தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில் ஒற்றை வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட" என்பது போல் சேர்த்தெழுதி ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு: ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...
Comments
விடைக்கான சொல்லை மிக நேர்த்தியாக உடைத்து, அதற்கேற்ப துப்புகளை திறமையுடன் தேர்வு செய்து இப்புதிரை அமைக்க எவ்வளவு நேரம் பிடித்திருக்கும் என வியந்தேன்.🤔
இரசிக்கும்படியான கட்டமைப்பு!
புதிராசிரியருக்கு வாழ்த்துக்கள்!
💐👏🏼💐
*************************
உள்ளே நுழைந்து துளி ரவிக்கை கணிகையைச் சூழ்ந்த பைத்தியம் (6)
துளி ரவிக்கை
= ர(விக்கை) = ர
கணிகை = வேசி
பைத்தியம் = பித்து
சூழ்ந்த =
= " ர , வேசி " , யை சூழ்ந்த "பித்து"
= பி+ர+வேசி+த்து
= பிரவேசித்து
= உள்ளே நுழைந்து
*************************