இன்று (08 ஜூலை 2018) காலை வெளியான வெடி:
இந்த அரும்பு அன்றுமில்லை, இனியுமில்லை (4)
இதற்கான விடை: இப்போது = இந்த போது
(கடந்தகாலமுமில்லை, எதிர்காலமுமில்லை)
போது என்ற சொல்லுக்கு அரும்பு என்றொரு பொருள், பள்ளிநாட்களில்படித்தது, ஆனால் உதாரணம் எதுவும் இப்போது(!) ஞாபகமில்லை. வலையில் இச்சொல்லைத் தேடிய போது ஐந்திணை அகப்பாடல் கிடைத்தது. இதோ:
போதார்வண் டூதும் புனல்வயல் ஊரற்குத்
தூதாய்த் திரிதரும் பாண்மகனே நீதான்
அறிவயர்ந்து எம்மில்லுள் என்செய்ய வந்தாய்?
நெறியதுகாண் எங்கையர் இற்கு.
(முதலடியில் "போது ஆர் வண்டு ஊதும்" என்று பிரித்துப் பொருள் கொள்ளவேண்டும்).
அரும்பு அவிழ்ந்த பூப்பூவாய் வண்டுகள் ரீங்காரமிடும் ஊர்க்காரனின் தூதனாக வரும் பாணனே, ஏண்டா இங்கே வந்தாய் என்று கோபித்துக் கூறியது மறைமுகமாக பரத்தையர்கள் பலரை நாடும் தலைவனைச் சாடுவதற்கு.
சரியான விடையளித்தவர்கள் 17 பேர்:
1) 6:03:15 ரவி சுப்ரமணியன்
2) 6:12:17 முத்துசுப்ரமண்யம்
3) 6:26:35 எஸ்.பார்த்தசாரதி
4) 6:29:25 KB
5) 6:38:27 கோவிந்தராஜன்
6) 7:21:51 சங்கரசுப்பிரமணியன்
7) 8:07:39 லட்சுமி சங்கர்
8) 9:13:48 மீனாக்ஷி
9) 9:16:06 ருக்மணி கோபாலன்
10) 9:19:46 மீ.பாலு
11) 11:35:14 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
12) 11:46:09 பினாத்தல் சுரேஷ்
13) 12:18:38 நங்கநல்லூர் சித்தானந்தம்
14) 13:22:16 சுபா ஸ்ரீநிவாசன்
15) 18:12:09 மீ கண்ணன்
16) 19:15:27 கு. கனகசபாபதி, மும்பை
17) 19:48:54 சதீஷ்பாலமுருகன்
இந்த அரும்பு அன்றுமில்லை, இனியுமில்லை (4)
இதற்கான விடை: இப்போது = இந்த போது
(கடந்தகாலமுமில்லை, எதிர்காலமுமில்லை)
போது என்ற சொல்லுக்கு அரும்பு என்றொரு பொருள், பள்ளிநாட்களில்படித்தது, ஆனால் உதாரணம் எதுவும் இப்போது(!) ஞாபகமில்லை. வலையில் இச்சொல்லைத் தேடிய போது ஐந்திணை அகப்பாடல் கிடைத்தது. இதோ:
போதார்வண் டூதும் புனல்வயல் ஊரற்குத்
தூதாய்த் திரிதரும் பாண்மகனே நீதான்
அறிவயர்ந்து எம்மில்லுள் என்செய்ய வந்தாய்?
நெறியதுகாண் எங்கையர் இற்கு.
(முதலடியில் "போது ஆர் வண்டு ஊதும்" என்று பிரித்துப் பொருள் கொள்ளவேண்டும்).
அரும்பு அவிழ்ந்த பூப்பூவாய் வண்டுகள் ரீங்காரமிடும் ஊர்க்காரனின் தூதனாக வரும் பாணனே, ஏண்டா இங்கே வந்தாய் என்று கோபித்துக் கூறியது மறைமுகமாக பரத்தையர்கள் பலரை நாடும் தலைவனைச் சாடுவதற்கு.
சரியான விடையளித்தவர்கள் 17 பேர்:
1) 6:03:15 ரவி சுப்ரமணியன்
2) 6:12:17 முத்துசுப்ரமண்யம்
3) 6:26:35 எஸ்.பார்த்தசாரதி
4) 6:29:25 KB
5) 6:38:27 கோவிந்தராஜன்
6) 7:21:51 சங்கரசுப்பிரமணியன்
7) 8:07:39 லட்சுமி சங்கர்
8) 9:13:48 மீனாக்ஷி
9) 9:16:06 ருக்மணி கோபாலன்
10) 9:19:46 மீ.பாலு
11) 11:35:14 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
12) 11:46:09 பினாத்தல் சுரேஷ்
13) 12:18:38 நங்கநல்லூர் சித்தானந்தம்
14) 13:22:16 சுபா ஸ்ரீநிவாசன்
15) 18:12:09 மீ கண்ணன்
16) 19:15:27 கு. கனகசபாபதி, மும்பை
17) 19:48:54 சதீஷ்பாலமுருகன்
Comments
(வெண்டளையான் வந்த இயற்றவிணை கொச்சகக் கலிப்பா)
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக்கேட்டேயும் வாள்தடங்கள்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன்வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து
*போதார் *அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். 155
Butler's Translation:
Though you hear us sing of that rare Light
whose greatness knows neither source nor end,
O Maid, whose eyes are wide and bright,
as we wend through the street,
do you still sleep? Do your ears not hear
the prayers that we pray to the Lord's cinctured feet?
As you, sobbing, roll from your *flower strewn bed*,
to lie lost in swoon, of nought aware,
What then, what then?
Is this the nature of our companion fair?
El Or Empaavai!
https://goo.gl/MFyRcX
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
எம்பெருமானின் பூப்புனைந்த சிரம்.
tamil wictionary உதவிக்கு வந்தது. தமிழின் செழுமையும் புரிந்தது:
போது =பெயர்ச்சொல். பொருள்:
மலரும்பருவத்து அரும்பு , மலர்
செவ்வி
காலம்
தக்க சமயம்
வாழ்நாள்
பொழுது