Skip to main content

விடை 4077


இன்று காலை வெளியான வெடி:
கூர்மை போக்க  வாளாலும் முடியும்  (5)

அதற்கான விடை: தீர்க்கம் = தீர்க்க + ம்
(தீர்க்கதரிசி -- கூரிய பார்வை உடையவர்;  ஆர்தர் கிளார்க் ஒரு தீர்க்கதரிசி,  விண்கலன்கள், ராக்கெட்டுகள்செய்யப்படும் தொழில் நுட்பம் வராத 1945ஆம் ஆண்டிலேயே  புவிநிலைச் சுற்றுப்பாதையில் செயற்கைக் கோள் கொண்டு தொலை தொடர்பு சாத்தியம் என்று கூறினார்).


தீர்க்க = போக்க
ம் = வாளாலும் என்பதன் முடிவான எழுத்து


ஊரடங்கால் உண்டான இன்னல்களைத் தீர்க்க அரசு  பல திட்டங்களை வகுத்துள்ளது.

இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட  விடைகளின் பட்டியல் இங்கே.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle
************************
தீர்க்கம் 
பெயர்ச்சொல் (-ஆக, -ஆன)

 1.(பேச்சு, கருத்து, முடிவு முதலியவை குறித்து வருகையில்) தெளிவு; உறுதி;clarity; firmness; conviction. 
இதுதான் உன்னுடைய தீர்க்கமான
 முடிவா?/ 
அவருடைய தீர்க்கமான கருத்து
 2.  (பார்வையைக்குறித்து வருகையில்)கூர்மை; keenness (of perception).
 ஆகாயத்தைத்தீர்க்கமாகப் பார்த்துவிட்டு இன்று மழை வரும்என்றார்./ அவர் பார்வையில் இருந்த தீர்க்கம்.
************************
கூர்மை போக்க  வாளாலும் முடியும்  (5)

போக்க = தீர்க்க
வாளாலும் முடியும்  = ம்
கூர்மை = தீர்க்கம் 
************************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்