Skip to main content

விடை 3969


இன்று காலை வெளியான வெடி:
ராவணனுக்குத் தலைக்கொரு  தோட்டா வெடித்துச் சிதற வைப்பது நூலோர் தலையாயது என்பர் (6)


அதற்கான விடை: பகுத்துண்டு = பத்து + குண்டு


பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்  நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை
 
இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
உலகுக்கே பொதுமறையாகத் தனது திருக்குறளை அறத்தை முன்னிறுத்தி வடித்துத் தந்த திருவள்ளுவர் நூலோர் தொகுத்த அறங்களுள் எல்லாம் முதன்மை யானதாகக் குறிப்பிட்டுச் சுட்டுவது பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புக என்பதைத்தான்.
***********************
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை
(அதிகாரம்:கொல்லாமை 
குறள் எண்:322) 

 கிடைத்ததைப் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல், அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.
***********************
ராவணனுக்குத் தலைக்கொரு  தோட்டா வெடித்துச் சிதற வைப்பது நூலோர் தலையாயது என்பர் (6)

ராவணனுக்குத் தலைக்கொரு
= தலைக்கு ஒன்றெனில், பத்து தலைக்கு
= பத்து

தோட்டா = குண்டு

வெடித்துச் சிதற வைப்பது
= anagram of
பத்து+குண்டு
= பகுத்துண்டு

= நூலோர் தலையாயது என்பர்
***********************
நல்ல கட்டமைப்பு. நான் பெயிலுதான், தோட்டாவை குண்டு ன்னு மாத்தாம குலுக்கி குலுக்கி அலுத்து போனேன்