Skip to main content

விடை 3379

விடை 3379 (25/07/2018)
இன்று காலை வெளியான வெடி
தீச்செயல் கள்வர் தலைவனைப் பிடித்து அடி (4)
இதற்கான விடை : பாதகம் = பாதம் (அடி) + க

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
————👇🏽————

*_பஞ்சமாபாதகம்_* என்பது
கொலை, பொய், களவு, மது அருந்துதல், மற்றும் குரு நிந்தை என்ற ஐந்து பெரும் *_தீச்செயல்களை_* குறிப்பிடுவதாகும்!
★★★★★

புதிரில் _அடி யெடுத்து_ வைக்குமுன்னர்.........

*அடி*
காலின் கீழ்ப்பகுதி; பாதம்.
எ.கா :-
‘சிவனின் அடியையும் முடியையும் தேடிக் காணச் சென்ற கதை’

‘அந்த மகானின் அடி வணங்கி ஆசி பெற்றார்கள்’

மேலும் அடி என்பது செய்யுள் உறுப்புகள் ஆறினுள் ஒன்று; செய்யுள் உறுப்புகளின் வரிசையில் ஐந்தாவதாக வைத்து எண்ணப்பெறுவது. ‘எழுத்து ,அசை ,சீர் பந்தம், அடி ,தொடை’ என்று அமிதசாகரரால் வைப்பு முறை சொல்லப்படுகின்றது.

மனிதன், விலங்கு முதலியன _அடிகளால்_ நடக்கின்றன. நடக்கத் துணையாகும் _அடியைப்_ ‘ *பாதம்* ’ என்கின்றோம். பாட்டும் அடியால் நடத்தல் ஒப்புமை பற்றிப் பாடலடியையும் அமிதசாகரர் ‘ *பாதம்* ’ என்கின்றார்.
“ ‘... ... ... ; _அத்தளை_
_அடுத்து நடத்தலின் அடியே; அடி இரண்டு_
_தொடுத்துமன் சேறலின் தொடையே’_ ”

என்னும் நூற்பா, ‘ _அடி_ ’ என்றதன் பெயர்க்காரணத்துடன் அதன் விளக்கத்தையும் ஒருங்கே அறிவிப்பதாக அமைகிறது.
*************************
_தீச்செயல் கள்வர் தலைவனைப் பிடித்து அடி (4)_
*************************
_அடி_
= *பாதம்*

_கள்வர் தலைவனை_
= *க* (ள்வர்)

_பிடித்து அடி_
= *க* inside *பாதம்*
= *பாதகம்*

_தீச்செயல்_
= *பாதகம்*
**********************
பாரதம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டு பாழ்பட்டு நின்றதற்குக் காரணம் நம் மக்களிடத்தில் உள்ள தீய குணங்கள் தாம் என்பதை உணர்ந்த பாரதி அவற்றில் முதன்மையான அச்சத்தை ஒழிக்கச் சொல்லிப் பலகாலும் வற்புறுத்துகிறார்.

பாப்பாவிற்குக் கூறும் அறிவுரையில்,
_பாதகம் செய்பவரைக் கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா_
_மோதி மிதித்து விடு பாப்பா_ _அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா_ "
என்று பாடி அச்சமின்மையைப் பிஞ்சு நெஞ்சில் விதைக்கிறார்.

வீரத்திற்கான விவேகத்திற்கான உத்திரவாதத்தை நாமும் நம் சமுதாயமும் எப்போது நம் பெண் குழந்தைகளுக்குக் கொடுக்கப்போகிறோம்? 🙅🏻‍♀

🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

(எப்போது கள்வர் தலைவனை பிடித்து அடிக்கப் போகிறோம்? 😌)
Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (39):

1) 6:01:07 எஸ்.பார்த்தசாரதி
2) 6:03:31 நங்கநல்லூர் சித்தானந்தம்
3) 6:03:46 சுந்தர் வேதாந்தம்
4) 6:04:43 முத்துசுப்ரமண்யம்
5) 6:08:44 சதீஷ்பாலமுருகன்
6) 6:12:47 லதா
7) 6:13:36 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
8) 6:21:28 ரவி சுந்தரம்
9) 6:23:27 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
10) 6:25:08 ரவி சுப்ரமணியன்
11) 6:26:08 சுபா ஸ்ரீநிவாசன்
12) 6:28:06 கேசவன்
13) 6:31:35 கு.கனகசபாபதி, மும்பை
14) 6:35:50 ஆர்.நாராயணன்.
15) 6:44:01 ஆர். பத்மா
16) 6:50:45 ரங்கராஜன் யமுனாச்சாரி
17) 6:51:30 KB
18) 7:04:15 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
19) 7:11:01 எஸ் பி சுரேஷ்
20) 7:17:32 கி மூ சுரேஷ்
21) 7:25:01 சித்தன்
22) 7:30:35 லட்சுமி சங்கர்
23) 8:03:19 புவனா சிவராமன்
24) 8:25:53 மைத்ரேயி
25) 8:30:14 ஶ்ரீவிநா
26) 9:11:33 ராஜி ஹரிஹரன்
27) 9:41:48 ரமணி பாலகிருஷ்ணன்
28) 10:30:03 ராஜா ரங்கராஜன்
29) 10:46:48 சங்கரசுப்பிரமணியன்
30) 11:51:17 மடிப்பாக்கம் தயானந்தன்
31) 12:01:03 மு.க.இராகவன்.
32) 12:34:23 வானதி
33) 12:46:30 கோவிந்தராஜன்
34) 12:50:43 அம்பிகா
35) 15:00:50 மாதவ்
36) 16:05:20 மு க. பாரதி
37) 17:08:51 ராதா தேசிகன்
38) 18:46:23 மாலதி
39) 20:03:57 மீனாக்ஷி
**********************
Muthu said…
மிகச் சிறந்த கருத்துப் பகிர்வு. நன்றி (சொன்னால் *பாதகம்* இல்லை!)

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்