Skip to main content

Posts

Showing posts from October, 2019

விடை 3855

காலையில் நான் வெளியிட்ட புதிரில் ஒரு பிழையிருந்ததை, சித்தானந்தம் அவர்கள் சுட்டிக்காட்டிய பின் திருத்திய வடிவம்: இறுதியாக தேகம் முன்பே சிறுக்க வந்த மலை (4) அதற்கான விடை: குன்றம் = குன்ற + (தேக) ம் இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக்  காண இப்பக்கத்திற்குச் செல்லவும்.

உதிரிவெடி 3855

உதிரிவெடி 3855 (அக்டோபர் 31, 2019) வாஞ்சிநாதன் ********************* சிறுத்த தேகம் இறுதியாக வந்த மலை (4) கருத்துரையில் வந்த ஆட்சேபம் நியாயமானது. அதனால் புதிரைத் திருத்துகிறேன்.   இறுதியாக தேகம் முன்பே சிறுக்க வந்த மலை (4) Loading...

Solution to Deepavali Special Krypton Puzzle

Deepavali Special  Puzzle Besides publishing in my blog  this puzzle with the grid as a simple jpg file, it was also hosted in puthirmayam website which provided an online solver. Hari Balakrishnan who developed that tool mainly for Tamil puzzle modified it to allow  typing English characters. I thank him which many people have found to be very helpful saving many troubles. Kesavan pointed out an error in a clue which I changed in my blog but did not know how to correct in the version uploaded in puthirmayam. I apologize for that inconsistency. All the answers submitted through puthirmayam website can be accessed by following the link below.  (In my laptop the 15x15grid is wrapped after 9 columns and I am unable to see it in full.) Here are those solutions as received.  However the answers were also sent to me by email. From that I see the following people have solved it fully, all correct. 1.  Ramki Krishnan 2. Sundar 3.  Sandhya 4. Raju Umamaheswar 5. Ravi Subra

விடை 3854

இன்றைய வெடி: முற்காலத்து ராகம்  உடைய  ஆரம்பிக்கவில்லை (4)   அதற்கான விடை:  பண்டைய   = பண் (ராகம்) +  (உ) டைய இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண   இங்கே செல்லவும்.  மீண்டும் நாளை காலை புதிய வெடியுடன் சந்திப்போம்.

விடை 3853

இன்று காலை வெளியான வெடி: மாடு பசித்திருக்க  கலசத்துடன் நிற்பது ஒரு வாகனம் (3, 4) அதற்கான விடை:  ஆகாய விமானம் = ஆ + காய + விமானம் இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே சென்று பார்க்கலாம்.

சரவெடிக்கான விடைகள்

தீபாவளிச் சரவெடி இரண்டு தவணைகளாக  வந்த பின்னரே கட்டத்தை வெளியிட்டேன். முதலிலேயே கட்டத்தை அளித்து விட்டால் சில விடைகள் சில்லறையாக யோசிக்காமல் வந்து விழுந்து புதிர் வீணாகிவிடக்  கூடாது என்பதே இதன் நோக்கம். இதில் எல்லோருக்கும் உடன்பாடுதான்  என்று நினைக்கிறேன். விடைகள்: 3836. படுக்கை ஓரங் கிழிய முள் முனை குத்த மங்கலகரமான கிழங்கு (4)  மஞ்சள்   = மஞ்சம் - ம் + (மு) ள் 3837. மாட்டாமல்  வந்த   ஊர்வசிக்கா மல்லேஸ்வரனைப் பிடித்திருக்கிறது?  (5) சிக்காமல்   = ஊர்வசிக்கா மல்லேஸ் 3838. தென்னமெரிக்க நாட்டில் வாழும் மதிப்பிற்குரியவர்கள்? (6) பெருமக்கள் (பெருநாட்டில் வாழ்பவர்கள்) 3839. கன்னத்தின் ஓரம்  வெளியே உரசி வெற்று மினுமினுப்பு (4) பகட்டு = பட்டு + க(ன்னத்தின்) 3840. திருடன் போரிடுமிடத்திலுள்ள சரஸ்வதி ? (4) களவாணி = களத்திலிருக்கும் சரஸ்வதி 3841. செழிப்புடைய காட்டு உள்ளே  இளமாலை தழை பறித்தது (4)  வளமான = வன + இளமாலை - இலை [= தழை] 3842. முடியாத துக்கம் சுற்றி அணையின் கதவு வைத்த டாஸ்மாக் (5)  மதுக்கடை = துக்க (ம்) + மடை 3843. கட்டிடத் தொழிலாளர் நிற்குமிடத்தில் கடைசியாக உள்ள ஜன்னல்

உதிரிவெடி 3853

உதிரிவெடி 3853  (அக்டோபர் 29, 2019) வாஞ்சிநாதன் ********************** மாடு பசித்திருக்க  கலசத்துடன் நிற்பது ஒரு வாகனம் (3, 4) Loading...

Solution to Grid Puzzle ?

As the grid puzzles are rare and, many clues need to be handled I'll extend the time period to Wednesday night 9pm.  Ramki Krishnan has solved it completely. Solutions are best sent through the online solver . As you move the mouse to any cell the clue corresponding to that location will be displayed in that version.  As this software tool was not well understood by me I posted many versions of this grid puzzle and this might have confused you. Now all the puzzle and all its variants are in a single post .  I have not made any effort to create a regular Google form for submitting the answers. If you prefer it I'll make it tomorrow night.  I'll do it based on the comments I receive.

தீபாவளிச் சரவெடிக்கு விடை?

சரவெடிக்கு எல்லாவிடைகளையும் (17)  கண்டவர்கள்  ஆறேழு பேர் இருப்பார்கள். இத்தனை வெடிகள் இருப்பதால்  மேலும் அவகாசம் அளிக்க வேண்டும். விடைகளை நாளை (செவ்வாய்) இரவு வெளியிடுவேன். ஹரிபாலகிருஷ்ணனின் செயலியைப் பயன்படுத்தியும் விடைகளை அளிக்கலாம். அச்செயலி பற்றி அவருக்கு உங்கள் கருத்துகளை எழுதி அனுப்புங்கள். நாளை காலை வழக்கம்போல் (ஒற்றை) உதிரிவெடி வெளிவரும்.   புதிரைக் காண இங்கே செல்லுங்கள்.

Krypton Deepavali Special

Special Puzzle for Deepavali 2019 Vanchinathan ************************** Unfortunately this puzzle is not fillable  online. Readers have to do it the old-fashioned way, take a printout of the grid and  fill it up. It makes up for being less tech-friendly by having many words related to  technology! Have fun! Please send me an email  if you notice any errors or inaccuracies. My email id  my name as above at gmail dot com Here is the  link to Hari Balakrishnan's online solver version . You can give your feedback on that online solver to him and about the quality of puzzle to me! ACROSS 1. It does not drown in decimal numbers (8, 5) 8. It is sweet for adolescents and 10 for programmers (7) 9. Stellar clouds could be a lune formation (7) 11. Document is a regular expression string (6) 13. Agitating terrorist ends with fringe movement (8) 15. Reign of Error begins to confuse a Swiss mathematician (5) 16. Tell in court (y!=NULL) (7) 18. A place dug out

தொடரும் தீபாவளிச் சர வெடி

தீபாவளி   வெடிகள் (இரண்டாம் பகுதி) நேற்று மொத்தம் 10 வெடிகள் இருந்தன. இன்று இன்னமும் 7 வெடிகள். இந்த பதினேழு வெடிகளும் ஒரு வலைக்கட்டத்தில் அடங்குபவை. ஒவ்வொன்றையும் மற்ற புதிர் விடைகளின் துணையில்லாமல் விடை காண மாலை 5 மணி வரை அவகாசம். பிறகு  5 மணிக்கு வலைக்  கட்டம் வெளியிடப்படும். அதில் நிரப்பியபின் நீங்கள் விட்டுவைத்த விடைகளைக் கண்டுபிடிக்கலாம். ஹரி பாலகிருஷ்ணனின் செயலியின் மூலம் விடைகளை நீங்கள் இங்கே சென்று அளிக்கலாம். Loading…

Solution to Krypton 179

Today's clue: Dish out this page with tin-opener (9 ) Its solution:  SPAGHETTI =  THIS PAGE  T(in) Here is the l ist of answers for this clue. To celebrate Deepavali   Krypton will appear this week  again on  Monday. Visit this blog  again  at 8 am tomorrow .

தீபாவளி வெடிகள்

  தீபாவளிக் கொண்டாட்டம் தினமும் வெடி வெடிக்கையில் தீபாவளிக்கு ஒற்றை வெடியா வரும்? தீபாவளி மட்டுமல்ல நாளை (திங்கட் கிழமை) காலையிலும் பல வெடிகள் வரும். இரண்டு நாட்களும் இரவில் விடை வெளிவராது. ஆனால் திங்கள் இரவில் இரண்டு நாட்கள் வெடிகளையெல்லாம் கோத்த சரமாக  கட்டம் வெளிவரும்.   அந்த கட்டத்தை அச்சடித்துக் கொண்டு அதில் நீங்கள் கண்ட விடைகளை நிரப்பிக்கொள்ளலாம். (அது வரை விடை கண்டுபிடிக்காமல் ஏதுமிருந்தால் கட்டத்தில் நிரப்பப்பட்ட எழுத்துகள் கொண்டு அவற்றையும் கண்டுபிடிக்கலாம்). செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல் (ஒற்றை) உதிரிவெடி வரும். செவ்வாய் இரவில் சரவெடிகளுக்கான விடைகள் வெளிவரும். சரி ஆரம்பியுங்கள்: ஒரு கையில் பலகாரத்தை வைத்துத் தின்று கொண்டு இன்னொரு கையில் புதிரை முயலுங்கள். Loading…

விடை 3835

இன்றைய வெடி: ஒரு மாவட்டத்தில்   இறுதியாக தோழி  வைத்த முகூர்த்தக்கால்?  (ஏறக்குறைய)  (3) அதற்கான விடை:   நாழிகை = நாகை + (தோ) ழி ( நாகப்பட்டினம் மாவட்டம் நாகை என்று சுருக்கமாகவும் வழங்கப்படும். ) ஒரு நாழிகை என்பது  24 நிமிடங்கள்; ஒரு முகூர்த்தம் = 90 நிமிடங்கள். முகூர்த்தக்கால் (!) = 90/4= 22.5  நிமிடங்கள்,  அதாவது ஏறக்குறைய ஒரு நாழிகை. இன்றைய புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளை  இங்கே சென்று பார்க்கவும். நாளைக்கு தீபாவளி என்பதால் உதிரிவெடி வழக்கம்போல் வராது! வேறு விதமாக வரும்!

Solution to Krypton 178

 Today's clue: Reveal secrets about a lecture  on what paparazzi  are doing (8) Its solution: STALKING  = SING (reveal secrets, as happens in spy novels when a person is captured and tortured) + TALK (lecture) Paparazzi  chase (stalk)  celebrities to get their pictures  without their knowledge and for profit. Here is the list of answers sent for this clue.

உதிரிவெடி 3835

உதிரிவெடி 3835 (அக்டோபர் 26, 2019) வாஞ்சிநாதன் ***********************  ஒரு மாவட்டத்தில்   இறுதியாக தோழி  வைத்த முகூர்த்தக்கால்?  (ஏறக்குறைய)  (3) Loading...

விடை 3834

இன்று காலை வெளிவந்த புதிர் குறைவான தூக்கம் குழப்படி குளறுபடியில் தினம் மதுக்கடைக்குச் செல்ல வைக்கும் (8) அதற்கான விடை: குடிப்பழக்கம் =  (தூ) க்கம்  + குழப்படி கவலை அதிகமாகி தூக்கம் குறைந்தால் தொல்லைகளை மறந்து நிம்மதியான தூக்கத்தைப் பெற தினம் டாஸ்மாக் போகலாம். வினாடிக்கு நாலு கார்கள், பஸ்கள் ஓடுகின்ற சாலையின்  ஓரத்தில் எந்தவித தொந்தரவையும் உணராமல் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருப்பவர்களை எப்போதும் பார்க்கிறோமே? நிம்மதிக்கு இதுதான் வழி என்பதற்கு வேறென்ன நிரூபணம் தேவை?  இப்புதிருக்கு அனுப்பட்ட விடைகளின் தொகுப்பை இங்கே சென்றால் பார்க்கலாம்.

உதிரிவெடி 3834

உதிரிவெடி 3834 (அக்டோபர் 25, 2019) வாஞ்சிநாதன் ********************* குறைவான தூக்கம் குழப்படி குளறுபடியில் தினம் மதுக்கடைக்குச் செல்ல வைக்கும் (8) Loading...

விடை 3833

இன்று காலை வெளியான வெடி: மனதொப்பி  சைத்தான்  தலைமையையேற்றுக் கொண்ட ஒரு மதத்தினன் (4) அதற்கான விடை: இசைந்து = இந்து + சை(த்தான்)  சமீபத்தில் "சிவனுக்கு அலங்காரம், சிவனுக்கு  உரிய மரம், சிவமயம்" என்று ஒரே பக்தி சொட்ட வந்த புதிர் இன்று சைத்தானைத் தலையில் தூக்கிக் கொண்டு ஆடி விட்டது.   நாளை  வேறு தொப்பி மாட்டி யோசித்துப் புதிரைச் செய்கிறேன். இன்றைய புதிருக்கு விடை அனுப்பியவர்கள் பட்டியலை இங்கே காணவும்.

உதிரிவெடி 3833

உதிரிவெடி 3833 (அக்டோபர் 24, 2019) வாஞ்சிநாதன் *********************   மனதொப்பி  சைத்தான்  தலைமையையேற்றுக் கொண்ட ஒரு மதத்தினன் (4) Loading...

விடை 3832

இன்று காலை வெளியான வெடி: சர்வதேசப் பதவியில் இப்போது இல்லாத முள் நீக்கித் தைக்கப் பட்டு (5)   அதற்கான விடை:    ப‌ன்னாட்டு; பதவியில் இப்போது இல்லாத = முன்னாள்; முள் நீக்கிட "ன்னா". பட்டில் இதைத் தைக்க, "பன்னாட்டு " = சர்வதேச. இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே சென்று காணலாம்

உதிரிவெடி 3832

உதிரிவெடி 3832 (அக்டோபர் 23, 2019) வாஞ்சிநாதன் *******************   சர்வதேசப் பதவியில் இப்போது இல்லாத முள் நீக்கித் தைக்கப் பட்டு (5)   Loading...

விடை 3831 சறுக்கலும் சப்பைக் கட்டும்

  சொற்களைப் பல துறைகளிலிருந்து எடுத்து புதிர்கள் அமைக்க  வேண்டும் என்று அவ்வப்போது மாற்றிப் புதிரமைக்க முயல்கிறேன்.   இதில் சங்கடம் என்னவென்றால்  அரையேஅரைக்கால்குறை  இசையறிவைக்  கொண்டு   இசை தொடர்பான சொற்களைக் கையாள்வது.    இசையையறிந்தவர்கள் விவரமாகப் பட்டியலிட்ட இணைய பக்கங்கள் உதவியுடன் அவ்வாறு புதிர் பல சமயம் அமைத்திருக்கிறேன். இன்று அப்படித்தான் மிகவும் சாமர்த்தியமாக  ஒரு புதிரைச் செய்ததாக நினைத்தேன்.  இதில் இருக்கும் ஓட்டையை மாலை நான்கு மணி வாக்கில் கதிர்மதி சுட்டிக் காட்டிய பின்தான் என் தவறை  அறிந்தேன். இன்றைய புதிர்:  சிவனை அலங்கரிப்பதில் மூன்றாவது இல்லையாம், மூன்றாவது இல்லாமலே தொடங்கு (3)  தொடங்கு = ஆரம்பி; அதில் மூன்றாவது (எழுத்து) இல்லையென்றால் கிடைக்கும் "ஆரபி" (என்ற ராகம்)  இதற்கான  விடை. சிவனை அலங்கரிப்பது "சங்கராபரணம்" எனலாம். அது  ஏழு ஸ்வரங்களையுங் கொண்ட  ராகம் ஒன்றின் பெயருங்கூட. அந்த ராகத்தின் மூன்றாவது ஸ்வரத்தை   நீக்கினால் வருவது "ஆரபி" என்பது  என்னுடைய அரை குறைப் புரிதலால் விளைந்த விபரீதம்.  இன்னொரு ஸ்வரத்தையும் நீக்க வேண்டும். 

உதிரிவெடி 3831

-->   உதிரிவெடி 3831 (அக்டோபர் 22, 2019) வாஞ்சிநாதன் ********************** சிவனை அலங்கரிப்பதில் மூன்றாவது இல்லையாம், மூன்றாவது இல்லாமலே தொடங்கு (3) Loading...

விடை 3830

இன்று காலை வெளியான வெடி பாராட்டுச் சொல் பெற துடிக்கும் இளையவன் விட்டுவிட்டு வரலாமா? (5) இதற்கான விடை:  பிரமாதம் = தம்பி (இளையவன்) + ரமா ( வ ர லா மா ) இன்றைய புதிருக்கு   அனுப்பப்பட்ட விடைகளைக் காண இப்பக்கத்திற்குச் செல்லவும்.

உதிரிவெடி 3830

உதிரிவெடி 3830 (அக்டோபர் 21, 2019) வாஞ்சிநாதன் **********************   பாராட்டுச் சொல் பெற துடிக்கும் இளையவன் விட்டுவிட்டு வரலாமா? (5) Loading...

விடை 3829

இன்று காலை வெளியான வெடி: கைகளால் திரட்டி அழுத்தி இறுதியாக வளையோசை இட்டு பின் தங்கு (4) அதற்கான விடை:  பிசைந்து = பிந்து (= பின் தங்கு) + (திராட்) சை இன்றைய புதிருக்கு அனுப்பப்ப‌பட்ட விடைகளின் பட்டியல் இங்கே.

உதிரிவெடி 3829

உதிரிவெடி 3829 (அக்டோபர் 20, 2019) வாஞ்சிநாதன் ******************** கைகளால் திரட்டி அழுத்தி இறுதியாக வளையோசை கொண்டு பின் தங்கு (4) Loading...

விடை 3828

இன்று காலை வெளியான வெடி: தறியில் கட்டப்பட்டிருக்கும் பதி   (2) அதற்கான விடை:  பாவு ;  தறியில் நீளவாக்கில் கட்டப்பட்டிருக்கும்  நூல் "பாவு". குறுக்கே (ஊடாகச்) செல்லும் நூல் ஊடு. பாவு என்பது வினைச்சொல்லாக (தரையில்) பதி. தேவர்களுக்குக் கால்கள் தரையில் பாவாது. இன்று அனுப்பப்பட்ட விடைகளை இங்கே கணலாம்.

உதிரிவெடி 3828

உதிரிவெடி 3828 (அக்டோபர் 2019) வாஞ்சிநாதன் ********************** தறியில் கட்டப்பட்டிருக்கும் பதி   (2) Loading...

விடை 3827

இன்று காலை வெளியான வெடி: சுருக்கு அடிமை பாதத்தை வெட்டினாலும் விழியைக் காக்கும் (4) அதற்கான விடை: கண்ணிமை; வேடர்கள் பறவைகளைப் பிடிக்க வைப்பது கண்ணி எனும் சுருக்குக் கயிறு.  ("கண்ணியில சிக்காதையா கானாங்குருவி"  என்று ராசாவின் கிராமத்துக் குரலில்  வரும் கண்ணி பராபரக் கண்ணியல்ல. இன்றைய புதிரின் கண்ணிதான்.) "அடிமை"  என்பதில் அடி (பாதம்) போக எஞ்சுவது மை. இன்றைய புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியல் இங்கே.        [எச்சரிக்கை: நாளைய புதிர் ஆங்கிலம், தமிழ் இரண்டும் 15-30 நிமிடங்கள் தாமதமாகலாம்]

உதிரிவெடி 3827

உதிரிவெடி 3827 (அக்டோபர் 18, 2019) வாஞ்சிநாதன் ****************** சுருக்கு அடிமை பாதத்தை வெட்டினாலும் விழியைக் காக்கும் (4) Loading...

விடை 3825

இன்று காலை வெளியான வெடி காணக் கிடைக்காத பூவிலிருப்பதைக் குடிக்க மாட்டேன் (5) இது திரைப்படக் கவிஞர்கள் பிழிந்தெடுத்த  சொல்லாட்சி. "வீர அபிமன்யு" படத்தில்  "பார்த்தேன், ரசித்தேன், பக்கம் வரத்துடித்தேன்" என்ற பி.பி.ஶ்ரீனிவாஸ், சுசீலா பாடிய  பாடல் பலருக்கும் தெரிந்தது.    பின்னர்  "சிகப்பு ரோஜாக்கள்" படத்தில்  "நினைவோ ஒரு பறவை" பாடலில் "அதை இன்னும் நீ பருகாததேன்" என்று ஒரு வரி வரும். அதைப் பாடல் வடிவத்திலிருந்து புதிர்வடிவமாக்கியதுதான் நான் செய்த திருட்டு. இதற்கான விடையைக் கண்டுபிடித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதேன் அது என்ன தேன் அதுவல்லவோ பருகாத தேன் அதை இன்னும் நீ பருகாததேன் Read more at: https://deeplyrics.in/song/ninaivo-oru-paravai Follow us at: Facebook - https://www.facebook.com/deeplyrics.in/ ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதேன் அது என்ன தேன் அதுவல்லவோ பருகாத தேன் அதை இன்னும் நீ பருகாததேன் Read more at: https://deeplyrics.in/song/ninaivo-oru-paravai Follow us at: Facebook -

உதிரிவெடி 3826

உதிரிவெடி 3826 (அக்டோபர் 17, 2019) வாஞ்சிநாதன் ********************** காணக் கிடைக்காத பூவிலிருப்பதைக் குடிக்க மாட்டேன் (5) Loading...

விடை 3825

இன்று காலை வெளியான வெடி: கேட்போருக்கு   இனிமை   தரும் மெலிதான வலியுடன்  சத்தம் (4)   இதற்கான விடை: சந்தம் முந்தாநாள் புதிர் மூலம் சந்தி அதாவது வலிமிகுதல் பற்றிய விளக்கம் வந்தது. இன்று வலிகுறைதல், அதாவது வல்லினம் மெல்லினமாக வருவது அடிப்படையில்  புதிர் அமைக்கப்பட்டிருக்கிறது.  "சத்தம்" என்பதில்  "த்" என்பது  "ந்" என்று மெலிதாக  "சந்தம்" துள்ளிக் கொண்டு வரும். சந்தம் இருந்தால் பாட்டில்  கேட்போருக்கு இனிமையைத்  தரும். இப்புதிருக்குச் சரியான விடையைக் கண்டுபிடித்த கதிர்மதி, மாதவ், மீ கண்ணன் ஆகியோருக்குப் பாராட்டுகள். வந்த  அனைத்து விடைகளையும் இங்கே காணலாம்.

உதிரிவெடி 3825

உதிரிவெடி 3825 (அக்டோபர் 16, 2019) வாஞ்சிநாதன் ********************* கேட்போருக்கு   இனிமை   தரும் மெலிதான வலியுடன்  சத்தம் (4)   Loading...

விடை 3824

இன்று காலை வெளியான வெடி: சொல்லிக் கொடுத்து வைரம், புஷ்பராகம் இவற்றின்மேல் வரும் பைத்தியம்? (5) அதற்கான விடை:  கற்பித்து = கல் + பித்து நேற்றைய புதிரில் சந்தி பற்றி குறிப்பிட்டிருந்தேன். இன்று சந்தியல்லாத வேறொரு புணர்ச்சி விதியையொட்டி அமைக்கப்பட்ட புதிர். கடல்+ பாசி = கடற்பாசி,  மணல் + பாங்கு = மணற்பாங்கு , பல் + பசை  = பற்பசை. இவ்வாறு 'ல்' தொடர்ந்து பகர வர்க்கம் வரும்போது அது "ற்" எனத் திரியும்  என்பதும் புணர்ச்சி விதியில் ஒன்று.  இவ்விதி சில வடமொழிச் சொற்கள் தமிழில் கையாளப்படும்போதும்  எட்டிப் பார்க்கிறது: கல்பனா  தமிழில் கற்பனை ஆகிறது. (அடடா கல்லாலான பனை மரம் என்று என்று புதிரமைக்கும் வாய்ப்பை நானே அம்பலப்படுத்திக் கெடுத்துக் கொண்டேன்). அவ்வகையில் இன்று " கல்பித்து" என்பது "கற்பித்து" என்றாகிறது. புதிரில் ஆர்வமுள்ள சொற்பித்தர்களுக்கு இதைக் கொண்டு அமைக்கப்பட்ட புதிர் ஒன்றும் கடினமில்லை என்பது இன்றைய பட்டியலின் நீளத்தைப் பார்த்தாலே தெரிகிறது.

உதிரிவெடி 3824

உதிரிவெடி 3824 (அக்டோபர் 15, 2019) வாஞ்சிநாதன் ******************** சொல்லிக் கொடுத்து வைரம், புஷ்பராகம் இவற்றின்மேல் வரும் பைத்தியம்? (5) Loading...

விடை 3823

இன்று காலை வெளியான வெடி: சோர்ந்து வசீகரத்துடன் பாம்பு வாழுமிடம் (6)  அதற்கான விடை:  களைப்புற்று   = களை  (வசீகரம்) + புற்று முன்பே ஒரு முறை செய்துள்ளபடி 'ப்' என்ற எழுத்து சந்தியாகத் தோன்றுவதால் அதற்குப் புதிரில் குறிப்புகள் இல்லாமல் அமைத்திருக்கிறேன். இனி இதை வழக்கமாகக் கொள்ளப் போகிறேன். ஆங்கிலச் சொல்லமைப்பில் இது கிடையாததால் முன்னுதாரணம்  ஏதுமில்லை. நாமே இப்படி செய்யலாம் என்று விதி வகுத்துக் கொள்ள வேண்டியதுதான். இன்றைய விடைகளைக் காண இந்தப் பக்கத்திற்குச் செலவும்.

உதிரிவெடி 3823

உதிரிவெடி 3823 (அக்டோபர்  14, 2019) வாஞ்சிநாதன் ******************  சோர்ந்து வசீகரத்துடன் பாம்பு வாழுமிடம் (6)  Loading...

Solution to Krypton 175

Solution to Krypton 175 Today's clue: A country in middle east carried by reverse air flow to one in Europe (7) Its solution : ROMANIA = R-oman-IA To see the answers sent for this clue click here.

விடை 3822

இன்று காலை வெளியான வெடி: முனை உடைந்த கத்தி செருகி கிலி உண்டாக்கிய உணவில் கட்டுப்பாடு (5)   அதற்கான விடை:   பத்தியம்   = (க)த்தி + பயம் இப்புதிருக்க்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே சென்று காணலாம் .

உதிரிவெடி 3822

உதிரிவெடி 3822 ( அக்டோபர் 13, 2019) வாஞ்சிநாதன் ********************** முனை உடைந்த கத்தி செருகி கிலி உண்டாக்கிய உணவில் கட்டுப்பாடு (5) Loading...

விடை 3821

இன்று காலை வெளியான வெடி:     அநியாயம்  கண்ணுக்குப் பூச்சு கேட்கிறார்கள்  (3) அதற்கான விடை:  கொடுமை இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே சென்று காணலாம்

உதிரிவெடி 3821

உதிரிவெடி 3821 (அக்டோபர் 12, 2019) வாஞ்சிநாதன் ****************** அநியாயம்  கண்ணுக்குப் பூச்சு கேட்கிறார்கள்  (3) Loading...

விடை 3820

இன்று காலை வெளியான வெடி: பொலிவிழந்த  ஆணை  பாதி மஞ்சத்தில் வீழ்த்தியது விதி   (4) அதற்கான விடை:   சட்டம் = கட்டளை (ஆணை)  ‍- களை (பொலிவு)  +  (மஞ்) சம் இப்புதிருக்க்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே சென்று காணலாம்

உதிரிவெடி 3820

உதிரிவெடி 3820 (அக்டோபர் 11, 2019) வாஞ்சிநாதன் ************************ பொலிவிழந்த  ஆணை   பாதி மஞ்சத்தில் வீழ்த்தியது விதி   (4) Loading...

விடை 3819

இன்று காலை வெளியான வெடி: அதிர்ஷ்டத்துக்கு முன்பே துணை இருந்தால் பயன் கிடைக்கும் (5)   அதற்கான விடை: உபயோகம் = உப (துணை)  + யோகம் (அதிர்ஷ்டம்) இப்புதிருக்கு 57  பேர், ஒருவரும் தவறில்லாமல்  விடையனுப்பியுள்ளனர். அவ்விடைகளைக் காண இப்பக்கத்திற்குச் செல்லவும்.

உதிரிவெடி 3819

உதிரிவெடி 3819 (அக்டோபர் 10, 2019) வாஞ்சிநாதன் ************************ அதிர்ஷ்டத்துக்கு முன்பே துணை இருந்தால் பயன் கிடைக்கும் (5) Loading...

விடை 3818

இன்று காலை வெளியான புதிர்: எங்கெங்கும் சிதம்பரத்தான் நடனமிட  மத்யமம் கொண்டு  வசியம்     (5) அதற்கான விடை: சிவமயம் = வசியம் + ம(த்யமம்) இன்றைய வெடிக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே சென்றால் பார்க்கலாம்.

உதிரிவெடி 3818

உதிரிவெடி 3818  (அக்டோபர் 9,  2019) வாஞ்சிநாதன் ********************** எங்கெங்கும் சிதம்பரத்தான் நடனமிட  மத்யமம் கொண்டு  வசியம்     (5) Loading...

விடை 3817

இன்று காலை வெளியான வெடி வெட்டு இரு பாதி கொண்டு உண்டாகு (5) அதற்கான விடை: கருத்தரி = கத்தரி (வெட்டு)  + ரு (= 1/2 இரு ) முதலில் ஒரு மணி நேரத்திற்கு புதிரில் 4 எழுத்து என்று தவறாக  இருந்தது. அது பலருக்கும் குழப்பத்தையளித்திருக்கிறது. விடைகளின் பட்டியலை இங்கே சொடுக்கிப் பார்க்கவு ம். ரவி சுப்ரமணியன் கடந்த சில நாட்களாக வந்த மூன்றெழுத்து விடை கொண்ட புதிர்களை ரசித்ததாகக் கருத்துரையளித்துள்ளார். நன்றி. 'விழல், பாதிரி, மாவிலை" என்பதைக் குறிப்பிடுகிறார் என்று  நினைக்கிறேன். பாதிரி என்ற  சொல் சைவர்களுக்கு மட்டுமல்ல, கிறிஸ்தவர்களுக்கும் பொருத்தமானது என்று சொல்வது சரியில்லை. ஸ்பானிய மொழியில் Padre என்பது தந்தை என்று பொருள். அதைத்தான் தமிழில் பாதிரி என்று எழுதுகிறார்கள் என்று தோன்றுகிறது. விவரமறிந்தவர்கள் இதை விளக்குங்கள்.

விடை 3816

இன்று காலை வெளியான புதிர்: பொழுது போகும்  நேரத்தில் சுவாசம் போக நன்றியுணர்வுடன் தோரணமாகும் (3)   அதற்கான விடை: மாவிலை = மாலை (பொழுது போகும் நேரம்) + வி நன்றியுணர்வான விசுவாசம் என்பதில்  சுவாசம் போக, எஞ்சுவது 'வி'.  இன்றைய புதிருக்கு அளிக்கப்பட்ட அனைத்து விடைகளின் பட்டியலையும் இங்கே சென்று காணலாம்.

உதிரிவெடி 3816

உதிரிவெடி 3816 (அக்டோபர் 7,  2019) வாஞ்சிநாதன் ********************** பொழுது போகும் நேரத்தில் சுவாசம் போனாலும் நன்றியுணர்வால் தோரணமாகும் (3) Loading...

Solution to Krypton 173

Today's clue: Determined, not easy to break, reorganized within the limits of a day (7) Its solution: DOUGHTY = DY (limits of day) + TOUGH (not easy to break) Here is the list of answers sent for this clue.

விடை 3815

இன்று காலை வெளியான புதிர்: சில சிவத்தலங்களில் காணப்படும் அரை வெள்ளரியில் கால்வாசி  (3) அதற்கான விடை: பாதிரி = பாதி + (வெள்ள) ரி   வில்வ மரம், வன்னி மரம் போல் சில ஊர்களின் சிவாலயங்களில் தல விருட்சமாக பாதிரி மரம் இருக்கும். கடலூர்க்காரர்கள் செல்லமாக NT (new town) என்று சொல்லும் கடலூர் புதுநகரம் திருப்பாதிரிப்புலியூர் என்று பெயர் கொண்டது. சிறுவயதில் உறவினரைச் சந்திக்க அங்கே சென்று கெடிலம் ஆற்றில் குளித்திருக்கிறேன். இந்த சிவாலய மரத்தினைப் பற்றிய குறிப்பு கொண்ட வலைப் பக்கத்தை இன்று முதல் விடையளித்திருக்கும் ரவி சுந்தரம்  தேடிக் கொடுத்திருக்கிறார் (அவரே இன்று கிரிப்டான் புதிரையும் முதல் விடையளித்துள்ளார்). அந்த வலைப் பக்கம் இதோ இன்றைய வெடிக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே சென்றால் பார்க்கலாம்.

உதிரிவெடி 3815

உதிரிவெடி 3815 (அக்டோபர் 6,  2019) வாஞ்சிநாதன் **********************   சில சிவத்தலங்களில் காணப்படும் அரை வெள்ளரியில் கால்வாசி  (3) Loading...

Solution to Krypton 172

Today's clue: When leaves stopped leaving widow started to bury (6)  Its solution: WINTER = W + INTER I have to admit the idea for today's clue was stolen from Hank Ketcham. Some 30 years ago I remember reading Dennis (the menace) telling his father (who is busy cleaning the garden ) " When leaves stop falling, fall starts leaving". It was a deviation from the usual fare, instead of making any mischief ,Dennis makes a pun.   This delightful wordplay came handy today in forming today's clue. List of solvers   is here now.

விடை 3814

இன்று காலை வெளியான புதிர்: இரண்டாவது குழந்தை நட்ட சிலை மண்டி வளர்ந்து பயனில்லை (3)  இதன் விடை :  விழல் = வில் (சிலை ) + ழ (குழந்தையில் இரண்டாம் எழுத்து) கம்பராமாயண காலத்தில் சிலை என்ற சொல் வில்லுக்குப் பயன்படுத்தப்பட்டது. பொதுவாக விழலுக்கு நீர் இறைப்பதைத்தான் பயனில்லா வேலை என்று கூறுவார்கள்.  நான் விழலையே பயனற்றது என்று இங்கே சொல்லிவிட்டேன். இன்றைய வெடிக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே சென்றால் பார்க்கலாம்.

உதிரிவெடி 3814

உதிரிவெடி 3814 (அக்டோபர் 5,  2019) வாஞ்சிநாதன் ********************** இரண்டாவது குழந்தை நட்ட சிலை மண்டி வளர்ந்து பயனில்லை (3) Loading...

விடை 3813

இன்று காலை வெளியான புதிர்: மன அமைதி கொண்ட துளி மஞ்சள் பூசிய மலரொன்று (4)    இதன் விடை :   சாமந்தி = சாந்தி + ம (ஞ்சள்) இன்றைய வெடிக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே சென்றால் பார்க்கலாம்.

உதிரிவெடி 3813

உதிரிவெடி 3813 (அக்டோபர் 4, 2019) வாஞ்சிநாதன் ********************* மன அமைதி கொண்ட துளி மஞ்சள் பூசிய மலரொன்று (4) Loading...

விடை 3812

இன்று காலை வெளியான புதிர்: சீர்குலைந்தாலும் உன்னைத் தொடர்ந்து செல்வம் தந்த  மேன்மை (5)  இதன் விடை :  உன்னதம் = உன் +  (செல்வம்) தனம் இன்றைய வெடிக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே சென்றால் பார்க்கலாம்.

உதிரிவெடி 3812

உதிரிவெடி 3812 (அக்டோபர் 3,  2019) வாஞ்சிநாதன் **********************     சீர்குலைந்தாலும் உன்னைத் தொடர்ந்து செல்வம் தந்த  மேன்மை (5) Loading...

விடை 3811

இன்று காலை வெளியான புதிர்: கிராமம் முழுதாக வயல் இல்லை  நீண்ட அட்டவணை (5)  இதன் விடை :  பட்டியல் = பட்டி + (வ) யல் இன்றைய வெடிக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே சென்றால் பார்க்கலாம்.

உதிரிவெடி 3811

உதிரிவெடி 3811 (அக்டோபர் 2,  2019) வாஞ்சிநாதன் **********************   கிராமம் முழுதாக வயல் இல்லை  நீண்ட அட்டவணை (5)   Loading...

விடை 3810

இன்று காலை வெளியான புதிர்: தகுதியில் உயர்ந்தவர்  புரண்டு வரி கட்ட நுழைந்து   இடம் மாறு (5)  இதன் விடை : பெரியவர் = வரி + பெயர் (இடம் மாறு, விருச்சிக ராசியிலிருந்து தனுசுக்கு  குரு பெயர்கிறது). இன்றைய வெடிக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே சென்றால் பார்க்கலாம்.

உதிரிவெடி 3810

உதிரிவெடி 3810 (அக்டோபர் 1,  2019) வாஞ்சிநாதன் ********************** தகுதியில் உயர்ந்தவர்  புரண்டு வரி கட்ட நுழைய  இடம் மாறு (5) Loading...