Skip to main content

விடை 3323

இன்று (30/05/2018) காலை வெளியான வெடி:
ஒரு  பாத்திரத்தை எறிந்த ஒற்றனிடம் இருக்கின்றன (2)
இதற்கான விடை:   உள  (வாளி)
---------------------
இந்த வலைப்பதிவின்  கருத்துரையில் விவாதங்கள் குறைவாகவே உள்ளன.
வாட்ஸப் குழுவில் உதிரிவெடி வந்தபோது நிறைய கருத்துரைகள் சுவரசியாமாகப் பரிமாறிக் கொண்டோம், அக்குழுவுக்கு புத்துயிர் அளித்தால் நன்றாக இருக்குமே என்று மு க ராகவன் தீவிரமாகவும் வேறு சிலர் அவ்வப்போதும் கேட்டு வருகிறார்கள். அப்படி வாட்ஸப் குழு தொடங்க உங்கள் விருப்பம் அறிய விழைகிறேன். (வலைப்பதிவில் புதிர் வந்து கொண்டேயிருக்கும். அதில் மாற்றமிருக்காது).


இரண்டு முக்கியமான விதிகளைக் கடைப்பிடித்தால்
இது பயனுள்ளதாயிருக்கும், தொல்லைகளின்றியும் இருக்கும்:

1. இக்குழுவில் இரவு 9 மணி வரை விடையை வெளியிடக் கூடாது. அதிகக் குறிப்புகள் அளிக்கக் கூடாது.

2. அநாவசியமாக அரசியல் செய்திகள், பிறந்த நாள், பண்டிகை நாள் வாழ்த்து,
சாகச வீடியோக்கள், சுய முன்னேற்ற ஊக்கமொழிகள்,
 உபயோகமான தகவல் என்று புதிருக்குத் தொடபற்ற விஷயங்கள் எதையும் அனுப்பக் கூடாது.

கீழ்க்கண்ட படிவத்தில் உங்கள் விருப்பத்தைத் தெரிவியுங்கள்.
முன்பே இத்தகைய குழுவில் இருந்தவர்களின் அலைபேசி எண்கள் என்னிடம் இருக்கும். அதை வைத்து உருவாக்கலாம். புதியவர்கள் எண்ணை அளிக்க வேண்டியிருக்கும்.

https://goo.gl/forms/9bF5wmJQbbjKDZ1r1

Comments

Raghavan MK said…


A peek into today's riddle .........👇🏽

" ஒரு  பாத்திரத்தை எறிந்த ஒற்றனிடம் இருக்கின்றன " (2)

முதலில் ஒற்றன் என்பதற்கு வேவுகாரன், உளவாளி எனும் சொற்களில், உளவாளியைத் தேர்ந்தெடுத்தேன்.
பின்னர் உளவாளியில் உள்ள பாத்திரமே விடையென்றென்னி _வாளி_ என்று பதிவிட்டேன்.

ஆனால் சிறிது நொடியில் என் விடை தவறென உணர்ந்தேன்!

வெடியில் உள்ள "பாத்திரத்தை எறிந்த ",என்பதை கவனியாமல் விட்டதால் நேர்ந்த பிழை!
உடனே உளவாளியில் உள்ள வாளியை எறிந்து விட்டு " உள " ( இருக்கின்றன )என்ற சரியான விடையை உடனே அனுப்பினேன்.!!

பாஸாகிவிட்டேன்!! 😄
Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (38):

1) 6:01:06 ராமராவ்
2) 6:02:48 நங்கநல்லூர் சித்தானந்தம்
3) 6:02:52 கி.பாலசுப்ரமணியன்
4) 6:03:34 ரமணி பாலகிருஷ்ணன்
5) 6:04:11 எஸ்.பார்த்தசாரதி
6) 6:10:36 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
7) 6:12:43 சதீஷ்பாலமுருகன்
8) 6:15:06 ஆர்.நாராயணன்
9) 6:15:10 ரவி சுப்ரமணியன்
10) 6:15:45 முத்துசுப்ரமண்யம்
11) 6:16:42 K.R.Santhanam
12) 6:16:50 ராதா தேசிகன்
13) 6:21:46 சங்கரசுப்பிரமணியன்
14) 6:23:32 மு.க.இராகவன்.
15) 6:23:38 மீனாக்ஷி கணபதி
16) 6:29:29 கேசவன்
17) 6:32:05 நாதன் நா தோ
18) 6:33:01 சித்தன்
19) 6:37:26 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
20) 6:45:19 ரா. ரவிஷங்கர்..
21) 6:57:50 ராஜி ஹரிஹரன்
22) 7:03:36 அம்பிகா
23) 7:11:52 வித்யா ஹரி
24) 7:28:54 எஸ் பி சுரேஷ்
25) 7:47:04 வி ன். கிருஷ்ணன்
26) 8:06:41 தி பொ இராமநாதன்
27) 8:11:49 மாலதி
28) 8:17:06 மீனாக்ஷி
29) 8:33:25 மு க பாரதி
30) 10:47:18 சுபா ஸ்ரீநிவாசன்
31) 12:24:54 தேன்மொழி
32) 12:28:38 கு.கனகசபாபதி, மும்பை
33) 12:31:04 லட்சுமி மீனாட்சி , மும்பை
34) 18:22:00 பாலா
35) 19:10:22 விஜயா ரவிஷங்கர்
36) 20:05:38 வானதி
37) 20:33:07 ராஜா ரங்கராஜன்
38) 21:01:04 மீ கண்ணன்
**********************
I would prefer to continue with the Blog.
Unknown said…
Blog is better , அளவுக்கு மிஞ்சினால் ....

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்