Skip to main content

விடை 3258

இன்று (26/03/2018) காலை வெளிவந்த வெடி:

இயற்கை வேளாண்மையில் பயன்படுத்தப் படும் வலிமைக்கு முன் வணங்கு (2, 3)
இதன் விடை:  தொழு உரம்;  தொழு = வணங்கு, உரம் = வலிமை.

கால்நடைகளின் கழிவுகளை வயலுக்கு உரமாகப் பயன்படுத்தும் பாரம்பரிய முறை. மாடுகள் கட்டப்படும் தொழுவத்திலிருந்து பெறப்படுவதால் இப்பெயர் என்கிறார்கள்.   அப்படி என்றால் தொழுவ உரம் என்றுதான் இருக்க வேண்டும். பிற்பாடு தேய்ந்து விட்டது என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது.

ஏழெட்டு பேருக்கு மேல் தழை உரம் என்ற விடையை அளித்திருக்கிறார்கள். தழை (இலை)யும் இயற்கையானது, உரமாகப் பயன்படுத்தப்படுகிறது.

தழை என்பதன் பொருள்  கொஞ்சம் பணிவுக்கு அருகில் வருகிறது.
ஆனால் வணங்கு என்ற பொருளுக்கு தொழு மிகவும் அருகில் இருக்கிறது.
"தொழு உரம்" என்ற பயன்பாடு இருப்பது போல், "தழை உரம்" என்ற பயன்பாடு இருப்பதாகத் தெரியவில்லை.

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (28):

1) 6:01:04 மைத்ரேயி
2) 6:02:42 ராமராவ்
3) 6:03:31 விஜயா ரவிஷங்கர்
4) 6:05:01 கி. பாலசுப்ரமணியன்
5) 6:05:49 எஸ்.பார்த்தசாரதி
6) 6:12:02 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
7) 6:17:18 சுபா ஸ்ரீநிவாசன்
8) 6:31:26 மீனாக்ஷி கணபதி
9) 6:38:27 மு.க.இராகவன்.
10) 6:39:34 நங்கநல்லூர் சித்தானந்தம்
11) 6:53:20 Bhuvana Sivaraman
12) 7:00:09 மு க பாரதி
13) 7:12:08 ராதா தேசிகன்
14) 7:15:10 ஏ.டி.வேதாந்தம்
15) 7:15:51 பத்மாசனி
16) 7:24:28 கு. கனகசபாபதி, மும்பை
17) 7:31:03 கே.ஆர்.சந்தானம்
18) 7:38:10 அம்பிகா
19) 7:43:54 ராஜி ஹரிஹரன்
20) 7:53:24 பானுபாலு
21) 8:39:23 சுந்தர் வேதாந்தம்
22) 8:55:58 மீனாக்ஷி
23) 9:18:14 லதா
24) 10:01:57 மீ பாலு
25) 10:21:08 தேன்மொழி
26) 14:51:51 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
27) 18:11:08 ரமணி பாலகிருஷ்ணன்
28) 18:15:56 மரு. ப. சந்திரமௌலி
************************
Unknown said…
தழை சத்து பொருந்தாதா??

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.