Skip to main content

விடை 3861


இன்று காலை வெளியான வெடி:

தெய்வாம்சம் கொண்ட குரு,  அவள் உமிழ  விட்டுவிட்டுப் பிடித்துக் கலக்கினார் (5)

 ( இது ஒரு போலி சாமியார் பக்தையுடன் செய்த லீலை பற்றியது அல்ல, சும்மா ஒரு தமாஷ் புதிர். அவ்வளவுதான். )

இதற்கான விடை: அருள்மிகு = குரு + அள்மி (ள் மி ="அவள் உமிழ"  இவற்றில் விட்டுவிட்டு எழுத்துகளைக் கொள்ள)
 

இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லுங்கள்.

Comments

Raghavan MK said…
***************************
அழகிய கட்டமைப்புடன் தெய்வாம்சமும் கூடிய புதிரை தந்த ஆசிரியருக்கு பாராட்டுகள்! 💐💐
" குரு,  அவள் உமிழ  விட்டுவிட்டுப் பிடித்துக் கலக்கினார்"
என்ற வரிகளின் மூலம் நம்மையெல்லாம் ஒரு கலக்கு கலக்கிவிட்டார் ஆசிரியர்.
நம்மை குழப்புவதென்றால் அவருக்கு என்றும் தனி மகிழ்ச்சி!
புதிரை விடுவிக்கும்போது நமக்கும் மகிழ்ச்சிதான்! 😌
***************************
தெய்வாம்சம் கொண்ட குரு,  அவள் உமிழ  விட்டுவிட்டுப் பிடித்துக் கலக்கினார் (5)

அவள் உமிழ விட்டுவிட்டு
= அ[வ]ள் [உ]மி[ழ]
= அள்மி
குரு பிடித்து
= குரு + (அள்மி)
கலக்கினார்
= குரு +அள்மி
= அருள்மிகு
= தெய்வாம்சம் கொண்ட
***************************
Muthu said…
<< ( இது ஒரு போலி சாமியார் பக்தையுடன் செய்த லீலை பற்றியது அல்ல, சும்மா ஒரு தமாஷ் புதிர். அவ்வளவுதான். )>> நம்புகிறேன்!😉

விட்டு விட்டுப் பிடித்துக் கலக்கினதில் "குரு"வையும் சேர்த்துப் பிடித்து விட்டேன். குருவைத் தனியா விட்ட பிறகே அருள் கிடைத்தது!!😦
Vanchinathan said…
தமிழில் உமிழ் மிகவும் அழகான சொல். மின்மினிப்பூச்சி ஒளியை உமிழ்கிறது என்றெல்லாம் படிக்க எவ்வளவு அழகாக இருக்கிறது. ஏனோ அதை ஒரே ஒரு இடத்தில் மட்டும் பயன்படுத்தி அதன் மகத்துவத்தை நாம் முழுமையாக அறியத் தவறிவிட்டோம் என்று தோன்றுகிறது.
Raghavan MK said…
உமிழ் நீருடன் கலந்ததால் வந்த கரிப்பு "

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்