Skip to main content

விடை 3371

இன்று (17 ஜூலை 2018) காலை வெளியான வெடி:
முல்லைப் பெரியாற்றின் தண்ணீர் தமிழ் நாட்டில் கரைபுரண்டோடும் (4)
அதற்கான விடை: வெள்ளம்

கேரளாவில் (முல்லைப் பெரியாற்றின்) தண்ணீரையும்
தமிழ்நாட்டில் கரை புரண்டோடும் நீர்ப் பெருக்கையும் குறிப்பிட  "வெள்ளம்" என்கிற  ஒரே சொல் பயன்படுத்தப்படுகிறது.

 மலையாளத்து வெள்ளம் போலவே தமிழிலும் முன்னொரு காலத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.
திருவள்ளுவர்  குளத்து நீரை வெள்ளம் என்று ஒரு குறளில் சொல்கிறார். குளத்தில் தேங்கியுள்ள நீரை, பெருக்கெடுத்தோடும் வெள்ளமாகக் கருத முடியாது.

வெள்ளத்  தனைய  மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்  தனைய துயர்வு
என்பதில் வெள்ளம் என்பது ஆற்றின் பெருக்கல்ல (குளத்தில்தானே தாமரை போன்ற மலர்கள் மலரும்). 

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (48):

1) 6:00:56 திருமூர்த்தி
2) 6:01:26 எஸ்.பார்த்தசாரதி
3) 6:01:32 ரங்கராஜன் யமுனாச்சாரி
4) 6:02:02 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
5) 6:04:16 நங்கநல்லூர் சித்தானந்தம்
6) 6:07:53 சதீஷ்பாலமுருகன்
7) 6:07:54 லட்சுமி சங்கர்
8) 6:09:32 முத்துசுப்ரமண்யம்
9) 6:10:09 ராஜா ரங்கராஜன்
10) 6:10:20 வி சீ சந்திரமௌலி
11) 6:11:48 மீ.பாலு
12) 6:14:56 நாதன் நா தோ
13) 6:17:01 மீனாக்ஷி கணபதி
14) 6:17:55 மாலதி
15) 6:18:10 ரவி சுந்தரம்
16) 6:21:50 K.R.Santhanam
17) 6:22:00 கேசவன்
18) 6:27:55 மீ கண்ணன்
19) 6:36:37 சுந்தர் வேதாந்தம்
20) 6:48:52 ரவி சுப்ரமணியன்
21) 6:55:40 ராதா தேசிகன்
22) 7:05:03 லதா
23) 7:07:38 Sucharithra
24) 7:23:34 மடிப்பாக்கம் தயானந்த்
25) 7:25:04 கி மூ சுரேஷ்
26) 7:26:07 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
27) 7:29:20 கல்யாணி தேசிகன்
28) 7:31:38 வானதி
29) 8:05:30 வி ன் கிருஷ்ணன்
30) 8:09:20 பினாத்தல் சுரேஷ்
31) 8:42:27 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
32) 9:17:27 மீனாக்ஷி
33) 9:46:21 மும்பை ஹரிஹரன்
34) 10:34:29 சித்தன்
35) 11:00:46 கு.கனகசபாபதி, மும்பை
36) 11:30:14 ஆர்.நாராயணன்.
37) 11:49:04 சுபா ஸ்ரீநிவாசன்
38) 11:58:07 தி பொ இராமநாதன்
39) 12:23:38 ராஜி ஹரிஹரன்
40) 13:04:54 ஆர் .பத்மா
41) 14:53:27 அம்பிகா
42) 16:09:17 பாலா
43) 18:33:34 ஏ.டி.வேதாந்தம்
44) 18:33:58 பத்மாசனி
45) 19:56:44 ஶ்ரீவிநா
46) 20:09:33 கோவிந்தராஜன்
47) 20:30:15 மு.க.இராகவன்.
48) 20:56:27 ஶ்ரீதரன்

**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
............👇🏽.....

பெரியாறு உருவாவதும் கூட தமிழகத்தில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் சிவகிரி மலையில் தான். ஆயினும் ,தமிழகத்தில் உருவாகி பின் கேரளத்தில் உள்ள முல்லை ஆற்றுடன் இணைவதால் தான் இது முல்லைப்பெரியாறு என்று அழைக்கப்படுகிறது.

முல்லைப் பெரியாறு அணை (Mullaperiyar Dam) மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும்

_முல்லைப் பெரியாற்றின் தண்ணீர் தமிழ் நாட்டில் கரைபுரண்டோடும் (4)_

முல்லைப் பெரியாற்றின் தண்ணீர்
= *வெள்ளம்* .

(முல்லைப் பெரியாறு கேரளாவில் பாய்வதால் மலையாளத்தில் தண்ணீரை *வெள்ளம்* என சொல்வோம்)

தமிழ் நாட்டில்
கரைபுரண்டோடும்
= *வெள்ளம்* .

( தமிழில் , "காட்டாற்று *வெள்ளம்* கரைபுரண்டோடுகிறது",எனக்கூறுவது வழக்கு...(flood))

[முல்லை = காடு
பெரியாறு = ஆறு
=காட்டாறு]

_முல்லை என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். செம்மண் பரந்திருத்தலால் முல்லை நிலமானது செம்புலம் எனவும் அழைக்கப்பட்டது. இந்நிலம் முல்லை மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது. " மாயோன் மேய காடுறை உலகமும்" எனத் தொல்காப்பியம் முல்லை பற்றிக் கூறுகிறது_

🙏🏽
அருமை அருமை ராகவன் அய்யா!
Raghavan MK said…
நன்றி

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்