Skip to main content

விடை 3371


இன்று (28 ஜூலை 2018) வெளியான வெடி
முறுக்கு இழை சுற்றிய  நாடா முனையுடன் பெண் தெய்வம் (3)

இதற்கான விடை:   பிடாரி  = பிரி + டா

(உதாரணம்: வைக்கோல் பிரிகளால் ஆன கயிற்றால் அம்மூட்டையைக் கட்டினார்.)

Comments

Raghavan MK said…
A peek into today's Tamil riddle! ........... 👇🏽............

*மணப்பாறை முறுக்கு* பரவலாக அறியப்பட்ட _முறுக்கு_ வகைகளில் ஒன்று. இதன் தனித்துவமான சுவையினால் பிரபலமாகியுள்ளது.
தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் பிற இந்திய மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் கூட மணப்பாறை முறுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மணப்பாறை முறுக்கின் சுவைக்குக் காரணம் அங்கு நிலத்தடியில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் இயற்கையாக உப்புச்சுவை கொண்டமையேயாகும். இந்த நீரைக் கொண்டு முறுக்கு தயாரிக்கப்படுவதால் அவை சுவையாக இருப்பதாகப் பல ஆண்டுகளாக முறுக்குத் தொழில் செய்துவரும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
************************
_முறுக்கு இழை சுற்றிய நாடா முனையுடன் பெண் தெய்வம் (3)_

_முறுக்கு இழை_
= *பிரி*

(பிரி=
(கயிறு போன்று) முறுக்கப்பட்ட வைக்கோல்.
(கயிறு முதலியவற்றில்)
*முறுக்கப்பட்ட இழைத் தொகுதி* .

‘மூன்று பிரி சணல்’
‘ஐந்து பிரி சணல்’)

_நாடா முனையுடன்_
=(நா) *டா*

_(சுற்றிய--indicator)_

_பெண் தெய்வம்_
= *பிரி+டா*
= *பிடாரி*
( _பிடாரி_ , கோபக் குணம் கொண்ட கிராமப் *பெண் காவல் தெய்வம்* ஆகும். கிராமத்தின் வெளியில் குடிகொண்டிருக்கும் பிடாரியம்மனை காளியின் அம்சமாக கிராம மக்கள் போற்றி வழிபடுகின்றனர். தமிழகக் கிராமக் கோயில்களில் பிடாரியம்மன் கோயில்கள் பல உள்ளது.🙏🏽
*************************
_நம் வீட்டருகில் நேற்று மாமியார் மருமகள் சண்டை!_

_இன்று மாமியாரைக் காணோம்! வீட்டை விட்டு ஓடி விட்டார் என்கிறார்கள்!_

_ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டியது போல இருக்கு கதை! 🤫_
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (39):

1) 6:03:43 எஸ்.பார்த்தசாரதி
2) 6:03:49 லதா
3) 6:05:00 ரங்கராஜன் யமுனாச்சாரி
4) 6:07:34 கி மூ சுரேஷ்
5) 6:09:52 நாதன் நா தோ
6) 6:13:50 மீனாக்ஷி கணபதி
7) 6:14:31 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
8) 6:15:27 ரவி சுந்தரம்
9) 6:17:21 சங்கரசுப்பிரமணியன்
10) 6:18:08 கு.கனகசபாபதி, மும்பை
11) 6:18:39 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
12) 6:30:35 ரவி சுப்ரமணியன்
13) 6:44:47 லக்ஷ்மி ஷங்கர்
14) 6:45:23 Sucharithra
15) 7:02:05 முத்துசுப்ரமண்யம்
16) 7:08:34 ராஜா ரங்கராஜன்
17) 7:13:02 KB
18) 7:15:34 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
19) 7:22:40 சதீஷ்பாலமுருகன்
20) 7:35:43 மீ.பாலு
21) 7:40:32 வானதி
22) 7:59:55 ஆர்.நாராயணன்.
23) 8:00:55 மாலதி
24) 8:07:43 நங்கநல்லூர் சித்தானந்தம்
25) 8:50:23 மீனாக்ஷி
26) 9:15:40 கோவிந்தராஜன்
27) 9:47:21 சாந்திநாராயணன்
28) 11:02:44 ஸௌதாமினி
29) 12:05:20 சுபா ஸ்ரீநிவாசன்
30) 12:14:46 மு.க.இராகவன்.
31) 12:42:24 ராமராவ்
32) 13:24:03 ஆர். பத்மா
33) 14:50:03 எல்வீ
34) 16:25:36 மாயா & சுந்தர் வேதாந்தம்
35) 16:34:06 எஸ் பி சுரேஷ்
36) 17:47:01 மு க பாரதி
37) 19:18:53 பாலா
38) 19:27:50 வி ன் கிருஷ்ணன்
39) 20:39:19 அம்பிகா
**********************

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்