Skip to main content

விடை 3901


இன்று காலை வெளியான வெடி:
பத்தின் கலவையில்  ஒன்று குறைய எஞ்சியிருப்பது ஒரே தனிமம் (4)

அதற்கான விடை:  தங்கம்.
 வேதியியல் படி தங்கம் ஒரு தனிமம். தசாங்கம் என்ற வாசனைப் பொடி பத்து விதப் பொருட்களின் கலவை. அதிலிருந்து ஒன்று (அதாவது ஓரெழுத்தான 'சா') போக எஞ்சியது தங்கம்.

மிகவும் குறைவான விடைகள்தான் வந்திருப்பதால் தசாங்கம் என்றால் என்ன என்பதற்கு,  கைக்குக் கிடைத்த (வணிக) வலைப்பக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறேன்.

'ஒரே' என்றது பத்தில் ஒன்று போய் ஒன்பது எஞ்சவில்லை, ஒன்றுதான் என்பதற்காக. நல்ல வேளை நான் வேதியியலைப் படிக்காமல் போனேன். இப்படி மோசமான கணக்கெல்லாம்  வரும் பாடத்தை எப்படிப் புரிந்து கொள்வது?


இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். என்றுமில்லாத அதிசயமாக 4 மணிக்குப் பிறகு ஏழெட்டு விடைகள் வந்துள்ளன.


Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
******************
தசாங்கம்

இந்து சமயத்தில் பூஜை முதலியவற்றில் இறுதியில் காட்டும் தூப, தீபாரதனையில் தசாங்கம் என்னும் தூபம் பத்து வாசனைத் திரவியங்களினால் ஆன வாசனைப் பொடியை எரித்து நறுமனப் புகை உண்டாகுவதாகும். அதை முகர்ந்தால் நோய்கள் அகலும்; மேலும் எங்கும் நறுமணம் பரவி  நல்ல சூழ்நிலை ஏற்படும்.
அந்த தசாங்கப் பவுடரில், சந்தனம், வெள்ளை அகில், குங்கிலியம், கோரைக் கிழங்கு, சாம்பிரானி, கார் அகில், மட்டிப்பால், தேவதாரு மரத்தூள் முதலிய பொருட்களின் பொடிகள் இருக்கும்.
********************
பத்தின் கலவையில்  ஒன்று குறைய எஞ்சியிருப்பது ஒரே தனிமம் (4)

பத்தின் கலவை = தசாங்கம்
ஒன்று குறைய = தசாங்கம் - சா
எஞ்சியிருப்பது = தங்கம்
ஒரே தனிமம்
= தங்கம்
********************
இலக்கியத்தில் தசாங்கம் என்பது பத்து அம்சங்களை வைத்துப் பாடுவதாகும்.
திருவாசகத்தில் மாணிக்க வாசகர் திருத் தசாங்கம் என்ற பகுதியில் சிவபெருமான் மீது பாடிய பாடலில் தலைவனுடைய பெயர், நாடு, ஊர், ஆறு, மலை, குதிரை, படை, பறை/முரசு, மலை, கொடி என்ற பத்துறுப்புகளையும் வைத்துப் பாடி இருக்கிறார். இது அவர் தில்லைச் சிதம்பரத்தில் பாடிய பாடல்.
**************************

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.