Skip to main content

விடை 3294

இன்று  (01/05/2018) காலை வெளியான  வெடி:
ஒரு துளி குருதி  கொண்ட உடல் பார் (3)
இதற்கான விடை:  மேதினி

கோடை தகிக்கத் தொடங்கிவிட்டது. மே மாதம் ஆரம்பித்துவிட்டது.
சிறுவயதில் வீட்டிற்கு எப்போதும் என்தந்தையைப் பார்க்க வரும் தோழர்கள்
பள்ளிவிடுமுறையான கோடை நாளில் ஊர்வலத்துக்கு என்னையும் அழைத்துப் போவார்கள்.  இதே வெயிலில்தான் ஏழெட்டு வயதில் தஞ்சைத் தெருக்களில் புரட்சி ஓங்குக, உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்று நானும் கூக்குரலிட்டுச் சென்றது நினைவுக்கு வருகிறது. இன்று குளிர்ப்பதன அறையிலேயே இருக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

சோதி  நிறைந்து சுடர்விடும் செங்கதிரோன்
மேதினத்தில் மேதினியைக் காத்து

Comments

Ambika said…

சரியான‌ விடை அளித்தவர்கள் (25):

1) 6:03:17 எஸ்.பார்த்தசாரதி
2) 6:03:42 முத்துசுப்ரமண்யம்
3) 6:03:49 ரவி சுப்ரமணியன்
4) 6:15:09 ஆர்.நாராயணன்.
5) 6:15:15 ராஜி ஹரிஹரன்
6) 6:15:39 லதா
7) 6:17:33 வானதி
8) 6:18:31 சங்கரசுப்பிரமணியன்
9) 6:27:28 ராமராவ்
10) 6:35:05 நங்கநல்லூர் சித்தானந்தம்
11) 6:40:06 மு.க.இராகவன்.
12) 7:14:31 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
13) 7:36:07 சதீஷ்பாலமுருகன்
14) 7:54:45 அம்பிகா
15) 8:15:26 கி.பாலசுப்ரமணியன்
16) 8:35:46 பானுபாலு
17) 9:13:40 மைத்ரேயி சிவா
18) 9:41:11 கு. கனகசபாபதி, மும்பை
19) 10:25:06 ருக்மணி கோபாலன்
20) 10:55:46 சுபா ஸ்ரீநிவாசன்
21) 11:31:29 மு க பாரதி
22) 12:40:53 கேசவன்
23) 13:02:07 ரமணி பாலகிருஷ்ணன்
24) 16:42:02 செந்தில் சௌரிராஜன்
25) 16:44:40 சாந்திநாராயணன்
************************
Raghavan MK said…


மேதினியில் மேதினம் இன்று!

உதிரிவெடியுடன் வாழ்த்துவோம், நன்று!!

தேவாரம் பாடல் ஒன்றைப் பாடிக்கொண்டே
சென்றபோது,

விடை காண ஔவையின் நல்வழி அருள் புரிந்தது.

தேவாரம்:-
பொன்னார் *மேனி* யனே புலித்
தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்
கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழ
பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே!


நல்வழி :-

*மேதினி* யில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்!

-- -- -- - -ஒளவையார்

ஒரு அருமையான வெடி, இன்று!
Vanchinathan said…
"பொன்னார் மேனியனே" --இது பொன்னியின் செல்வனில் சேந்தன் அமுதன் சிறையில் எப்போதும் பாடிக் கொண்டிருக்கும்பாட்டல்லவா?

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்