Skip to main content

விடை 3346

இன்று (22 ஜூன் 2018) காலை வெளியான வெடி:

ஆணை மணம் முடிக்க கடைசிப்பிள்ளை (4)

இதற்கான விடை:   கட்டளை

கடைசிப் பிள்ளையை ஓர் ஆணுக்கு மணமுடிக்க கோயம்புத்தூர் பக்கத்து ஆளாய் இருக்க வேண்டும். அங்குதான் பெண் குழந்தைகளை ஏ புள்ள என்று  கூப்பிடுவார்கள்.

 இல்லையென்றால் வானவில் கொடியைத் தூக்குபவர்களாக இருக்க வேண்டும்.
இதன் மூலம்  உதிரிவெடி  முற்போக்குச் சிந்தனைவாதிகளுக்கும் பாரம்பரியவாதிகளுக்கும் ஏற்றது என்று சொல்லிக் கொள்கிறேன்!

Comments

Raghavan MK said…



A peek into today's riddle....👇🏽

_ஆணை மணம் முடிக்க கடைசிப்பிள்ளை (4)_

இதென்ன பெண்ணை மணம் முடிக்காமல் ஆணுக்கு *_கட்ட_* கடைக்குட்டியை தேர்ந்தெடுத்துள்ளாரே என்று, நம்
இளைஞன், யுவன், மணாளனை தேடித்தேடி அலைந்துதான் மிச்சம்!

சோர்ந்து போய் ஒரு டீக்கடையில் அமர்ந்த போதுதான் அந்த எம்.ஜி.ஆரின் படப்பாடலை கேட்டேன்.!

_"நான் *ஆணை* யிட்டால், அது நடந்து விட்டால் ...!"_

சோர்ந்த உள்ளத்தை ஆற்றியது அடுத்து வந்த பாடல்!

_"ஆறு மனமே ஆறு_
_அந்த ஆண்டவன் *கட்டளை* ஆறு"_ !
....................................
_மணம் முடிக்க_
= *கட்ட*

_கடைசிப்பிள்ளை_
= *(பிள்)ளை*

_ஆணை_
= *கட்ட +ளை*
= *கட்டளை*
.....................................

கட்டளை
பெயர்ச்சொல்

1.ஒன்றைச் செய்யுமாறு அல்லது கீழ்ப்படியுமாறு பிறப்பிக்கப்படும் உத்தரவு.

2.(இறைவனின்) ஆணை.
‘ஆண்டவனின் கட்டளை இப்படி இருக்கிறது’

3. கோயில் கட்டளை
(ஒருவர் தன் பெயரில்) கோயிலில் ஒரு விசேஷ தினத்தன்று பூஜை, அபிஷேகம், உற்சவம் போன்றவை நடக்க நிதி வழங்கிச் செய்யும் ஏற்பாடு.

4.(குறிப்பிட்ட செயலைக் கணிப்பொறி செய்வதற்கான) இயக்கமுறை.

இது தவிர.....

5.பைபிளில் வரும் பத்து கட்டளைகள் (Ten commandments).

அடுத்து .....
6.கட்டளைக் கலித்துறை

கட்டளைக் கலித்துறை என்பது கலித்துறையின் வகைகளுள் ஒன்று. கட்டளைக் கலி என்பதற்கு எழுத்தெண்ணிப் பாடப்படும் கலி யாப்பு என்று பொருள்.
கட்டளை= எழுத்தின் அளவு.
துறை என்பது பா இனத்தின் ஒரு வகைக்குரிய பெயர். காரைக்கால் அம்மையார் தான் இவ்வகையை முதலில் பயன்படுத்தினார் என்பர்.
காரைக்கால் அம்மையார் தம் இரட்டைமணி-மாலையில் 10 பாடல்களும், பொன்வண்ணத்தந்தாதியில் 100 பாடல்களும் கட்டளைக் கலித்துறை யாப்பில் பாடியுள்ளார். பொன்வண்ணத்தந்தாதியின் முதல் பாடல் இது.

_பொன்வண்ணம் எவ்வண்ணம்_ _அவ்வண்ணம் மேனி பொலிந்தியங்கும்_

_மின்வண்ணம் எவ்வண்ணம்_ _அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம்_

_தன்வண்ணம் எவ்வண்ணம்_ _அவ்வண்ணம் மால்விடை_ _தன்னைக்கண்ட_

_வெண்வண்ணம்_ _எவ்வண்ணம்_ _அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே._

🙏🏽🙏🏽🙏🏽
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (61):

1) 6:00:43 திருமூர்த்தி
2) 6:01:03 ரவி சுப்ரமணியன்
3) 6:01:31 கேசவன்
4) 6:01:36 நாதன் நா தோ
5) 6:01:46 முத்துசுப்ரமண்யம்
6) 6:01:52 ரமணி பாலகிருஷ்ணன்
7) 6:01:54 எஸ்.பார்த்தசாரதி
8) 6:02:25 ராமராவ்
9) 6:02:35 லட்சுமி சங்கர்
10) 6:02:58 புவனா சிவராமன்
11) 6:04:48 ரவி சுந்தரம்
12) 6:05:14 நங்கநல்லூர் சித்தானந்தம்
13) 6:05:43 சுபா ஸ்ரீநிவாசன்
14) 6:05:47 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
15) 6:06:54 லதா
16) 6:07:26 சுந்தர் வேதாந்தம்
17) 6:09:53 இரா.செகு
18) 6:11:00 பானுபாலு
19) 6:12:32 கே.ஆர்.சந்தானம்
20) 6:14:48 .ராதா தேசிகன்
21) 6:14:50 ருக்மணி கோபாலன்
22) 6:15:16 எஸ் பி சுரேஷ்
23) 6:16:06 ரா. ரவிஷங்கர்...
24) 6:19:15 சாந்திநாராயணன்
25) 6:19:30 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
26) 6:19:46 கு.கனகசபாபதி, மும்பை
27) 6:22:56 மீனாக்ஷி கணபதி
28) 6:29:01 வி ன் கிருஷ்ணன்
29) 6:30:52 Sucharithra
30) 6:31:28 இலவசம்
31) 6:32:27 விஜயா ரவிஷங்கர்
32) 6:37:19 ஆர். பத்மா
33) 6:39:05 மீ கண்ணன்
34) 6:40:25 ராஜா ரங்கராஜன்
35) 6:50:19 ஆர்.நாராயணன்.
36) 6:54:28 சித்தன்
37) 6:54:28 பானுமதி
38) 6:57:35 வானதி
39) 6:57:57 வானதி
40) 7:00:42 லஷ்மி வைத்யநாதன்
41) 7:12:38 சதீஷ்பாலமுருகன்
42) 7:25:33 ஶ்ரீவிநா
43) 7:26:52 சங்கரசுப்பிரமணியன்
44) 7:31:51 மு க பாரதி
45) 7:37:13 கல்யாணி தேசிகன்
46) 7:38:58 ராஜி ஹரிஹரன்
47) 7:45:28 ரமணி பாலகிருஷ்ணன்
48) 8:02:27 கி மூ சுரேஷ்
49) 8:53:26 மீனாக்ஷி
50) 9:50:55 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
51) 10:41:58 மு.க.இராகவன்.
52) 10:55:43 லட்சுமி மீனாட்சி , மும்பை
53) 11:13:56 தி பொ இராமநாதன்
54) 11:47:34 பாலா
55) 13:33:09 ஸௌதாமினி
56) 14:44:30 தேன்மொழி
57) 15:55:17 ஏ.டி.வேதாந்தம்
58) 15:55:43 பத்மாசனி
59) 16:22:12 கோவிந்தராஜன்
60) 18:15:51 அம்பிகா
61) 20:49:25 மும்பை ஹரிஹரன்
**********************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்