Skip to main content

விடை 3685

 இன்று காலை வெளியான வெடி
வட்டமடி  அழகி இடையொடிய வட்டம்போடவை (3)
இதற்கான விடை: சுற்று = சுழற்று - ழ

(காலை ஏழேகால் மணிவரை  தவறுதலாக நான்கெழுத்து என்றே இருந்தது பின்னரே திருத்தினேன். அதனால் பலரும் சுழற்று  என்ற விடையளித்திருக்கின்றனர். என்னுடைய கவனமின்மையால் இது நேர்ந்தது. வருந்துகிறேன்).

இன்று வந்த விடைகளின் பட்டியல் இங்கே.

Comments

சுற்று சுழற்று என்ன வித்தியாசம்?

சுற்று = ராமன் மரத்தை சுற்றினான்.

சுழற்று = ராமன் ராட்டினத்தை சுழற்றினான். கண் வாள் சிலம்பம் சுழற்றப்படும்.

தானாகவே வட்டமடிப்பது சுற்று. இன்னொன்றை வட்டமடிக்க வைப்பது சுழற்று.
புதிர் தெளிவாக இந்த வித்தியாசத்தை வெளிப்படுத்துகிறது.
Vanchinathan said…
அதோடு, சுழல் என்ற சொல்லின் வேறு வடிவம்தான் சுழற்று. சுழல்,--தன்வினை. சுழற்று --பிறவினை. (ஆடு/ஆட்ட,

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.