தொண்டை நாட்டில் ஒரு சோதனை வாஞ்சிநாதன் இதுவும் ஒரு புதிர்தான். இந்த சங்க காலக் கதையைப் படித்து விட்டு கடைசியாகக் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு விடை கண்டுபிடியுங்கள். தொண்டை நாட்டு மன்னர், இளவரசிக்கு நல்ல தமிழ் கற்பிக்க அவைப்புலவரான பூதநாதனாரை அழைத்து தக்க ஆசிரியரைக் கண்டறிந்து சொல்லும்படி ஆணையிட்டார். பெருஞ்சாத்தன், அழிசி, ஆதிமந்தி, எழினி, நெடுமான் ஆகியோரில் ஒருவரை ஆசிரியராக நியமிக்க எண்ணி அவர்கள் ஐவரையும் பூதநாதனார் சோதித்துத் திறமையை ஆய்வதற்கு அழைத்தார். ஓர் அறையில் எல்லோரையும் காத்திருக்கச் சொல்லி ஒவ்வொருவராக வரவைத்து மூன்று நாழிகைக்கு மேல் பல கேள்விகள் கேட்டார். சோதனை முடிந்ததும் அவரவர் தங்காமல் அரசவையை விட்டு வெளியேறினர். எழினியிடம் பூதநாதனார் கேட்ட முதல் கேள்வி, "எழினியாரே, அழிசி தடுமாறிவிட்ட ஈற்றடியையே உங்களுக்கும் அளிக்கிறேன், பொங்கிச் சுழன்ற புயல் அதற்கு ஒரு வெண்பாவைச் சொல்லும் பார்ப்போம்." அழிசியின் சோதனை முடிந்து வெளியே வரும்போது ஆதிமந்தி "எப்படிச் சோதித்தார் பூதநாதனார்?" என்று கேட்க ...