இன்று (02/05/2018) காலை வெளியான வெடி
காஞ்சியில் சேனாதிபதி பிற்காலத்தில் பெரிய தொண்டாற்றவில்லை (5)
இதற்கான விடை: பரஞ்சோதி.
காஞ்சியிலிருந்து ஆண்ட நரசிம்ம வர்ம பல்லவனின் சேனாதிபதியாக இருந்தவர் பரஞ்சோதி(யார்).இவர் மூலம் சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசியைத் தோற்கடித்தார் நரசிம்மர். பரஞ்சோதியார்தான் சாளுக்கியத் தலைநகர் வாதாபியிலிருந்து பிள்ளையாரைக் கொண்டுவந்து தமிழ்நாட்டுக்கு
அறிமுகப்படுத்தியது என்கிறார்கள். (வாதாபி கணபதிம் என்று கர்நாடக இசைக் கச்சேரிகளில் பாடப்படுவது இந்த கணபதிதானோ?)
வென்று காஞ்சிக்குத் திரும்பியபின் பதவியைத் துறந்து சைவசமயத்தில் முற்றிலும் ஆழ்ந்தார் அவர். சிறுதொண்டர் என்ற பெயரில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரானார். இவருக்கு சிவபெருமான்
கொடுரமான கட்டளையிட்டார். பரமசிவன், பரஞ்சோதியாயிருந்த சிறுதொண்டரை, பரமசோதித்தார். இதயபலவீனமானவர்களுக்குத் தாங்காது என்பதால் நான் அதைச் சொல்ல விரும்பவில்லை.
அது சரி, சிறுதொண்டரா? சிறுத்தொண்டரா?
சிறுபிள்ளை, சிறுகுழந்தை, சிறுசேரி (சென்னையருகில் இருக்கிறது), என்பதையெல்லாம் பார்க்கும்போது சிறுத்தொண்டர் என்று எழுதுவது சரியில்லையோ என்று தோன்றுகிறது.
கருத்துகளுக்கும் விவாதங்களுக்கும் இங்கே செல்லவும்.
Comments
1) 6:01:53 லக்ஷ்மி ஷங்கர்
2) 6:01:58 முத்தூப்ரமண்யம்
3) 6:03:25 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
4) 6:05:58 எஸ்.பார்த்தசாரதி
5) 6:07:38 ரங்கராஜன் யமுனாச்சாரி
6) 6:08:08 ஆர்.நாராயணன்
7) 6:13:19 லதா
8) 6:15:47 வித்யா ஹரி
9) 6:16:55 கல்பனா
10) 6:17:51 எஸ் பி சுரேஷ்
11) 6:19:11 ரா. ரவிஷங்கர்..
12) 6:23:24 ரவி சுப்ரமணியன்
13) 7:34:53 சித்தன்
14) 7:44:46 தி பொ இராமநாதன்
15) 7:50:39 ஶ்ரீதரன்
16) 8:03:20 ராஜி ஹரிஹரன்
17) 8:06:04 விஜயா ரவிஷங்கர்
18) 8:06:22 சுபா ஸ்ரீநிவாசன்
19) 8:13:45 நங்கநல்லூர் சித்தானந்தம்
20) 8:16:39 மைத்ரேயி சிவா
21) 8:39:14 வானதி
22) 8:50:11 மீ பாலு
23) 9:17:14 மீனாக்ஷி
24) 9:45:31 கி.பாலசுப்ரமணியன்
25) 10:58:17 கு. கனகசபாபதி, மும்பை
26) 12:48:14 ரமணி பாலகிருஷ்ணன்
27) 13:27:23 மு.க.இராகவன்.
28) 13:55:45 ஸௌதாமினி
29) 14:37:27 மீ கண்ணன்
30) 17:40:22 ஆர். பத்மா
31) 17:54:17 அம்பிகா
32) 19:57:40 ருக்மணி
************************
A peak into today's riddle!
காஞ்சியில் சேனாதிபதி...
காஞ்சியை ஆண்ட நரசிம்மபல்லவனின் சேனாதிபதி *பரஞ்சோதி* , வாதாபி போரில் வெற்றி வாகை சூடியவர்.
போர் முடிந்த பின், ஈசன் மீதுள்ள அளவற்ற பற்றால், தளபதி பரஞ்சோதியார் , இறை தொண்டாற்ற விழைந்தார்.
நாள்தோறும் சிவனடியார்களுக்குத் திருவமுது செய்வித்துப் பின் தாம் உண்ணலை வழக்கமாகக் கொண்டிருந்தார், பரஞ்சோதியார். சிவனடியார்களின் முன்பு அவர் மிகச் சிறியராகப் பணிந்து ஒழுகியமையால் சிறுத்தொண்டர் என அழைக்கப்பட்டார்.
சிறுத்தொண்ட நாயனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவர் ஆவார்