டு வழக்கம் போல் சரியாக வெளிவந்திருக்கிறதா என்று
காலையில் எழுந்து வலைப்பதிவில் எட்டிப் பார்த்தேன்.
காலை 6:01லிருந்து 6:02க்குள்  6 பேர் விடையைத் துள்ளியெழுந்துவந்து  அளித்துவிட்டீர்கள். ஆறரைக்குள் 28 பேர். ஒருவரும் தவறான விடையளிக்கவில்லை.     புதிருக்கு விடையளிக்கும் திறமை இப்படி அதிகரித்துவிட்டதால் இனி என்பாடு கஷ்டமாகிவிடும். 

வஞ்சி யிடையை வளைத்ததாய் வாஞ்சிநான்
அஞ்சி வெளியிட்டேன் அப்புதிரை -- மஞ்சத்தில்
துஞ்சி யெழுமுன்னே தூள்பறக்கப் போட்டுடைத்தீர்
விஞ்சிடுமும் ஆற்றல் மிகுந்து.



Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (55):

1) 6:01:07 திருமூர்த்தி
2) 6:01:25 நங்கநல்லூர் சித்தானந்தம்
3) 6:01:27 லட்சுமி சங்கர்
4) 6:01:36 எஸ்.பார்த்தசாரதி
5) 6:01:49 அம்பிகா
6) 6:01:58 ராஜா ரங்கராஜன்
7) 6:02:22 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
8) 6:03:29 சுந்தர் வேதாந்தம்
9) 6:04:29 வி .ன் கிருஷ்ணன்
10) 6:04:45 KB
11) 6:05:05 ராமராவ்
12) 6:06:08 செந்தில் சௌரிராஜன்
13) 6:06:20 லதா
14) 6:07:40 ராதா தேசிகன்
15) 6:09:44 மாலதி
16) 6:09:49 முத்துசுப்ரமண்யம்
17) 6:13:12 மு.க.இராகவன்.
18) 6:15:18 விஜி ஶ்ரீனிவாசன்
19) 6:16:52 ரவி சுந்தரம்
20) 6:17:14 ஆர்.நாராயணன்
21) 6:18:28 நாதன் நா தோ
22) 6:19:18 மீனாக்ஷி கணபதி
23) 6:21:24 கேசவன்
24) 6:21:31 சங்கரசுப்பிரமணியன்
25) 6:22:56 சாந்தி நாராயணன்
26) 6:23:46 ரங்கராஜன் யமுனாச்சாரி
27) 6:23:50 Sandhya
28) 6:25:31 மடிப்பாக்கம் தயானந்தன்
29) 6:38:34 ராஜி ஹரிஹரன்
30) 6:38:37 மீனாக்ஷி
31) 6:47:39 Siddhan Subramanian
32) 6:47:58 ரமணி பாலகிருஷ்ணன்
33) 6:48:14 கு. கனகசபாபதி, மும்பை
34) 6:57:03 கி மூ சுரேஷ்
35) 7:08:57 மு க பாரதி
36) 7:14:43 சதீஷ்பாலமுருகன்
37) 7:25:24 மீ.பாலு
38) 7:28:01 சுபா ஸ்ரீநிவாசன்
39) 7:48:29 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
40) 7:56:01 மைத்ரேயி
41) 8:02:30 இரா.செகு
42) 8:09:06 மீ கண்ணன்
43) 8:18:06 பினாத்தல் சுரேஷ்
44) 8:32:25 பிரசாத் வேணுகோபால்
45) 8:35:13 மயிலை வெங்கு
46) 8:53:05 தேன்மொழி
47) 8:56:47 எஸ் பி சுரேஷ்
48) 9:05:13 வானதி
49) 9:12:06 மாதவ்
50) 10:28:04 ஆர். பத்மா
51) 10:46:43 கோவிந்தராஜன்
52) 13:05:00 பானுமதி
53) 16:57:59 உஷா
54) 19:44:37 ஹரி பாலகிருஷ்ணன்
55) 20:48:34 பாலா

**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
★★★★★★★★★★★★
*அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்*

_கண்டுமொழி கொம்பு கொங்கை_ _*வஞ்சியிடை* யம்பு நஞ்சு_
_கண்கள்குழல்_ _கொண்டல் என்று ......_ _பலகாலும்_

_கண்டுளம்வ ருந்தி நொந்து மங்கையர்வ சம்பு ரிந்து_
_கங்குல்பகல் என்று_ _நின்று ...... விதியாலே_
_
_பண்டைவினை கொண்டு ழன்று வெந்துவிழு கின்றல் கண்டு_
_பங்கயப தங்கள்_ _தந்து ...... புகழோதும்_

_பண்புடைய சிந்தை யன்பர் தங்களினு டன்க லந்து_
_பண்புபெற அஞ்ச_ _லஞ்ச ...... லெனவாராய்_

_வண்டுபடு கின்ற தொங்கல் கொண்டறநெ ருங்கி யிண்டு_
_வம்பினைய டைந்து_ _சந்தின் ...... மிகமூழ்கி_

_*வஞ்சியை* மு னிந்த கொங்கை மென்குறம டந்தை செங்கை_
_வந்தழகு டன்க_ _லந்த ...... மணிமார்பா_

_திண்டிறல்பு னைந்த அண்டர் தங்களப யங்கள் கண்டு_
_செஞ்சமர்பு னைந்து துங்க ......_ _மயில்மீதே_

_சென்றசுரர் அஞ்ச வென்று குன்றிடைம ணம்பு ணர்ந்து_
_செந்தில்நகர் வந்த_ _மர்ந்த ...... பெருமாளே._

*உரை* :
கற்கண்டுச்சொல்,
யானைத்
தந்தம் போன்ற மார்பு,
*வஞ்சிக் கொடி* *போன்ற இடை* ,
அம்பையும் நஞ்சையும் ஒத்த கண்கள்,கூந்தல் மேகம் போன்றது என பலமுறையும் உவமை கண்டு,உள்ளம் வருந்தி, நொந்து போய், மாதர்களின் வசப்பட்டு,இரவும் பகலுமாக நின்று,விதியின் பயனாய் பழவினை தாக்க, அதனால் திரிந்து,என் மனம் வெந்து வீழ்வதைக் கண்டு,உன் தாமரைப் பதங்களைத் தந்தளித்து,உன் புகழை ஓதும் பண்பு கொண்ட மனத்து அன்பர்களுடன் கலந்து
நான் நற்குணம் பெறுவதற்கு,
நீ அஞ்சாதே அஞ்சாதே என்று கூறி வருவாயாக.
வண்டுகள் மொய்க்கின்ற
மலர்மாலையைப் பூண்டு,
மிக நெருக்கமாக நெய்த அழுத்தமான ரவிக்கையை அணிந்து,சந்தனக்குழம்பில் மிகவும் முழுகி, _*வஞ்சிக் கொடி* *போன்ற இடையை*_
வருத்துகின்ற மார்பினள்,
மென்மையான குறப்பெண்
வள்ளியின் சிவந்த கைகளை
அவளது இடத்துக்கு
(வள்ளிமலைக்கு)ச் சென்று எழிலுடன் தொட்டுக் கலந்த திருமார்பனே.
திண்ணிய வலிமை கொண்ட தேவர்கள் நின்னிடம் அபயம் அடைய வேண்டுவதைக் கண்டு,செவ்விய போர்க்கோலம் பூண்டு, தூய மயில்மீது ஏறிச்சென்று,போர்க்களத்தில் அசுரர்களை அஞ்சும்படிவெற்றி கொண்டு,(திருப்பரங்)குன்றத்தில்
தேவயானையை மணம்புரிந்து,
திருச்செந்தூர்ப்பதியில்
வந்து வீற்றிருக்கும் பெருமாளே!
💐🙏🏼💐
★★★★★★★★★★★★
_வஞ்சியிடை வளைத்தேன் ஆ! தொட்டாலே மென்மை! (3)_
_ஆ!_ = *பசு*
_வஞ்சியிடை_
= *ஞ்*
_வளைத்தேன்_
= *பசு* *ஞ்* _ஞை_ _வளைக்க_
= *ப+ஞ்+சு*
= *பஞ்சு*
= _தொட்டாலே மென்மை_
★★★★★★★★★★★★
_காதலிக்க நேரமில்லை_ _காதலிப்பார் யாருமில்லை_
_வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை_

_பஞ்சணையும்_ _கண்டதில்லை பால் பழம் குடித்ததில்லை_
_*வஞ்சி* உன்னைக் காணும்வரை மனதும் துடித்ததில்லை_
_*பஞ்சு* போல_ _நரைவிழுந்து பார்வையும்_ _குழிவிழுந்து_
_இரண்டும் கெட்ட_ _வேளையிலே_ _கண்டேனே உன்னையடி_ 💃🏼
★★★★★★★★★★★★

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்