Skip to main content

விடை 3372

இன்று (18 ஜூலை 2018) காலை வெளியான வெடி:

காலி செய்த சாராயம் கடைசியாக  அக்ரஹாரத்தில் குடிப்பார்கள் (5)

இதற்கான விடை:  தீர்த்தம் = தீர்த்த (காலி செய்த)  + ம் ( கடைசி 'சாராயம்')

சாராயப் புட்டியைச் சாய்த்துக் குடித்தவர்
நேராய் நடப்பதில்லை  நின்று.




Comments

Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (57):

1) 6:01:53 ராமராவ்
2) 6:02:01 ரவி சுப்ரமணியன்
3) 6:02:10 முத்துசுப்ரமண்யம்
4) 6:02:55 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
5) 6:03:02 நாதன் நா தோ
6) 6:03:09 கோவிந்தராஜன்
7) 6:03:15 இரா.செகு
8) 6:03:44 திருமூர்த்தி
9) 6:04:06 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
10) 6:04:49 எஸ்.பார்த்தசாரதி
11) 6:07:05 சங்கரசுப்பிரமணியன்
12) 6:08:07 வி ன் கிருஷ்ணன்
13) 6:08:52 ராஜி ஹரிஹரன்
14) 6:09:29 ஆர். பத்மா
15) 6:11:34 KB
16) 6:14:47 சதீஷ்பாலமுருகன்
17) 6:14:48 ராஜா ரங்கராஜன்
18) 6:15:46 ஆர்.நாராயணன்.
19) 6:16:44 லட்சுமி சங்கர்
20) 6:18:46 சுபாஸ்ரீநிவாசன்
21) 6:22:05 மைத்ரேயி
22) 6:23:42 ஶ்ரீதரன்
23) 6:29:04 பாலா
24) 6:40:02 மீனாக்ஷி கணபதி
25) 6:46:36 எஸ் பி சுரேஷ்
26) 6:49:17 கே.ஆர்.சந்தானம்
27) 6:56:30 மீ கண்ணன்
28) 7:07:42 சித்தன்
29) 7:08:36 ரங்கராஜன் யமுனாச்சாரி
30) 7:10:51 வானதி
31) 7:28:03 அம்பிகா
32) 7:30:01 பா நிரஞ்சன்
33) 7:34:10 ரவி சுந்தரம்
34) 7:35:08 பினாத்தல் சுரேஷ்
35) 7:59:04 கு.கனகசபாபதி, மும்பை
36) 8:00:07 லட்சுமி மீனாட்சி , மும்பை
37) 8:39:57 மீனாக்ஷி
38) 8:40:47 ருக்மணி கோபாலன்
39) 8:50:04 அனுராதா
40) 9:10:38 நங்கநல்லூர் சித்தானந்தம்
41) 9:35:56 மாலதி
42) 10:29:59 வீ. ஆர் . பாலகிருஷ்ணன்
43) 11:38:18 விஜயா ரவிஷங்கர்
44) 11:55:13 Madippaakkam தயானந்தன்
45) 12:02:10 ஆர்.லதா
46) 12:09:11 வித்யா ஹரி
47) 12:28:10 மு.க.இராகவன்.
48) 12:30:37 கி மூ சுரேஷ்
49) 12:38:57 ஶ்ரீவிநா
50) 12:41:27 மீ.பாலு
51) 14:43:09 ரா. ரவிஷங்கர்...
52) 17:14:09 ராதா தேசிகன்
53) 18:18:36 சுந்தர் வேதாந்தம்
54) 19:14:54 ரமணி பாலகிருஷ்ணன்
55) 19:47:07 ஏ.டி.வேதாந்தம்
56) 19:47:52 பத்மாசனி
57) 20:10:23 Sandhya

**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
...............👇🏽...............

*பட்டு மாமி* :-

அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?

*கிட்டு மாமா :-*

பட்டு, அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?
பட்டு நமக்கேண்டி?

😄😄😄😄😄

சரி எதுக்கும் அடுத்தாத்து அம்புஜம் மாமியை பாத்துடலாண்டு போனேன்!

மாமி, " வாங்கோ மாமா! " ன்னு அழைச்சிண்டு போய் , " தூத்தம் சாப்பிடறேளா? " என்றாள்.

நானும் *தீர்த்தம்* குடித்துவிட்டு திரும்பினேன்.!

(அக்ரஹாரத்தில் டாஸ்மாக் *தீர்த்தம்* கிடைக்காது. வெறும் plain H2O water தான்😔😔)


_காலி செய்த சாராயம் கடைசியாக அக்ரஹாரத்தில் குடிப்பார்கள் (5)_


_காலி செய்த_

= *தீர்த்த* (தீர்ந்து போதல்)

_சாராயம் கடைசியாக_

=(சாராய) *ம்*

_அக்ரஹாரத்தில் குடிப்பார்கள்_

= *தீர்த்த+ம்*
= *தீர்த்தம்*

(அக்ரஹாரத்தில் வசிக்கும் பிராமணர்கள் பொதுவாக தண்ணீரை
தீர்த்தம், ஜலம் எனக்கூறுவார்கள்)

_தெய்வீகம் பொருந்தியதென நம்பப்படும் கோயில் குளத்து நீர்,_ _புனித ஆற்று நீர், கோயிலில்_ _அர்ச்சகர் தரும் நீர், பால் என்பவற்றைத் *தீர்த்தம்* என அழைப்பர்._

ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில் சுவாமி தரிசனத்தை விடவும், அங்குள்ள *தீர்த்தங்களில்* நீராடுவதுதான் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. ஆலயத்தின் உள்ளே 22 *தீர்த்தங்களும்* , வெளியே 22 *தீர்த்தங்களும்* இருப்பதாக கூறப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே உள்ள *தீர்த்தங்கள்* எல்லாம் கிணறுகளாக அமைந்தவை.

_அக்னி தீர்த்தம்_ என்று கூறப்படும் ராமேஸ்வரம் சமுத்திரக் கரையில் தான் தீர்த்தமாடு வதைத் தொடங்க வேண்டும். பின்னர் ஆலயத்தில் உள்ள மற்ற *தீர்த்தங்களில்* நீராட வேண்டும் என்பது ஐதீகம்.

சீதாதேவியின் கற்பை நிரூபிப்பதற்காக, அவளை அக்னி பிரவேசம் செய்ய வைத்தார் ராமர். அப்போது சீதையின் கற்புத் திறன், அக்னியையே சுட்டதாகவும், அந்த
வெம்மை தாளாத அக்னி பகவான், இந்தக் கடலில் மூழ்கி தனது வெப்பத்தைத் தணித்ததாகவும் புராண வரலாறு கூறுகிறது. மேலும் சீதையை தொட்ட தோ‌ஷம் நீங்குவதற்காகவும், அக்னி பகவான் இந்தக் கடலில் நீராடியதாக புராணம் தெரிவிக்கிறது. அக்னி *தீர்த்தத்தில்* நீராட, கடலில் இடம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

💐🙏🏽🙏🏽🙏🏽💐
Chittanandam said…
பதில் உடனடியாகக் கிடைக்கவில்லை. தடுமாறினேன். அக்ரகாரத்து வழக்கு மொழியில் குடிப்பார்கள் என்ற சொல்லுக்கு ஈடான சொல்லைத் தேடியலைந்தேன். அனாசியத்திற்கு அலைந்தேன். பின்னர்தான் பளிச்சிட்டது.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்