Skip to main content

விடை 3381


இன்று (27 ஜூலை 2018) காலை வெளியான வெடி:
சம்பளத்தில் ஒரு பகுதி பூக்களிலிருந்து வந்தது என்று புத்தகத்தில் கண்டேன் (5) 

இதற்கான விடை:  படித்தேன் 

படி = allowance  (dearness allowance, house rent allowance, travel allowance  etc)

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
**********👇🏽**********
கண்ணதாசனின் *_தேனினும்_* இனிய பாடல் வரிகள்!

" _பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்_
_அன்று உனைத்தேன் என நான் நினைத்தேன்_
_அந்த மலைத்தேன் இதுவென மலைத்தேன்"_

எத்தனைத் *தேன்* ? மூன்றே வரிகளில் ஏழு தேன் !
அதிலும் மலைத்தேன் என்று ஒரு சிலேடைத் தேன்!

_"கொடித்தேன் இனி எங்கள் குடித்தேன் என_
__ஒரு *படித்தேன்* பார்வையில் குடித்தேன்!"_
*************************
_சம்பளத்தில் ஒரு பகுதி பூக்களிலிருந்து வந்தது என்று புத்தகத்தில் கண்டேன்(5)_

_சம்பளத்தில் ஒரு பகுதி_
= *படி*

(பணியாளர்களுக்குப் பயணச் செலவு, வீட்டு வாடகை, விலைவாசி உயர்வு முதலிய செலவுகளை ஈடுகட்டும் நோக்கில் அடிப்படைச் சம்பளத்தோடு குறிப்பிட்ட விகிதத்தில் வழங்கப்படும் தொகை.

‘தினப் *படி* ’
‘அகவிலைப் *படி* ’
‘பயணப் *படி* ’)

_பூக்களிலிருந்து வந்தது_
= *தேன்*

_புத்தகத்தில் கண்டேன்_
= *படி+தேன்*
= *படித்தேன்* ★

★படித்தேனுக்கு நடுவில் வந்துள்ள *த்* ஒர்
புணர்ச்சி விகாரம்! (தோன்றல் விகாரம்)
படி + தேன் = படித்தேன்

*தோன்றல் விகாரம்*
இரு சொற்களுக்கு இடையில் எழுத்தோ, சாரியையோ தோன்றுவது தோன்றல் விகாரம் எனப்படும்.
சான்று:
பூ+கொடி
= பூங்கொடி (ங் என்ற எழுத்துத் தோன்றியது)
யானை+கொம்பு
= யானைக் கொம்பு (க் என்ற எழுத்துத் தோன்றியது)
ஆ+பால்
= ஆவின் பால் (இன் என்ற சாரியை தோன்றியது

பூ+கொடி என்பதை இயல்பாக, பூகொடி என்று சேர்த்தும், இடையில் ங் என்ற மெய் எழுத்துத் தோன்ற, பூங்கொடி என்று சேர்த்தும் சொல்லிப் பாருங்கள். பின்னதிலேயே ஓசை இனிமை உள்ளதை உணரலாம்.
*************************
கண்ணதாசனின் பாடல் வரிகள் உம்மை *தேன்* குடித்த நரியாக மாற்றினால் அதற்கு யார் பொறுப்பு ?!

அந்த *படி* யளக்கும் பரந்தாமனே பொறுப்பு!

🙏🏽💐சரணம்! 💐🙏🏽
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (45):

1) 6:01:08 ஶ்ரீவிநா
2) 6:03:00 ரவி சுப்ரமணியன்
3) 6:05:58 நாதன் நா தோ
4) 6:06:39 கேசவன்
5) 6:06:52 ராமராவ்
6) 6:08:13 KB
7) 6:08:17 திருமூர்த்தி
8) 6:10:24 நங்கநல்லூர் சித்தானந்தம்
9) 6:12:03 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
10) 6:12:35 சித்தன்
11) 6:16:13 மீனாக்ஷி கணபதி
12) 6:17:00 எஸ்.பார்த்தசாரதி
13) 6:18:12 சங்கரசுப்பிரமணியன்
14) 6:18:50 ரவி சுந்தரம்
15) 6:22:49 சுந்தர் வேதாந்தம்
16) 6:26:02 லதா
17) 6:27:17 லக்ஷ்மி ஷங்கர்
18) 6:27:32 சதீஷ்பாலமுருகன்
19) 6:28:28 ராஜா ரங்கராஐன்
20) 6:38:48 லட்சுமி மீனாட்சி, மும்பை
21) 6:40:48 கு.கனகசபாபதி, மும்பை
22) 6:48:15 மடிப்பாக்கம் தயானந்தன்
23) 7:02:51 அம்பிகா
24) 7:20:34 ஆர்.நாராயணன்.
25) 7:27:36 ரங்கராஜன் யமுனாச்சாரி
26) 7:50:33 வி ன் கிருஷ்ணன்
27) 8:02:23 கி மூ சுரேஷ்
28) 8:03:34 எஸ் பி சுரேஷ்
29) 8:12:23 ராதா தேசிகன்
30) 8:29:53 முத்துசுப்ரமண்யம்
31) 9:38:58 மீனாக்ஷி
32) 10:15:50 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
33) 10:17:42 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
34) 10:51:27 மு.க.இராகவன்.
35) 11:47:29 கோபாலகிருஷ்ணன் வீசீ
36) 12:10:40 சுபா ஸ்ரீநிவாசன்
37) 13:45:22 மீ.பாலு
38) 14:31:51 மாலதி
39) 14:45:42 ஆர். பத்மா
40) 14:54:31 ரமணி பாலகிருஷ்ணன்
41) 14:56:12 புவனா சிவராமன்
42) 15:46:48 பாலா
43) 17:17:34 தேன்மொழி
44) 17:38:02 கல்யாணி தேசிகன்
45) 19:30:08 மீ கண்ணன்
**********************

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்