Skip to main content

Posts

Showing posts from April, 2020

விடை 4084

இன்று காலை வெளியான வெடி: பெருமையிழந்த மாடம் மறைந்திருக்க வேறுவிதமாய் ஆரம்பம் (5)  அதற்கான விடை: தொடக்கம் = தொக்க + டம் டம் = மாடம் ‍- மா (பெருமை) தொக்க = மறைந்திருக்க‌ பளிங்கு மாளிகை = பளிங் கால் கட்டிய மாளிகை: மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை; " ..ஆல் கட்டிய .." என்பது மறைந்து, (தொக்கி) இருக்கிறது. இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4084

உதிரிவெடி 4084  ஏப்ரல் 26 2020 வாஞ்சிநாதன் ***********************  பெருமையிழந்த மாடம் மறைந்திருக்க வேறுவிதமாய் ஆரம்பம் (5)   Loading…

விடை 4083

விடைக்கு வருமுன்:    உதிரிவெடியை வழக்கம்போல் தினசரி அளிக்க வேண்டும் என்று ஆர்வத்துடன்  இன்று  கருத்துரைப் பகுதியிலும், தனியாக என்னுடன் தொடர்பு கொண்டும்  கேட்டவர்கள் எல்லோருக்கும்  நன்றி.   சொற்கள் ஒவ்வொன்றிலும்  சுவையான பல விஷயங்கள்  ஒளிந்துள்ளன. அதை ரசிக்கும் ஆர்வலர்களான உங்களை இந்த வலைப்பக்கங்களின்  மூலம் தெரிந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி.  உதிரிவெடி என்பது  சொல்லழகை நாம் எல்லோரும் பகிர்ந்து கொள்ள ஒரு  வழி.  அதைத் தவிர வேறு வழிகளில் சொற்களோடு விளையாட முடியுமா என்று    தோன்றியது.   காசா, பணமா?  அந்த விபரீத ஆசையைப் பரீட்சை செய்து பார்த்துவிடுவோமே!   ஆனால் அவையெல்லாம் பதினைந்து நிமிடத்தில் உதிரிவெடிபோல் தயாரிக்க முடியுமா, தெரியவில்லை.  அதனாலேயே வாரமொரு பதிவு என்று ஜாக்கிரதையாகக்  வைத்துக் கொள்வோம்.  வரும் ஞாயிறு காலை வழக்கம் போல் ஆறு மணிக்கு இங்கே எட்டிப்பாருங்கள். ***** சரி இன்றைய புதிருக்கு வருவோம்.   பாம்பு வேள்வியை நடத்தியவன் வெற்றி கண்டவ...

உதிரிவெடி 4083

உதிரிவெடி 4083  (ஏப்ரல் 22, 2020) வாஞ்சிநாதன் ********************** குறுக்கெழுத்துப்புதிர் என்று கட்டங்களுடன் செய்து வந்த பு திர் களை நிறுத்திய பிறகு 2017இல் உதிரிவெடி என்ற புதிய பெயருடன் தினம் ஒரு வெடி என்று ஆரம்பித்து இன்றைய தேதியில் மூன்றாண்டு முடிவடைகிறது. இனிமேல் இவ்வலைப்பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும் ஒரு பதிவு என்று வாரத்திற்கு ஒரு முறை மட்டும் எழுதுவதாகத் திட்டமிட்டுள்ளேன். அடுத்து ஏப்ரல் 26 தேதியன்று இங்கே எட்டிப் பாருங்கள். இன்றைய புதிர் இதோ: பாம்பு வேள்வியை நடத்தியவன் வெற்றி கண்டவன் முன்னிருப்பது மக்களே (6) Loading…

விடை 4082

இன்று காலை வெளியான வெடி: ஏகப்பட்ட அறிவுடன் பெறும் பரிசு (4) அதற்கான விடை: வெகுமதி  = வெகு+ மதி  மீண்டும் விடை கண்டவர்கள் எண்ணிக்கை அறுபதைத் தாண்டியுள்ளது. இதோ வெகுமதி: அறிவுடை மாந்தர் புதிரினில்  ஆழ்ந்து செறிவுற்ற சிந்தனையால் கண்ட விடைகள் குறிதவறா வில்லாளன் கூர்கணையாய்ச் சாய்த்து த்     தெறித்திட வைத்திடும்  தேர்ந்து. இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4082

உதிரிவெடி 4082  ஏப்ரல் 21 2020 வாஞ்சிநாதன் *********************** நேற்றைய புதிருக்கு நீண்ட நாட்கள் கழித்து அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் சரியான விடை கண்டுபிடித்து விட்டார்கள். பாராட்டுகள்!  பாராட்டு மட்டும்தானா, பரிசு கிடையாதா? இதோ: ஏகப்பட்ட அறிவுடன் பெறும் பரிசு (4) Loading…

விடை 4081

இன்று காலை வெளியான வெடி: களையிழந்த ஆணை ஒரு வினாடி தழுவிட  அனுமதிப்பதற்குப் பணம் (5)   அதற்கான விடை: கட்டணம் =  கணம் +ட்ட  ட்ட =  கட்டளை (ஆணை )  - களை இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4081

உதிரிவெடி 4081  (ஏப்ரல்  20, 2020) வாஞ்சிநாதன் **********************   களையிழந்த ஆணை ஒரு வினாடி தழுவிட  அனுமதிப்பதற்குப் பணம் (5)  Loading…

Solution to Krypton 227

Today's clue: Perhaps Judas after the allotted time put on a layer (8) Its solution: TURNCOAT   = TURN + COAT ( The judge asked the defendant to wait until his turn for speaking) To see the list of answers for today's clue click on this link.

விடை 4080

இன்று காலை வெளியான வெடி: எங்கள்  வெண்ணையைத் திருடுபவன் இடையைத் தழுவும்போது மனதில் தோன்றுபவை (6) அதற்கான விடை: எண்ணங்கள் = எங்கள்  + (க) ண்ண (ன்) இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4080

உதிரிவெடி 4080  ஏப்ரல் 13 2020 வாஞ்சிநாதன் *********************** எங்கள்  வெண்ணையைத் திருடுபவன் இடையைத் தழுவும்போது மனதில் தோன்றுபவை (6) Loading…

விடை 4079

இன்று காலை வெளியான வெடி: வெட்டு பின்னால்  வரும் மனைவி  முகத்தில் பூசிக் கொள்வது (5) அதற்கான விடை:   அரிதாரம்  =   அரி + தாரம் அரிவது = வெட்டுவது இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4079

உதிரிவெடி 4079  (ஏப்ரல் 18 , 2020) வாஞ்சிநாதன் ************************ வெட்டு பின்னால்  வரும் மனைவி  முகத்தில் பூசிக் கொள்வது (5) Loading…

விடை 4078

இன்று காலை வெளியான வெடி: பாத்திரத்தில் இரண்டாவதாக ஊறியது இங்கில்லை (4)  அதற்கான விடை: வேறிடம் = வேடம் + றி வேடம் =  பாத்திரம்  (நாடகத்தில்) றி =   (ஊ)றி (யது) இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4078

உதிரிவெடி 4078  (ஏப்ரல் 17 , 2020) வாஞ்சிநாதன் ********************** பாத்திரத்தில் இரண்டாவதாக ஊறியது இங்கில்லை (4)  Loading…

விடை 4077

இன்று காலை வெளியான வெடி: கூர்மை போக்க  வாளாலும் முடியும்  (5) அதற்கான விடை: தீர்க்கம் = தீர்க்க + ம் (தீர்க்கதரிசி -- கூரிய பார்வை உடையவர்;  ஆர்தர் கிளார்க் ஒரு தீர்க்கதரிசி,  விண்கலன்கள், ராக்கெட்டுகள்செய்யப்படும் தொழில் நுட்பம் வராத 1945ஆம் ஆண்டிலேயே  புவிநிலைச் சுற்றுப்பாதையில் செயற்கைக் கோள் கொண்டு தொலை தொடர்பு சாத்தியம் என்று கூறினார்). தீர்க்க = போக்க ம் = வாளாலும் என்பதன் முடிவான எழுத்து ஊரடங்கால் உண்டான இன்னல்களைத் தீர்க்க அரசு  பல திட்டங்களை வகுத்துள்ளது. இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட  விடைகளின் பட்டியல் இங்கே.

விடை 4076

இன்றைய வெடி: கொடி போலிருக்கும் சிவப்பு விளக்குப் பகுதியிலிருக்கும் வீடோ? (5) அதற்கான விடை:   செவ்வகம்   = (கம்பத்தில் பறக்கும்) கொடியின் வடிவம்  செவ்வகம் = செவ் + அகம் = சிவந்த வீடு! ("செம்மை + அகம்" என்பதுதான் சரியோ? அப்படியென்றால் "வ்" எப்படி வந்தது?  மையீற்றுப் பண்புப்பெயர் புணர்ச்சி விதிப்படி ஈறு கெட ஈற்றயல் திரிந்து ....?)  இன்று அனுப்பப்பட்ட விடை விவரங்களின் பட்டியலைப் பார்க்க இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4076

உதிரிவெடி 4076  (ஏப்ரல் 15 2020) வாஞ்சிநாதன் *********************** கொடி போலிருக்கும் சிவப்பு விளக்குப் பகுதியிலிருக்கும் வீடோ?  (5) Loading…

விடை 4075

இன்றைய வெடி: சின‌ங்கொண்டு  பதறத் தொடங்கி அணை வெளியே ஒட்டப் பயன்படுத்துவது (6)   அதற்கான விடை:  கோபமடைந்து =  ப + மடை + கோந்து  இன்று அனுப்பப்பட்ட விடை விவரங்களின் பட்டியலைப் பார்க்க இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4075

உதிரிவெடி 4075 (ஏப்ரல் 14, 2020) வாஞ்சிநாதன் **********************   சின‌ங்கொண்டு  பதறத் தொடங்கி அணை வெளியே ஒட்டப் பயன்படுத்துவது (6)   Loading…

விடை 4074

இன்றைய வெடி: உலகம் உடலில் தொடக்கம் மாட்டை விரட்டு (3) அதற்கான விடை:  மேதினி   = மேனி + ஆதி  - ஆ இன்று அனுப்பப்பட்ட விடை விவரங்களின் பட்டியலைப் பார்க்க இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4074

உதிரிவெடி 4074  (ஏப்ரல் 13 2020) வாஞ்சிநாதன் ***********************   நேற்று விடையை வெளியிட்டபோது விடை கண்டவர்கள் பட்டியலைப் போடாமல் விட்டேன். இப்போது போய்ப் பார்த்துக் கொள்ளுங்கள். டாக்டர் ராமகிருஷ்ண ஈஸ்வரன் முந்தாநாள்  "சுடலை" என்ற விடைக்குத் "தோடுடைய  செவியன்" என்ற  பாடலைக் குறிப்பிட்டிருந்தார். அதைப்படித்து அப்பாடலைத் தேடி அதில் சுடலைப் பொடி இருப்பதைக் கண்டேன்.  அவருக்கு நன்றி.   ------------------------ உலகம் உடலில் தொடக்கம் மாட்டை விரட்டு (3)   Loading…

Solution to Krypton 225

Today's clue: Small matter to separate integrated circuits  with half a sheet of paper (8) Its solution:  PARTICLE = part + IC + le (to) part = to separate IC = integrated circuits le = LE(AF) Disclaimer : This clue is merely for entertainment purposes and not to be taken as a recommendation for trouble-shooting your electronic gadgets. So do not attempt to disassemble circuit boards with A4 paper! Here is the list of solutions received.

விடை 4073

இன்று காலை வெளியான வெடி முதலாவதாக கடைசியாக இடையில் இருக்கும்  பொலிவு (4) அதற்கான விடை கருக்கு = க + ருக்கு க = முதலாவதாக என்பதன் கடைசி எழுத்து (அல்லது கடைசியாக என்பதன் முதலெழுத்து!) ருக்கு =  இருக்கும் என்பதன் இடைப்பகுதி " கல்யாணத்துக்கு வாங்கிக் கொடுத்த பாத்திரத்தை எட்டு வருஷம் ஆனாலும் புதுக் கருக்கு போகாமல் நல்ல வெச்சிருக்கா " இன்று அனுப்பப்பட்ட விடை விவரங்களின் பட்டியலைப் பார்க்க இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4073

உதிரிவெடி 4073 (ஏப்ரல் 12 2020) வாஞ்சிநாதன் ***********************   முதலாவதாக கடைசியாக இடையில் இருக்கும்  பொலிவு (4) Loading…

விடை 4072

இன்று காலை வெளியான வெடி: முண்டாசு கட்ட தலை ஓரங்கள் கடைசியாகச் செல்லுமிடம்   (3) அதற்கான விடை:  சுடலை   = முண்டா சு +  கட் ட +   த லை  சுடலை = சுடுகாடு, கடைசியாகச் செல்லுமிடம் இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4072

உதிரிவெடி 4072   (ஏப்ரல் 11  , 2020) வாஞ்சிநாதன் ********************** முண்டாசு கட்ட தலை ஓரங்கள் கடைசியாகச் செல்லுமிடம்   (3)   Loading…

விடை 4071

இன்று காலை வெளியான வெடி: கல்யாணத்திற்குப் பின் கையெழுத்திடுமிடம் கணவன்  விட்டுவிட்டு  வேண்டும் (4) அதற்கான விடை:  பதிவேடு = பதி + வே ண் டு ம் இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4071

உதிரிவெடி 4071   (ஏப்ரல்  10, 2020) வாஞ்சிநாதன் ********************** கல்யாணத்திற்குப் பின் கையெழுத்திடுமிடம் கணவன்  விட்டுவிட்டு  வேண்டும் (4)   Loading…

விடை 4070

இன்று காலை வெளியான வெடி: பரபரப்பின்றி இரு ஸ்வரங்களுக்குட்பட்ட ராகத்தைத் தொடர்ந்து பாடுவதா? (5) அதற்கான விடை: நிதானமாக = நி +தானமா + க நி, க = இரு ஸ்வரங்கள் தானமா = ராகத்தைத் தொடர்ந்து பாடுவதா (ராகம், தானம் , பல்லவி என்ற வரிசை).  (dhaanam, வேறு  thaanam வேறு என்று  யாரும் ஆட்சேபிக்க வேண்டாம். இந்த dha/tha,  ka/ga, ta/da, pa/ba/bha மயக்கம் தமிழில் பல புதிர்களை உருவாக்க உதவுகிறது!) விடைப் பட்டியலைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4070

உதிரிவெடி 4070  (ஏப்ரல்  9 , 2020) வாஞ்சிநாதன் ************************ பரபரப்பின்றி இரு ஸ்வரங்களுக்குட்பட்ட ராகத்தைத் தொடர்ந்து பாடுவதா? (5) Loading…

விடை 4069

இன்று காலை வெளியான வெடி திருமதி கிள்ளி ஓடு (2) அதற்கான விடை: சோழி மனைவி கிள்ளினால் கணவன் ஓடுவதா, இது சரியான அறிவுரை இல்லை என்று  தைரியமாக இருக்க வேண்டும் என்று  மாற்றாக வேறோர் அறிவுரையை எனக்கு ஒருவர் அனுப்பியுள்ளார்.  புத்தர், ஏசு, காந்தி அவதரித்த இவ்வுலகில்  "கிள்ளியதற்கு ஓடாமல்  மறு கன்னத்தைக் காட்டலாம்". இன்று அனுப்பப்பட்ட விடை விவரங்களின் பட்டியலைப் பார்க்க இங்கே செல்லவும்.

விடை 4068

இன்று காலை வெளியான வெடி: கையளவில் பாதி  வெடிக்க எழுந்த பேரொலி (5) அதற்கான விடை: முழக்கம் = முழம் + க்க முழம் =  கையளவு க்க  =  "வெடிக்க" என்பதில் பாதி இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

விடை 4067

இன்று காலை வெளியான வெடி: மாசற்று  மாசு  வேகத்தடை   இடைமாற்றம் அதற்கான விடை:  சுத்தமாக = மாசு + கத்த கத்த = (வே) கத்த (டை) இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

விடை 4066

இன்று காலை வெளியான வெடி: அன்னம் உண்ட  மேகலை இடை நன்மை தருவது (4) அதற்கான விடை:   சாதகம் = சாதம் + க சாதம் = அன்னம் க = மேகலை இடை இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்

Solution to Krypton 222

Today's clue: Prompt  for total may  be right  inside   (7) Its solution SUMMARY = sum + may + r (Counsel for the defendant  appealed to the judge for summary dismissal of the case.) Visit this page to see the list of all the answers received for this clue.

விடை 4065

இன்று காலை வெளியான வெடி: பாரதத்தை எழுதியது நாகமா? வியர்வை  மாவை துடைத்துக் கசக்கு  (5) அதற்கான விடை:  விநாயகர்   = நாகமா + வியர்வை - மாவை மஹாபாரதக்கதையை வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் அதை எழுதினார் என்பது வழக்கு.  பெர்ரி மேசன் என்ற வழக்கறிஞர் கதாபாத்திரம் இடம்பெறும் கொலை வழக்குக் கதைகளின் ஆசிரியரான  எர்ல் ஸ்டேன்லி கார்ட்னர் வாயால் சொல்லி ஒலிப்பதிவு செய்த பின் அதை உதவியாளர்கள்  கேட்டு எழுதி/தட்டச்சிட்டு  பதிப்பகத்திற்கு அனுப்புவார்களாம்.  விநாயகர் வேகமாக எழுதும் திறம் பெற்றதால் நேரடியாகவே எழுதிவிட்டாராம். இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4065

உதிரிவெடி 4065 ஏப்ரல் 4,  2020 வாஞ்சிநாதன் ***************** பாரதத்தை எழுதியது நாகமா? வியர்வை  மாவை துடைத்துக் கசக்கு  (5) Loading...

விடை 4064

இன்று காலை,  வெளியான வெடி: துர்வாசர் செய்து சகுந்தலை  துஷ்யந்தனிடம் கொண்டது (4) அதற்கான விடை:  சபித்து = ச + பித்து ச = சகுந்"தலை" பித்து = சகுந்தலைக்கு சதா துச்ஜ்யந்தன் நினைவாகவெ இருந்தது துர்வாசர்  அதனால் அவளைச் சபித்தார். இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

இதோ ஏப்ரல் 3க்கான உதிரிவெடி

உதிரிவெடி 4064  (ஏப்ரல் 3  , 2020) வாஞ்சிநாதன் ********************** முதலில் பட்டியலில் திருத்தம்: எல்லா விடைகளையும் கட்டம் வெளிவந்த அன்றே அனுப்பியவர்கள் இரண்டு  பெயர்கள் விடுபட்டுப் போய்விட்டது, அவர்கள் : உஷா,   நாகராஜன் முல்லைப் பெரியாறு நீரில் களையெடுத்த  ஆணை மூழ்கடித்த சோதனை (6) விட்டு விட்டு அண்ணன் அடித்த கடம் குறித்து எதிர்ப்பு (5)   மேலேயுள்ள இரண்டு வெடிகளிலும்  பெரிய குற்றம். சரி செய்ய முடியாது. அதனால் மாற்று வெடி, இதோ:   துர்வாசர் செய்து சகுந்தலை  துஷ்யந்தனிடம் கொண்டது (4) Loading…

உதிரிவெடி 4064 தாமதமாகும்

நேற்றிரவு நேற்றைய உதிரிவெடிக்கான விடையயைம், சரவெடிக்கான விடைகளையும்  இரு வேறு இடுகைகளில் வெளியிட்டேன். அதில் சில கடினமானவற்றுக்கு விளக்கங்களைக் கருத்துரையில் அளிக்குமாறு கேட்டிருந்தேன். அதை எழுதுவதற்கு உங்களுக்கு அவகாசம் அளிப்பதற்காக இன்றைய வெடியை தாமதமாக அளிக்கிறேன்.  புது வெடி வந்துவிட்டால் அதை விடுக்க மனம் சென்றுவிடுமே! இதோ இங்கே சென்று விளக்கங்களைக் கருத்துரையாக இடுங்கள்.

விடை 4063

 இன்று காலை வெளியான வெடி: ஏமாற்றிய பெண்ணை காலொடிக்கப் பெற்றது தேமாங்கனியோடு புளிமாங்கனியாக இருக்கலாம் (6)   அதற்கான விடை:  வஞ்சித்தளை   = வஞ்சித்தவளை  - வ (1/4) சரவெடியில்  ஒன்றியும் ஒன்றாமலும் வஞ்சியிடம் புலவர் காண்பது (2) என்பதற்கான  விடையைப் புரிந்து விடையளித்தவர்கள் இன்று அளித்திருப்பார்கள். அல்லது இன்றைய விடையைப் புரிந்து அளித்தவர்கள் அதன் பிறகு சரவெடியில் விடுபட்டிருந்தால் சேர்த்திருப்பார்கள்! ஒரு வேண்டுகோள், ஏற்கனவே சொன்னதுதான். அதன்படி நீங்கள் எல்லோரும்  உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இவ்வெடிகளைப் பற்றித் தெரிவித்து வரவைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். சரவெடிக்குப் பிறகு உதிரிவெடிகள் சப்பென்று இருந்தால் இணையத்தில் வேறு இருக்கின்றன.  எஸ். பார்த்தசாரதி அவர்கள்  நூற்றுக்கு மேற்பட்டவைகள் தன்னுடைய வலைத் தளத்தில் வைத்திருக்கிறார்.  தமிழ்ப்புதிருக்கு ஆங்கிலத்தில் குறிப்பு என்று பல வகைகள் வைத்துள்ளார். ராமராவ் என்பவர்கள் அமைப்பதற்குக் கடுமையான வகையாகத் திரப்படப் பெயர்கள்/பாடல்கள் மட்டுமே கொண்டு தொடர்ந்து மாதந்த...

சரவெடிக்கான விடைகள்

விடைகளைக் கூற வேண்டிய நேரம் இது. தினமும்  ஒற்றை வெடிக்கு  விடைகளுக்கு விளக்கம் எழுத படிவத்தில் இடம் ஒதுக்க முடிந்தது. ஆனால்  இச்சரவெடிகளுக்கு அதைச் செய்ய முடியவில்லை. சிலவற்றுக்கும்  மட்டும் விளக்கம் கொடுக்கிறேன். விடுபட்ட  7 வெடிகளுக்கு உங்களைக் கருத்துரையில் விளக்கம் அளிக்குமாறு வேண்டுகிறேன்.  விளக்கம் தேவைப்படும் அந்தவிடைகளை சிவப்பு நிற எழுத்துகளில் காட்டியிருக்கிறேன். குறுக்காக‌ 1. கணவன்-மனைவி  பந்தம் பதினைந்தில்  முகிழ்த்தது (4) தம்பதி [ஒளிந்திருக்கும் விடை] 3. பெரிய தடை சிக்க தடுமாறுவது கையில் காசு குறைவாக      இருக்கும் சமயம் (6)  மாதக்கடைசி = ( பெரும் =) மா + தடை சிக்க  8. மாட்டு  நீதிபதிக்கு மரியாதையாகப்  பொருந்துவது ஆட்டி      உருவாக்கும்  அமைப்பு (6)    கட்டுமானம்  9.  கொடிய திட்டம்  சூழ்ந்த பின் பாதி பிறந்த குழந்தைகள் (4)  சந்ததி 11.  நடு  வாயில் பல்லில் சிக்கிய  கல் (3) பயில் 12. கவனமாக  வாத்து தலை சீவி...

உதிரிவெடி 4063

உதிரிவெடி 4063 ஏப்ரல் 2,  2020 வாஞ்சிநாதன் *******************   ஏமாற்றிய பெண்ணை காலொடிக்கப் பெற்றது தேமாங்கனியோடு புளிமாங்கனியாக இருக்கலாம் (6) Loading…

விடை 4062

இன்று காலை வெளியான வெடி: முன்னோர்கள் செய்த வழியில்  முடி ஓரங்களை வெட்டிக் குறைப்பது உள்ளே (5) அதற்கான விடை: முறைப்படி =  முடி +  றைப்பது றைப்பது =  (கு) றைப்ப(து) இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். [நேற்றைய சரவெடிக்கு இன்று பகலில் மேலும் பத்து பேர் முழுவது சரியான விடைகளை அனுப்பியுள்ளார்கள். அதைத் தவிர மூன்று பேர் ஒரு தவறோடு, மேலும் 4 பேர் பல பிழைகளுடனும் அனுப்பியுள்ளனர். இன்னும் 24 மணி நேரம் இருக்கிறது.]

உதிரிவெடி 4062

உதிரிவெடி 4062  (ஏப்ரல்  1, 2020) வாஞ்சிநாதன் ********************** நேற்றைய சரவெடி வலைக் கட்டங்களுடன் வந்த பிறகு மேலும் 11 பேர் எல்லா விடைகளையும் கண்டு அனுப்பியுள்ளனர்,  (இன்னமும் 6 பேர் ஓரிரு தவறுகளுடன் அனுப்பியிருக்கின்றனர்.)   விடைகள்  நாளையிரவுதான் வெளியிடப்போகிறேன்.  அதுவரை மற்றவர்கள் யோசிக்கலாம். சரி இன்றைய புதிருக்கு வருவோம். முன்னோர்கள் செய்த வழியில்  முடி ஓரங்களை வெட்டிக் குறைப்பது உள்ளே (5)     Loading…