Skip to main content

Posts

Showing posts from October, 2018

விடை 3477

விடை 3477 இன்று காலை வெளியான வெடி பதினான்காண்டுகள் ராணியாய் இருந்தவள் மறைந்த இரண்டாம் ஆண்டு தொடக்கம் (4)   இதற்கான விடையைக் கீழ்க்காணும் வெண்பாக்கள் மூலம்  புரிந்து கொள்ளலாம். (சத்தியாமய் நான்தான் எழுதினேன். மண்டபத்தில் யாரும் எழுதிக் கொடுக்க வில்லை). ஆண்டு பதினான்காய் அண்ணன் வனவாசம் ஆண்டான் அயோத்தியை தம்பி பரதனும் மீண்டும் பெரியோன் வரும்வரை வீற்றிருந்த மாண்டவி  மன்னன் துணை. பிரபவ பின்னே வருமாம் விபவ மறவாதீர் மாந்தரே இன்று

உதிரிவெடி 3477

உதிரிவெடி 3477 (31 அக்டோபர் 2018) வாஞ்சிநாதன் *********************** ராணி முத்து நாட்காட்டி இன்று  இந்தியாவை ஆண்ட இந்திராகாந்தி மறைந்த தினம் என்று நினைவுபடுத்துகிறது. ஆயுதபூஜை, காந்தி ஜெயந்திகெல்லாம் விசேஷமாகப் புதிர் எழுதியாச்சு,  இதுக்கும் ஏதாவது செய்யலாம்னு  யோசிச்ச போது தோன்றியது இன்றைய வெடி: பதினான்காண்டுகள் ராணியாய் இருந்தவள் மறைந்த இரண்டாம் ஆண்டு தொடக்கம் (4)  Loading...

விடை 3476

இன்று காலை வெளியான வெடி: சிறிய அளவில் பாயும், இடறும் (5) இதற்கான விடை:  தடுக்கும் ஒருவர் உட்காருமளவுக்குச்  சிறிய அளவில் ஓலையால் பின்னப்பட்ட  பாய்தான் தடுக்கு.பெரும்பாலும் விருந்தினர் தரைமேல் உட்காரக் கூடாதென்று விரிக்கப்படும். அல்லது சாப்பிடும் போது விரிக்கப்படும். தடுக்கில் அமர்ந்திட்லி  தட்டில் பலவைத் தடுக்கி விழுங்கிய  அந்நாள்போய் இன்று தடுக்கிடுங் கால்கள் தளர்ந்திடினுஞ் சாதல் தடுக்கவெண்ணுந் தன்மை இயல்பு   மனிதர்களுக்கு முதுமையிலும் நீண்டு உயிர் வாழும் எண்ணமிருப்பதைப் பற்றி தத்துவமாக  யோசித்து எழுதவில்லை. சும்மா யமக வெண்பா (ஆமாம் இது உரை நடையில்லை!) எழுத வேண்டும் என்று தோன்றியது. அதனால் பல தடுக்குகளை வைத்துப் பின்னினேன். 

விடை 3475

இன்று காலை வெளியான வெடி: இவ்வருடம் ஓர் ஊரும் உயிரினம் டப்பாவுக்கு வெளியே வந்தது (6) இதற்கான விடை: நடப்பாண்டு = நண்டு + டப்பா நண்டூரும் நன்செய் வயலில் விளைந்திடுநெல் கண்டோர்க்குக் கண்குளிரும் ஆங்கு

உதிரிவெடி 3475

உதிரிவெடி 3475 (29 அக்டோபர் 2018) வாஞ்சிநாதன் ********************** இவ்வருடம் ஓர் ஊரும் உயிரினம் டப்பாவுக்கு வெளியே வந்தது (6) Loading...

விடை 3474

இன்று காலை வெளியான வெடி: கை எலும்பு முனையுடன் பாழாய்க் கிடக்கும் நிலம்  (4)  இதற்கான விடை: கரம்பு (தரிசு) = கரம் + பு

Solution to Krypton 78

Today's clue: Software about a spy agency ? Rate at half value (10) Its solution: APPRECIATE = app + re + cia + (ra) te Solved by the following 13 persons:  1)   6:27:27   S.Parthasarathy  2)   6:54:44   Govindarajan  3)   6:59:12   Ravi Sundaram  4)   7:00:28   Sundar Vedantham  5)   7:06:38   S P Suresh  6)  9:41:03   M.K.RAGHAVAN.  7)  10:02:33  Rukmani Gopalan  8)  10:13:33  S.R.BALASUBRAMANIAN  9)  10:42:58  Kesavan 10)  14:15:28  Dhayanandan Bhaskar 11)  16:26:07  Enigmatist 12)  18:27:06  KB 13)  20:29:35  Ambika

உதிரிவெடி 3474

உதிரிவெடி 3474 (28 ஒக்டோபர் 2018) வாஞ்சிநாதன் *********************** கை எலும்பு முனையுடன் பாழாய்க் கிடக்கும் நிலம்  (4) Loading...

விடை 3473

இன்று காலை வெளியான வெடி: கட்டளை செய்து புரட்சிக்காரன் நீங்கிய சேனை (4) இதற்கான விடை: ஆக்கினை =ஆக்கி + (சே) னை  (சே, தென்னமெரிக்க புரட்சியாளன், சே  குவாரா) சே குவாரா தேக்கினை யொத்த திடங்கொண்ட நெஞ்சினன் ஆக்கினையாய்க் கொண்டான் அதிகார வர்க்கத்தின் போக்கினை வென்று புரட்சியைக் கொணர நீக்கினார் நீசர் திரண்டு.

Solution to Krypton 77

Today's clue: Record, for example, in a video a suitable remedy outside (7) Its solution: CAPTURE  Solved by 8 persons: 1)  6:26:44    S.Parthasarathy 2)  6:38:10    Meenakshi Ganapathi 3)  6:56:20    K Suresh 4)  7:29:09    Lakshmi Shankar 5)  9:22:47    Kesavan 6)  9:25:50    S P Suresh 7)  16:44:02    M.K.RAGHAVAN. 8)  18:00:04    Maya & Sundar Vedantham

உதிரிவெடி 3473

உதிரிவெடி 3473 (27 அக்டோபர் 2018) வாஞ்சிநாதன் ****************** To see today's Krypton visit this page. கட்டளை செய்து புரட்சிக்காரன் நீங்கிய சேனை (4) Loading...

விடை 3472

இன்று காலை வெளியான வெடி: எண்ணத்திற்கு எட்டியது ஆராதித்த பிள்ளையார் நினைவில் எழுதுவது குழப்பம் (5) இதற்கான விடை: உதித்தது   = உ + துதித்த உதிரி  வெடியதின்  உள்ளாழம் சென்றால் உதித்திடும் மின்வெட் டுமக்கு  மின்வெட்டு என்றால் = மின்னல் வெட்டு,  பவர்கட் இல்லை!

உதிரிவெடி 3472

உதிரிவெடி 3472 (26 அக்டோபர் 2018) வாஞ்சிநாதன் ********************** எண்ணத்திற்கு எட்டியது ஆராதித்த பிள்ளையார் நினைவில் எழுதுவது குழப்பம் (5) Loading...

விடை 3471

இன்று காலை வெளியான வெடி: நட்ட நடு மறியல் இறைச்சிக்குப் பின்னர் (4) இதற்கான விடை: ஊன்றிய =  ஊன் +  ம றிய ல்  அரசியல் தலைவர் ஒருவர் சாலையில் நட்ட நடுவில் மறியல் செய்ய கூட்டம் திரட்ட ஏற்பாடு செய்யும்போது கேட்டது: கையில் கொடியேந்திக் கத்திடுவேன் கோஷங்கள் வெய்யிலில் சாலையில் வீசிடுவேன் கற்களை பையில் பணத்தோடு கோழிக் கறிதந்தால் நையப் புடைத்திடுவேன் நான்.    

விடை 3470

இன்று காலை வெளியான வெடி: காட்டில் மாடோட்டிய ஆண்டி பூமேயும் ஜாதி (5) அதற்கான விடை: வண்டினம்   = வனம் + (ஆ) ண்டி ஆண்கள் எழுதும் கவிதைகளில் காதல் பற்றி என்று சொன்னாலும் அதில் பெண்கள் பற்றிய வர்ணனைதான் அதிகமாக  இருக்கும் என்பது தாமரை எழுதிய சில பாடல்கள் கேட்ட பிறகுதான் எனக்குப் புரிந்தது.  பெரிதாக சிலாகிக்கப்படும் கண்ணதாசனை எடுத்துக் கொள்ளுங்கள். பல தத்துவப் பாடல்களில் நல்ல கருத்துகளை அவர் அழகாகக் கூறியிருக்கிறார். ஆனால் காதலி  என்றால்  கொடியிடையே, தேனிதழே என்று ஒரு வழக்கமாய்  பதிந்த சுவட்டிலேயே சென்றிருப்பார். இதுபோல் புளித்துப்போன உவமைகள் எல்லோருக்கும் அதிகம் கேட்டுப் பதிந்ததுதான் நான் புதிராக அமைக்கிறேன். அதனால்தான் முடிவிலா/முடிவில் என்ற அதிகம் புழங்காத, ஆனால் சரியான  பயன்பாட்டைப் பற்றி இவ்வளவு விவாதம் வருகிறது. இன்று இதுபோல் "வண்டினம்" என்ற வழக்கமான பயன்பாட்டைப் பற்றியும் அதோடு எதுகை மோனையாக வரும் ஃபார்முலா உவமைகளையும் வைத்து ஒரு வெண்பா: கெண்டைபோல் கண்ணும் கிளியதன் பேச்சழகும் வண்டினம் மொய்க்கும் வனப்புடைக் கூந்தலுங்  கொண்டவள் என்று கவ...

உதிரிவெடி 3470

உதிரிவெடி 3470 (24 அக்டோபர் 2018) வாஞ்சிநாதன் ****************** காட்டில் மாடோட்டிய ஆண்டி பூமேயும் ஜாதி (5)   Loading...

விடை 3469

இன்று காலை வெளியான வெடி: கண்ணுக்குத் தெரிவதில், காதில், விழுந்த ராகம் அசைகிறது  (5) இதற்கான விடை:  காண்பதில் (பண் = ராகம்) சரி இன்றைய புதிர் குறித்து ஒரு குறள் வெண்பாவும் நாலடி  வெண்பாவும்: பண்ணோ டிணைந்தளித்தால் பாட்டும் இனித்திடுமே கண்வேண்டாம் தோய்ந்துணரக்  காண். காதில் விழுந்தது காட்சியெனும் விந்தையும் மேதினியில் உள்ள வெடியாம் உதிரியிதில்  சோதித்துப் பார்த்திடுவீர் சொற்றிறனை செய்பணியும் பாதித்தால் உங்களது  பாடு

உதிரிவெடி 3469

உதிரிவெடி 3469 (23 அக்டோபர் 2018) வாஞ்சிநாதன் ************************** கண்ணுக்குத் தெரிவதில், காதில், விழுந்த ராகம் அசைகிறது  (5) Loading...

விடை 3468

விடை 3468 இன்று காலை வெளியான வெடி: இறுதியற்ற மனிதனுக்குத் தலையில் இருப்பதும் நடுவில் இருப்பதும் (4) இதற்கான விடை: முடிவிலா = முடி (தலையில் இருப்பது), விலா (உடல் நடுவில் இருப்பது)

உதிரிவெடி 3468

உதிரிவெடி 3468 (22 அக்டோபர் 2018) வாஞ்சிநாதன் ************************ இறுதியற்ற மனிதனுக்குத் தலையில் இருப்பதும் நடுவில் இருப்பதும் (4) Loading...

விடை 3467

இன்று காலை வெளியான வெடி: திருடி சுதந்திரமின்றிச் சாப்பிடுவதில் கடைசியாக வந்தவள் (3)  இதற்கான விடை: கள்ளி = களி + ள்

Solution to Krypton 76

Today's clue: Original article after a turn contained in a trick (9)  Its solution: AUTHENTIC = Antic + U + THE Solved by the following  22 persons:  1)   6:48:55    Thirumoorthi Subramanian  2)   6:50:08    KB  3)   6:50:41    Rukmani Gopalan  4)   6:52:19    Natarajan B  5)   6:55:17    Kesavan  6)   6:57:15    Meenakshi Ganapathi  7)   7:00:23    Dhayanandan Bhaskar  8)   7:06:03    S.Parthasarathy  9)   7:30:20    Sundar Vedantham 10)   7:46:48    S P Suresh 11)   8:04:26    Ambika 12)   8:14:03    R.Narayanan. 13)   8:52:09    Sandhya 14)  10:06:29    S.R.BALASUBRAMANI...

உதிரிவெடி 3467

உதிரிவெடி 3467 (21 அக்டோபர் 2018) வாஞ்சிநாதன் ******************* திருடி சுதந்திரமின்றிச் சாப்பிடுவதில் கடைசியாக வந்தவள் (3)     Loading...

விடை 3466

இன்று காலை வெளியான வெடி: குழம்பு, குருமா முதலில் தவிர்த்தால் இப்படியாகும் தின்பண்டம் (6) இதற்கான விடை: இடியாப்பம்= இப்படியாகும் - கு (ருமா)

Solution to Krypton 75

Today's clue: Swamp, an area of sea, with tent exposed before (6) Solution: ENGULF Solved by the following 13 persons:  1)   6:22:52    Cruciverbalist  2)   6:35:00    Siddhan Subramanian  3)   6:40:59    Dhayanandan Bhaskar  4)   6:53:19    Sandhya  5)   7:01:07    Raja Rangarajan  6)   7:11:37    S.Parthasarathy  7)   7:13:29    S P Suresh  8)   7:16:56    Lakshmi Shankar  9)  10:00:08    KB 10)  10:02:20    Ambika 11)  10:22:26    Kesavan 12)  16:21:12    Govindarajan 13)  20:07:39    M.K.RAGHAVAN.

உதிரிவெடி 3466

உதிரிவெடி 3466 (20 அக்டோபர் 2018) வாஞ்சிநாதன் ************************* குழம்பு குருமா முதலில் தவிர்த்தால் இப்படியாகும் தின்பண்டம்  (6)   Loading...

விடை 3465

இன்று காலை வெளியான வெடி: வெளியூர் செல்பவர்களுக்குத் தடையாய் ஓராயுதம்  (3) இதற்கான விடை: சூலம்

உதிரிவெடி 3465

உதிரிவெடி 3465 (19 அக்டோபர் 2018) வாஞ்சிநாதன் *********************** வெளியூர் செல்பவர்களுக்குத் தடையாய் ஓராயுதம்  (3) Loading...

விடை 3464

இன்று காலை வெளியான வெடி ஆயுதமேந்தி ஆக்கியவன் இலக்கண நூலை எழுதியவன் (6) இதற்கான விடை: அகத்தியன் = அயன் + கத்தி 1 )  6:08:03    முத்துசுப்ரமண்யம் 2 )  6:09:09    கேசவன் 3 )  6:09:13    வி ன் கிருஷ்ணன் 4 )  6:10:02    எஸ்.பார்த்தசாரதி 5)  6:11:07    நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் 6)  6:12:03     KB 7)  6:12:25    சுந்தர் வேதாந்தம் 8)  6:13:17    நங்கந ல்லூர் சித்தானந்தம் 9)  6:14:03    மீ.பாலு 10 )  6:15:16    லதா 11)  6:15:50    மு.க.இராகவன். 12 )  6:17:21    விஜி ஶ்ரீனிவாசன் 13)  6:20:32    உஷா 14)  6:22:03    K.R.Santhanam 15 )  6:24:12    ஹரி பாலகிருஷ்ணன் 16 )  6:27:18    மாயா 17 )  6:30:52    அம்பிகா 18 )  6:32:17    பாலா ...

உதிரிவெடி 3464

உதிரிவெடி 3464 (18 அக்டோபர் 2018) வாஞ்சிநாதன் ************************ ஆயுதமேந்தி ஆக்கியவன் இலக்கண நூலை எழுதியவன் (6)   Loading...

விடை 3463

இன்று காலை வெளியான வெடி: தண்ணீரை வெளிவரச் செய் அல்லது உறிஞ்சிக் கொள்  (2) இதற்கான விடை: ஊறு   காவிரியில் வெள்ளம் வந்ததும் காய்ந்து போயிருந்த கொல்லைப் பக்கத்துக் கிணற்றில் தண்ணீர் ஊறத் தொடங்கியது. சுண்டலுக்குக்காக இரவில் தண்ணீர் ஊற்றி வைத்த கொண்டைக் கடலை காலையில் ஊறிப் பெருத்திருந்தது.

உதிரிவெடி 3463

உதிரிவெடி 3463 (17 அக்டோபர் 2018) வாஞ்சிநாதன் ********************* தண்ணீரை வெளிவரச் செய் அல்லது உறிஞ்சிக் கொள்  (2) Loading...

விடை 3462

இன்று காலை வெளியான வெடி: பல்லுடைந்த வேலி சுற்றியமைக்கப்பட்ட ஒரு மரம் நாட்டியம் (3) இதற்கான விடை:  ஆடல் = ஆல் + படல் -  பல் அறிவிப்பு: விடையளித்தவர் பட்டியல் சற்று தாமதமாக ஒன்பதரை மணிக்கு மேல் வெளிவரும்.

உதிரிவெடி 3462

உதிரிவெடி 3462 (16 அக்டோபர் 2018) வாஞ்சிநாதன் ********************** பல்லுடைந்த வேலி சுற்றியமைக்கப்பட்ட ஒரு மரம் நாட்டியம் (3)   Loading...

விடை 3461

இன்று காலை வெளியான வெடி: குட்டை நீர்நிலையில் காற்றில்லாமல் வள்ளி புகுந்தாள் (4) இதற்கான விடை: குள்ளம் = குளம் + வள்ளி - வளி

உதிரிவெடி 3461

உதிரிவெடி 3461 (15 அக்டோபர் 2018) வாஞ்சிநாதன் ************************* குட்டை நீர்நிலையில் காற்றில்லாமல் வள்ளி புகுந்தாள் (4) Loading...

விடை 3460

இன்று காலை வெளியான வெடி:   நாலு கால் கொண்டது இங்கே நடு உள்ளே வர நீங்கு (4) இதற்கான விடை: விலங்கு = விலகு + ங்

உதிரிவெடி 3460

உதிரிவெடி 3460 (14 அக்டோபர் 2018) வாஞ்சிநாதன்  ******************** Today's English clue is available in this page.  நாலு கால் கொண்டது இங்கே நடு உள்ளே வர நீங்கு (4)  Loading...

Solution to Krypton 74

Today's clue: Simply depend on the setter Its solution:  MERELY Solved by 18 persons:  1)  6:01:09    S.Parthasarathy  2)  6:01:18    S.R.BALASUBRAMANIAN  3)  6:04:01    KB  4)  6:07:33    Ravi sundaram  5)  6:14:05    Kesavan  6)  6:30:44    M.K.RAGHAVAN.  7)  6:41:32    Raja Rangarajan  8)  6:44:53    Meenakshi Ganapathi  9)  6:47:47    S P Suresh 10)  6:51:23    Ramarao 11)  7:23:26    NATHAN NT 12)  7:35:09    R.Narayanan 13)  7:51:02    Cruciverbalist 14)  8:57:39    Dhayanandan Bhaskar 15)  10:46:35   Lakshmi V 16)  12:21:12   Ambika 17)  15:01:00   Ramani Balakrishnan 18)  17:36:59   Anika...

விடை 3459

இன்று காலை வெளியான வெடி: வாயை மூடி பணி செய்ய முடியாதவன் முதலில் பாய்ந்து செய்ய வேண்டிய பணி மாற்றம் (4) இதற்கான விடை: பாடகன்   (கடன் = கடமை, செய்ய வேண்டிய பணி)

Solution to Krypton 73

Today's clue: Elaborate in trendy clever plan not completely consumed (9) Its solution INTRICATE = in  tric(k)  ate Solved by the following:  1)  6:03:10    S.Parthasarathy  2)  6:07:55    S.R.BALASUBRAMANIAN  3)  6:09:12    KB  4)  6:13:50    Meenakshi Ganapathi  5)  6:26:04    Kesavan  6)  6:38:14    Sundar Vedantham  7)  6:51:09    Thirumoorthi Subramanian  8)  6:54:13    Ravi sundaram  9)  7:05:14    Lakshmi Shankar 10)  9:13:48    Cruciverbalist 11)  9:25:20    S P Suresh

உதிரிவெடி 3459

உதிரிவெடி 3459 (13 அக்டோபர் 2018) வாஞ்சிநாதன் ********************* To see today's Krypton clue visit this page.   வாயை மூடி பணி செய்ய முடியாதவன் முதலில் பாய்ந்து செய்ய வேண்டிய பணி மாற்றம்  (4)  Loading...

விடை 3458

இன்று காலை வெளியான வெடி: வாசம் வீசும் அம்பில் செய்யுளை நீக்கிய அறிவில்லாதவன் குழம்பினான் (5)  இதற்கான விடை:   மணக்கும்   =  (பா) ணம் + மக்கு

உதிரிவெடி 3458

உதிரிவெடி 3458 (12 அக்டோபர் 2018) வாஞ்சிநாதன் ********************** வாசம் வீசும் அம்பில் செய்யுளை நீக்கிய அறிவில்லாதவன் குழம்பினான் (5)  Loading...

விடை 3457

இன்று காலை வெளியான விடை: அளவின்றிப் படிக்க  பிடிவாதம் பிடித்தும் அளவில் சிறியது  (5) (முதலில் அளவின்றிப் படிக்க  பிடிவாதம் பிடிக்கும் எளிமை என்று இருந்ததை மாற்றினேன் ). இதற்கான விடை:  அடக்கம்  (கைக்கு அடக்கமான  குறிப்புப் புத்தகத்தில்  எல்லோருடைய முகவரிகளையும் அவர் எழுதி வைத்திருந்தார்).

உதிரிவெடி 3457

உதிரிவெடி 3457 (11 அக்டோபர் 2018) வாஞ்சிநாதன் ******************** அளவின்றிப் படிக்க  பிடிவாதம் பிடித்தும் அளவில் சிறியது (5) Loading...

விடை 3456

இன்று காலை வெளியான வெடி: யாழ்ப்பாணத்து அழகி தேவலோகத்துக்காரி முன் சிலை செய் (6) இதற்கான விடை: வடிவானவள்

உதிரிவெடி 3456

உதிரிவெடி 3456 (10 அக்டோபர் 2018) வாஞ்சிநாதன்  ********************** யாழ்ப்பாணத்து அழகி தேவலோகத்துக்காரி முன் சிலை செய் (6) Loading...

விடை 3455

இன்று காலை வெளியான வெடி: வஞ்சியிடை வளைத்தேன் ஆ! தொட்டாலே மென்மை! (3) இதற்கான விடை: பஞ்சு = பசு + ஞ்  இரவில் புதிரைத் தயாரித்து காலை ஆறுமணிக்கு வெளிவர ஏற்பாடு செய்துவிட்டு வழக்கம் போல் சரியாக வெளிவந்திருக்கிறதா என்று காலையில் எழுந்து வலைப்பதிவில் எட்டிப் பார்த்தேன். காலை 6:01லிருந்து 6:02க்குள்  6 பேர் விடையைத் துள்ளியெழுந்துவந்து  அளித்துவிட்டீர்கள். ஆறரைக்குள் 28 பேர். ஒருவரும் தவறான விடையளிக்கவில்லை.     புதிருக்கு விடையளிக்கும் திறமை இப்படி அதிகரித்துவிட்டதால் இனி என்பாடு கஷ்டமாகிவிடும்.  வஞ்சி யிடையை வளைத்ததாய் வாஞ்சிநான் அஞ்சி வெளியிட்டேன் அப்புதிரை -- மஞ்சத்தில் துஞ்சி யெழுமுன்னே தூள்பறக்கப் போட்டுடைத்தீர் விஞ்சிடுமும் ஆற்றல் மிகுந்து.

விடை 3454

இன்று காலை வெளியான வெடி: செந்தில் நாடன் புதிராசிரியரை விட்டுப்பிடித்த மாகவி ஒருவன் (5)  இதற்கான விடை:  கடம்பன் = கம்பன் + நாடன் - நான் 

உதிரிவெடி 3454

உதிரிவெடி 3454 (8 அக்டோபர் 2018) வாஞ்சிநாதன் **************************  செந்தில் நாடன் புதிராசிரியரை விட்டுப்பிடித்த மாகவி ஒருவன் (5)  Loading...

Solution to Krypton 72

Today's clue: Circulate by chance, mail not of electronic kind  (10) Its solution MECHANICAL Solved by 11 persons:  1)  6:09:48    S.Parthasarathy  2)  6:18:01    KB  3)  6:28:35    Sundar Vedantham  4)  6:30:53    Ravi sundaram  5)  7:04:33    Raja Rangarajan  6)  8:10:26    S.R.BALASUBRAMANIAN  7)  8:32:40    S P Suresh  8)  9:30:29    NT NATHAN  9)  10:11:18   Ambika 10)  13:45:09   Rukmani Gopalan 11)  16:40:48   Bhuvana Sivaraman  

விடை 3453

இன்று காலை வெளியான வெடி இறுதி ஊர்வலம் முன்  பின் செல்ல ஈயாதவன் மனிதனே இல்லை (4) இதற்கான விடை: மிருகம் = கருமி + ம்  

உதிரிவெடி 3453

உதிரிவெடி 3453 (07 அக்டோபர் 2018) வாஞ்சிநாதன் ********************* For today's English clue see this page . இறுதி ஊர்வலம் முன்  பின் செல்ல ஈயாதவன் மனிதனே இல்லை (4) Loading...

Solution to Krypton 71

Today's clue: I am in a class being a person of exceptionally high creativity (6)  Its  solution:  GENIUS Solved by the following 23 persons:  1)  6:04:21    Ramarao  2)  6:05:14    KB  3)  6:06:46    S.Parthasarathy  4)  6:11:30    Sundar Vedantham  5)  6:21:02    Sandhya  6)  6:21:38    Kesavan  7)  6:47:46    Niranjan  8)  6:50:57    David  9)  7:21:49    Meenakshi Ganapathi 10)  7:26:28    S P Suresh 11)  7:42:24    Rukmani Gopalan 12)  7:49:54    Raja Rangarajan 13)  8:05:55    S.R.BALASUBRAMANIAN 14)  8:25:38    Dhayanandan Bhaskar 15)  8:43:59    Ravi sundaram 16)  8:45:58    Ambika 17)  10:02:32...

விடை 3452

விடை 3452 இன்றைய வெடி: பெருமாளுக்கு முன் பணி செய்பவன் பின் மரம் சுற்றுபவன் (5) இதற்கான  விடை: பிரம்மன் =மரம் + பின் 

உதிரிவெடி 3452

உதிரிவெடி 3452 (06 அக்டோபர் 2018) வாஞ்சிநாதன் **************** To see today's English clue visit this page. பெருமாளுக்கு முன் பணி செய்பவன் பின் மரம் சுற்றுபவன் (5) Loading...

விடை 3451

இன்று காலை வெளியான வெடி: இரண்டாக்கி நடுக்குளம் இறங்கி தாமதமாக வா (4) இதற்கான விடை: பிளந்து = பிந்து + ள சத்திமுத்தப் புலவர் பாடலில் பிளந்து என்ற சொல் ஓர் அழகான உவமையை ஒட்டி வருகிறது. தனியே குளிரில் வாடிய புலவர் ஆகாயத்தில் பறந்து செல்லும் நாரையைக் கண்டு தன் மனைவிக்குத் தூது சொல்லும் விதமாக அமைந்த பாடல். நாராய் நாராய் செங்கால் நாராய் பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்  ........ நாரையின்  அலகைப் பனங்கிழங்கைப் பிளந்தது போல் இருக்கும் என்று கவிஞர் கூறுகிறார்.  ஒப்பிட்டிப் பார்க்க வேண்டும் என்று இரண்டின் படங்களையும் வலையில் தேடினேன்: விக்கிபீடியாவில் கிடைத்த நாரை தினத்தந்தியில் கிடைத்த பனங்கிழங்கு இக்காலத்தில் திரைப்படங்களுக்கு "ஸ்ட்ராபெர்ரி கண்ணே" என்று பாட்டெழுதுபவர்கள் ஒரு நல்ல கண் மருத்துவரிடம் சென்றால் நல்லதாய்ப் போகும்.

விடை 3450

இன்று காலை வெளியான வெடி: ஒரு துளி குற்றமற்ற பாண்டியனுடன்  இடைத் தலைவன் எதிர்ப்பு (3) இதற்கான விடை:  திவலை   (வழுதி - வழு + லைவ)

உதிரிவெடி 3450

உதிரிவெடி 3450 (04 அக்டோபர் 2018) வாஞ்சிநாதன் ************************ ஒரு துளி குற்றமற்ற பாண்டியனுடன்  இடைத் தலைவன் எதிர்ப்பு (3) Loading...

விடை 3449

இன்று (03 அக்டோபர் 2018) காலை வெளியான வெடி: அரை அடி இடமில்லை துயரம் (4) இதற்கான விடை: அவலம் ( வலம் என்பது இடம் என்பதற்கு எதிர்ப்பதம்)

விடை 3448

இன்று காலை (2 அக்டோபர் 2018) வெளியான வெடி: உயர்ந்த சாதி என்றெண்ணுவோர் கடைப்பிடிப்பது அண்டாது அது விரட்டி வைத்த கெடுதல் (4)   இதற்கான விடை: தீண்டாமை = (கெடுதல்) தீமை + ண்டா ( அண்டாது - அது)

உதிரிவெடி 3448

உதிரிவெடி 3448 (02 அக்டோபர் 2018) வாஞ்சிநாதன் *********************** உயர்ந்த சாதி என்றெண்ணுவோர் கடைப்பிடிப்பது அண்டாது அது விரட்டி வைத்த கெடுதல் (4)   Loading...

விடை 3447

இன்று காலை வெளியான வெடி:  உருக்குலைந்த வழி பிறக்கும் சமயம் வெளியே எண்ணம் நிறைவேறவில்லை (4) இதற்கான விடை:  சிதைந்த = தை + சிந்த (னை)  

உதிரிவெடி 3447

உதிரிவெடி 3447 (1 அக்டோபர் 2018) வாஞ்சிநாதன் *********************** உருக்குலைந்த வழி பிறக்கும் சமயம் வெளியே எண்ணம் நிறைவேறவில்லை (4) Loading...