இன்று (24 ஜூலை 2018) வெளியான வெடி:
மேலே உயர்த்த அரைக்கிண்ணம் யாழ்ப்பாணத்தில் காதிலாடும் (5)
இதற்கான விடை: தூக்கணம் = தூக்க + ணம். இலைங்கைத் தமிழில் தொங்கட்டான் (கம்மல்?). காதோடு ஒட்டியிருக்காமல் தொங்கிக் கொண்டிருக்கும் வகையான காதணி.
தமிழ்நாட்டில் தூக்கணம் என்று ஒரு குருவி வகையையே குறிப்பிடுகிறோம்.
(இது தவறாக இருந்தால் சொல்லுங்கள்).
மற்ற பறவைகள் தங்கள் கூட்டினை மரக் கிளைமேல் அமைத்துக் கட்டும். ஆனால் இக்குருவியோ மரத்திலிருந்து தொங்குமாறு கட்டும். அதனால்தானோ இலங்கையில் தொங்கும் காதணியைத் தூக்கணம் என்றழைக்கிறார்கள் போலும்!
தூக்கணங் குருவி கூடு கட்டுவதைப் புனே நகரில் ஒருவர் காணொளியாய் வெளியிட்டுள்ளது இதோ:
சிறுவயத்தில் பள்ளிப் பாடப்புத்தகத்தில் குரங்கு பறவைக் கூட்டைச் சிதைத்த கதை வந்திருக்கும். அது தூக்கணங் குருவிதான். விவேக சிந்தாமணியில் இடம்பெற்ற உவமை:
வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்
தானொரு நெறி சொலத் தாண்டிப் பிய்த்திடும்
ஞானமும் கல்வியும் நவின்ற நுல்களும்
ஈனருக்கு உரைத்திடில் இடரது ஆகுமே
தூக்கணங்குருவியைச் சொல்லும் தெலுங்குக் குயில் இங்கே:
Comments
சரியான விடை அளித்தவர்கள் (39):
1) 6:06:16 ரவி சுப்ரமணியன்
2) 6:08:12 ஶ்ரீவிநா
3) 6:08:39 இரா.செகு
4) 6:08:48 சதீஷ்பாலமுருகன்
5) 6:10:01 மீனாக்ஷி கணபதி
6) 6:10:57 ராஜா ரங்கராஜன்
7) 6:11:23 சங்கரசுப்பிரமணியன்
8) 6:11:34 எஸ் பி சுரேஷ்
9) 6:13:51 திருமூர்த்தி
10) 6:14:07 ரவி சுந்தரம்
11) 6:24:27 K.R.Santhanam
12) 6:35:03 முத்துசுப்ரமண்யம்
13) 6:41:11 நங்கநல்லூர் சித்தானந்தம்
14) 6:45:21 லக்ஷ்மி ஷங்கர்
15) 7:04:58 ஸௌதாமினி
16) 7:06:40 சித்தன்
17) 7:10:36 ஆர்.நாராயணன்.த்ட்ட்
18) 7:14:50 கி மூ சுரேஷ்
19) 7:25:31 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
20) 7:31:38 அம்பிகா
21) 7:39:14 கோவிந்தராஜன்
22) 7:40:48 மீ.பாலு
23) 8:46:16 மீனாக்ஷி
24) 9:07:14 மு க பாரதி
25) 9:30:31 நாதன் நா தோ
26) 9:40:19 மடிப்பாக்கம் தயானந்தன்
27) 10:15:58 பாலா
28) 10:40:57 மாலதி
29) 10:53:26 ஆர். பத்மா
30) 10:55:14 KB
31) 11:05:51 கோபாலகிருஷ்ணன்
32) 11:34:00 தேன்மொழி
33) 12:40:43 ராஜி ஹரிஹரன்
34) 12:44:02 விஜயா ரவிஷங்கர்
35) 14:26:33 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
36) 15:30:41 மாதவ்
37) 15:56:29 மு.க இராகவன்.
38) 17:38:22 கல்யாணி தேசிகன்
39) 19:52:48 சுபா ஸ்ரீநிவாசன்
**********************
தீயோருடன் பேசாதே என்ற கருத்து பஞ்ச தந்திரக் கதைகளில் வருகிறது.
குரங்குக்கு புத்திமதி சொன்ன _தூக்கணங் குருவியின்_ கூட்டை, குரங்கு பிய்த்தெறிகிறது.
இதன் மூலம் விஷ்ணுசர்மன் “தீயோருக்கு புத்திமதி சொல்லாதே” என்கிறார்.
இந்தப் பஞ்ச தந்திரக் கதையை விவேக சிந்தாமணி என்னும் நூலும் கூறுகிறது:-
“ _வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்_
_தானொரு நெறி சொலத் தாண்டிப் பிய்த்திடும்_
_ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்_
_ஈனருக்கு உரைத்திடில் இடரது ஆகுமே”._
🐒🐒🐒🐒🐒
★★★★★★★
_மேலே உயர்த்த அரைக்கிண்ணம் யாழ்ப்பாணத்தில் காதிலாடும் (5)_
★★★★★★★
_மேலே உயர்த்த_
= *தூக்க*
_அரைக்கிண்ணம்_
= (கிண்) *ணம்*
_யாழ்ப்பாணத்தில் காதிலாடும்_
= _யாழ்ப்பாணத் தமிழில் காதணி_
= *தூக்க+ணம்* *
= *தூக்கணம்*
*tamil oxford dictionary*
_தமிழ் தூக்கணம் யின் அர்த்தம்_
*தூக்கணம்*
_பெயர்ச்சொல்_
_இலங்கைத் தமிழ் வழக்கு_
_தொங்கட்டான்_ .
(காதணி)
*Tamil wiktionary*
_தூக்கணம்(பெ)_
1. _தொங்கல் (குருவியின் கூடு போன்ற வடிவத்தில் பெண்கள் காதில் அணியும் தொங்கல்_ )
2. _உறி_
3. _தூக்கணாங்குருவி; தொங்கும் கூடு கட்டும் குருவி வகை_
&&&&&&&&&&&&&&
_தூக்கணாங்குருவி கூடு_
_தூங்கக் கண்டான் மரத்திலே_
_சும்மாப் போன மச்சானுக்கு_
_என்ன நினைப்போ மனசிலே_
_பாக்கிறான் பூமுகத்தைப்_
_பைய பைய கண்ணிலே_
_பரிசம் போட்ட மச்சானுக்கு_
_என்ன நினைப்போ தெரியல_
_தூக்கணாங்குருவி கூடு_
_தூங்கக் கண்டான் மரத்திலே_
_சும்மாப் போன மச்சானுக்கு_
_என்ன நினைப்போ மனசிலே_
😌😌😌
இரண்டெழுத்துக்கு நான் அனுப்பிய விடை "தோடு" பொருத்தமானதே.