Skip to main content

விடை 3774



நேற்றைய புதிரை விடையளிப்பதற்கான படிவத்தை இணைக்காமல் வெளியிட்டேன்.
அதற்கு காரணம் ஒரே நாளில் அடுத்த இரண்டு நாட்களுக்கான புதிர்களையும், ஆங்கிலப்புதிரையும் அவசர அவசராமாகச் செய்ததுதான்.

சென்ற வாரம் முழுவதும் கணித மாநாட்டுக்காக வெளியூர் சென்றது, குடும்ப நிகழ்ச்சிகள் என்று தொடர்ந்து விதவிதமாக ஏகப்பட்ட பதார்த்தங்களுடன் சாப்பாடு, பின்னர் இனிப்புகள்.
அதையெல்லாம் சாப்பிட்டுக்கொண்டே இருந்ததால் வேறெதிலும் சிந்த்னை செல்ல மறுத்து இன்றைய வெடியை அமைத்தேன்:

காலையில் தொடங்கி மாலையில் முடிந்த சாப்பாடு! (4)
 

அதற்கான விடை:   ஆகாரம்; கழுத்தில் சூடிக்கொள்ளும் மாலையான ஆரத்தில் முடிந்து வைக்க வேண்டியது காலையின் முதலெழுத்தான கா, ஆரம் + கா (அவள், தன் புருஷனை முந்தானையில் முடிந்து வைத்திருக்கிறாள்).

இன்று விடையனுப்பியவர்களின்  விவரங்களடங்கிய பட்டியலை இங்கே காணலாம்.



Comments

M k Bharathi said…
புதிரின்று
அழகான ஆரம்
அறிவுக்கு ஆகாரம்!

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்