Skip to main content

விடை 3449

இன்று (03 அக்டோபர் 2018) காலை வெளியான வெடி:
அரை அடி இடமில்லை துயரம் (4)

இதற்கான விடை: அவலம் ( வலம் என்பது இடம் என்பதற்கு எதிர்ப்பதம்)

Comments

Raghavan MK said…


A peek into today's riddle!
***********
துணிந்தபின் மனமே *துயரம்* கொள்ளாதே! சோகம் பொல்லாதே!
************
நரி *வலம்* போனால் என்ன, *இடம்* போனால் என்ன, மேலே விழுந்து பிடுங்காமல் போனால் சரி என்பார்கள்.
அத்துமீறலை தட்டிக் கேட்பவர்களின் எண்ணிக்கை சொற்பமாகிவிட்டது. உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர்கள் குறைந்துவிட்டார்கள். ‘என்ன நடந்தால் நமக்கென்ன’ என்ற மனநிலை தான் பலரிடமும் உள்ளது. ‘.
***********
*வலம்,இடம்*
‘வலம்’ என்றால் ‘வலிமையானது’, ”மிகவும் ’ என்ற பொருள்.”இடம்’ என்றால் ஓரிடத்தில் அதிக இயக்கம் இல்லாமல் நிலைபெற்றிருப்பது’ என்பது பொருள். ‘வலக்கை’ ‘இடக்கை’ என்ற சொல்லாட்சியும் இதன் அடிப்படையில்தான் வந்திருக்க வேண்டும். ஏனெனில் உலகில் பெரும்பான்மையோர் வலக்கை செயலாற்றுவோராக இருக்கின்றார்கள். இடக்கை அவ்வளவாகப் பயன்படுவதில்லை. இருக்கும் இடத்திலேயே இருக்கிறது. ஆனால் கோட்பாட்டு ரீதியாகப் பார்க்கும்போது,மரபு வழிச் சார்ந்தவர்களை, ‘Status quo’ வை விரும்புகின்றவர்களை, ‘வலது வழிச் சார்ந்தவர்கள் (Rightists) என்றும், முற்போக்குச் சிந்தனையுடன் செயல் துடிப்பு உள்ளவர்களை ‘இடதுவழிச் (Leftists) சார்ந்தவர்களென்றும் கூறுகிறோம்.

(இந்திரா பார்த்தசாரதி)
***********
_அரை அடி இடமில்லை துயரம் (4)_ 
_அரை அடி_ = *அ*
_இடமில்லை_
= _இடம் இல்லை_
= *வலம்*
_துயரம்_
= *அ+வலம்*
= *அவலம்*
************
_நற்றிணை (184 )_

எனக்கு ஒரே ஒரு மகள்தான். அவளும் காளை ஒருவனோடு சென்றுவிட்டாள். அவன் வில்லேந்திப் போரிடும் கட்டான உடலைப் பெற்றவன்தான். என்றாலும் வறண்ட பெருமலைக் காட்டு வழியே அவனுடன் சென்றுவிட்டாள். அறிஞர்களே! நெஞ்சில் தோன்றும் *அவலத்தைத்* தாங்கிக்கொள் என்கிறீர்கள். எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்? நினைக்கும்போதெல்லாம் உள்ளம் வெந்துகொண்டிருக்கிறது. என் மகள் நொச்சி நிழலில் தெற்றி விளையாடுவாள். மாணிக்கக் கல்லில் செய்த பொம்மை நடை கற்றுக்கொண்டு செல்வது போல் நடந்து தெற்றி ஆடுவாள். அவள் தெற்றி ஆடிய காயையும், நொச்சியையும் காணும்போது என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

தேற்றுவோரிடம் செவிலி சொல்கிறாள்.

_"ஒரு மகள் உடையேன் மன்னே அவளும்_
_செரு மிகு மொய்ம்பின் கூர்வேற் காளையடு_
_பெரு மலை அருஞ் சுரம் நெருநல் சென்றனள்_
_இனியே தாங்கு நின் *அவலம்* என்றிர் அது மற்று_
_யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரே_
_உள்ளின் உள்ளம் வேமே உண்கண்_
_மணி வாழ் பாவை நடை கற்றன்ன என்_
_அணி இயற் குறுமகள் ஆடிய மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே மனை மருட்சி"_
************
*குறள்:1072*

_நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்_
_நெஞ்சத்து *அவலம்* இலர்._

குறள் விளக்கம்:

எப்போதும் நல்லது கெட்டதை பற்றியே சிந்தித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களைவிடக் கயவரே நல்ல மகிழ்ச்சியுடையவர்கள்; ஏனென்றால், கயவர் தம் நெஞ்சில் எதைப் பற்றியும் கவலையில்லாதவர்களாவர்.
💐🙏🏼💐
*********
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (48):

1) 6:02:01 எஸ்.பார்த்தசாரதி
2) 6:02:23 சுந்தர் வேதாந்தம்
3) 6:02:57 ராமராவ்
4) 6:04:02 மாயா வேதாந்தம்
5) 6:05:34 மீனாக்ஷி கணபதி
6) 6:06:37 கேசவன்
7) 6:06:51 சதீஷ்பாலமுருகன்
8) 6:06:57 சாந்தி நாராயணன்
9) 6:07:05 லதா
10) 6:07:07 கி மூ சுரேஷ்
11) 6:07:08 K .R.Santhanam
12) 6:09:15 ரவி சுப்ரமணியன்
13) 6:10:17 KB
14) 6:11:05 முத்துசுப்ரமண்யம்
15) 6:13:59 நங்கநல்லூர் சித்தானந்தம்
16) 6:18:35 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
17) 6:19:45 மீ கண்ணன்
18) 6:22:07 லட்சுமி சங்கர்
19) 6:23:35 ராஜா ரங்கராஜன்
20) 6:24:49 மீனாக்ஷி
21) 6:25:41 ரவி சுந்தரம்
22) 6:31:33 ருக்மணி கோபாலன்
23) 6:31:36 கோவிந்தராஜன்
24) 6:40:23 உஷா
25) 6:45:55 ஆர் .பத்மா
26) 6:46:57 வானதி
27) 6:48:00 ரங்கராஜன் யமுனாச்சாரி
28) 6:49:39 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
29) 6:57:13 சங்கரசுப்பிரமணியன்
30) 6:57:54 சங்கரசுப்பிரமணியன்
31) 7:06:02 ஆர்.நாராயணன்
32) 7:07:45 எஸ் பி சுரேஷ்
33) 7:17:53 மீ.பாலு
34) 7:20:45 வித்யா ஹரி
35) 7:41:17 கலாராணி
36) 8:24:04 ஹரி பாலகிருஷ்ணன்
37) 8:43:16 தி. பொ. இராமநாதன்
38) 9:11:04 மாலதி
39) 9:13:27 Siddhan Subramanian
40) 9:27:12 சுப்பிரமணியம் வேங்கடராமன்
41) 9:35:47 ரா. ரவிஷங்கர்...
42) 9:41:23 விஜயா ரவிஷங்கர்
43) 11:07:04 ஸௌதாமினி
44) 11:21:49 மு.க.இராகவன்.
45) 12:18:45 மடிப்பாக்கம் தயானந்தன்
46) 12:53:27 பானுமதி
47) 18:04:24 அம்பிகா
48) 20:51:50 V.R. Balakrishnan
**********************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்