Skip to main content

விடை 3370


இன்று (16 ஜூலை 2018) காலை வெளியான வெடி:
கோப்பையை வாங்கியவர் அடைந்தது குடம் முனை உடைந்தது அங்கே ஒன்றுமில்லை (5)

இதற்கான விடை: வெற்றிடம் 

உலகக் காலபந்தாட்டப் போட்டி முடிந்து பிரான்ஸ் கோப்பை வென்றது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதைத் திறந்து பார்த்தால் உள்ளே, திராட்சை ரசமோ,  ஷாம்பெயினோ எதுவுமில்லையாம்.  அப்படி ஒன்றுமில்லாத   கோப்பையைக் கொடுத்ததை உலகோர் அறியச் செய்யும் வண்ணம் இன்றைய வெடி வீசப்பட்டது. அதனால் வெற்றுக் கோப்பைக்காக நாட்களையும் ஆண்டுகளையும் விரயம் செய்து விளையாட வேண்டாமென்று தமிழ் கூறும் நல்லுலகிற்கு எச்சரிக்கிறேன்.
 


Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்த அறுபத்துமூவர் :

1) 6:04:21 எஸ்.பார்த்தசாரதி
2) 6:05:45 ரவி சுப்ரமணியன்
3) 6:05:56 சதீஷ்பாலமுருகன்
4) 6:06:08 லட்சுமி சங்கர்
5) 6:06:14 ரா. ரவிஷங்கர்...
6) 6:06:15 மும்பை ஹரிஹரன்
7) 6:06:18 ரங்கராஜன் யமுனாச்சாரி
8) 6:06:39 நங்கநல்லூர் சித்தானந்தம்
9) 6:06:55 வி ன் கிருஷ்ணன்
10) 6:07:15 திருமூர்த்தி
11) 6:07:18 மு.க.இராகவன்.
12) 6:07:21 ரமணி பாலகிருஷ்ணன்
13) 6:10:10 KB
14) 6:13:15 புவனா சிவராமன்
15) 6:14:22 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
16) 6:15:13 விஜி ஶ்ரீனிவாசன்
17) 6:18:13 ஆர். பத்மா
18) 6:18:31 மீனாக்ஷி கணபதி
19) 6:21:22 முத்துசுப்ரமண்யம்
20) 6:23:42 பானுபாலு
21) 6:25:40 K.R.santhanam
22) 6:28:08 மீ கண்ணன்
23) 6:31:53 வானதி
24) 6:32:10 ராஜா ரங்கராஜன்
25) 6:32:22 லதா
26) 6:34:39 விஜயா ரவிஷங்கர்
27) 6:37:39 சங்கரசுப்பிரமணியன்
28) 6:38:27 ஆர்.நாராயணன்.
29) 6:40:52 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
30) 6:41:49 பானுமதி
31) 6:45:59 மைத்ரேயி
32) 6:46:08 சுபா ஸ்ரீநிவாசன்
33) 6:47:45 ஶ்ரீவிநா
34) 6:48:18 பூமாதேவி
35) 6:48:56 ஏ.டி.வேதாந்தம்
36) 6:49:24 பத்மாசனி
37) 6:55:16 Sandhya
38) 6:58:14 Sucharithra
39) 7:10:02 சித்தன்
40) 7:12:41 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
41) 7:13:14 மாலதி
42) 7:15:02 அம்பிகா
43) 7:23:52 ராதா தேசிகன்
44) 7:26:38 கு.கனகசபாபதி, மும்பை
45) 7:34:57 மடிப்பாக்கம் தயானந்த தயானந்த்
46) 7:38:22 ராமராவ்
47) 7:46:57 இலவசம்
48) 7:50:10 சுந்தர் வேதாந்தம்
49) 7:52:55 ஸௌதாமினி
50) 8:18:17 நாதன் நா தோ
51) 8:20:30 பினாத்தல் சுரேஷ்
52) 8:43:51 மீனாக்ஷி
53) 9:22:26 கேசவன்
54) 10:00:36 ராஜி ஹரிஹரன்
55) 11:01:12 தி பொ இராமநாதன்
56) 13:34:15 மு க பாரதி
57) 15:02:32 தேன்மொழி
58) 16:20:45 எஸ் பி சுரேஷ்
59) 16:43:03 செந்தில் சௌரிராஜன்
60) 16:46:35 கல்யாணி தேசிகன்
61) 17:19:42 பாலா
62) 18:26:53 கி மூ சுரேஷ்
63) 18:31:34 ரவி சுந்தரம்
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!


ஓரிரு முறை முயற்சி செய்து விட்டு, “இதற்கு மேல் என்னால் முடியாது…’ என்று சொல்பவன் சராசரி. “என் லட்சியத்தை எட்டும் வரை, முயற்சி செய்து கொண்டேயிருப்பேன்…’ என்று சொல்பவன், சாதனையாளன்.

தோல்வியால் துவண்டவர்களை, இந்த உலகம் நினைவில் வைத்திருப்பதில்லை. தோல்வி உங்களுக்கு, புதிய உற்சாகத்தையும், வைராக்கியத்தையும் கொடுக்க வேண்டுமே தவிர, விரக்தியைக் கொடுக்கக் கூடாது. யாருக்கும் முதல் முயற்சியிலேயே, மிகப் பெரிய *வெற்றி* கிடைத்து விடுவதில்லை.

தடைக்கற்களை, முன்னேற்றத்துக்கான படிக்கற்கள் என்று நினைத்துக் கொள்வோம். “வீழ்ந்தோம்’ என்று இந்த உலகம், நம்மைப் பற்றிச் சொல்லும் போது, அதே உலகம், “வென்றோம்’ என்று சொல்லும்படி சாதித்துக் காட்டுவோம்


_கோப்பையை வாங்கியவர் அடைந்தது குடம் முனை உடைந்தது அங்கே ஒன்றுமில்லை (_ 5)

_கோப்பையை வாங்கியவர் அடைந்தது
= *வெற்றி*

குடம் முனை உடைந்தது
=(கு) **டம்*

அங்கே ஒன்றுமில்லை
= *வெற்றி+டம்*
= *வெற்றிடம்*

*கவிதை : வெற்றிடம் !*
- கோவி.கண்ணன்


ஒளியின் வெற்றிடம் இருள் !
உறவின் வெற்றிடம் பகை !
நம்பிக்கையின் வெற்றிடம் துரோகம் !
அறிவின் வெற்றிடம் அஞ்ஞானம் !
அன்பின் வெற்றிடம் சினம் !
திருப்தியின் வெற்றிடம் ஆசை !
மகிழ்ச்சியின் வெற்றிடம் துக்கம் !
அடக்கத்தின் வெற்றிடம் தற்பெருமை !
நாணயத்தின் வெற்றிடம் சூழ்ச்சி !

வெற்றிடங்கள் என எதுவுமில்லை உலகில் !
வெற்றிடங்களில் எது நிறைந்திருக்கிறது,
என்பதன் பொருளில்
வெற்றிடங்கள்,
வெற்றித் தடங்கள்
அல்லது
வெற்றுத் தடங்கல்
என்று அறியப்படுகிறது !

🙏🏽🙏🏽🙏🏽

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்