Skip to main content

Posts

Showing posts from May, 2019

விடை 3687

இன்று காலை வெளியான வெடி காற்றில் எதிர்ப்புறம் சாய  அவர் யயாதி இல்லை (4) இதற்கான விடை:  வயசாளி   = வளி + சாய இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளின் தொகுப்பை இங்கே சொடுக்கிக் காணலாம்.

உதிரிவெடி 3687

உதிரிவெடி 3687 (மே 31, 2019) வாஞ்சிநாதன் ********************** காற்றில் எதிர்ப்புறம் சாய  அவர் யயாதி இல்லை (4) Loading...

விடை 3686

இன்று காலை வெளியான வெடி: காசு எப்படியோ சேர்த்து கட்டியவள்  நலனுக்குக்  கடைப்பிடிக்கும் வழிமுறை (5) இதற்கான விடை:  சுகாதாரம்  இப்புதிருக்கு வந்த விடைகளின் விவரங்களை இப்பக்கத்திற்குச் சென்று பார்க்கலாம்.

உதிரிவெடி 3686

உதிரிவெடி 3686 (மே 30, 2019) வாஞ்சிநாதன் ******************** காசு எப்படியோ சேர்த்து கட்டியவள்  நலனுக்குக்  கடைப்பிடிக்கும் வழிமுறை (5) Loading...

விடை 3685

 இன்று காலை வெளியான வெடி வட்டமடி  அழகி இடையொடிய வட்டம்போடவை (3) இதற்கான விடை: சுற்று = சுழற்று - ழ (காலை ஏழேகால் மணிவரை  தவறுதலாக நான்கெழுத்து என்றே இருந்தது பின்னரே திருத்தினேன். அதனால் பலரும் சுழற்று  என்ற விடையளித்திருக்கின்றனர். என்னுடைய கவனமின்மையால் இது நேர்ந்தது. வருந்துகிறேன்). இன்று வந்த விடைகளின் பட்டியல் இங்கே.

விடை 3684

இன்று காலை வெளியான வெடி பெருத்த மாற்றம் புரிந்த முதல்வர் மறைந்தாரே காப்பாற்று (3)   இதற்கான  விடை:  ரட்சி  =  புரட்சி -  பு இன்று அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியல் இதோ

உதிரிவெடி 3684

உதிரிவெடி 3684 (மே 28, 2019) வாஞ்சிநாதன் ********************* பெருத்த மாற்றம் புரிந்த முதல்வர் மறைந்தாரே காப்பாற்று (3) Loading...

விடை 3683

இன்று காலை வெளியான வெடி: ஒளி கொடுத்து  கடைசியாய் வெளியே இருப்பது முழுதானதில்லை (4) இதற்கான விடை: பதுங்கு  = (கொடுத்) து  + பங்கு  இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியல் இங்கே

உதிரிவெடி 3683

உதிரிவெடி 3683 (மே 27, 2019) வாஞ்சிநாதன் *************** நேற்று விடையளித்தோர் பட்டியலை இணைக்க மறந்து, இப்போதுதான் சேர்த்திருக்கிறேன். ஒளி கொடுத்து  கடைசியாய் வெளியே இருப்பது முழுதானதில்லை (4) Loading...

விடை 3682

இன்று காலை வெளியான வெடி: இணையற்ற அமாவாசை வந்ததால் வெளிப்பட்ட ஒரு மிருகம் !  (2) இதற்கான விடை:  கரி (யானை) (இணையற்ற = ) நிகரிலா என்பதில் நிலா போய்விட்டால் அமாவாசைதானே! குகையிலே ஒளிந்து வாழ்ந்துகொண்டு  அமாவாசைக்கு மட்டும் வெளியே வரும் மிருகம் பற்றி புதிர் அமைக்க ஆசைதான், ஆனால்   நேஷனல் ஜியாக்ரபி தொலைக்காட்சியை நான் பார்ப்பதில்லையென்பதால், அது பற்றிய விஷய ஞானம் இல்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் அமாவாசை இருட்டில்  அட்டைக் கரியாகத் தோன்றும் யானைதான். இன்றைய புதிருக்கு அளிக்கப்பட்ட  விடைகள் இங்கே. அமாவாசையில் ஆனை வரியோடு  காட்டில் வளையவரும்  வேங்கை அரிதாகத் தென்படுமாம் ஆங்கு    நரியும் திரிவதற்கு அஞ்சும்  திசையறியா நேரம் கரிவரும் கானகத்தில்  காண் இதற்கு அர்த்தமெல்லாம் கேட்கக் கூடாது. சும்மா பொழுது போக்குக்காக  கரி, நரி, வரி என்று எதுகையாக சொற்களை யோசித்துக் கொண்டிருந்த போது ஒரு நேரிசை வெண்பாவைக் கோத்துவிடலாம் என்று  தோன்றியது. அவ்வளவுதான்.

Krypton 135

Krypton 135 (26th  May 2019) Vanchinathan *************** An hour after midnight people end fast as compensation for wrongdoings  (9)   Loading...

உதிரிவெடி 3682

உதிரிவெடி 3682 (மே 26, 2019) வாஞ்சிநாதன் ******************* இணையற்ற அமாவாசை வந்ததால் வெளிப்பட்ட ஒரு மிருகம் !  (2) Loading...       

விடை 3681

இன்று காலை வெளியான வெடி: தொடங்கியது ஆரபி இல்லையென்றாலும்  குழப்பியது ரிஷபம் (4) இதற்கான விடை:  துத்தம்  = ஆரம்பித்தது - ஆரபி; ரி என்ற  ரிஷபம் என்ற முழுப்பெயர் கொண்ட ஸ்வரத்திற்கு  தமிழிசையில் வழங்கப்பட்ட பெயர்,  துத்தம் இதற்கு அனுப்பப்பட்ட விடைகளின் பட்டியல் இதோ.

உதிரிவெடி 3681

உதிரிவெடி 3681 (மே 25, 2019) வாஞ்சிநாதன் ******************* தொடங்கியது ஆரபி இல்லையென்றாலும்  குழப்பியது ரிஷபம் (4) Loading...

விடை 3680

இன்று காலை வெளியான வெடி பிள்ளைகளா!  தலையில்லாமல் போர்வீரர் சூடுவது தேர்தல் நிர்ணயிக்கும் அரசியலமைப்பு (6)   இதற்கான விடை மக்களாட்சி = மக்களா + வெட்சி - வெ வெட்சிப்பூ அணிந்து போருக்குச் செல்லும் வழக்கமிருந்ததாக புறநானூற்றுச் செய்திகள் கூறுகின்றன. இன்று விடையளித்தவர்கள் பட்டியல் இங்கே.

உதிரிவெடி 3680

உதிரிவெடி 3680 (மே 24,  2019) வாஞ்சிநாதன் ******************** பிள்ளைகளா!  தலையில்லாமல் போர்வீரர் சூடுவது தேர்தல் நிர்ணயிக்கும் அரசியலமைப்பு (6)  Loading...

விடை 3679

இன்று கலை வெளியான வெடி: சுண்ணாம் பு  கட்டி டம்  கட்டப்பட்டுள்ள ஊட்டி (4) இதற்கான விடை:  புகட்டி (ஊட்டுதல் = புகட்டுதல்), புதிரிலேயே ஒளிந்துள்ள விடை. யார் யார் என்ன வாக்கு வித்தியாசத்தில் இத்தேர்தலில் வெற்றி பெற்றார்கள் என்பதைப் பார்க்கும் போது நடுவில் யார் யார் எத்தனை மணிக்கு விடையளித்தார்கள் என்பதை இங்கே சென்று பார்க்கலாம்.

உதிரிவெடி 3679

உதிரிவெடி 3679 (மே 23, 2019) வாஞ்சிநாதன் ********************* சுண்ணாம்பு  கட்டிடம்  கட்டப்பட்டுள்ள ஊட்டி (4) Loading...

விடை 3678

இன்று காலை வெளியான வெடி இரண்டாம்  வருடம் வந்த சமயம்  இலக்கியத்தில் பின்புலம் (4) இதற்கான விடை: மருதம் = மதம் + ரு மருதத்திணையில் பாடல்கள் வயல் சார்ந்த பின்புலத்தில்  ஊடல் பற்றியும், அன்னம், கொக்கு,  எருமை, கெண்டை இவற்றைக் கொண்டும் குறிப்பாக எழுதப்படும். இன்றைய புதிருக்கு விடையளித்தோர் பட்டியலைக் காண இதைச் சொடுக்கவும்.

உதிரிவெடி 3678

உதிரிவெடி 3678 (மே 22, 2019) வாஞ்சிநாதன் *****************  இரண்டாம்  வருடம் வந்த சமயம்  இலக்கியத்தில் பின்புலம் (4)   Loading...

விடை 3677

இன்று காலை வெளியான வெடி: அப்படியே இருக்கும்  என்றாலும் மூன்றாவது பெண் சுற்றி வளைத்தாள்  (3) நழுவி ஓடப் பார்ப்பதை தடுத்து நிறுத்த சுற்றி வளைக்கலாம்.  ஆனால் இந்த மாது அப்படியே இருப்பதை விடாமல்  பிடிக்க  எண்ணுகிறாள். மூன்றாவது "என்றாலும்" என்பது "றா" என்று புரிந்து கொண்டு  ஆர்வம் மாறாது பங்குகொண்டு அநேகமாக எல்லோரும் சரியான விடையைக் கண்டு பிடித்துவிட்டார்கள்.  

உதிரிவெடி 3677

உதிரிவெடி 3677 (மே 21, 2019) வாஞ்சிநாதன்  ********************  அப்படியே இருக்கும்  என்றாலும் மூன்றாவது பெண் சுற்றி வளைத்தாள்  (3) Loading...

விடை 3676

இன்றைய வெடி: எதற்காகச் செய்கிறோம் என்பதைப் பார்க்க எல்லோராலும் முடியும் (4) இதன் விடை: நோக்கம்  இன்று அளிக்கப்பட்ட விடைகளின் பட்டியல் காண இங்கே சொடுக்கவும் .

உதிரிவெடி 3676

உதிரிவெடி 3676 (மே 20, 2019) வாஞ்சிநாதன் ******************** எதற்காகச் செய்கிறோம் என்பதைப் பார்க்க எல்லோராலும் முடியும் (4) Loading...

விடை 3675

இன்று காலை வெளியான வெடி: குளிர்ந்த  நீராட  வந்தவனை ஓரங்களில் கட்டிவைத்த குற்றவாளி பெறுவது (4) இதற்கான விடை: தண்டனை = தண் + ட + னை ( நீரா ட   வந்தவ  னை ) இப்பக்கத்திற்குச் சென்று இன்றைய புதிருக்கு வந்த ஐம்பதுக்கும் மேலான  விடைகளைக் காணலாம்.

உதிரிவெடி 3675

உதிரிவெடி 3675  (மே 19, 2019) வாஞ்சிநாதன் ******************** குளிர்ந்த  நீராட  வந்தவனை ஓரங்களில் கட்டிவைத்த குற்றவாளி பெறுவது (4)   Loading...

விடை 3674

புறநானூற்றில் ஒரு பாடல் மோசிகீரனார் ,  தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைப் புகழ்ந்து பாடியது.  முரசு இல்லாதபோது அதை வைக்கும் கட்டிலில் அறியாமல் புலவர் களைப்பில் தூங்கிவிட அவருக்கு மன்னர் தண்டனை அளிக்காமல் அருகில் நின்று கவரி வீசியதைப் பற்றியது. ஞானக்கூத்தனின்  கவிதை இந்நிகழ்ச்சியை  அங்கதச் சுவையுடன் கூறுகிறது: தோழர் மோசிகீரனார் மோசிகீரா மகிழ்ச்சியினால் மரியாதையை நான் குறைத்ததற்கு மன்னித்தருள வேண்டும் நீ சொந்தமாக உனக்கிருக்கும் சங்கக்கவிதை யாதொன்றும் படித்ததில்லை நான் இன்னும் ஆனால் உன்மேல் அளவிறந்த அன்பு தோன்றிற்று இன்றெனக்கு அரசாங்கத்துக் கட்டிடத்தில் தூக்கம் போட்ட முதல்மனிதன் நீதான் என்னும் காரணத்தால் *************** இன்றைய  வெடி:  உடலின் ஒரு பகுதி தண்ணீர்த் துளி கொண்டிருப்பதைப் பற்றிய  கேலி? (5)   இதற்கான விடை: அங்கதம் இன்றைய புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளனைத்தையும் காண  இங்கே செல்லவும்.

உதிரிவெடி 3674

உதிரிவெடி 3674 (மே 18, 2019) வாஞ்சிநாதன் ******************** உடலின் ஒரு பகுதி தண்ணீர்த் துளி கொண்டிருப்பதைப் பற்றிய  கேலி? (5) Loading...

விடை 3673

இன்று காலை வெளியான வெடி உடலின் ஒரு பகுதி மன்மதனுக்குப்  பூக்களாலானது இதயத்தின் பகுதி  (4) இதற்கான விடை:  கணையம்.   மன்மதனுடைய கணை (அம்பு) மலர்களாலானது. இதயம் என்பதன் ஒரு பகுதி யம்    வயிற்றிலுள்ள, செரிமானத்துக்குத் தேவையானவேலை செய்கின்ற உறுப்பு,  கணையம். இந்தப் புதிருக்கு விடைக் கணைகளைத் தொடுத்தவர்கள் , இங்கே.

உதிரிவெடி 3673

உதிரிவெடி 3673 (மே 17, 2019) வாஞ்சிநாதன் ****************** உடலின் ஒரு பகுதி மன்மதனுக்குப்  பூக்களாலானது இதயத்தின் பகுதி  (4) Loading...

விடை 3672

இன்று காலை வெளியான வெடி: உடலின் பகுதி பாதி பளிங்கு  நீரில் வழுக்கிச் செல்லும் (4) இதன் விடை: விலாங்கு.   இம்மீன் பாம்பு போல்  நீண்டும், செதில்களில்லாததால் கையில் சிக்கினால் நழுவிக் கொண்டோடிவிடும் தன்மையுடையது. இதற்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 3672

உதிரிவெடி 3672 (மே 16, 2019) வாஞ்சிநாதன் ******************* உடலின் பகுதி பாதி பளிங்கு  நீரில் வழுக்கிச் செல்லும் (4)   Loading...

விடை 3671

இன்று காலை வெளியான வெடி: முன்னுரை  வெற்றி பெறாமல் உண்மையும் முழுதாக வரவில்லை (5 ) இதற்கான விடை: தோற்றுவாய்  இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.  

உதிரிவெடி 3671

உதிரிவெடி 3671 (மே 15, 2019) வாஞ்சிநாதன் ******************* முன்னுரை வெற்றி பெறாமல் உண்மையும் முழுதாக வரவில்லை (5) Loading...

விடை 3670

இன்றைய வெடி: மாறா விரோதத்தையொழித்து  பண்டிகை  கொண்டாட பாயா? (4) இதற்கு விடையைப் பின்வரும் பாடலிலிருந்து தோண்டி எடுத்திடுவீர் தொட்டு  தாண்டிப் பலகாதம் தாவிடும் மூளைக்கு வேண்டும்  புதிரால் விருந்தென்றோர்க்(கு)  ஆண்டிரண்டாய் தூண்டிடும் சிந்தனை தூய  தமிழ்வெடி பாண்டியா  ஆராய்ந்து பார். ஏனிப்படி வெண்பா என்று கேட்கிறீர்களா? அதெல்லாம் ஒன்றுமில்லை.முன்பொருமுறை நான் சொல்லியிருந்த வெண்பா வாட்ஸ ப் குழுவில்  பலரும் பங்கேற்று இட்ட வெண்பாக்களில் அபுல் கலாம்  ஆசாத்  தன்னுடைய பாக்களைத் திரட்டி   மின்னூலாக அளித்துள்ளார்.  அதைக் கேள்விப்பட்ட விளைவுதான். இன்று  வளைகுடா நாட்டில் எப்போது பணி பறிபோய்விடுமோ என்ற  இக்கட்டான நிலையைச் சித்தரிக்க அவர் எழுதியது: ஓலை  வரவெண்ணி ஒவ்வொருநாள் காத்திருக்கும் வேலை நிலவரம் வீற்றிருக்கும் -- பாலையினில் புற்களும் பூதமெனப் புன்னகைப்ப தாய்த்தோன்றும் நிற்கத் துணிவிருந்தால் நில்.       - --  அபுல் கலாம் ஆசாத் ஈற்றடி என்றும் இனிப்பு என்ற அந்த  மின்னூல் kindle  நூலாக அமேசானில் கிடைக்கிறது. வாங்கிப் படியுங்கள். சரி இன்றைய விடைகளின் பட்டியலை இங்கே காணலாம் :

உதிரிவெடி 3670

உதிரிவெடி 3670 (மே 14, 2019) வாஞ்சிநாதன் ******************** மாறா விரோதத்தையொழித்து  பண்டிகை  கொண்டாட பாயா? (4) Loading...

விடை 3669

இன்று காலை வெளியான வெடி: உயர்வான கல்  ஆனால் மத்யம ரகம்,  இறுதியில் சிறந்த கலவையானாலும்! (5)   இதற்கான விடை: மரகதம் = ம (த்யமம்)  + ரகம் + (சிறந்) த நேற்றைய  ஆங்கிலப் புதிரோடு இதையும் வெளியிடத் திட்டமிட்டிருந்தேன். கடைசி நேரத்தில் வேண்டாமென்று ஒரு நாள் தாமதித்து விட்டேன். அந்த ஆங்கிலப் புதிர் பற்றி  அறிய இங்கே செல்லவும். இன்றைய புதிருக்கும் 55க்கு மேற்பட்ட சரியான விடைகள் வந்துள்ளன. இங்கே சென்று பார்க்கவும்.

உதிரிவெடி 3669

உதிரிவெடி 3669 (மே 13, 2019) வாஞ்சிநாதன் ******************* உயர்வான கல்  ஆனால் மத்யம ரகம்,  இறுதியில் சிறந்த கலவையானாலும்! (5)  Loading...

Solution to Krypton 131

Today's clue: It could be lame red or green (7)   It solution: EMERALD (anagram of 'lame red'). When can red appear  green?  There is an interesting story about a person driving a car who sped ignoring red. When questioned his defence was  that the red light looked like green  due  to Doppler effect. Read   Yakov Perelman's Physics for Entertainment (final 13th edition published in 1936)  calculating the possibilities for the validity of the driver's claim. Here is the list of all the submitted solutions for today's clue.

விடை 3668

இன்று காலை வெளியான வெடி உரசிய பிறை தேய்ந்த  தொழிற்கூடம் (4) இதற்கான விடை:  பட்டறை = பட்ட + றை இப்புதிருக்கு 50க்கும் மேற்பட்ட சரியான விடைகள் வந்துள்ளன. மொத்த விடைகளையும் காண    இங்கே சொடுக்கவும் .

விடை 3667

இன்று காலை வெளிவந்த வெடி முதலில் தந்தையை வெளியே சென்று பார் அவர் பின் வந்தவர் (4) இதற்கான விடை: சந்ததி = சந்தி (சென்று பார்) +  த இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளை இந்த பக்கத்திற்குச் சென்று பார்க்கலாம்.

உதிரிவெடி 3667

உதிரிவெடி 3667 (மே 11, 2019) வாஞ்சிநாதன் *******************  முதலில் தந்தையை வெளியே சென்று பார்  அவர் பின் வந்தவர்  (4) Loading...

விடை 3666

இன்று காலை வெளியான வெடி: எல்லாம் கப்பல் கவிழ்ந்த துயரத்துடன் கட்டிய நினைவுச் சின்னம் (5) இதற்கான விடை:  சதுக்கம் = ச(கலம்)  + துக்கம் இப்புதிருக்கு அனுப்பட்ட விடைகளின் பட்டியல் இங்கே.  

உதிரிவெடி 3666

உதிரிவெடி  3666 (மே 10, 2019) வாஞ்சிநாதன் ****************** எல்லாம் கப்பல் கவிழ்ந்த துயரத்துடன் கட்டிய நினைவுச் சின்னம் (5) Loading...

விடை 3665

இன்று காலை வெளிவான புதிர் ஒரு பொறியில்லாமல் கண்டவன்  முன்னே மாட்டைக் கட்டிய புருஷன் (4) இதற்கான விடை:   ஆடவன் =  ஆ + கண்டவன் - கண் இந்த வெடிக்கு எல்லோரும் அனுப்பியிருக்கும் விடைகளை இங்கே காணலாம். 

உதிரிவெடி 3665

உதிரிவெடி 3665 (மே 9, 2019) வாஞ்சிநாதன் ******************* ஒரு பொறியில்லாமல் கண்டவன்  முன்னே மாட்டைக் கட்டிய புருஷன் (4) Loading...

விடை 3664

இன்று காலை வெளியிடப்பட்ட வெடி: கடவுளிடத்தில் அரசன் நீங்கிப் பெற்ற ஆயுதம் (2) இதற்கான விடை:  வில் = கோவில் - கோ இன்று பெறப்பட்ட  அனைத்து விடைகளுமடங்கிய பட்டியல் கோவிலுக்குச் சென்றும் குறுக்கெழுத்தைச் செய்வதைப் பாவிநான் எண்ணினேன்  பல்விதமாய் --  நாவினிக்கும்  சொற்களைத் துண்டாக்கிச் சுற்றி வெடியமைத்தேன்  கற்பனையில் கண்டேன் சுகம்.

உதிரிவெடி 3664

உதிரிவெடி 3664 (மே 8, 2019) வாஞ்சிநாதன் ****************** கடவுளிடத்தில்  அரசன் நீங்கிப் பெற்ற ஆயுதம் (2)   Loading...

விடை 3663

இன்றைய வெடி: முந்தானையா, ரவிக்கை ஓரத்தில் ஆண்கள் அணிந்து கொள்வது? (5) இதற்கான விடை: தலைப்பாகை = தலைப்பா + கை தலைப்பாகையால் ஒரு வசதி உண்டு, தலையில் எண்ணெய் தடவவோ,  படிய வாரிக் கொள்ளவோ அவசியமில்லை. அதைப் பற்றி ச் சிக்கனமாக மூன்றடி வெண்பா. முந்தானை  பின்னாலே மோகித்துச்   செல்லாமல் வந்தாராம் கைசேர்த்து   வாராத்  தலைமறைக்க  இந்தப் புதிர்வழி இன்று. விடையளித்தவர்கள் பட்டியலைப் பார்க்க  இதைச் சொடுக்கவும். ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடுகளில் குறுக்கெழுத்துப் புதிர்களை அளித்து வரும் சதுர்வாசி (Gridman) கோடை 2019 சரவெடி பற்றி அவருடைய  ஆழ்ந்த கருத்துகளை விவரமாக அளித்துள்ளார்.   இங்கே சென்று    கருத்துரைப் பகுதியில் அதைப் படிக்கலாம். அவரைப் போலவே ஹிந்து நாளேட்டிற்குப் புதிரளித்தும், IPL போன்று  IXL என்ற பெயர்கொண்ட ஆங்கிலக் குறுக்கெழுத்துப் போட்டியில் கோப்பை வென்றவருமான ராம்கி கிருஷ்ணன்  உதிரிவெடிப் பக்கங்களுக்கு கடந்த பத்து நாட்களாக  அடிக்கடி வந்து  பங்கேற்று வருகிறார். அவர்கள் இருவருக்கும் நன்றி.

உதிரிவெடி 3663

உதிரிவெடி 3663 (மே 7, 2019) வாஞ்சிநாதன் ****************  முந்தானையா, ரவிக்கை ஓரத்தில் ஆண்கள் அணிந்து கொள்வது? (5) Loading...

விடை 3662

இன்றைய வெடி: மிகுதி உடம்பு முதன் முதல் பிரிந்தது (4) இதற்கான விடை:  கூடுதல் கூடு = உடம்பு  தல் = முதல் - மு இதற்கு அனுப்பட்ட  விடைகளை இப்பக்கத்தில் காணலாம். கோடைச் சரவெடிக்கு விடை வெளிவந்துவிட்டது.

கோடை 2019 சரவெடிக்கான விடைகள்

இதற்கு முன் கடைசியாகத் தென்றல் பத்திரிகைக்கு டிசம்பர் 2012 இல் சரவெடி செய்தேன்.  இதுவும் 2009இல் வந்த கட்டவலையிலிருந்து சிலவற்றை வைத்துக் கொண்டு பலவற்றை மாற்றி அமைத்தது. சுமார் 230 சரவெடிகளை உருவாக்கிய பின்னர் நான்காண்டுகள் புதிர்களை நிறுத்திவிட்டு  உதிரிவெடியாகச் செய்வது என்று தொடங்கினேன்.  (உதிரிவெடிக்கு வரிசை எண் 3000 த்திலிருந்து தொடங்கினேன். சரத்தையெல்லாம் சுமார் 14 உள்ளதாகக் கணக்கிட்டு) வாசகர்களுக்கு உதிரிவெடிதான் சுவாரசியமாக இருக்கும் என்பது இந்த இரு பாணிகளையும்  செய்த பிறகு தோன்றுகிறது. உதாரணமாக மூன்றெழுத்துச் சொற்கள் கட்டத்தில் முதலெழுத்தும் கடைசியெழுத்தும் மற்றதிலிருந்து வந்துவிடுவதால் யோசிக்காமல் விடை கிடைத்துச் சப்பென்றாகி விடும். எனவே நான் வலைக்கட்டப் புதிருக்கு அதிகம் செல்ல வேண்டாமென்று எண்ணுகிறேன்.  பார்ப்பதற்கு கட்டங்கள் நேர்த்தியாக  கண்ணுக்கு அழகாக இருப்பது என்னவோ உண்மைதான்.  உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள். ******************* 2019 கோடைச் சரவெடிக்கான விடைகள் விளக்கத்துடன்: குறுக்காக  1. முற்றுப் பெறா வானம் அடங்கி ஒரு மொழி தோன்றியது (5)   உருவானது = உருது +

Solution to Krypton 129

Today's clue: Left sibling out? At home, actually! (8) Its solution:  SINISTER  We see in Hollywood movies westerners casually using right or left hand without any  thought when giving or receivings things from others whereas in India we are  conditioned to avoid using our left hand. But West was also like that if we can go by the language. The word RIGHT means correct as well one particular side. Printers use the word RECTO to refer to the right hand side page and recto and rectitude have the same same root. And left is considered evil, sinister.  I am curious to know the reasons for assigning the words rightist and leftist to specific political leanings. Am I right in assuming that there a sinister design behind this? *************** If my guess is right,  the person with name Ramki Krishnan who has started participating recently in both this English and Tamil puthir  must be the Crossword Champion for three years in a row. I am glad my attempts in making Engli

விடை 3661

இன்றைய வெடி: தங்கத்தை விட இரும்பு தன்னை உயர்மதிப்புடையதாகக் கருதலாம் (3) இதற்கான விடை: புதன் இன்றைய புதிருக்கு விடைகள் அனுப்பியவர்கள். [ நேற்றைய சரவெடிக்கு விடைகளை இன்னமும் 24 மணி நேரம் அவகாசம் இருக்கிறது. இதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் விடைகளை அனுப்பியுள்ளனர்.]

உதிரிவெடி 3661

உதிரிவெடி 3661 (மே 5, 2019)   வாஞ்சிநாதன் *****************   தங்கத்தை விட இரும்பு தன்னை உயர்மதிப்புடையதாகக் கருதலாம் (3) Loading...

Solution to Krypton 128

Solution to Krypton 128 Today's clue: See ing Red, I ent ered an enclosed component (10) Its solution: INGREDIENT  (Today is the closest to May Day for Krypton to have a clue somewhat related to it!)  Click this to see the list of submitted solutions.  

கோடைச் சரவெடி -- மே 2019

கோடைச் சரவெடி (மே 2019) வாஞ்சிநாதன் *************** இச்சரவெடிக்கு விடைகள் கண்டுபிடிக்க மூன்று நாட்கள் அவகாசம்.  மே 6ஆம் தேதி திங்கள் இரவு 9 மணிக்கு விடைகளும், விடையளித்தவர்கள் பட்டியலும் வெளியிடப்படும்.  விடைகளைப் படிவத்தில் ஒரே பத்தியாக அதன் எண்ணுடன் எழுதவும்.     குறுக்காக  1. முற்றுப் பெறா வானம் அடங்கி ஒரு மொழி தோன்றியது (5)  4. வாளை வைக்க  கரிகாலனுக்கு  தலைநகரில் பாதி தேவைப்படும் (2)  6. பிரிக்க முடியாத நூல் பிணைப்பும் மாட்டும் (4)  7. பெண் மரம் வெட்டி சாவு அவ்விடம் சூழ்ந்தது  (4)  9. புரட்டா வைகாசி  தொடங்கி  மார்கழியில் பாடப்படும் (5) 12. மனைவி முதல் மாதம் இடை சூழ்ந்த  மார்கழியில் பெய்வது (4) 14. பெண்பாதி கொண்ட ஆண்மகனே! கடவுளே! (4) 17. ஒட்டு ஒப்பானது (2) 18.  ஒரு செயலைத் தேர்ச்சியுடன்  ஆனால் குழப்பமாகப் படம் திற (5) நெடுக்காக 1.  இதையடைந்தவர் மேலே செல்வதில்லை (3) 2. செய்வேனென்ற கூற்று  குழப்பத்தில் வழக்கு தொடர்ந்தவர்  முனை வெட்டி நறுக்கு  (5) 3. கப்பல் புறப்படுமிடத்தில் முகமிழந்து பிரிவு (2) 4. சாப்பிடுவதற்கு அம்மா சென்றபின்  உன் அண்ணனை . . . (3) 5. பொருத்தமான யான

விடை 3660

இன்று காலை வெளியான வெடி: ரகசியமாய் வேலை செய்பவர் பாத்திரத்திற்கு முன்னே இருக்கின்றன (4) இதற்கான விடை:  உளவாளி இன்றைய புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளனைத்தையும் இங்கே காணலாம். நினைவிருக்கட்டும்: நாளைகாலை உதிரிவெடி வராது. தொடர்ந்து முழங்கும் கோடையிடியாக  ஒரு சரவெடி.   சென்னையைப் புயல் தாக்கவில்லையே மழை கொட்டவில்லையே என்ற வருத்தத்திலிருப்பவர்களுக்கு இந்த சரவெடி.  சீக்கிரமாக எழுந்து வாருங்கள் 5.55 மணிக்கே வெடி வெளிவரும்! அடுத்த சரவெடிக்குப் பல மாதங்கள் காத்திருக்க வேண்டும். புதிதாக புதிர்ப்பக்கம் வருபவர்களுக்கு:  இங்கு தினம் காலையில் 6 மணியளவில் (பெரும்பாலும் 6.15க்குள்) புதிர் அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் அதற்கான விடையைப்  புதிரின் கீழுள்ள படிவத்தில் பெயரோடு  அளிக்கலாம். தவறென்று பின்னர் தோன்றினால் மீண்டும் வேறு விடையை எத்தனை முறையும் வந்து மாற்றியளிக்கலாம். இரவு 9 மணியளவில் விடையும் அளிக்கப்பட்ட எல்லாவிடைகளும் (சரியோ, தவறோ) காலவரிசைப்படி  வெளியிடப்படும். புதிர் பற்றிய கருத்துகளை விவாதங்களை இரவு 9 மணி விடை தெரிவிக்கும் பகுதியில் இடுவது நல்லது. பழைய புதிர்களைத்

உதிரிவெடி 3660

உதிரிவெடி 3660 (மே 3, 2019) வாஞ்சிநாதன் ****************** ரகசியமாய் வேலை செய்பவர் பாத்திரத்திற்கு முன்னே இருக்கின்றன (4) Loading...

விடை 3659

இன்று காலை வெளியிட்ட வெடி: ஒரு மாதத்திற்குள் நகத்தின் முனை வெட்டி ரவா  சேர்த்தவர் பெங்களூர்க்காரராக இருக்கலாம் (6) அதற்கான விடை: மாநகரவாசி = மாசி + நக (ம்)  + ரவா இன்றைய புதிர்க்கு வந்த விடைகளை இங்கே சென்று காணுங்கள்: https://docs.google.com/spreadsheets/d/1IUo9S2mjSfnGINC2JTbLabp1MsDiHdtq8l8haOS4K6g/edit?usp=sharing புதியதாக புதிர்ப்பக்கம் வருபவர்களுக்கு:  இங்கு தினம் காலையில் 6 மணியளவில் (பெரும்பாலும் 6.15க்குள்) புதிர் அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் அதற்கான விடையைப்  புதிரின் கீழுள்ள படிவத்தில் பெயரோடு  அளிக்கலாம். தவறென்று பின்னர் தோன்றினால் மீண்டும் வேறு விடையை எத்தனை முறையும் வந்து மாற்றியளிக்கலாம். இரவு 9 மணியளவில் விடையும் அளிக்கப்பட்ட எல்லாவிடைகளும் (சரியோ, தவறோ) காலவரிசைப்படி  வெளியிடப்படும். புதிர் பற்றிய கருத்துகளை விவாதங்களை இரவு 9 மணி விடை தெரிவிக்கும் பகுதியில் இடுவது நல்லது. பழைய புதிர்களைத் தோண்டியெடுக்க பொதுவாக "தேடு" என்ற இடத்தில் வரிசை எண்ணை (3150 லிருந்து  ஏதாவது ஓர் எண்ணை இட்டுத் தேடலாம்). உதாரணமாக " 3235   -விடை"  என்றால் 32

உதிரிவெடி 3659

உதிரிவெடி 3659 (மே 2, 2019) வாஞ்சிநாதன் **************** ஒரு மாதத்திற்குள் நகத்தின் முனை வெட்டி ரவா  சேர்த்தவர் பெங்களூர்க்காரராக இருக்கலாம் (6) Loading...

விடை 3658

இன்று காலை வெளியான வெடி: அம்மாடி ஒன்றைவிட்டொன்று கழி சுழற்றித் தொடரும் (5) அம்மாடி ஒன்றைவிட்டொன்று = ம் டி கழி = நீக்கு விடை:  நீடிக்கும்  (தொடரும்) சென்னையில் ஒரு வாரமாகப் புயல் வரப்போகிறது என்று  சொல்லிக் கொண்டிருந்தார்கள். நேற்று தொடங்கி மழை கொட்டப்போகிறது என்பதெல்ல்லாம்  நடக்கவில்லை.  இன்றைய விடையோடு , அது தொடர்பாக இவ்வெண்பா: வாடிக் களைப்பூட்டும் வற்றவைக்கும் ஏரியினை நீடிக்கும்  இவ்வறட்சி  நேற்றோ   டொழியுமென்றார். பொய்யாகிப் போன புயலதால்  கிட்டவில்லை வெய்யிலில் பெய்யும் மழை. இன்றைய வெடிக்கு வாசகர்கள் அளித்த விடைகளின் தொகுப்பை இப்பக்கத்தில் காணலாம்.

உதிரிவெடி 3658

உதிரிவெடி 3658 (மே 1, 2019) வாஞ்சிநாதன் ****************** இன்று மேதின விடுமுறையில்  ரூம்  ஏதும் போடாமல்   வீட்டிலேயே உட்கார்ந்து  யோசித்து   அதிக நேரம் செலவழித்து புதுவகையான புதிர்  செய்யப்போகிறேன்.  அது வரும் சனிக்கிழமையில்  கோடை விடுமுறை விசேஷப் புதிராக வரும். உங்கள் பிரதிக்கு எந்த முன்தொகையோ பின்தொகையோ  செலுத்தாமல் சனிக்கிழமையை எதிர் நோக்குங்கள்! அம்மாடி ஒன்றுவிட்டொன்று கழி சுழற்றித் தொடரும் (5) Loading... .