Skip to main content

விடை 3762

இன்று காலை வெளியான புதிர்:

அழகி இடை விட்டு அளித்து  வளை (3)
அதற்கான விடை:  வங்கி = வழங்கி (அளித்து)  - ழ

இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைப் பார்க்க   இங்கே செல்லவும்.

Comments

Raghavan MK said…
*************************
_அழகி இடை விட்டு அளித்து  வளை (3)_

_அழகி இடை_
= _[அ]ழ[கி]_ = *ழ*

_அளித்து_
= *வழங்கி*

_விட்டு_
= *வழங்கி* _யில்_ *ழ* _நீக்கி_

= *வங்கி*
= _வளை_
----------------------------
_வங்கி_
பெயர்ச்சொல்
(முழங்கையின் மேற்பகுதியில் பெண்கள் அணிந்துகொள்ளும்) நீள்வட்டத்தை இரண்டாக மடித்ததுபோல வடிவமைக்கப்பட்ட ஒரு வகை *வளைந்த* அணிகலன்.
*************************
முந்தைய காலத்தில், மக்கள் ஒரு செயலைச் செய்ய உறுதி பூணும்போது அதன் நினைப்பு எப்போதும் தமக்கிருக்க வேண்டும் ஒரு வகை *வளையத்தை* அணிவார்கள். இன்றும் கூட ஒரு காரியத்தை முடித்தே தீருவேன் என்று இருப்பவர்களை *கங்கணம்* கட்டிக் கொண்டு அலையறான்ப்பா, என்று சொல்வது இதில் இருந்து வந்ததுதான்.
_காப்பு, கடகம், வளையல், *வங்கி* என வரிசையாய் இருக்கின்றன கையில் அணியும் ஆபரணங்கள்._
***********************

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்