Skip to main content

Posts

Showing posts from March, 2020

செயலியுடன் சரவெடி மார்ச் 31 2020

சரவெடி மார்ச் 31, 2020 (செயலி வடிவம்) வாஞ்சிநாதன் ********************* ஹரி பாலகிருஷ்ணன் அவர்களின் செயலி மூலம்  இப்புதிர் இவ்வடிவத்தில் வருகிறது. அவருக்கு என் நன்றி. விளையாடி மகிழுங்கள்.  நீங்கள் தேர்ந்தெடுத்த கட்டத்திற்குரிய குறிப்பு மட்டும் இதில் காட்டப்படும். ஏதேனும் ஒரு வெடிக்கு விடை உடனே புலப்படவில்லையென்றால் வேறொரு கட்டத்தைத் தேர்வுசெய்யுங்கள். வேறு குறிப்பு முளைக்கும். தவறாக எழுதியதை அழிக்க backspace பயன்படும். திருத்தம்: செயலியில் 1. நெடு. தவறான குறிப்பை இணைத்துள்ளேன். சரியானது:   1 நெடு.புன்னகையைப் பொன்னகையாக்குவது (6)

சரவெடி 31 மார்ச் 2020

சரவெடி 31 மார்ச் 2020 வாஞ்சிநாதன் ******************  கட்டங்கள் வரும் முன்பே (4.50 மணி வரை) விடை கண்டுபிடித்தவர்கள்: எல்லா (24)  விடைகளையும் சரியாகக் கண்டுபிடித்த 4 பேர்: பா. நடராஜன் கேசவன்    ராம்கி கிருஷ்ணன் எஸ் பி சுரேஷ்   (விளக்கங்கள் அனுப்பவில்லை) இருபத்திமூன்று சரியான  விடைகளை அனுப்பிய 5 பேர்: கதிர்மதி சதீஷ்பாலமுருகன்  நாகராஜன் அப்பிச்சிக் கவுண்டர் ஆர் பத்மா டாக்டர் ராமகிருஷ்ண ஈஸ்வரன்   இருபத்திரண்டு சரியான விடைகள் கண்டுபிடித்த மூவர்: வானதி உஷா எஸ் ஆர் பாலசுப்ரமணியன்   இதில்  நடராஜன், ராம்கி கிருஷ்ணன், டாகடர் ரமகிருஷ்ண ஈஸ்வரன்  இம்மூவரும் விடைகளோடு புதிர்கட்டங்களையும்  சரியாக  கணித்து அனுப்பியிருந்தனர். ~~~~~~~~~~~~~~~ ********************** ~~~~~~~~~~~~~~~~~~ சரி இதோ மீண்டும்  இதே புதிர், சரவடிவில் (இன்னொரு இடுகையில் செயலியுடன் இருக்கிறது) குறுக்காக‌ 1. கணவன்-மனைவி  பந்தம் பதினைந்தில்  முகிழ்த்தது (4) 3. பெரிய தடை சிக்க தடும...

உதிரிவெடி 4038-4061

உதிரிவெடி 4038-4061 (மார்ச் 31, 2020) வாஞ்சிநாதன் ******************* இன்று மொத்தம் 24 வெடிகள் உள்ளன. இதில் 24 அல்லது 23 அல்லது 22ஐ உதிரியாவே வெடித்து, கட்டத்தை வெளியிடும் முன்னே சரியான விளக்கங்களுடன் விடையனுப்புவோர்க்கு முறையே 24 கேரட், 23 கேரட், 22 கேரட் தங்கப் பதக்கங்களை அளிக்க நான் ஆசைப்படுகிறேன். அதை  vanchinathan அட்  ஜிமெயில் டாட் காம் என்ற  முகவரிக்கு  இந்திய நேரப்படி 31 மார்ச் மாலை நாலரை மணிக்கு  முன்பு அனுப்பவும். மாலை 5 மணிக்கு வலைக்கட்டங்கள் வெளியிடப்படும். (இன்று விடையளிக்க கூகிள் படிவம் கிடையாது).  இருபத்திரண்டுக்கும் குறைவான விடைகளைக்  கண்டுபிடித்தோர் 5 மணிக்குப் பிறகு  வலைக்கட்டம் நிரப்பி மிச்சத்தையும் கண்டுபிடித்து, பழைய முறையில் அனுப்பவும். நெட்ப்ளிக்ஸ், அமேசான் என்று  10 நாட்களாகத் திரைப்படங்களையே பார்த்து வேறு மாறுதலான விஷயம் வேண்டும் என்று உங்கள் நண்பர்கள், உறவினர்கள் இருப்பார்கள். இதுதான் தக்க தருணம், அவர்களை இவ்வெடிப்பக்கம் வந்து ஒரு கை பார்க்கச் சொல்லுங்கள். அதிகமான வெடிகள் இருப்பதால் விடைகள்  புதன் இரவோ...

விடை 4037

இன்று காலை வெளியான வெடி: அழைப்பிதழ் நடுவிலிருப்பதைக் கத்தரிப்பது நல்லுறவைக் காட்டாது (2) அதற்கான விடை: பகை = ப த்திரி கை பத்திரிகை = அழைப்பிதழ் இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4037

உதிரிவெடி 4037  (மார்ச் 30 , 2020) வாஞ்சிநாதன் ********************** அழைப்பிதழ் நடுவிலிருப்பதைக் கத்தரிப்பது நல்லுறவைக் காட்டாது (2) Loading…

விடை 4036

இன்று காலை வெளியான வெடி: நேர்மையிலிருந்து விலகி வாய்மை இடையே துறந்த கலவை  (3) அதற்கான விடை:  சாந்து = சாய்ந்து - ய் சாய்ந்து = "நேர்"மையிலிருந்து விலகி ய் = வாய்மை இடை கட்டிடத்தொழிலாளர்கள் சுவர் எழுப்பும்போது  செங்கல் அடுக்கிப் பூசுவதற்கான சாந்தை இவ்வாறு கலவை என்றும் சொல்வதுண்டு . இரண்டு நாட்களாகப் பேருந்துகள், ரயில் வண்டிகள் இயக்கப் படாததால்  கூலித் தொழிலாளர்கள், அவர்களில் பெரும்பாலானோர் கட்டிட வேலைத் தொழிலாளர்கள், 300,  400கி.மி.  நடந்தே செல்வதைத் தொலைக்காட்சியில் காட்டுகிறார்கள். சுண்ணாம்பு  சாந்து  கலவை சுவரெழுப்பி அண்ணாந்து பார்க்கும் அதிசய கட்டிடம் மண்ணில் பலர்வியக்கக் கட்டும் மாந்தரெலாம் இந்நாளில் வாடுவதும் ஏன்? இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Solution to Krypton 221

Today's clue: Cynically humorous,   revolting,  draconian, single-headedly replaced   article (8)   Its solution: SARDONIC = DRACONIAN - AN + S AN = article S = Single head This is not a word that  readily springs to my mind. I was reading a novel thanks to this lock down and decided to grab it up when the kidnapper protagonist  kept smiling sardonically at his hostage.

உதிரிவெடி 4036

உதிரிவெடி 4036  (மார்ச் 29 , 2020) வாஞ்சிநாதன் ********************** நேர்மையிலிருந்து விலகி வாய்மை இடையே துறந்த கலவை  (3) Loading…

Solution to Krypton 220

Today's clue: Been not involved in love,  donor quits  but generous (10) Its solution:   BENEVOLENT   = BEEN + NOT +  LOVE - O O =  donor (as a blood group) Visit this page to see the details of  solutions submitted for this.

விடை 4035

இன்று காலை வெளியான வெடி: உடலில் உச்சியில் கையெடுத்துப் பார்ப்பதற்கு அழகாக இருக்காது  (5) அதற்கான விடை: அசிங்கம் = அங்கம் + சி உடல் = அங்கம்  சி  = சிகரம் -கரம் சிலர் "உச்சி = சிகை"  என்று  பொருள் கொண்டு, சிகை -கை = சி என்று விளக்கமளித்து அதே விடையைக் கண்டுபிடித்துள்ளார்கள். இதை நான் எதிர்பார்க்கவில்லை. இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்

உதிரிவெடி 4035

உதிரிவெடி 4035   (மார்ச் 28 , 2020) வாஞ்சிநாதன் **********************  உடலில் உச்சியில் கையெடுத்துப் பார்ப்பதற்கு அழகாக இருக்காது  (5) Loading… <

விடை 4034

இன்று காலை வெளியான வெடி: கடைசி ஓட்டையை மூடிப் பூசு, அது நீரோட்டத்தைத் தடுக்கும்  (4) அதற்கான விடை:  அடைப்பு = அப்பு + டை அப்பு = பூசு டை = கடைசி ஓட்டை இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4034

உதிரிவெடி 4034  (மார்ச் 27, 2020) வாஞ்சிநாதன் ********************** கடைசி ஓட்டையை மூடிப் பூசு, அது நீரோட்டத்தைத் தடுக்கும்  (4) Loading…  

விடை 4033

இன்று காலை வெளியான வெடி: கோபப்பட்டு  வெட்டி   இறுதியாகச் சிக்கினால் போரில்  வீசப்படும் (5) அதற்கான விடை:  வெடிகுண்டு = வெகுண்டு + டி (ஆரம்பத்தில் "வெட்டி" என்பதற்கு பதிலாகத் "தாக்கு" என்ற சொல்லுடன் இப்புதிரை அமைத்திருந்தேன். "தாக்கு" என்பதை "அடி" என்று கொண்டு அதிலிருந்து "டி" வரவழைக்க வேண்டும் என்ற திட்டத்தைச் சிலர் சரியாகப் புரிந்து கொண்டு விடை கண்டுபிடித்துவிட்டார்கள்.  ஆனால் 5 நிமிடத்தில் அது நியாயமாக இருக்காது என்று மாற்றிவிட்டேன்.) இன்று காலை கருத்துரையில் முழு வலைக்கட்டப் புதிர் அமைக்குமாறு கேட்டிருப்பதைப் பார்த்தேன். இப்போது நான் வீட்டிலேயெ முழு நேரம் இருப்பதால் அதற்கு அவகாசம் கிடைக்குமென்று நம்புகிறேன். ஆனால் இது போல் நேரம் இனிமேல் கிடைக்காதோ என்று வேறு சிலவற்றையும் திட்டமிட்டிருக்கிறேன். அதை முடித்துவிட்டு வருகிறேன். இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4033

உதிரிவெடி 4033  (மார்ச் 8, 2020) வாஞ்சிநாதன் ********************** கோபப்பட்டு  வெட்டி   இறுதியாகச் சிக்கினால் போரில்  வீசப்படும் (5)  Loading…

விடை 4032

இன்று காலை வெளியான வெடி: பாதிக் கோவில் முன்னே நெடுங்காலம் சேவை (4) அதற்கான விடை:  ஊழியம் = ஊழி + யம் ஊழி = நெடுங்காலம் (யுகம்) யம் = (ஆல) யம் இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியலை இங்கே காணலாம்.

விடை 4031

இன்று காலை வெளியான வெடி:   பெருமளவில் காணப்படுகின்ற கனி ஒன்று கவர போராட்டம் (5) அதற்கான விடை:  பரவலாக = பலா + கவர இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4031

உதிரிவெடி 4031  (மார்ச் 24, 2020) வாஞ்சிநாதன் ********************** பெருமளவில் காணப்படுகின்ற கனி ஒன்று கவர போராட்டம் (5)   Loading…

மார்ச் 2020 சரவெடிக்கான விடைகள்

பொங்கலுக்குப் பிறகு தமிழ் வருஷப் பிறப்புக்கு ஒரு சரவெடி என்று திட்டமிட்டிருந்தேன். ஊரடங்கு உத்தரவால்  நேரம்  கிடைத்து  திடீரென இது சாத்தியமானது. ஆனால் இந்த வைரசால் நேரம் கிடைக்காமற் போனவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு மேலே தொடர்கிறேன்: நள்ளிர வென்றாலும் நாட்டிற் குழைத்திடுவார் தள்ளி விலகாத தன்னார்வத் தொண்டர்கள் அஞ்சிநாம் வீட்டில் அடங்கி இருக்கையில் நெஞ்சில் நினைத்திடு நீ. (இது கவிஞர் ஹரிகிருஷ்ணன் அவர்கள் உந்துதலால் எழுதப்பட்டது). இப்போது விடைகளுக்கு வருவோம். குறுக்காக  5. வாலில்லாக் காளை  சாணி? (2)  எரு [ எருது-து]  6. கூராக்கி தலை சீவி உலகத்தில் நுழையும் மன உறுதி (6)   வைராக்கியம் =  (கூ) ராக்கி + வையம்  7. அழகான  காட்டுப்புற மார்வாடி  பாதியாய் எதிர்த்துப் புகுந்தான் (4)   வடிவான = வன (காட்டுப்புற) + டிவா (மார்வாடி - மார்)  8.  ஒரு நாய் விளையாட்டில் வெல்வது  சிம்ம  இடை பரிமாற்றம் (3) கோம்பை = கோப்பை - ப் + ம்  (கோம்பை, ஒரு நாய் இனம்).  9....

சரவெடி மார்ச் 2020 .

சரவெடி மார்ச் 2020 வாஞ்சிநாதன் *********************** வீட்டுக்கு வீடு தெருப்பக்கம் போக முடியாமல்  கணினி/கைப்பேசிக்கருகில் அமர்ந்து கொண்டிருக்கும் ஆர்வலர்களே! இதோ வந்துவிட்டது பொங்கலிலிருந்து இரண்டு மாதத்தில் இன்னொரு சரவெடி. நேற்று காலை ஆறு மணிக்குப் பாதியும், பின்னர் மாலை 4 மணிக்கு எஞ்சியவற்றையும் ஆக இரண்டு தவணைகளில்  உதிரியாக வந்த 17 வெடிகளும் இப்போது கோக்கப்பட்டு சரமாக வருகின்றன. இதை உருவாக்க ஹரிபாலகிருஷ்ணனின்  புதிர்மயம் செயலி உதவியுள்ளது. உங்களால் இதுவரை விடுவிக்க இயலாத புதிர்களை  வலைக்கட்டத்தில் உரசிச் செல்லும் மற்ற விடையின் உதவியால் கண்டுபிடிக்கலாம். குறுக்காக  5. வாலில்லாக் காளை  சாணி? (2)  6. கூராக்கி தலை சீவி உலகத்தில் நுழையும் மன உறுதி (6)  7. அழகான  காட்டுப்புற மார்வாடி  பாதியாய் எதிர்த்துப் புகுந்தான் (4)  8.  ஒரு நாய் விளையாட்டில் வெல்வது  சிம்ம  இடை பரிமாற்றம் (3)  9.  கரோனா  தொற்றியதும்  முகத்தை மறைத்துச் செய் (3) 11. ஆதரவற்றவள் திரி உள்ளே பஞ்சின் மு...

Solution to Krypton 219

Today's clue: Democratically elected majority leaders sheltered in panic of a widespread disease (8) Its solution: PANDEMIC = PANIC + DEM Leaders = first letters of three words in the clue D  = Democratically E  = Elected M = Majority             Here is the list having all the solutions received. Let us hope our leaders do the right things to combat this virus whether they are sheltered or in the open.

Krypton 219

Krypton 219  (22nd March 2020) Vanchinathan *********************** Democratically elected majority leaders sheltered in panic of a widespread disease (8)   Loading…

சரத்திலிருந்து உதிர்த்தவை 4014‍--4021

சரத்திலிருந்து உதிர்த்தவை 4014‍--4021 வாஞ்சிநாதன் *************************   இதோ சரவெடியின் முதல் எட்டு வெடிகளை உதிர்த்துத் தருகிறேன். மீதமுள்ள ஒன்பதும் மாலை 4 மணிக்கும்,  எல்லாமுமாக சேர்த்து சரமாக, கட்டத்துடன் நாளை காலை வெளிவரும். Loading…

Solution to Krypton 218

Today's clue: Seem less important around a bar opposed to a story (7) Its solution:   PARABLE  = PALE + RAB PALE  (verb) = to seem less important RAB = bar 'opposed' Click here to see the solutions received for this.

விடை 4013

இன்று காலை வெளியான வெடி: வழி தெரிந்ததும் புதையலைப் புதைத்தவர் (4)  அதற்கான விடை:  ததும்பு;  ( அச்செய்தியைக் கேட்டதும் அவன் கண்களில் கண்ணீர் ததும்பியது) "தெரிந் ததும் பு தையலை " என்பதில் புதைந்திருக்கிறது விடை. கண்ணீர் வழி தல் = ததும்பு தல்; இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். நாளைய முழுக்கட்டப் புதிருக்கு இன்று காலை ஏழெட்டு பேர் ஆதரவு தெரிவித்ததால் இன்று பகலில் 17 குறிப்புகள் அடங்கிய புதிரைச் செய்து முடித்தேன். அவ்வளவுதான் இனிமேல் கடையை இழுத்து மூடிவிடலாமா என்று நினைத்துக் கொண்டிருந்த போது  அந்த ஏழெட்டு பேர் தடுத்தாட்கொண்டு எல்லோருக்கும் மழை பொழிய வைத்துள்ளனர். முன்பே சொன்னபடி கட்டங்களில் ஒரு இடைஞ்சல் என்னவென்றால் சில புதிர்கள் மற்ற விடைகளின் உதவியால் யோசிக்காமல் விடை கிடைக்க வழி செய்துவிடும். அதனால் காலையில் 17 உதிரிகளாக மொத்தமாக  வெளியிட்டு  மாலையில் கட்டத்தோடு விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் விருப்பத்தைக் கருத்துரையில் தெரிவிக்கலாம்.  

உதிரிவெடி 4013

உதிரிவெடி 4013 (மார்ச் 21, 2020) வாஞ்சிநாதன் *************************   முன் குறிப்பு: நேற்றிர‌வு விடையோடு  ஒரு அறிவிப்பையும் வெளியிட்டிருந்தேன். முழுக் கட்டத்துடன் ஒரு புதிரை ஞாயிற்றுக் கிழமை உருவாக்கி வெளியிட. அதற்கு வரவேற்பு ஒருவரிடமிருந்து வந்திருக்கிறது. ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ வரவேற்பைத் தெரிவித்த திருமதி வானதி அவர்களுக்கு நன்றி. ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ வழி தெரிந்ததும் புதையலைப் புதைத்தவர் (4)  Loading…

விடை 4012

இன்று காலை வெளியான வெடி: பூவிதில் மெய்மறந்து  மயங்கி மூன்று கோடுகளுடன் அணிவர் (3) அதற்கான விடை:  விபூதி   = பூவிதில் - ல் ல் = "பூவிதில்" என்பதிலுள்ள மெய்யெழுத்து இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். அறிவிப்பு: ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவு வேண்டுகோள் இந்தியாவில் விடுக்கப்பட்டுள்ளது. அதனால் அந்நாள் ஒரு முழு வலைக்கட்டத்துடன் புதிர் வெளியிடத் திட்டமிட்டுள்ளேன். 

உதிரிவெடி 4012

உதிரிவெடி 4012  (மார்ச் 20, 2020) வாஞ்சிநாதன் ********************** பூவிதில் மெய்மறந்து  மயங்கி மூன்று கோடுகளுடன் அணிவர் (3) Loading…

விடை 4011

இன்று காலை வெளியான வெடி: எதிர்ப்புற  வழி  வெளியே இல்லாத தன்மை எப்போதும் நிலைத்திருக்கும் (5) அதற்கான விடை: அழிவற்ற = அற்ற + ழிவ அற்ற = இல்லாத ழிவ = எதிர்ப்புற வழி அழிவற்ற  தன்மை எப்போதும் நிலைத்திருக்கும்.   இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4011

உதிரிவெடி 4011  (மார்ச் 19, 2020) வாஞ்சிநாதன் ********************** எதிர்ப்புற  வழி  வெளியே இல்லாத தன்மை எப்போதும் நிலைத்திருக்கும் (5) Loading…  

விடை 4010

இன்று காலை வெளியான வெடி: காலில்லாக் கோழி வளர்க்குமிடம் தடி சுழற்றிய  சண்டியர் கடைசியாகப் படித்தவர் (5) அதற்கான விடை: பண்டிதர் = பண் + டித + ர் பண் = பண்ணை - ணை (பண்ணை = கோழி வளர்க்குமிடம்) டித = சுழற்றிய தடி ர் = கடைசியாக, சண்டியர் தடி சுழற்றிய  சண்டியரைக் கண்டு பயப்படாமல்  புதிரில் இறங்கி 50க்கும் மேற்பட்டவர்கள் விடைகளைக் கண்டு பிடித்து விட்டீர்கள். பாராட்டுகள். யாரந்த 50 பேர்? இங்கே சென்று பார்க்கவும். சண்டியர் கையில் தடியெடுத்து வந்தாலும்   உண்டில்லை யென்றிவ் வுதிரி வெடியதில்  அஞ்சாது நாள்தோறும் பங்கேற்போர் ஆர்வம் பஞ்சிலே  பற்றிய தீ.

உதிரிவெடி 4010

உதிரிவெடி 4010  (மார்ச் 18, 2020) வாஞ்சிநாதன் **********************     காலில்லாக் கோழி வளர்க்குமிடம் தடி சுழற்றிய  சண்டியர் கடைசியாகப் படித்தவர் (5) Loading…

விடை 4009

இன்று காலை வெளியான வெடி: சம்பாத்தியத்தில் ஒரு துளி குடிப்பதில் செல்ல தண்ணீர்  இறைக்கும் முறை (4) அதற்கான விடை:  பாசனம் = பானம் + ச பானம் = குடிப்பது, குடிக்கப்படும் பொருள் (அதில்) ச = சம்பாத்தியத்தில் ஒரு துளி, ஓரெழுத்து பாசனம் = தண்ணீர் இறைக்கும் முறை (எங்கள் வட்டாரத்தில் ஏரிப்பாசனம்தான்,  ஆற்று நீர்  கிடையாது) இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4009

உதிரிவெடி 4009  (மார்ச் 17, 2020) வாஞ்சிநாதன் **********************   சம்பாத்தியத்தில் ஒரு துளி குடிப்பதில் செல்ல தண்ணீர்  இறைக்கும் முறை (4) Loading…

விடை 4008

இன்று காலை வெளியான வெடி: படித்தவள் அனுபவித்த ஒரு ஸ்வரத்திற்கு முன்பே கொடு (5) அதற்கான விடை: பட்டதாரி = பட்ட + தா + ரி பட்ட = அனுபவித்த தா  = கொடு ரி = ஒரு ஸ்வரம் ரவி சுந்தரம் இலக்கண நூலில் தா, கொடு இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது என்கிறார்.  ஒப்போர், உயர்ந்தோர் என்று யார் எச்சொல்லைப் பயன்படுத்தலாம் என விதி இருப்பதைக் குறிப்பிடுகிறார். ஆனால் இக்காலத்தில் இரண்டையும் சமமாகவே பயன்படுத்துகிறோம். சிறுவர்கள், "கொடுடா, தாடா" என்று பேசுகிறார்கள். இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4008

உதிரிவெடி 4008  (மார்ச் 16, 2020) வாஞ்சிநாதன் **********************   படித்தவள் அனுபவித்த ஒரு ஸ்வரத்திற்கு முன்பே கொடு (5) Loading…

விடை 4007

இன்று காலை வெளியான வெடி: வளைந்து நெளிந்த மயில்  அடங்கியதும் மூலவர்க்கு தீபாராதனைபோது கேட்கும் (3, 2) அதற்கான விடை:   கோயில் மணி = கோணி + மயில் வளைந்து = கோணி நெளிந்த மயில்    = யில் ம இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Solution to Krypton 217

 Today's clue: Free, yet imprisoned  in an enclosure with this weapon? (7)  Its solution:  TRIDENT   = RID + TENT Here is the page with details of solutions received. Initially I was thinking along the lines "Rider and explosive (TNT)" but settled on harping on freedom and imprisonment, influenced by yesterday's clue.

உதிரிவெடி 4007

உதிரிவெடி 4007  (மார்ச் 15, 2020) வாஞ்சிநாதன் **********************     வளைந்து நெளிந்த மயில்  அடங்கியதும் மூலவர்க்கு தீபாராதனைபோது கேட்கும் (3, 2) Loading…

Solution to Krypton 216

Today's clue: It is confusing for me, Editor imprisoned is on the contrary enjoying this! (7) Its solution:   FREEDOM = FOR ME + ED I had  to rewrite this clue three times to get it right.  Just because many crosswords use DEE for river I used it in the first draft: something like river flowing upstream from outside.   But I'd no feeling for Dee. It did not sound right as connecting it with the meaning of Freedom was difficult.  Then I changed it. The second version   going like "Deer trapped in foam without  a  hope for liberation"  was confusing for me. So in the third  final version I used "It is confusing for me"! Hope you enjoyed it. Here is the list of answers received for this.

விடை 4006

இன்று காலை வெளியான வெடி: ஒரு வீட்டில் வாழ்பவர்கள், ஆடு, மாடு போய்  நுழைந்த ராசி (5) அதற்கான விடை: குடும்பம் = கும்பம்  + டு கும்பம் =  ஜோதிடத்தில் சொல்லப்படும் 12 ராசிகளில் ஒன்று டு = ஆடு - ஆ (மாடு) ஆடு மாடு நுழைவது இப்புதிரில் இரண்டாவது முறை. ஏற்கனவே 2017 இல் இதைப் பயன்படுத்தியுள்ளேன். (பத்து ஆடு மாடு போனதும் உள்ளே சென்று தொந்தரவு கொடு (4)  ) ஏன் குடும்பத்தில் ஆடு, மாடு நுழைகிறது என்று கேட்காதீர்கள். ஆமையோ, அமினாவோ நுழையவில்லையே. இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4006

 உதிரிவெடி 4006  (மார்ச் 14, 2020) வாஞ்சிநாதன் **********************    ஒரு வீட்டில் வாழ்பவர்கள், ஆடு, மாடு போய்  நுழைந்த ராசி (5) Loading…  

விடை 4005

இன்று காலை வெளியான வெடி: அழகிய மொழியொன்று கலந்தது மிகக் குறைவான அளவு நஞ்சு! (5) அதற்கான விடை:  அமிழ்தம்   = அம் + தமிழ் அம் = அழகிய  (கொஞ்சம் பழங்கால செய்யுள் தமிழில்) மொழியொன்று = தமிழ் அளவுக்கு அதிகமான அமிழ்தம் நஞ்சு என்பதால் நஞ்சு குறைவாக இருக்கும்போது அது அமிழ்தம்தானே! இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4005

உதிரிவெடி 4005  (மார்ச் 13, 2020) வாஞ்சிநாதன் **********************   அழகிய மொழியொன்று கலந்தது மிகக் குறைவான அளவு நஞ்சு! (5) Loading…

விடை 4004

இன்று காலை வெளியான வெடி: ஒரு  மணி கட்டு ஊன்றிக் கிளறிய மண்ணிலிருந்து தோன்றியது (5) அதற்கான விடை:  முளைத்தது   = முத்து + தளை முத்து = ஒரு மணி தளை = கட்டு (சுதந்திரமாக இயங்க விடாமல் செய்வது) இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். மண்ணில் விதைத்து மழைநீரை அருந்திபின் விண்ணோக்கிச் செல்லும்  விளைபயிர்    எண்ணிக் கருத்தொன்றை நாம்விதைத்தால் ஈடேறும் காண்பீர் விரும்பிய  யாவும்  விரைந்து முளைத்தது என்ற சொல்லை வைத்து ஒரு வெண்பா எழுத வேண்டுமென்றுதான்  நினைத்தேன். நான் எண்ணியது ஈடேறவில்லை.  " விளைபயிர்"தான்  கொண்டுவர முடிந்தது!  

உதிரிவெடி 4004

உதிரிவெடி 4004  (மார்ச் 8, 2020) வாஞ்சிநாதன் ************************     ஒரு  மணி கட்டு ஊன்றிக் கிளறிய மண்ணிலிருந்து தோன்றியது (5) Loading…

விடை 4003

இன்று காலை வெளியான வெடி: ஆண் மூடிய  அரைக் கண் தெய்வம் (5) அதற்கான விடை:  ஆண்டவன் = ஆடவன் + ண் ஆடவன் = ஆண் ண் = அரைக் கண் இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

விடை 4002

இன்று காலை வெளியான வெடி: ஆதிவாசி அணிவது பாரியின் கொடியிடையை மறைத்தது கிடையாது (3) அதற்கான விடை:  இல்லை = இலை + ல் இலை = ஆதிவாசி அணிவது ல் = முல்லை என்பதன் இடைப்பகுதி இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4002

உதிரிவெடி 4002  (மார்ச் 10, 2020) வாஞ்சிநாதன் **********************  ஆதிவாசி அணிவது பாரியின் கொடியிடையை மறைத்தது கிடையாது (3) Loading…

விடை 4001

இன்று காலை வெளியான வெடி:(காலை ஒன்பதரை  மணி வரை தவறாக நான்கெழுத்து விடை என்று குறிப்பிட்டிருந்தேன். பின்னரே 5 எழுத்து விடை என்று திருத்தினேன்). அதே எடையில்லை என்றாலும் இறுதி ஆசைப்படி  நடக்கும் (5) அதற்கான விடை:  நிறைவேறும் = நிறை + வேறு +ம் நிறை = எடை வேறு = அது... இல்லை ம் = என்றாலும் இறுதி இயற்பியலில் நிறை என்பது பொருளின் அளவு (mass) என்றும் எடை என்றால் அப்பொருளின்  மீதான  ஈர்ப்புவிசை (weight) என்றும் வேறுபடுத்திச் சொல்வார்கள். இங்கே அதைக் கண்டுகொள்ளாதிருப்போம்.  இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4001

உதிரிவெடி 4001  (மார்ச் 9, 2020) வாஞ்சிநாதன் **********************   அதே எடையில்லை என்றாலும் இறுதி ஆசைப்படி  நடக்கும் (5) Loading…

Solution to Krypton 215

Today's clue: Whom the rent is meant for literally (2,3,6) Its solution: TO THE LETTER The rent is to be paid to the person who let the house to the tenant. (This play with the meaning of "let" is not original.  Fairly common  in the crossword puzzles of the newspaper).  I should thank Dr X of Hindu crossword puzzle who frequently makes clues out of long phrases.  Hope my attempt  to do something similar was enjoyable to you. Here is the link to the solutions received today.

விடை 4000

இன்று காலை வெளியான வெடி: பெண்கள் சட்டங்கள் செய்ய வந்தனர் என்று எழுதியது உலகிலே மிகவும் அழகானவளா? (5) அதற்கான விடை: பாரதியார் = பார் + ரதியா பார் = உலகு ரதியா = மிகவும் அழகானவளா "உலகிலே" என்றது "பார்" என்ற சொல்லுக்குள் "ரதியா" என்ற சொல்லை இட வேண்டும் என்பதற்கு பாரதியார் பெண்விடுதலையைக் கொண்டாடும் கும்மிப் பாட்டில் " பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம் " என்று எழுதியுள்ளார். இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம. இன்று எண் வரிசையில் புதிர் நாலாயிரத்தை எட்டியுள்ளது. இப்படி எண்ணிட  ஆரம்பித்தது  ரவி சுந்தரத்தின் உந்துதலால் ஜூலை 2017இல். அன்று வரிசை எண் 3000 என்று குறிப்பிட்டேன். அதற்கு முன் 3 மாதங்கள் தினசரி வாட்ஸப்பில் வந்த புதிர்களையும்,  தென்றல் பத்திரிகையிலும் ஆறாம் திணை இணைய இதழிலும் 1999லிருந்து 2012 முடிவு வரை வெளிவந்த    210க்கும் மேற்பட்ட முழு வலைக்கட்டப் புதிர்களையும் தோராயமாக 2999 என்று வைத்துக் கொண்டேன். இன்று 4000 என்ற எண்ணை எட்டியதைச் சற்றே அடக்கமின்றி  பொன்னெழுத்துகளில் காட...

உதிரிவெடி 4000

************************************* * உதிரிவெடி 4000  (மார்ச் 8, 2020)   * ************************************* வாஞ்சிநாதன் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~           பெண்கள் சட்டங்கள் செய்ய வந்தனர் என்று எழுதியது உலகிலே மிகவும் அழகானவளா? (5) Loading…

விடை 3999

இன்று காலை வெளியான வெடி: தந்தையின் இரு ஸ்வரங்களுக்குப் பதிலாக ஒன்றோடு பதிநான்கு ஆண்டு ராஜா (4) அதற்கான விடை:   பரதன்   = தசரதன் ‍- த, ச  + ப‌ இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Soltion to Krypton 214

Today's clue: Prevail with heart of purity  palpitating at a unit of speed (7) Its solution: TRIUMPH =  TRIU  + MPH TRIU = anagram of (p)URIT(y) MPH = miles per hour, a unit of speed Triumph = to prevail Visit this page to see the answers submitted for this clue.

உதிரிவெடி 3999

உதிரிவெடி 3999  (மார்ச் 7, 2020) வாஞ்சிநாதன் **********************  தந்தையின் இரு ஸ்வரங்களுக்குப் பதிலாக ஒன்றோடு பதிநான்கு ஆண்டு ராஜா (4) Loading…

விடை 3998

இன்று காலை வெளியான வெடி: கையில் அடங்குமடா கடைசியாய் ஒரு நாடு (4) அதற்கான விடை: கடாரம் = கரம் + டா கரம் = கை டா = அடங்குமடா கடைசியில் கடாரம் = இப்போது மலேசியாவின் வட பகுதியில் தாய்லாந்துக்கருகில் உள்ள பகுதி. கடாரம் என்றால்    மியான்மர் (பர்மா) என்றும் சில இடங்களில் சொல்லப்படுகிறது. இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காண லாம்.

உதிரிவெடி 3998

உதிரிவெடி 3998  (மார்ச் 6, 2020) வாஞ்சிநாதன் *********************  கையில் அடங்குமடா கடைசியாய் ஒரு நாடு (4) Loading…

விடை 3997

இன்று காலை வெளியான வெடி: மூன்றாம் சுரம் கொண்டு ஒரு ராகம் தொடங்கு (4) அதற்கான விடை:  ஆரம்பி = ஆரபி + ம் ஆரபி = ஒரு ராகம் ம் = மூன்றாம் சுரம் இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

விடை 3996

இன்று காலை வெளியான வெடி: வழியில் யமன் தலையிட்டு குற்றம்  நடந்ததன் அறிகுறி (4) அதற்கான விடை: தடயம் = தடம் + ய‌ தடம் = வழி ய = யமன் தலை. இன்று அறுபதுக்கும் அதிகமானவர்கள் சரியாக விடையைக் கண்டு பிடித்து விட்டார்கள். இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3996

உதிரிவெடி 3996  (மார்ச் 4, 2020) வாஞ்சிநாதன் ********************* வழியில் யமன் தலையிட்டு குற்றம்  நடந்ததன் அறிகுறி (4) Loading…  

விடை 3995

இன்று காலை வெளியான வெடி: ஊர் தப்பித்தவுடன் முதல் பிழை (3) அதற்கான விடை:  தவழு = த + வழு த = தப்பித்தவுடன் என்ற சொல்லின் முதலெழுத்து வழு = பிழை தவழுதல் என்றால் ஊர்தல் இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

விடை 3994

இன்று காலை வெளியான வெடி: செங்கல் சோற்றுருண்டை ஒன்றுக்கு ஈடாக ஒரு ஸ்வரம் (4) அதற்கான விடை: பவளம் (செங்கல்) = கவளம் ‍- க + ப‌ கவளம் = சோற்றுருண்டை க = ஒன்று ப = ஸ்வரம் இவ்வெடிக்கு அ னுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3994

உதிரிவெடி 3994  (மார்ச் 2, 2020) வாஞ்சிநாதன் ********************* செங்கல் சோற்றுருண்டை ஒன்றுக்கு ஈடாக ஒரு ஸ்வரம் (4) Loading…

விடை 3993

இன்று காலை வெளியான வெடி: மாணவர் அணி நடுத் தெருவை வளைத்து வைத்த எண்ணய்ப் பண்டம் (3) அதற்கான விடை: சீருடை = சீடை + ரு சீடை = எண்ணெய்ப் பன்டம் ரு = நடுத் தெருவை இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 3993

உதிரிவெடி 3993  (மார்ச் 1, 2020) வாஞ்சிநாதன் ********************* மாணவர் அணி நடுத் தெருவை வளைத்து வைத்த எண்ணெய்ப் பண்டம் (3) Loading…