Skip to main content

விடை 3303

இன்று (10/05/2018) காலை வெளியான வெடி:
 திட்டி, பற்களால் நொறுக்கி, மெலிந்து விகாரமடை (4)
இதற்கான  விடை:  கடிந்து =    கடித்ந்து
இலக்கணத்தில் மெலிதல் விகாரம் என்றால் வல்லினம் மெல்லினமாக மாறுவது (ஆனால் பொருள் மாறாமல்!) .
திருநாவுக்கரசரின்  "மாசில் வீணையும் மாலை மதியமும்..." என்ற பாடல்
முடியும்போது இணையடி நீழலே  என்று  செல்லும். நிழலே என்றால் வெண்டளை வராமல் தவறிவிடும். அதற்காக மாற்றியதை நீட்டல் விகாரம் என்கிறார்கள்.


நேற்றைய புதிரில்  ஆச்சரியக்குறி பயன்படுத்தியது  பற்றிய கேள்வி எழுந்துள்ளது. ஆங்கிலத்தில் உள்ள வழக்கப்படி, காற்புள்ளி, அரைப்புள்ளி இவை எதுவும் புதிரை விடுவிக்க உதவுவதற்கு இல்லை. திசை திருப்புவதற்கே.

Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (34):

1) 6:04:04 சுபா ஸ்ரீநிவாசன்
2) 6:04:30 கி.பாலசுப்ரமணியன்
3) 6:06:43 வி சீ சந்திரமௌலி
4) 6:07:18 ரா. ரவிஷங்கர்..
5) 6:07:46 முத்துசுப்ரனமண்யம்
6) 6:12:56 மீனாக்ஷி கணபதி
7) 6:16:52 மீ பாலு
8) 6:18:06 மீ கண்ணன்
9) 6:18:18 ராமராவ்
10) 6:21:16 மைத்ரேயி சிவகுமார்
11) 6:23:55 லதா
12) 6:24:46 சாந்திநாராயணன்
13) 6:24:49 மு.க.இராகவன்.
14) 6:33:52 கோவிந்தராஜன்
15) 6:40:42 ராதா தேசிகன்
16) 6:56:45 Suja
17) 6:57:47 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
18) 7:01:36 நாதன் நா தோ
19) 7:02:32 சங்கரசுப்பிரமணியன்
20) 7:11:01 கே.ஆர்.சந்தானம்
21) 7:17:25 ரவி சுப்ரமணியன்
22) 7:32:20 லக்ஷ்மி ஷங்கர்
23) 7:32:24 பாலா
24) 8:27:26 எஸ் பி சுரேஷ்
25) 8:27:50 ராஜா ரங்கராஜன்
26) 9:02:37 வானதி
27) 10:17:29 ருக்மணி கோபாலன்
28) 10:44:45 ராஜி ஹரிஹரன்
29) 10:57:09 அம்பிகா
30) 11:51:17 மீனாக்ஷி
31) 12:02:07 மு க பாரதி
32) 12:09:25 வித்யா ஹரி
33) 13:21:31 சித்தன்
34) 13:27:05 மாலதி
************************
Raghavan MK said…


[10/05, 20:36] raghavanmk31: A peak into today's riddle!! ...........👇🏽👇🏽
[10/05, 20:54] raghavanmk31: தடித்த முறுக்கை

கடித்து தின்றதால்

மெலிந்து விகாரமடைய

*கடிந்து* கொள்வதோ?
உங்கள் கருத்துப்படி மெல்லின விகாரம் பொருள் மாற்றாமல் வல்லினம் மெல்லினமாக வேண்டும். ஆனால், உங்கள் விடையில் "கடித்து" "கடிந்து" என்று மாறுகிறது. கடிப்பதும் கடிவதும் ஒரே பொருளா என்ன?
Vanchinathan said…
நினைத்தேன் என்பதை செய்யுளில் ஓசை நயத்துக்காக நினைந்தேன் என்றெழுதுவது (மெலிதல்) விகாரம். கடித்து என்பதன் விகாரமாக கடிந்து என்று வேரொறு பொருள் வருவது புதிராசிரியர்களுக்குக் கொண்டாட்டம். புதிரின் அடிப்படையே இரண்டு பொருள் வருமாறு அமைவதுதானே.
புதிராசிரியருக்குக் கொண்டாட்டம் அது கொண்டாட்டம் !
புதிர் ஆர்வலர்களுக்கு அது திண்டாட்டம் அது திண்டாட்டம் !

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்