Skip to main content

உதிரிவெடி 3308

உதிரிவெடி 3308 (15/05/2018)
வாஞ்சிநாதன்
*********************

 பிரம்மனுக்குக் கோவில் இல்லாததற்கும் சிவன்கோயில்களில் தாழம்பூ   பூஜைக்கு நிறுத்தப்பட்டதற்குமான கதையை  16/12/2017  அன்று  வேறொரு வெடி  தொடர்பாகக் கூறியிருக்கிறேன். அந்த கதை இன்றைய புதிரிலும் தொடர்கிறது.  அவரவர்கள் இஷ்ட தெய்வத்தை    "காமம் செப்பாது கண்டது மொழிமோ " என்று  வேண்டிக் கேட்டுத் தெரிந்துகொண்டு  நல்ல விடையை அளியுங்கள். கடவுளை நம்பாதவர்கள் விலகி வழிவிட்டு   எங்காவது ஓரத்திலோ அல்லது, மய்யத்திலோ போய் நின்றுகொள்ளுங்கள்.

கண்ணுக்குத் தெரிவதில் பெரிய தெய்வம் (4)


Comments

Raghavan MK said…


இறையனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை பாடல் எண் 2. குறிஞ்சித் திணைப் பாடல் இது.

பாடல் - மூலம்

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.


தேன் தேடும் வாழ்க்கை கொண்ட அழகிய சிறகுகளை உடைய தும்பியே! தேன் உண்ணும் காம ஆசையால் சொல்லாமல் உண்மையாக நீ கண்டதைச் சொல். இவள் என்னிடம் பயின்றதைக் கெழுதகை நட்பாகக் கொண்டவள். அவளும், அவள் கூந்தலும் மயிலின் இயல்பைக் கொண்டவை. அவற்றைக் காட்டிலும் நல்ல மணமுள்ள பூக்கள் இருக்கின்றனவா? - என்கிறான்.
Raghavan MK said…




இறையனார் என்னும் புலவர்,
கடவுள்-சிவபெருமானே என்பது நம்பிக்கை.

அவர், அரசன் அவையில் பரிசு பெறத் தருமி எனபவனுக்கு இப்பாடலைச் எழுதிக் கொடுத்தார் என்னும் கதையை திருவிளையாடற் புராணம் வடித்துள்ளது. புறப்பாடல் திரட்டு என்னும் நூலும் (15ஆம் நூற்றாண்டு) இந்தக் கதைக்குத் துணையாக அமைந்துள்ளது. 'திருவிளையாடல்' என்னும் திரைப்படத்தில் இந்தக் கதை சுவையேற்றப்பட்டுள்ளது
அந்த பழைய தாழம்பூ கதை "இன்றைய புதிரிலும் தொடர்கிறது" என்று கதை விடாமல் இருந்திருந்தால்........காட்சி தெளிவாக இருந்திருக்கும். அந்தக்கதையில் சிவன் இறுதியாக தான் கண்ணுக்குத் தெரியும்படி லிங்க வடிவாக இருப்பதாக கூறுகிறான்.
Raghavan MK said…


இன்றைய புதிரிலும் தொடர்கிறது"

என்று திசை திருப்பி விட்டார்

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்