Skip to main content

விடை 4063

 இன்று காலை வெளியான வெடி:

ஏமாற்றிய பெண்ணை காலொடிக்கப் பெற்றது தேமாங்கனியோடு புளிமாங்கனியாக இருக்கலாம் (6) 

 அதற்கான விடை:  வஞ்சித்தளை  = வஞ்சித்தவளை  - வ (1/4)

சரவெடியில்  ஒன்றியும் ஒன்றாமலும் வஞ்சியிடம் புலவர் காண்பது (2) என்பதற்கான  விடையைப் புரிந்து விடையளித்தவர்கள் இன்று அளித்திருப்பார்கள். அல்லது இன்றைய விடையைப் புரிந்து அளித்தவர்கள் அதன் பிறகு சரவெடியில் விடுபட்டிருந்தால் சேர்த்திருப்பார்கள்!

ஒரு வேண்டுகோள், ஏற்கனவே சொன்னதுதான். அதன்படி நீங்கள் எல்லோரும்  உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இவ்வெடிகளைப் பற்றித் தெரிவித்து வரவைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

சரவெடிக்குப் பிறகு உதிரிவெடிகள் சப்பென்று இருந்தால் இணையத்தில் வேறு இருக்கின்றன.  எஸ். பார்த்தசாரதி அவர்கள்  நூற்றுக்கு மேற்பட்டவைகள் தன்னுடைய வலைத் தளத்தில் வைத்திருக்கிறார்.  தமிழ்ப்புதிருக்கு ஆங்கிலத்தில் குறிப்பு என்று பல வகைகள் வைத்துள்ளார்.

ராமராவ் என்பவர்கள் அமைப்பதற்குக் கடுமையான வகையாகத் திரப்படப் பெயர்கள்/பாடல்கள் மட்டுமே கொண்டு தொடர்ந்து மாதந்தோறும்  சில வருடங்களாகச் செய்து வருகிறார், அதற்குm வேறு சில சொல்  விளையாட்டுகளுக்கும்   இங்கே சொடுக்கவும்.

சரி,   இன்றைய உதிரிவெடி க்கு
 அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியல் .

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
The சரவெடி connection in today's உதிரிவெடி !

ஒன்றியும் ஒன்றாமலும் வஞ்சியோடு புலவர் காண்பது (2)

விடை : தளை
**********************
ஏமாற்றிய பெண்ணை காலொடிக்கப் பெற்றது தேமாங்கனியோடு புளிமாங்கனியாக இருக்கலாம் (6) 
ஏமாற்றிய பெண்ணை
= வஞ்சித்தவளை

கால்= வ

காலொடிக்கப் பெற்றது
= வஞ்சித்தவளை- வ
= வஞ்சித்தளை

=தேமாங்கனியோடு புளிமாங்கனியாக இருக்கலாம்
**********************
(மூவசை சீர் ,
நேர்/நேர்/நிரை – தேமாங்கனி
நிரை/நேர்/நிரை – புளிமாங்கனி

நின்ற சீரின்  ஈற்றசையும் ,வருஞ்சீரின் முதலசையும் ஒன்றியே , ஒன்றாமலோ வருவது தளை ஆகும்.
இது ஒன்றிய வஞ்சித்தளை)
**********************
Vanathy said…
புதிர்க்கட்டத்தில்தளை பற்றி வநததால் இன்றைக்கு விடை
கண்டு பிடிக்க முடிந்தது. இது போன்ற இலக்கணக்குறிப்புகள்
சில சொற்கள் பாடத்தில் படித்திருந்தாலும் அவற்றை பிரயோகிக்க பிரமேயமே வாய்ப்பதில்லே.வாஞ்சி சார் அவைகளை நினைவு கூற வாய்ப்பு அளித்துக்கொண்டே இருக்கும் உங்கள் பணி வாழ்க வளர்
Vanchinathan said…
@வானதி: பள்ளிக் கூடப் பாடம் பற்றி ஆசையாக ஆசிரியத் தொழில் பார்க்கும் என்னிடம் சொன்னால் மாட்டிக் கொள்வீர்கள். அப்புறம் கணக்கு, பூகோளம், சரித்டிரம் என்று கேள்வி கேட்டிடுவேன்.
நீங்கள் எல்லா இடங்களிலிம் வாய்பாடு என்று
எழுதுகிறீற்கள். ஆனால் நான் படித்தது
வாய்ப்பாடு(ப்) சேர்த்தது. எது சரி?
Vanchinathan said…
வி என் கிருஷ்ணன்: அதற்கு நான் இரண்டு நாட்களுக்கு முன்பே பதிலளித்து விட்டேன்,

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

புதிருக்கு விடை எப்படிப்பா கண்டுபிடிக்கிறது?

** சொந்தக்காரர்கள் வட்டமிட ஐந்தாம் கல்யாணம் (4) என்ன அநியாயம்? எத்தனை கல்யாணம் பண்ணிக்கொள்வது என்று அளவே கிடையாதா?  இந்த திமிர் பிடிச்சவனோட கல்யாணத்துக்கு  சொந்தக்காரர்கள்  எல்லோரும் உடந்தையா?  இது புதிருங்க.  படிக்கிறவங்களை இப்படி நினைக்க வைப்பதுதான் இதில் புதிராசிரியரான என்னோட உயர்வான நோக்கம். சரி, எப்படி இதில் இருக்கும் முடிச்சை அவிழ்ப்பது, விடையைக் கண்டுபிடிப்பது? இதோ அதற்கான  சூத்திரம். சுற்றமும், நட்பும்  சூழ நடப்பதுதானே கல்யாணம் (கல்யாணப் பத்திரிகைல அப்படித்தானே அச்சடிக்கிறோம்). இருக்கும் சொற்களுக்கெல்லாம் மாற்று வார்த்தை தேடினால் விடை அகப்படலாம். தேடுவோம். சுற்றம் : சொந்தக்காரர்கள்  சுற்ற  : வட்டமிட     ம்   : கல்யாணம் என்பதில் ஐந்தாம் எழுத்து சொந்தக்காரர்கள்  = வட்டமிட  ஐந்தாம் கல்யாணம் கொடுக்கப்பட்ட புதிரில் மேலே ஒரு இடத்தில் "="  குறியை இட்டு இரண்டு பாகமாகப் பிரித்திருக்கிறேன். பின் இரு பாகங்களும் ஒரே சொல்லைக் குறிக்கும். ஒருபுறம் சொல்லின் பொருள் (சுற்றம் : சொந்தக்காரர்கள்) ...